தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

மௌனி சிறுகதைகள் - II

மாறாட்டம்
வலையேற்றியது ரா ரா கு
மெளனியின் கதைகள்
நன்றி
tshrinivasan/google-ocr-python : in UBUNTU Linux
Automation of google ocr using python
requests>=1.2.3
google_api_python_client>=1.1
requests_oauthlib>=0.4.2
asciitree>=0.3.1
________________
அவனைப் பற்றி உங்கள் அநேகருக்கு அதிகமாகத் தெரியாது. அவன் என்னுடைய நெருங்கிய நண்பன்.

நேற்று சாயந்திரம் வெகு நேரம் அயர்ந்து துங்கிய வனே போன்று திடீரென்று எழுந்தான். மணி ஐந்து அடித்து விட்டது. அவசர அவசரமாகவே காப்பியைக் குடித்துவிட்டு, தினம் செல்வதைவிடக் குறைந்த நேரத்திலேயே ஆடைகளனிந்து கொண்டு வெளியே புறப்பட்டான். அநேகமாக ஊரின் பொறுக்கிகளை (பொறுக்கி எடுத்த பிரமுகர்கள்) அவனுக்குத் தெரியும். 'குட்ஈவினிங் வைப்பது முதல் சிறிது நின்று சல்லாபம் செய்யும் வரையிலுள்ள, அவனுடைய நண்பர்களின் தொகை கணக்கிலடங்காது என்று சொல்வது மிகையாகாது. அன்று சாயந்திர ஊர் பவனி செல்லுதல் கொஞ்சம் நாழிகை ஆகிவிட்டது என்று சஞ்சலமுற்றவனே போன்று நிதானமின்றியும் வேக மாகவும், அந்த முக்கியமான நான்கு வீதிகள் சேரு மிடத்தை அடைந்தான்.

சாதாரணமாகவே அவ்விடம் ஜன நடமாட்டம் உள்ளது. அன்றைய தினம் கொஞ்சம் அதிகமாகவே ஜனங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண் டிருந்தனர். ஜனங்களின் இரைச்சல் ஆரவாரத்திடையே கை தட்டிக் கூப்பிடும் சப்தமும் கலந்திருந்தது. அவ்விடத்தை அவன் அடைந்ததும், அவன் நடையில் ஒரு நிதானம் ஏற்பட்டு, மனதும் யோசனைகளைக் கொள்வதாகியது.

என் நண்பனின் பழக்க வழக்கங்கள் மூலமாகவே, நவநாகரீகம் வெளிவிளக்கம் கொள்வதென்ற அபிப்பி ராயம் எனக்கு உண்டு. அவனுடைய ஒவ்வொரு செய்கைக்கும், எண்ணத்திற்கும், மாறாக நாஸ்சக்கற்ற விதத்தையும் அவன் கண்டு கொண்டு, அவைகளை விலக்காமலில்லை. ஆனால் அப்போது எவ்வித விருத்த விஷயங்களுக்கும், தலை சிறந்ததாக அவன் மனத்தில் வெறுப்படையும்படி நின்றது, இவ்வகையில் ஒருவருக் கொருவர் கை தட்டிக் கூப்பிட்டுக் கொள்ளுதல்தான். ஆமாம், அது எவ்வளவு நாசுக்கற்ற பழக்கம், அநாகரிகம், காட்டுமிராண்டித்தனம்! அவ்வகையாகக் கூப்பிடுவோரும், கூப்பிட வைத்துக் கொள்வோரும் கீழ்த்தரமானவர்கள். அவ்வகையில் தன்னை யாராவது கூப்பிட்டால், அவர் எத்தனை ஆப்தமாக இருந்தாலும், கண்டிப்பாய், அவர் சிநேகத்தையும் தான் இழக்கத் தயாராக இருப்பதைத் தன் மனதிற்கு நன்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.

அப்போது பின்னாலிருந்து ஒருவர் கைதட்டிக் கூப்பிட்ட சப்தம், திடீரென்று அவன் பிடரியில் அடித்தது போன்றுதான் இருந்தது. கொஞ்சம் லாகவமாக அப்பேர்ப்பட்ட பிராணியைப் பார்ப்போமென்று தலையைத் திருப்பினான். அவனுக்குச் சுமார் முப்பது தப்படி பின்னால் வந்த ஒருவன் இன்னும் வேகமாகத் தட்டிக்கொண்டே, “உங்களைத் தானுங்க-” என்று கூச்சலிட்டுக் கொண்டு அவனை நெருங்குவதைப் பார்த்தான். உலகத்திலே பிரளயம் வந்தாலும் கூட அப்போது அவன் அவ்வளவு பீதி அடைந்துவிட மாட்டான். அப்போதுதான் குறுக்காக அந்த 'ரிடையர்ட் சப் ஜட்ஜ் போய் கொண்டிருந்தார். கொதிக்கும் மனதைக் கொண்டவனே ஆயினும், புன்னகையை முகத்தில் கொண்டு அவருக்கு குட் ஈவினிங் வைத்தான். அவரும் திரும்பி மரியாதை வைத்துச் சென்றார். அவர் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவார், நினைத்துக் கொள்ள மாட்டார் என்ற எண்ணத்தில் சிறிது சமைந்து நின்ற அவனை, அந்த கூப்பிட்ட மனிதனும் நெருங்கி விட்டான்.

பக்கத்தில் வந்து, “உங்களைத் தானுங்க-” என்று உரத்தே சொன்னான்.

 "ஆமாம், உன்னைத் தேடிக் கொண்டுதான், போகிறேன். வாப்பா வா..!" என்றான். உள்ளிருந்து எழுந்த ஆத்திரம் இவ்வகையாக வார்த்தையில் பீறிக் கொண்டு வந்தது. மனத்திலோவெனின் அவன் மூக்கைப் பிடித்துக் குலுக்கினால் அவன் கண்களிலிருந்து நீர் தளும்புமா என்ற பிரச்னை ஏற்பட, அதையும் அவனை விழித்து நின்ற என் நண்பனின் கண்கள் காட்டின. ஆனாலும் மேலே நீட்டியும் கைக்கு எட்டாது என்பதும், அப்படி எட்டினாலும் அவன் மூக்கைத் தன் இரண்டு கைகளாலும்தான் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறுக்கிட்டு, கூடாது என்று தடை செய்தது போன்று பேசாதுதான் நின்று விட்டான்.

 "ஆமாங்க, எனக்குத் தெரியுங்க” என்றான் நாட்டுப் புறத்தான், இவனை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்துக் கொண்டே அவன் ஒரு முடிச்சுமாறியாக ஏன் இருக்கக் கூடாது. அப்படியிருந்தாலும் பயமில்லை. தன்னுடைய எலில்க் ஷர்ட்டுக்குப் பை இல்லை. மடியிலும் பர்ஸ்’ இல்லை. ஒருக்கால் தாசி வீட்டுத் தரகனாக இருக்க லாமோ? அப்படியாயின் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவார்கள் அப்போது பார்க்கும் தனது நண்பர்கள்? இப்படி என்னவெல்லாமோ ஒரு வினாடியில் தோன்றுவ தாயின. ஒருக்கால் அவன் தனக்குத் தெரிந்தவனோ என்றும் மறந்துவிட்டதன் ஊர்ப்பண்ணை ஆளோ என்றும், என்னவெல்லாமோ எண்ணினான். எப்படியாயினும், தன் பெருமையை மிகவும் நோவச் செய்ததில் மனது உருகியே போய்விட்டது. ஆத்திரம் மூண்டது. அவன்தான் என்ன செய்வான், தானாகப் பிடித்துக் கொண்ட சனியனுக்காக! "என்ன-?”

என்றான் என் நண்பன்.

"ஆமாங்க, உங்களைத்தானுங்க" என்றுதான் பதில். துன்பங்கள் அவ்வளவு சீக்கிரமாகவா நீங்கிவிடும்? அப்படி யாயின், கஷ்டகாலத்திற்கும், சனிஸ்வர பகவானுக்கும் என்னதான் மதிப்பு இருக்கப் போகிறது?

“சரியப்பா - இங்கேயே இரு. நான் அவசரமாகக் கடைத்தெரு போக வேண்டும். ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்” என்று விட்டால் போதுமென்று, அமுத்தல் நடையையும் இழந்து, ஓடுவதுபோன்று அவனை விட்டு நடந்தான். அப்போதும் “சரீங்க-” என்ற சப்தம் பின் தொடர்ந்து காதில் கேட்டது.

கடைத்தெரு வழியாகவும், ஒரு குறுக்குச் சந்தாக அவனை ஏமாற்றிப் போய்விட முடியும். அப்படித்தான் என் நண்பனின் எண்ணமும். மூன்று பர்லாங், முட்டி பிடித்த சந்துகளில் போவதும், அதனால் சில சில பேர் வழிகளை நடுவில் காணக்கூடாது போவதையும் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

 கடைத்தெருவின் நடுவில் ஒரு சிநேகிதன் தென் பட்டான். அவனோடு பேசி குறுக்குச் சந்தை அடையும் போது அரை மணி நேரம் ஆகிவிட்டது. சந்தில் நுழையும் போது கை தட்டல் சப்தமும், "உங்களைத் தானுங்க-” என்றதும் அவனைத் தூக்கியே போட்டுவிட்டது.

"சரி, வாப்பா" என்று முன்னே சென்றான். வழக்க மாக அரை மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் ஒரு கடையை அடைந்ததும் அதனுள் சென்றான். அங்கு கூடின. இரண்டொரு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த ஆள் ஞாபகத்தையே ஒழித்து விட்டான். வீட்டிற்குச் செல்ல வெளிக் கிளம்பி பத்து தப்படி சென்றதும் பழையபடியே கை தட்டல் சப்தமும் “உங்களைத் தானுங்க-” என்ற வார்த்தையும் காதில் விழுந்தன. அப்போது மணி ஏழரை ஆகிவிட்டது. நன்றாக இருட்டியும் விட்டது. அதிகமாகப் பிறர் கண்ணில் படாது அவனோடு போவது என்பதைப் பற்றி எண்ணும்போது தன் மனது ஒருவகைச் சாந்தத்தை அடைந்ததை உணர்ந்தான்.

 "சரி, வா-” என்று அழைத்துக் கொண்டே நடந்து சென்றான். நடுவில் கொஞ்சம் ஆத்திரமாக, "ஆமாம், உனக்காகத்தான் காத்திருந்தேன்” என்று சொல்லி, பேசாது முன் சென்று கொண்டிருந்தான் என் நண்பன்.

 "ஆமாங்க-தெரியுங்க- என்று சொல்லிக் கொண்டே அவனும் பின்தொடர்ந்தான். அவனுடைய மூக்கு ஞாபகம் என் நண்பனுக்கு நடுவில் வந்தது போலும்! பின்னால் வந்தவன் அதே சமயத்தில் "ஆமாங்க - என்னைப் பார்த்தாலே மறக்காதுங்க - என் மூக்குங்க-” என்று சொல்லி நிறுத்தி என் நண்பனுடைய சட்டையை மேலும் கீழும் பார்த்தான்.

 "ஆமாம்-என் சட்டைக்குப்பை இல்லைடா என்றான் என் நண்பன்.

 "ஆமாங்க-” என்றான் அவன். என் நண்பன் மனது அப்போது பையில்லாச் சட்டையிலிருந்து பாஷன் நாசுக்கு முதலிய மூலைகளுக்குக் குறுக்காக ஓடிக் கொண் டிருந்தது. இதற்குள் இருவரும் எங்கள் ஊர்ப் பெரிய மைதானத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். என் நண்பனோவெனில் உலக நடப்பை மறந்து ஒன்று கூட்டும் ஞாபக சக்தியையும் அன்று சாயந்திரம் முதல், இழந்தவன் போன்று தான் தோன்றினான். ஏதோ மறந்ததை ஒரு பிசகான காரியத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதே போன்றுதான் அவன் மனது சஞ்சலமடைந்து கொண் டிருந்தது.

மைதானத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அதன் வாயிலில் வந்து நின்றான்.

 "சரீங்க-” என்றான் அந்த நாட்டுப்புறத்தான். என் நண்பனுக்குத் தெரிந்த அநேக நண்பர்கள் மைதானத்தின் உள்ளே போய்க் கொண்டிருந்தனர். அவனுடைய ஊறிய நாகரீகப் பழக்கமே, அவன் கையைத்தூக்கி குட் ஈவினிங் செய்வித்தும், தலையை அசைத்தும் கொண்டிருந்தது போலும். மூளை மட்டும் இடம் விட்டு எங்கேயோ வெகு தூரத்தில் உலாவச் சென்றதுதான்.

 “என்னடா விசேஷம்?” என்றான் திடீரென்று என் நண்பன். அவன் வார்த்தைகளில் ஒரு ஆத்திரம் தொனித்தது. கூட்டத்தைக் கண்டதும் அவன் மனத்தில் ஒரு நிதானமும் தைரியமும் கூடச் சேர்ந்து கொண்டது போன்றுதான் அவன் நின்ற தோரணை தெரிவித்தது.

 "கேகங்க-” என்றான் பட்டிக்காட்டான்.

"ஆமாம்" என்றான் மறதியில் ஏதோ ஆமோதிப்பவன் போன்று என் நண்பன்.

 "லெட்டருங்க-” என்று மடியிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான் பட்டிக்காட்டான். "ஐயா கொடுத்தாரு கொடுக்கச் சொல்லி-” என்றான்.

"யாரு-?”

"அவங்க- ரயிலிலே, என்னைத் தெரிஞ்சுண்டு-அந்த ஐயா எங்கிட்டே சொன்னாரு - கொடுத்தாரு-"

"என்ன-?” என் நண்பனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் மேலிட்டது. அவன் விஷயங்களையும் தெரிந்து கொள்ள அவாக் கொண்டான். "அந்த ஐயா கேட்டாரு எங்கே போறேன்?னு. சொன்னேனுங்க-அவங்க சொன்னாரு 'வக்கீலய்யா நல்ல நல்ல ஆர்க்குமெண்டு செய்வாரு - முனிசிபே அவங்களுக்குத் தனதுன்னு. என்னை தெரிஞ் சிருக்கும்னு கூடச் சொன்னாரு - டேய் எங்கே போனாலும் அவங்கதாண்டா. சாயங்காலம் பார், சில்க் சட்டை விசிறி மடிப்பு அங்கவஸ்திரம் சோரா பாத்தாலே உனக்குத் தெரியும்டா அவங்களைனு அது சரிதானுங்க. உங்களைப் பார்த்ததே தெரிஞ்சுடுத்தே எனக்கு!” என்றான் பட்டிக் காட்டான்.

 செய்கிறதை அறியாமலே, அவன் லெட்டரை வாங்கிய என் நண்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அல்ல எல்லாம் நன்கு புரிந்துவிட்டது போன்றுதான். ஒரு சிரிப்புக் கூட வந்துவிட்டது. தன்னைப் பார்த்துக் கொண்டான் என்றுதான் நான் நினைக்கிறேன். தன் முகத்திற்கு நேராக மூன்று நிமிஷம் பிடித்தும், கண்கள் கவரின் விலாசத்தைப் பார்த்தும் அவனுக்கு விளங்கவில்லை. யோசனைகள் அல்லவோ அவன் மனத்தில். கடைசியாக விலாசத்தை உரத்தே படித்தான். 'வக்கீல் சுப்ரதிவ்யம் அய்யங்கார் என்று எழுதியிருந்தது. ஆமாம், அவரும் என் நண்பனுக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். அவர் அந்நகரில் ஒரு பிரபல வக்கீல்.

கொஞ்சநேரம் முன்புதான், அவர் மைதானத்திற்குள் சென்றார். தானும் அவருக்கு 'விஷ் பண்ணியது ஞாபகம் வந்தது. அவர் அமுத்தல் ஆசாமிதான். வக்கீல் தரகர் சொன்னது உண்மை தான். "சில்க் சட்டையிலும் விசிறி மடிப்பு அங்க வஸ்திரத்திலும் தினம் தினம் சாயங்காலம் அவர் போகும்போது அவரைச் சுட்டிக் காட்டாமல் இருக்கப் பொட்டையன் கண்களால் கூட முடியாது. ஆனால் இன்றைய தினம் அவர் உடை ஒரு மாதிரியாக......” என்று என் நண்பன் யோசித்துக் கொண்டே மைதானம் பக்கம் பார்த்தான். அவனைத் துக்கி வாரிப்போட்டது அங்கு பார்த்த காட்சி!

 கதர் ஜிப்பாவும், குல்லாயும் உயிர் பெற்று உலாவுவதைப் போன்றுதான் நினைத்தான். தன்னை ஒரு தரம் பார்த்துக் கொண்டான். ஆம், கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது. ஏதோ மத்தியானம் உறங்கியவன் அநேக ஆண்டுகளை, சாயங்காலம் எழுவதற்குள் நித்திரையில் கழித்து, தெரியாது எதிரில் இருந்த சில்க்  சட்டையையும் விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்தையும் போட்டுக்கொண்டு வெளியே வந்துவிட்டான் என்ற தோற்றத்தைத் தான் முதலில் அடைந்தான். ஒரு வகை மயக்கம் உலகத்திலே ஒருவரும் இத்தகைய உடுப்புக்களில் தோன்றவில்லை அன்று. பாஷன் மாறிப் போய்விட்டதுபோலும்! ஆனாலும் நிச்சயமாக நேற்று வரையில் சில்க் சட்டையும் விசிறி மடிப்பும் ஊரில் உலாவியதே.

 திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று சாயங்காலம் ஜவஹர் அவ்வூர் வருகிற விஷயம் தெரிந்தது. மேடையின் மீது போடும் ஆசனங்களில் ஒன்றில் உட்காரும் அந்தஸ்து சுப்ரதிவ்யம் அய்யங்காருக்கு அன்று உண்டு என்பதையும் தெரிந்து கொண்டான். ஆமாம், ஒருநாளைக்காவது சில்க்கும் விசிறி மடிப்பும் ரஜா வாங்கிக் கொண்டு வீட்டு ஸ்டாண்டில் இருக்கின்றன. புதிதாகத் தைத்ததும்  பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டது மான ஜிப்பாவும், குல்லாவும் வெளிவந்து உலாவுகின்றன என்பது தான் அவன் மனதில் தோன்றி நிச்சயம் கொண்டது......

"நான் அல்லடா அவர். இப்படியே நேராகப் போய் வலது பக்கத்தில் இரண்டாவது விதி திரும்பி 18-ம் நம்பர் வீட்டிற்குப் போ-அங்கே இருப்பார் வக்கீல் ஐயா-” என்றான். பட்டிக்காட்டானுக்கு நம்பிக்கை இல்லை. உள்ளே மேடையில் அவர் இருக்கிறார் என்றாலோ, அந்த உடையில் அவரைப் பார்த்தால் நிச்சயம் நம்பமாட்டான், மற்றும் தன்னையும் விடமாட்டான் என்று நண்பனுக்குத் தெரிந்தது.

"அவர் என் சிநேகிதர்தான். ஆமாம், ரயிலிலே அந்த ஐயா சொன்னதும் சரிதாண்டா. அவர் ரொம்ப ஷோக்கானவர் தாண்டா - ஜிப்பா - சீ, சீ-இல்லை. சில்க் சட்டையிலும், விசிறி மடிப்பிலும் - போய்ப் பாரு, வீட்டிலே இருக்காரு - அவருக்குத் தலைவலி இன்னிக்கு - வெளியிலே வல்லை" என்று சொல்லி அவனை மெதுவாக அனுப்பினான்.

 தன்னை ஒரு தரம் பார்த்துக் கொண்டான். அப்போது தனிமையாக அவன் அந்த மைதான வாயிலில் நின்று கொண்டிருந்தான். உள்ளே பிரசங்கம் நடந்து கொண் டிருக்கிறது. தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒரு எண்ணம் முதலில் - பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய்ப் போய்விட்டதோ என்ற யோசனையும், சம்சயமும், கடைசியாக, ஒன்றுமே புலப்படாமல் ‘பைத்தியக்காரத்தனம் என்று ஒரு தரம் முணுமுணுத்து மூச்சு விட்டான். யார் யார் எப்படி எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை அப்போது.

எப்போதும் முடியாதென்ற எண்ணம் தான் எனக்கும். -
மணிக்கொடி 1938.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
குடும்பத்தேர்
வலையேற்றியது ரா ரா கு

Automation of google ocr using python
See a demo video on installation, setup, usage in Tamil here: https://www.youtube.com/watch?v=PH9TnD67oj4&feature=youtu.be
install gdcmdtools from https://github.com/tienfuc/gdcmdtools and complete the setup
use "convert" tool by imagemagics to convert a pdf into individual images.
exaimple:
convert -density 300 shrini-articles-malaigal.pdf -quality 100 shrini-%03d.jpg
run the program
python google-ocr.py
This will upload all the images into google drive, ocr it, download it as a text file and combine all the text file as "ocr-result.txt"

பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, ஒரு நாள், கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்து கொண்டு, நான்கைந்து தினம், எழுதப்படாது நின்றுபோன தினசரிக் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம். திடசரீரி. அவர் அந்தஸ்தும், கெளரவமும் உடையவர். குடும்ப பரிபாலனம், வெளி விஷய வியாபகம் முதலிய எல்லாவிஷயங்களிலும் அக்கிராமத்தாருக்கு பின்பற்றக்கூடிய லட்சிய புருஷராகக் கருதப்பட்டவர். நாலைந்து தினம் அசெளக்கியமுற்றுக் கிடந்து, அவருடைய தாயார் இறந்து போய் ஒரு மாதம் ஆகிறது.

கிழவிக்கு அந்த எண்பது வருட உலக வாழ்க்கை, ஒரு மலர்ப்பாய்ப் படுக்கையாக இருக்கவில்லை. ஒரு தனவந்தக் குடும்பத்தில் பிறந்து ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டது, அவளை சிற்சில சங்கடங்களுக்கு ஆளாகாது மீட்டதெனினும், அற்ப ஆயுளில்போன அவள் குழந்தைகள், குடும்பம் நடுநடுவே சீர்கெட்டுப் போகிற தென்ற கவலையில் அடைந்த சஞ்சலங்கள் முதலிய இன்னும் எத்தனையோவிதப் பொறுப்புகளின் தன்மையற்ற தொல்லைகளை அவள் அநுபவிக்காமல் இல்லை. அதில் சந்தோஷமே தவிர அவள் வருத்தம் கொள்ளவில்லை.விவேகமான இயற்கை அறிவு கொண்டு அவள் நடத்திய குடும்ப வாழ்க்கை, வீடு நிறைந்த ஒரு சுடரொளி போன்றது.

செலவுகளை ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி எழுதலானார். ஆட்களுக்குக் கொடுத்தது. பண்ணை யாட்கள்- தண்ணிக்காசு.தச்சன்கூலி.மூன்று நாளைக்கு முன்பு அமாவாசை தர்ப்பண தகூழினை.ஸ்வாமி புறப்பாட்டிற்கான ஊர் வீதாச்சாரம்.எல்லாம் எழுதியாகி விட்டது. அப்படியும் மூன்றே காலணாக் குறைந்தது. செலவு தெரியவில்லை. வழக்கமாக எழுதிப் பழக்கப்பட்ட கை, 'அம்மா பற்று...0.3.3 என்று எழுதிக் கணக்கைச் சரிக்கட்டி விட்டது. அதைக் கிருஷ்ணய்யர் பார்த்தார். அதன் அர்த்தம் சிறிது சென்று திடீரென்று புலப்பட்டது போன்று அவர் கண்கள் நிரம்பின. இரு சொட்டுக் கண்ணிர் கணக்குப் புத்தகத்தின் மீது விழுந்தது. அறியாமல் விரலால் துடைத்த போது 'அம்மா பற்று..0.3.3 என்ற வரி நன்கு காயாததினால் மெழுகிக் கறைப்பட்டது.

அது அவர் வழக்கம். சிறிது தொகை கணக்கிற்கு அகப்படாவிட்டால், தலையைச் சொறிந்தும்.பேனா மறுமுனையை மூக்கு நுனியில் அழுத்தியும்...என்ன ஞாபகப்படுத்தியும், செலவு தெரியாவிட்டால் 'அம்மா பற்று என்று குறைந்த தொகையை எழுதி முடித்துவிடுவது அவர் வழக்கம்.

கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, இரண்டுதரம், நன்றாகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று கதவை தள்ளிப் பார்த்துவிட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்காருவார். திருப்பத் தாழ்வாரச் சந்தனக் கல்லடியில், குருட்டு யோசனைகள் செய்துகொண்டு அவர் தாயார் படுத்திருப் பாள். மனைவி உள்ளிருந்து காப்பி கொணர்ந்து வைத்து விட்டுப் போனவுடன், காப்பியை அருந்தி, வெற்றிலை போட்டுக் கொண்டே 'அம்மா இன்னிக்கு உன் பற்று. அணா என்று சொல்லுவார். உள்ளே இருந்து அவர் மனைவியின் சிரிப்புச் சப்தம் கேட்கும். அவர் தாயாருக்கோவெனின், சமீப சில வருஷமாக காது கொஞ்சம் மந்தமாகி விட்டது. ஆனாலும் இவர் சொல்வது அவளுக்குக் கேட்கும். ஆமாம் எனக்குத்தான் காக்கை புத்தி வைத்தது மறந்துவிடும்! உனக்கு? அவ்வப்போது செலவு குறித்துக் கொண்டால் தானே. நான் இருக்கேன் என் தலையை உருட்ட, என் தலையிலேபோட, அப்புறம் வயது ஆகியும் குடும்பப் பொறுப்பு... அவள் சொல்லி முடிப்பாள். கிருஷ்ணய்யருக்கு சாந்த சுபாவம்தான். இருந்தாலும் தன் தாயார் சொல்லும்போது சிற்சில சமயம் கடிந்து பேசி விடுவார். ஆமாம், பிரமாதம்! குடிமுழுகிப் போய் விட்டது. அடித்துக் கொள்ளுகிறாயே என்பார்.

 ‘எல்லாம் இருந்தாத்தாண்டா. எப்படியாவது போயேன்; என் காதிலே போட்டால்தானே நான் சொல்லும் படியாகிறது என்று சொல்லும்போதே அவளுக்கு வருத்தத் தில் அழுகை வந்துவிடும். சிறிது சென்றபின் பழையபடி தாயாரும் பிள்ளையும் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது-இருவருடைய குதுகல குடும்பப் பேச்சுகள்!

ஆம், அம்மா பற்று மூன்றே காலணாத்தான். எதிரிலே, மேஜையின் மீது நோட்டு விரிக்கப்பட்டு வெறிக்கப் பார்க்கிறது. அவர் கண்ணிர் நின்றுவிட்டாலும் மனது மட்டும் உள்ளே உருகிக்கொண்டிருந்தது. குடும்ப வீட்டின் தாய்ச் சுவர் இடிந்து கரைந்ததைக் கண்டார். அதற்குப் பிரதியாக, தன்னால் தாங்கி நிற்க முடியுமா என்ற எண்ணத்தில் தன் முழு பலவீனத்தையும் உணர்ந்தார். குடும்ப விவகாரங்களை, அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தன் தாயார் வகித்த ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ளச் சமயம் இன்னும் வரவில்லையே என்பதை எண்ணினார். அவருடைய பெரிய பையன் படித்துவிட்டு உத்தியோக வேட்டையில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். மற்றவர்கள் இன்னும் சிறுவர்கள்தான். தன் மனைவியோ வெனில்...சுத்த அசடுதானே!

திடீரென்று எழுந்து உள்ளே காப்பி சாப்பிடச் சென்றார். வீடே வெறிச்சென்று தோன்றியது. மனைவி காப்பி வைத்துவிட்டுப் போனதும், ஏதோ சொப்பன உலகில் ஊமையாக நடப்பது போன்றுதான் தோன்றியது. சந்தனக் கல்லடி காலியாக இருந்தது. காப்பி குடித்துவிட்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். அவர் மனைவி, பாத்திரங்களை எடுத்துப் போக வந்தபோது எதிரே எங்கேயோ ஆகாயத்தைப் பார்ப்பது போல உட்கார்ந் திருந்தார். சிம்னி இல்லாது தொங்கி கொண்டிருந்தது கூடத்தில் பவர்லைட்! மூன்று நாளாச்சி, கிளாஸ் உடைந்து-சொன்னால் மறந்து விடுகிறீர்களே என்று பாத்திரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு அவர் மனைவி உள்ளே போக ஆயத்தப்பட்டவள், அவர் எதையோ உற்றுநோக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.

மூன்று நாளாய், அவள் சொல்லியதும் மறக்கும் படியாகத்தான் இருந்தது. கிருஷ்ணய்யருக்கு அவள் சொன்னது போலவே இல்லை. தன் தாயார் சொல்லி யிருந்தால்...?தான் மறந்திருந்தால்...? அவர் மனது என்னவெல்லாமோ யோசித்தது...நான்கு வருஷத்துக்கு முன் ஊரார் கூடிப் பெருமாள் கோவிலில் ஏகாதசி இரவு பஜனை செய்ய எண்ணினார்கள். அது விட்டு விட்டுத் துங்கும் பக்தி சிரத்தையின் ஒருவிதத் திடீர் ஆரம்பம். இவர் வீட்டு பவர் லைட் இரவல் போயிற்று. அது அவர் தாயாருக்குத் தெரியாது. அன்று இரவு அவர் சாப்பிடும் போது தூணடியில் அவர் தாயார் உட்கார்ந்து பலகாரம் செய்து கொண்டு இருந்தாள். கிருஷ்ணய்யரின் மனத் துள்ளே, ஏதோ சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிச் செல்லாது அடக்கப்பட்டதினால் ஏற்பட்ட ஒரு வேகம். அவர் அறியாமல் சொன்னவர் போன்று 'அம்மா கோவிலுக்கு பவர்லைட் என்று ஆரம்பித்தவர், சொல்லி முடிக்கவில்லை. அவர் தாயார் சொன்னாள், "எதையும் எரவல் கொடுத்துவிடு. ஏன் வாங்கணும்? தொலைக்கத் தானே... அப்போது அவருக்குச் சிறிது கோபம்தான்.

இருந்தாலும் அவள் சொன்னதில் என்ன பிசகு இருக்கிறது என்பதில் சந்தேகம். அவளிடம் ஏன் சொல்ல வேண்டும்? சொன்னால் தானே, அவள் சொல்வதற்குக் காரண மாகிறது? அது ஒரு விநோத விஷயம்தான்-தாயாருக்கு தெரியப்படுத்தவது என்பது. எதில்தான் என்ன பிசகு, தன் தாயாருக்குத் தெரியாது, தெரியப்படுத்தாது இருந்தால்? ஆனால் அவ்வகையில் தான் குடும்பம் நடத்தினால் நாச காலம்தான். அவருக்குத் தன் குடும்பத்தில் தன் தாயார் வகிக்கும் பொறுப்புத் தெரியும். அவள் சொல்வதில் என்ன பிசகு' என்பதைத்தான் உணர்ந்தார். பேசாது இருந்து விட்டார். மறுநாள் விளக்கு வந்தபோது கிளாஸ் உடைந்து இருந்தது. தம்பூராவை நிமிர்த்தி சுருதி கூட்டிய போது அது விளக்கைத் தட்டியதினால் சிம்னி விரிந்து விட்டது. அந்த விஷயமும் தன் தாயாருக்குச் சொன்னார். அவருடைய மனதை அறிந்தவள் போன்றே ஆறதலாக, போகிறது. அல்ப விஷயம் ஸ்வாமி காரியம். ஒன்று வாங்கி வந்துவிடு சாயங்காலம் என்றாள். அந்தச் சிம்னிதான் இதுவரை யிலும் இருந்து வந்தது. எதிரே அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தயாார் நினைவை ஊட்டிக் கொண் டிருந்ததை அவர் பார்த்தார்.

இரேழி உள் சாத்தாது வந்தது ஞாபகம் வந்தது. எழுந்து உள்ளே சென்று சிறிது உட்கார்ந்து இருந்தார். கணக்குப் புஸ்தகம் மூடி மேஜை அறையில் வைக்கப் பட்டது. நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் கிருஷ்ணய்யர். மாட்டுக்காரப் பையன் மாடுகளை வீட்டு வாயில் வழியாக உள்ளே அடித்துவிட்டு 'அம்மா மாட்டைக் கட்டுங்கோ என்று கூவிவிட்டுப் போய்விட்டான்.

மேல்காற்று வாயிலில் புழுதியைத் துற்றிக் கொண் டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த விரைக்கோட்டை அந்துகள் அவர் முகத்தில் மொய்த்தன. அவருக்கு அதுவும் தெரியவில்லை. ஜன்னல் கதவு காற்றில் தடா லென்று அடித்துக் கொண்டது. மேல்காற்று நாளில் தன் தாயார் சொல்வது ஞாபகம் வந்தது. உடம்பு வலி எடுக்கும்; ரேழியிலேயே படுத்துக்கொள். அவர் எங்கே படுத்துக் கொண்டாலும் அதைப்பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் சொல்லிதான் விடுவாள். இரவிலே அநேகமாக அவள் துரங்க மாட்டாள். காது மந்தம்; கிழ வயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டைவிரி இரவில் காற்றில் அடித்துக் கொள்ளும் போது யார்-யார்? என்று கேட்டு விட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக் கொண்டு பேசாது உறங்கிவிடுவாள். மற்றும் நடு இரவில் கேட்காத சப்தங்கள் (?) அவள் நுண்ணுணர்விற்கு எப்படியோ எட்டி யார் என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்று கோல் உதைவின் டக்டக் சப்தத்தினால் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையும் தடவித் தடவித் திருப்தியுற்று, திரும்பி படுத்துக் கொண்டுவிடுவாள். மார்கழி மாதக் குளிரானாலும் அவளை வருத்தாது. விடியற்காலையில் எழுந்து ஏதோ சுலோகத்தை முணு முணுத்துக் கொண்டு, கொல்லை மேட்டிலிருந்து வாயில் வரையிலும் சாணம் தெளித்து வீட்டையே புனிதமாக்குவது போன்று அவள் வேலை செய்வாள்.

 கிருஷ்ணய்யருக்குத் தன் தாயாரை இழந்ததின் வருத்தம் தாங்கமுடியவில்லை. இழக்கப்பட்ட தாயார் தனக்குக் கவலைக்கு இடமின்றி குடும்பத்தை நடத்த எவ்வெவ்வகையில் உதவியாக இருந்தாள் என்பதை உணர்ந்தபோது, அவள் இடத்திற்கு யார் இப்போது இருக்கிறாள் என்பதை அவரால் கண்டு கொள்ள முடிய வில்லை. அப்படி அவள் இல்லாது நடத்தும் வகையும் தோன்றவில்லை. தான் அந்த இடத்தைக் கொள்ள வேண்டின், தன் பொறுப்புக்களைத் தன் கீழ்வார்சுகள் கொள்ள வேண்டும். அதற்கோ ஒருவரும் இல்லை. இருந்தும் தன் தாயாரைப் போன்று தான் அவ்வளவு நன்றாகப் பாதுகாப்பளிக்க முடியுமா? இரவில், கூடத்துக் குத்துவிளக்கின் ஒளிபடராத பாதி இருளில் அவள் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருப்பாள். உள்ளே குழந்தைகள் தாயாரிடம் விஷமம் செய்துகொண்டு அவளைக் காரியம் செய்யவிடாது உபத்திரவம் செய்யும் போது, குழந்தைகளைக் கூப்பிட்டு கதை சொல்வதும். அடிக்கடி குழந்தைகள் உடம்பு இளைத்துவிட்டது என்று நாட்டுப் பெண்ணைக் கோபித்துக் கொள்ளுவதும், இவ்வகையில் தன்னால் கவனம் செலுத்தமுடியுமா என்பதை அவர் நினைக்கும் போது யோசிக்க, யோசிக்க, கிருஷ்ணய்யர் வீடே தன் தாயாரால் நிரப்பப்பட்டிருந்தது போன்ற தோற்றத்தைத்தான் உணர்ந்தார். அவள் இறந்ததை எண்ணும்போது தன் பலவீனத்தைக் கண்டார்.

வெளியில் தான் எவ்வளவு கெட்டிக்காரரெனத் தோன்றுவதற்கு ஒரு உறைகல் போலவிருந்த தாயார் போய்விட்டாள்.

 எழுந்து கதவைப் பூட்டிக்கொண்டு கொல்லையில் வேலை செய்யும் தச்சனைப் பார்க்கப் போனார். கொட்டிலில் கட்டப்படாத மாடுகளில் ஒன்று கடந்த அரைமணி நேரமாக தவிட்டைத் தின்று கொண்டிருந்தது. 'மாடு வந்திருக்கு கட்டு என்று முன்பு தன் தாயார் சொல்லுவதை அனாவசியமாக ஏன் சொல்லுகிறாள்? கட்டமாட்டார்களா என்று மிகுந்த அலகூழியமாக எண்ணியவர், கண்கூடாக அவள் வார்த்தைகளின் மதிப்பைப் பார்த்தார். கொல்லையில் சாவதானமாக வீட்டு வேலைக்காரன் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தான். உள்ளே அவர் மனைவி படுத்துக் கொண்டிருந்தாள். மாடுகளைக் கட்டிவிட்டு கொல்லையில் சென்றபோது, தச்சன் வேலை செய்யாது வெற்றிலை போட்டுக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருந்தான். அவனைக் கடிந்து, வாயிற்பக்கம் பார்த்துக் கொண்டே அங்கு உட்கார்ந்தார். கொல்லையில் வேலையை கவனிக்கும் போதும், வாயிற் பக்கத்தில் கவனிப்புக் கொள்ளவேண்டியிருக்கிறது! எவ்வளவு சமாதானத்தோடு முன்பு வீட்டை விட்டு வெளியே போக முடியும் என்பதையும், வருகிறவர்கள் போகிறவர் களுக்கு எவ்வளவு சரியானபடி தன் தாயார் ஜவாப்பு சொல்லுவாள் என்பதையும் நினைத்துக் கொண்டார். 'அந்தக் கர்நாடகம் என்று அவளை அடிக்கடி இவர் சொல்வது உண்டு.

ஆனால் அப்படியல்ல. நாகரிகத்தையும், நாகரிகத் தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டு கொள்ளாமல் இல்லை. கண்டுகொண்டு அவைகளைப் பயன்படுத்தும் வகையில்தான் வித்தியாசம். சூன்ய மூளையில், அழகற்று மிருகவேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம், அவளிடம் தன் சக்தியைக் காட்ட முடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட, மிருதுவாக உறைந்த குடும்ப லகூழியங்கள் உருக் கொண்டவள் போன்றவள்தான் அவள். வெற்று வெளியிலும் தாழ்ந்த இடத்திலும் பாய்வது போலவன்றித் தணிவு பெற்று, அழகுபட அமைதியுடன் தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும். திடீரென்று தோன்றும் பச்சை எண்ணங்களையும், பழக்க வழக்கங் களையும் பதனிடாமல் ஏற்று வழங்குவது முடியுமோ குடும்பங்களினால்?

அவளைவிடப் புதுக்காலத்தின் முன்னேற்றத்தின் உயர் அம்சங்களை உணர்ந்தவர்கள் இல்லை. வெகு நாட்கள் முன்பே வீட்டில் மணி அடிக்கும் கடியாரம் அவள் தூண்டுகோலின் பேரிலே வாங்கப்பட்டது. அதனால் அவளுக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை. பகலில் முற்றத்தில் விழும் நிழல்தான் அவளுக்குக் கால அளவு, இரவிலோ வெனின், அவளுக்கு நகூடித்திரம் பார்க்கத் தெரியும். அருணோதயத்திற்கு இன்னும் எவ்வளவு நாழிகை இருக்கிறது என்று அவளால் தெரிந்து கொள்ள முடியும். வாங்கியபின், அநேகர் மணி பார்க்க வருவதுண்டு. அதில்தான் அவளுக்கு மிகுந்த திருப்தி. சிறுவயதில், குடும்பத்தின் கெளரவ எண்ணங்களை, குழந்தைகளுக்குச் சொல்லுவாள். அதனால்.குடும்பத்தின் பழைய நினைவு கள்.குத்துவிளக்கடியில் குழந்தைகளுக்குச் சொல்லும் போது...அறிவுக்கெட்டாது திகைப்பில் காலத்தில் மறைந்த பழைய பழைய கதைகள்...அவளுடைய மாமிப் பாட்டி அப்படி இருந்தது...பெரிய மாமனார் காசிக்கு ஓடிப் போனது...எவ்வளவு தூரம் தன் மதிப்பு, குடும்ப மதிப்பு, ஆராக்கியமான போதனைகளை, குழந்தைகள் மனத்தில் பாலூட்டுவது போன்று, ஊட்டிவந்தாள்!....

சாயங்காலம் ஆகிவிட்டது. கொல்லைக் கதவுகளை பூட்டிக் கொண்டு வாயிற்பக்கம் வந்தார். அப்போது அவருடையது.ாரபந்து ஒருவர், அவர்தாயார் இறந்ததுக்கம் விசாரிக்க வந்தார். அவரோடு பேசும்போதே கிருஷ்ணய் யருக்கு துக்கம் தொண்டையை அடைத்து விட்டது. வந்தவருக்கு இது வியப்பாகத்தான் இருந்தது. ‘என்னடா கிருஷ்ணா! பச்சைக் குழந்தையைப் போல, அம்மாவை நினைத்துக் கொண்டு...! உன்னுடைய திடசித்தம் எல்லாம் எங்கே? என்றார் அவர்.

ஆனால் கிருஷ்ணய்யருக்கன்றோ, தன்னுடைய அவ்வளவு வெளியுலகப் பெருமைகளுக்கும் காரணம் மறைமுகமாக வீட்டினுள் இருந்தது, யார் என்று தெரியும்.

அவர் போனபின், என்ன நினைத்தென்ன என்று ஒரு பெருமூச்செறிந்தார் கிருஷ்ணய்யர். அவர்துக்கமெல்லாம், சிறு ஒரு குழந்தை போன்று, தன் தாயாரை இழந்ததற் கன்று. மனது ஒரு நிதானமின்றி அலை மோதியது. அவருடைய குடும்பப் பொறுப்பைக் காப்பாற்றிப் பின் வருபவர்களிடம் ஒப்படைக்க, தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு உன்னத லகூழியம். குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு நாகரிக முற்போக்கு  எண்ணங்களிலும் கட்டுக்கடங்கி உணரமுடியாது எட்டிச் செல்வது போன்ற குடும்பம்-குடும்ப வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் தன் தாயாருடன் லயித்து இருந்தது
என்பதை எண்ணித் துக்கமடைந்தார். உலகம் சீர்கெட்டுச் சிதைவுபடுவதின் காரணம் குடும்ப வாழ்க்கையில் சமாதானமற்று இருப்பதுதான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார். குடும்பத்தினர் ஒருவரிடமும், அதன் பொறுப்பு அடைபட்டுக் கிடக்கவில்லை. ஒருவர் ஏற்கும்படியான அவ்வளவு லேசானதல்ல. எல்லாரிடமும் அது இருப்பது முடியாது. அப்போது அது குடும்பப் பொறுப்பாகாது; சீர்கெட்டதன் தலை ஆட்டம். பொறுப்பை வகிக்கும் அவர், பொறுப்பாளியின்றி, எல்லாம் தாயார்-தாயாரிடம் சொல்லி-சொல்லுக் கேட்டுத்தான்- அவர் குடும்பத் தலைவர் ஒரு விசித்திர யந்திரம்தான் குடும்பம் என்பது!...

மாலை நேரம் சிறிது சிறிதாக இருட்டிவிட்டது. கிருஷ்ணய்யர் வாய்க்கால் சென்று சந்தி ஜபம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். திண்ணைச் சாய்மனையில், எதிர்த்துரணில் காலை உதைத்துக் கொண்டு, சாய்ந்து படுத்திருந்தார். வாய் ஏதோ மந்திர ஜபம் செய்து கொண் டிருந்தாலும், மனது என்னவெல்லாமோ புரியாத வகையில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. தலைக்கு மேலே மாடத்தில், ஒரு சிறு விளக்கு, லசஷ்மிகளை வீசிப் பிரகாசித்தது. வெகு நேரம் அப்படியே சாய்ந்து கொண் டிருந்தார். உள்ளிருந்து வந்து தன் மனைவி விளக்கை எடுத்துச் சென்றதும் அவருக்குத் தெரியாது...அவர் கடைசிக் குழந்தை, அப்பா நாழிகையாச்சு-சாப்பிட வா...' என்று கூப்பிட்டதால் திடுக்கிட்டு எழுந்தார். வீதியில் சென்று அங்கிருந்தே பெருமாளைத் தெரிசித்துவிட்டு கதவைத் தாளிட்டு உள்ளே சென்றார். மனத்தில் ஒரு பெரிய பளுத் தொல்லை நீங்கினதான ஒரு உணர்ச்சி...பலங்கொண்ட தான ஒரு எண்ணம். எதிர்கால வாழ்வு மிகவும் லேசாகத் தோன்றியது. ஒரு அளவற்ற ஆனந்தம்.புரியாத வகையில் அவர் மனது குடும்பம் ஒரு விசித்திர யந்திரம்-பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறு பாகம் தானாகவே உண்டாகி விடும்...' என்று என்னவெல்லாமோ எண்ணியது.
 - மணிக்கொடி 1936
Automation of google ocr using python
See a demo video on installation, setup, usage in Tamil here: https://www.youtube.com/watch?v=PH9TnD67oj4&feature=youtu.be
install gdcmdtools from https://github.com/tienfuc/gdcmdtools and complete the setup
use "convert" tool by imagemagics to convert a pdf into individual images.
exaimple:
convert -density 300 shrini-articles-malaigal.pdf -quality 100 shrini-%03d.jpg
run the program
python google-ocr.py
This will upload all the images into google drive, ocr it, download it as a text file and combine all the text file as "ocr-result.txt"
www.archive.org
google ocr_______________

இந்நேரம், இந்நேரம் - மெளனி
Automation of google ocr using python UBUNTU LINUX
See a demo video on installation, setup, usage in Tamil here: https://www.youtube.com/watch?v=PH9TnD67oj4&feature=youtu.be
install gdcmdtools from https://github.com/tienfuc/gdcmdtools and complete the setup
use "convert" tool by imagemagics to convert a pdf into individual images.
exaimple:
convert -density 300 shrini-articles-malaigal.pdf -quality 100 shrini-%03d.jpg
run the program
python google-ocr.py
This will upload all the images into google drive, ocr it, download it as a text file and combine all the text file as "ocr-result.txt"

'
சித்திரை மாதம், நல்ல கடுங்கோடை மாவடி கிராமத்தில் உதயத்திலிருந்தே கடுமையாக வெய்யில் கண்ட ஒருநாள் காலை எட்டு மணி சுமாருக்கு, சிவராமய்யர் தன் வீட்டுத் திண்ணைச் சாய்மணையில் சாய்ந்து கொண்டிருந்தார். அவருக்குச் சுமார் நாற்பது வயது இருக்கலாம். விவேகத்திற்கும் தற்கால உலக நடப்பிற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்தவர். ஆயினும் உலக வாழ்வில் சலிப்புக் கொள்ளாது, கடத்த வேண்டிய தன் வாழ்நாளைத் தன் கெளரவத்திற்கேற்பக் கழித்துக் கொண்டிருந்தார்.

 "எங்கேடா வந்தாய்?” என்றார் சிவராமய்யர். செல்லக்கண்ணு எதிரே திண்ணைப்புறம் வீதியில் நின்றிருந்தான். இவருடைய நிலம் பயிர்ச்செலவு செய்யும் குப்புப் படையாச்சியின் தம்பி செல்லக்கண்ணு. அவனுக்குச் சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம்.

சிவராமய்யர் கேட்டதற்கு, "இல்லேங்க, சும்மா பார்க்கத்தானுங்க” என்றான்செல்லக்கண்ணு.

 "தடிப்பயலே, இங்கே என்னடா வேலை? கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்கிறதில்லை. கூழைக்கும்பிடுபோட வந்து விட்டாயா?” என்றார். அந்தத் தொனியில் கோபமில்லை. சிறிது தாமதித்து, "தெரிந்ததுடா. இந்த வருஷம் பயிர்ச் செலவு கிடையாது. உங்ககிட்டே கொடுக்கப் போகிற தில்லை. காத்துப் படையாச்சி வந்து தொந்தரவு செய்கிறான்” என்றார். "என்னங்க அப்படிச் சொல்லிட் டேங்க? அதுக்குத்தானே பாக்க வந்திருக்கேங்க. பாத்துப் பாத்து நல்ல ஆளாப் பிடிச்சேங்க!” என்று அரைகுறைச் சிரிப்போடு, முழங்கையைத் தடவிக்கொண்டே, கீழ் நோக்கிச் செல்லக்கண்ணு சொல்லிக் கொண்டிருந்தான்.

உள்ளேயிருந்து சிவராமய்யருடைய மனைவி லகூழிமி அம்மாளின் "இங்கே வந்துட்டுப் போங்க” என்ற வார்த்தை களைக் கேட்டு அவர் உள்ளே சென்றார். சிறிது நேரம் சென்று வெளியே வந்து அந்த ஆளோடு பேச ஆரம்பித் தார். "என்னடா செல்லக்கண்ணு, நீ பெரிய ஆளா யிட்டேடா. திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேங்கிறேயடா. என்ன வந்துட்டதோ உனக்கு?”

"இல்லேங்க, வீட்டிலே தவுசலுங்க. இல்லேன்னா என்னங்க எனக்கு, நம்ப வீட்டோட கிடக்கிறவனுக்கு - கப்பலுக்குக்கூடப் போனும்னு தோணித்துங்க."

“சீ, சி கழுதை! குட்டிச்சுவராபோகத்தானே உங்களுக்குப் புத்தி தோணுகிறது. உருப்படுவதற்கு வழியா உங்களுக்கு அகப்படும்?”

கொஞ்சம் கவலை பிடித்தவர்போன்று சிறிது பேச்சை நிறுத்தி, மீண்டும் “ஏண்டா அக்கிரகாரம்தான் கெட்டுப் போய்விட்டதென்றால் குடியானத் தெருவிற்கு என்னடா வந்துவிட்டது?... ஏண்டா பாசிப் பணம் இன்னும் வரல்லை?” என்றார். அவர் பேச்சுத் தொனியில் கோப மிருப்பதாய்க் காணப்படவில்லை. கொஞ்சம் துக்கந்தான் தெரிந்தது. தன் கிராமத்தின் சுற்று வட்டாரத்தின் எல்லை யோடு நிற்காமல் அவர் மன நோக்கு உலகத்தையும் சுற்றி வந்தது.

 "ஆமாங்க, ரொம்ப கெட்டுப்போச்சுங்க. கட்டு மானமே குறைஞ்சுபோகுது. தன் தலை நாட்டாமை தலைவிரிச்சு ஆடுதுங்க... நேத்திக்குப் பாருங்க, தொப்பளான் குடிச்சிப் பிட்டுப் புரண்டான். வெசது புளுத்தநாய் குறுக்கே போகாது. நாட்டாமை இருக்காங்களே! பொழுது விடிஞ்சா டவுனு போயிடுறாங்க. ஏதோ தில்லுமுல்லு பண்ணிக்கையிலே ரெண்டுகாசாக் கொண்டு வந்துடறாங்க காசுக்குத் தானே பவிகங்க. இப்போது என்ன வேண்டியிருக்குது? ஒண்ணு, சொன்னா கேக்கணுங்க, இல்லாட்டி தனக்காத் தெரியணும்.

"ஏய்... மேல வீட்டு ஐயாவைத் தெரியுமா?’ என்று சிவராமய்யர் கொஞ்சம் மெதுவாகச் சொன்னதும், "அவங்களா, பெரிய ஆசாமிங்க மூணாம் வருசம் பயிர்ச் செலவு பண்ணி, பட்டதுபோதுங்க. புள்ளி விட்டாஏதோ குறைந்தது ஒத்துண்டாத்தான் சாமி ஏழை பாழை பொழைக்கலாம்? கரடியாக் கத்தினாலும், வயித்திலே அடிச்சதுதான் மிச்சம். ஏங்க என்ன விசேஷம்?” என்றான் செல்லக்கண்ணு.

"அதாண்டா சொல்லறேன். ஏதோ சடையன் கிட்டே பேசிக்கொண்டிருந்தாங்க பாசிப் பணத்தைப் பற்றி. தனியாக ஏதாவது குறுக்கே செய்கிறான்.”

 "அவங்களே அப்படித்தானுங்க... சடையனா? பொல்லாப் பயலாச்சே! என்னுகூடியும் என்னுகிட்டே மாட்டிக்காமே போவப் போவதில்லை."

 "அதெல்லாம் கிடக்கட்டும். ஏண்டா எப்போ கலியாணம்?” என்று கேட்டார் அய்யர்.

 வெகு நேரமாக இக்கேள்வியை அவர் கேட்க எதிர்பார்த்து நின்ற செல்லக்கண்ணுக்கு அப்போது வந்த சந்தோஷம் மிக அதிகமாக இருந்தது. ஆயினும் வேறு அநேக காரணங்களின் நிமித்தம் அதை அப்படியே வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.

 "அதுதானுங்க... முந்தானா வீட்டிலே போயிருக் காங்க பரிசம் போட" என்று சங்கோசம் கொண்டு, எட்டிய வெளியைப் பார்த்துக்கொண்டே, அலட்சிய பாவத்தில் சொல்லுவதுபோல, செல்லக்கண்ணு சொன்னான்.

 "போடா போடா, எங்கையாவது கலியாணம் ஆகாத பெண்ணைப் பார்த்து உனக்குப் பரிசம் போடச் சொல்லு.  உனக்கு ஆகணும் என்பது முக்கியமில்லை. அவளுக்கு ஆகிவிடும். என்ன ஆச்சு நாகப்பன் மகள் தகராறு?

"அதை ஏன் கேக்கிறீங்க... ஆனா இப்பொ என்ன எல்லாம் ஆச்சுங்க. அந்தப் பயலையே கூப்பிட்டுக் கட்டிக் கொடுத்துட்டாங்க. என்னைத்தானுங்க நினைத்துக்கிட்டு இருந்தாருங்க அவரு. நல்ல பெண்ணுங்க, மனுசனாம் மனுசன். திருட்டுத் தாலி கட்டாட்டா கலியாணம் ஏதுங்க அந்தப் பயலுக்கு? போறாங்க. அவன் கொடுத்து வைத்தவன். நல்ல பொண்ணுங்க. வெகு அடக்கம். என்ன சொல்ல இருக்குங்க. அந்தப் பய இப்போ மொறைச்சுக் கிறான். பரிசப் பணங்கூடக் கொடுக்க முடியாதுங்கிறான். பெரிய ஆளுங்க அவன். சும்மாவா இந்த வேலை செய்தான்?” என்று நாகப்பன் மகளிடம் உள்ள பிரியமும், அந்தப் பயலிடம் உள்ள வெறுப்பும் கலக்க, மடமடவென்று பேசினான்.

“எந்தூர்ப் பெண்? அது கிடக்கட்டும், ஏண்டா என்கிட்டே சொல்லக்கூடாதா?’ என்று வினவினார் சிவராமய்யர்.

 "நான் எப்படிச் சொல்லறதுங்க? அண்ணன் சொல்லுமின்னு இருந்தேங்க. சொல்லல்லை போல இருக்கு. சுத்த மோசங்க. உங்ககிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லாமே போயிருக்காங்களே!... இன்னிக்கு வரணுங்க.."

 “உள்ளேபோய் அம்மா ஏதோ சொல்லறாங்க, போய்ப்பாரு. கொட்டில் மாட்டை - மாட்டுக்காரப் பயல் வந்திருக்கான் - அவுத்து விடு” என்று சொல்லி, சிவராமய்யர் அவனை உள்ளே அனுப்பினார்.

அம்மா சொன்ன காரியங்களைச் செய்து முடித்து விட்டு, மோர் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து, என்னதான் அப்படி இப்படி நின்று கொண்டிருந்தும் பொழுதுபோகவில்லை அவனுக்கு. தன் வீட்டில், பரிசம்போடப் போனவர்கள் திரும்பி வரும் நேரமோ எப்போதென்ற நிச்சயமில்லை. மாலைக்குள் அவர்கள் வருவார்கள் எனினும் அதுவரையில் அவனுக்கு நேரம் நகரவில்லை. நிச்சயமாக இந்தத் தடவை கலியாணம் முடிந்துவிடும் என்றாலும், தன்னுடைய அண்ணன், அத்தை முதலியவர்களின் வருகையில்தான் அக்காரியம் நிறைவேற இருக்கிறதென்று அவர்கள் வருகைக்காகத் துடித்துக் கொண்டிருந்தான். நேற்றைப் பொழுதை எப்படியோ கழித்துவிட்டான். நிச்சயமில்லாது 'இதோ இதோ என்று எதிர்பார்க்கும் நேரம் நழுவி எட்டிப்போகிறது போலும். இடைநேரத்தைக் கழிக்கச் செல்லக்கண்ணு மிகவும் சிரமங்கொண்டான்.

காலையிலிருந்து கீழ்க்கோடியிலிருந்து மேலக் கோடி வரையில் நடந்து, அகப்பட்டவர்களையெல்லாம் இழுத்து வைத்துப் பேசியும் மத்தியானம்தான் ஆகிறது. பரிசம் போடப்போனவர்களோ, கலியானம் பேசிக் கொண்டே, இவன் சாகும் வரையில் அங்கேயே இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் கொள்ளலானான். நேற்றைத் தினமே பேசிவிட்டு இன்று காலையில் கிளம்பினாலும் உருமத்திற்கு முன் வந்து விடலாம். என்ன கஷ்டமோ, இவனுக்கு என்ன தெரியப்போகிறது?

மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு, செல்லக் கண்ணுக்கு வீட்டில் தரிப்புக்கொள்ளவில்லை. மண் வெட்டியை எடுத்துக்கொண்டு நல்ல கொளுத்துகிற வெய்யிலில் மணல் மேட்டிற்குப் போனான். அது ஒரு திடல். சுமார் முப்பது நாற்பது தென்னை மரங்களும், இரண்டு மூன்று மூங்கில் கெர்த்துக்களும் அதில் இருந்தன. மற்றும் பெரும்பாலான இடம் அதில் காலியாக இருந்தது. கோடை மழை பெய்ததுடன் அதை ஒரு தரம் பறையர்களை வைத்துக்கொண்டு கொத்த வேண்டும் என்று மிராசுதார் முன்பு சொல்லியிருந்தும் அந்தக் காரியம் இன்னும் செய்யப்படாது நின்றிருந்தது.


ஒரு வேலையும் இல்லாது சும்மா உட்கார்ந்து குருட்டு யோசனைகளின் தொந்தரவு பொறுக்காது அவன் மணல் மேட்டைக் கொத்துவதற்குப் புறப்பட்டான்.

மொங்கு மொங்கென வேர்க்க விருவிருக்கக் கிட்டத்தட்டப் பாதிக் கொல்லை கொத்திவிட்டான். சிறிது இளைப்பாற ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு வெற்றிலைபோட ஆரம்பித்தான். போட்டதும் பழைய படியே யோஜனைகள் மனத்தில் குறுக்கிட ஆரம்பித்தன. கலியான ஞாபகம் வந்துவிட்டது.

'போனவங்க வராத காரணம் தெரியவில்லையே!” என ஆரம்பித்தவுடன் மனதும் ஓட ஆரம்பித்தது. '.

இந்நேரம், இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாங்க.. என்ன வேலை அங்கே? உண்டு இல்லை என்பதில்லை. அவங்க அப்போதே நிச்சயம் சொல்லிவிட்டாங்களே. கருப்பண்ணன் கூடப்போயிருக்காங்களில்லையா? அவங்களே மசமசப்பு. போனாங்க வந்தாங்க என்கிற தில்லை. போன வருசம் என்ன செய்தான்? மாடுவாங்கித் தரேன்னு கொல்லுப்பட்டி ஐயாவை ஒரு மாதம் இழுக்கடித்தான். மாட்டுத் தரகு வேறே அவங்களுக்கு. எப்போதும் வீட்டு வாசலிலே ஐந்து பேர். "இங்கே வாண்ணேன் என்று ரெண்டுபேரை இங்கே கூட்டிக் கிண்டு குசுகுசுன்னு பேசுவான். ரெண்டுபேரை அங்கே கூட்டிட்டுப் பேசுவான் ஒண்ணுமில்லாமே. துரும்பு யுடிங்கோ!' என்பான். காசிலே மட்டும் குறி. அவங்கதான் அப்படின்னா, எனக்கு அண்ணன் வாச்சிட்டாங்களே, அண்ணன்! மூணு வருஷமாக் கலியாணம் பண்ணறாங்க. நானும் சும்மா இருந்தா போக வேண்டியதுதான். நேரேயா சொல்ல முடிகிறது. கப்பலுக்கு ஓடரேன்னதும்தான் அங்கே இங்கே போக ஆரம்பிச்சாங்க என்ன சொல்லி என்ன? கொடுத்து வெச்சது தான் நமக்குக் கிடைக்கும். நாகப்பன் மகள் இப்படி ஆகும்னு யார் நினைச்சா? காத்துண்டு இருந்தது தான்மிச்சம். காலிப் பயல் திருட்டுத் தாலி கட்டிட்டான். அவனும் மனுசனா? என்ன முடியும் அவனாலே? பழத்தட்டு தூக்கறான் ரயிலடிலே! பயிர்ச் செலவு செய்கிறது அப்பாலே கிடக்கட்டும். ஒரு பண்ணையிலே வணங்கி வேலை செய்யத் துப்புண்டா? பாவம் அந்தப் பெண்ணுக்குக் கஷ்டம். ஏதோ நல்லபடியா இருக்கட்டும்.

'இந்நேரம், இந்நேரம் அந்தக் கோணவாய்க் காலடிக்கு வந்திருக்கணும். அவங்களெல்லாம் மத்தி யானம் சாவடியிலே தங்கி சுப்புக்காத்தான் வீட்டிலே சாப்பிட்டு வந்தாலும் வந்துவிடலாம். நல்ல ஊரு, சாவடி முட்டி புடிச்ச ஊரு. போட்டா முளைக்கனுமே. புதைய லெடுக்க வெட்டிப் போட்டாலும் ஏதாவது பொழைக் கணுமே நல்ல மண்ணு. சப்பாணிக்குக்கூட அங்கேதானே கலியாணம்.”

"யாரு இப்போ நல்லா இருக்காங்க? எல்லோருக்கும் கஷ்டம் என்று நினைவு கொண்டதும் அவன் மனது அவனை அறியாது ஒரு ஆறுதல் கொண்டது.

"மிராசுதாருக்குக் கஷ்டம். காலையிலே எழுந்து பல்லுக்கூடத் தீத்தாதே உழவு காலத்திலே வாய்க்கால் வரப்பிலே உட்கார்ந்து கிடக்கணும். ஏராங் கடைசி வரையிலும் பழியாக் கிடக்கணும். நெல்லு விலை போகலே. வாயிதா கட்டணும் என்று எப்போதும் அழுகை தான். காசோ குதிரைக் கொம்பு. ஏதோ மேலுக்கு எல்லாம் சந்தோஷப் பூச்சுத்தான். கிட்டை போனால்லே தெரியுது.

'இந்நேரம். கோண வாய்க்கால்... என்ன மெதுவா வாராங்க... எதுவும் தாமசம்தான். உருப்படாதே போறது வெகு சீக்கிரம். ஆமாம், ரோசியந் தோப்பு வந்திருப்பாங்க, இருட்டு முன்னே வந்துடுவாங்க. அப்பப்பா, ரோசியந் தோப்பு, ஏதோ அதைப்பத்திக் கதை சொல்லறாங்க. ரொம்ப நாள் முந்தி கட்டையன் தாத்தா அங்கே தூக்குப் போட்டுக்கொண்டாங்களாம். கட்டையன் வம்சமே பித்துக்குளி. அவருக்கு ஒண்ணுமே குறைச்சல் இல்லை யாம். உருமத்திற்கு மாடு ஒட்டிவரக் கையும் கயிறுமா வீட்டை விட்டுப் புறப்பட்டவங்க மரக் கொம்புலெ துக்கு மாட்டிக்கிட்டுத் தொங்கிண்டு இருந்தாங்களாம். அந்த மரத்தை வெட்டியாச்சு. இப்போதும் அந்தத் தோப்பு மரங்கள் கப்பும் கிளையுமா வா வான்னு கூப்பிடுறது மாதிரியாத்தான் இருக்கிறது. மத்தியானமே ஒரே வெறிச்சென்று இருக்கும். ஆனால் ஆயிரம் காக்கை மட்டும் எப்போதும் கத்திண்டே இருக்கும். நம்மூரு வாய்க்கால் அங்கே வளைந்து வரும்போது பயந்துண்டு தாழங்காட்டிலே மறைந்து கொண்டு தான் வருகிறது. அந்தப் பெரிய ஆலமரத்திற்கும் செக்கடித் தோப்பு புளியமரத்திற்கும் முனி ஓட்டம். அன்னிக்கு ராத்திரிக்கூட அந்த வழியிலே வந்த கலிமுத்து அண்ணன், பார்த்துப் பயந்துக்கிட்டுக் காச்சலில் விழுந்துவிட்டாங்க... இவங்க குறுக்காக மேலவட்டம் வயல் வழியே வந்துடுவாங்க.

'போன வருஷமே அதைத் தரிசாப் போட்டு விட்டாங்க கிஸ்திக்குக்கூடக் கட்டாதாம். நட்டாப்போதும் முட்டச்சாவி எங்கேன்னு காத்து இருக்கும். சாவின்னா என்னா, மாவுக்கு மூணுன்னா என்ன? சர்க்காரு கேக்கிறாங்களா? முப்பது வருஷம் முன்னாலே தாம் பார்த்து வாயிதாப் போட்டாங்களா..

'அந்தக் கண்றாவி பார்க்க முடியாது. அந்த வயலுக்கு ஏத்தாப்போல நாலு பனமரமும் ஒரு அய்யனார் கோவிலும். புல்லூரான் அங்கே மூணு மா வாங்கியிருக் கிறான். பின்னே எப்படித் தில்லுமுல்லு காசு போற வழி? மவளைக் கட்டிக்கொடுத்தான்; வீடு திரும்பி வந்துடுத்து. மகனோ நல்ல வயசிலே போயிட்டான். அவனும் ஒடுங்கிட்டான். என்னவேணும் மனுஷனுக்கு இதைவிட பாவம்'

'இந்நேரம், இந்நேரம். தலையைச் சிறிது தூக்கி எட்டிய வெளியைப் பார்த்தான். யாரோ இரண்டு மூன்று பேர் வருவது தெரிந்தது.

'அவங்க அதோ வராங்க... எனக்கு அப்பவே தெரியுமே, பொழுதோட வந்திடுவாங்கன்னு. பின்னென்ன, இருட்டிலா வருவாங்க? அண்ணன் விஷயம் தெரிந்த வங்க.

திரும்பி அங்கே பார்த்தபோது அவர்கள் இல்லை யென்பதை அறிந்துகொண்டான். ஒரு ஏமாற்றத்தின் ஆத்திரத்தில், எழுந்து வெகு விசையாகக் கொத்த ஆரம்பித்தான். அநேகமாகக் கொல்லை பூராவாகக் கொத்தியாகிவிட்டது. குறுக்கும் நெடுக்குமாக நடந்து, குனிந்து, ஆங்காங்கே கிடந்த கல்லை எடுத்து எட்டி யெறிந்து கொண்டிருந்தான். குதுாகலம் ஒரு பக்கம் இருப்பினும் ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்த்து அடைபட்டுக் கிடந்ததன் காரணமாக அவன் மனது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தான்.

"பொறந்தாலும் சின்னத்தம்பி மாதிரியா பொறக்க ணும். என்ன கவலை அவனுக்கு? வீடாச்சு, வாசலாச்சு. பெரிய பண்ணையிலே வேலை. போன வருசம் கலியாணம் பண்ணிக்கொண்டான். அவன் வேலையுண்டு, அவ னுண்டு, ஐயர் வீடு உண்டு. ஐயாவுக்கும் அவன்கிட்டே உசிரு. என்ன நினைச்சு என்ன? அவங்க அவங்க பிறந்த வழி...'

வீட்டிற்கு வந்து மண்வெட்டியை வைத்துவிட்டுக் குளத்தில் குளித்தான். பின் சிவராமய்யர் வீட்டுக்கு வந்தான்.

சிவராமய்யர் அப்போது அவனைப் பார்த்ததில் சிறிது ஆச்சரியம் கொண்டவர் போல, “ஏண்டா, என்ன விசேஷம்?” என்றார். "இல்லேங்க, கொல்லை கொத்திட்டேனுங்க..... சொல்லிப்போக வந்தேன்” என்றான். “ஏண்டா, என்னடா பைத்தியம்? ரெண்டு ஆளை அழைத்துக் கொண்டு செய்யக்கூடாது?....சரி, பசுமாட்டைக் காணோமாம், போய்ப் பார்த்திட்டு வா!”என்று சொல்லி அவனை அனுப்பினார்.

இரவு வெகுநேரம் தேடி, பிறகு பவுண்டிலிருந்து ஒட்டி வந்து ஐயர் வீட்டில் கட்டிவிட்டு, அவன் வீடு சேரப் பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது. பரிசம் போட்டு வந்தவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண் டிருந்தார்கள்.

செல்லக்கண்ணு, வெட்கமும் சங்கோஜமும் கொண்டு எட்டி நின்று, அவர்கள் பேச்சை மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அடைந்த சந்தோ ஷத்தை அவனே அறியாதுதான் அப்போது நின்று கொண்டிருந்தான்.

 - மணிக்கொடி 1937

மிஸ்டேக் - மெளனி
'ஏ ட் ஆநந்த ராவ் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு, வெகு சமீபத்தில் இருந்தான். "ஏட்டாகக் காயமாகி, ஏழு வருடம் ஆகிவிட்டது. அவன் மந்திப்பேட்டைக்கு வந்தும் ஐந்து வருடத்திற்கு மேலாகிறது. அவ்வூருக்கு அடிக்கடி மாறிவரும் சப் இன்ஸ்பெக்டரிடமும் சர்க்கிளிடமும் மற்றும் மாறாது ஒரே விதத்தில், ஒரே இடத்தில் இருக்கும் கான்ஸ்டேபிள்களிடமும், நடந்து கொள்ளும் வகை ஏட்டிற்கு நிதானப்பட்டு உடம்பிலும் நன்றாக ஊறிவிட்டது.

கடந்த இரண்டு வருஷ காலமாக, அவ்வூரில் இருந்து வரும் சப் இன்ஸ்பெக்டர் சோணாசலம் பிள்ளை, இவனுடைய ஆப்த நண்பரே போன்றுதான். அவனும் அப்படித்தான் சொல்லிக் கொண்டு வருகிறான். போலீஸ் இலாகாவில் இரண்டு மேல், கீழ்த்தர உத்தியோகஸ்தரிடை நட்பு ஏற்பட்டதென்றால், அத்தகைய நட்பின் தன்மை எப்படி என்பது ஊகித்துக் கொள்ள முடியுமேயன்றி, சொல்வது முடியாது. அவ்வூர் மளிகை வீரண்ணன் செட்டியார் எப்படி எல்லோரிடமும் ஏட்டிடமுள்ள தன் நட்பைத் தெரிவித்துக் கொள்ளுகிறாரோ, அவ்வகையில் இது இருக்கலாம். ஆயினும் இருவரிடை இருக்கும் சம்பந்தம்தான் மிகுந்த நுட்பமாக ஆராய்ச்சிக்கும் எட்டாது மர்மமாகவே அப்பால் செல்வது.

சோணாசலம் பிள்ளை வந்த புதுசில், ஆநந்த ராவ் அவருக்கு 272 ஆகத்தான் இருந்தான். பிறகு என்ன மேன் என்று கூப்பிடும் மனிதத் தன்மை பெற்றதும், அதன் பிறகு 'ஆநந்தம் என்னப்பா என வீட்டிலேயும் ஏனைய கான்ஸ்டேபிளிடையும் விளிக்கக்கூடிய அந்தஸ்தை அடைந்ததும் சாதாரணமாக எதேச்சையாக நடந்ததல்ல.

சோணாசலம் வீட்டுக் கன்றுக்குட்டிக்கு ஒருதரம் வியாதி எனத் தெரிந்துகொண்ட ஆநந்த ராவ், சைக்கிளில் ஆபீஸ் உடுப்பில் அலைந்தது ஊரிடையே, ஒரு கிளர்ச்சி கொடுக்கும் சம்பவமாகப் பாவிக்கப்படும் தோரணையில் இருந்தது. அது சோணாசலம் வந்த புதுசில், அப்போது ஏட் அவருக்கு 272 ஆகத்தான் இருந்தான். ஏட்டுக்கும் நம்பர் உண்டு.

சோணாசலத்தின் மைத்துனரை, ஒரு தரம் அவர் ஊரிலிருந்து வந்தபோது, ரயிலடியிலிருந்து வீட்டிற்கு ஜாக்கிரதையாக ஏட் கொண்டுவந்து சேர்த்தான். வந்ததும் வெளியே காத்திருந்தான். சிறிது சென்று இன்ஸ்பெக்டர் வெளிவந்து தரிசனம் கொடுத்தபோது எஜமான், அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன் என்றான் ராவ்.

‘சரி, நீ போ "மேன்” என்றார் சோணாசலம். அது முதல் அவன் அவருக்கு மனிதனாகிவிட்டான். இது சுமார் ஆறு மாதம் முன்பு. இதன் பிறகு ஏட், இன்ஸ்பெக்டரிடம் அதிகமாகவே நெருங்கி வந்தான்.

ஒருநாள் காலையில் சோணாசலம் முன்பு, அவர் மனைவியால் காப்பி கொண்டுவந்து வைக்கப்பட்டது. அவளோடு பேச யத்தனிக்கும் சமயம், காப்பி பாத்திரம் மேஜைமீது வைக்கப்பட்ட தடால் என்ற சப்தமும் சிறிது காப்பி தளும்பி மேஜைமீது சிந்திய காட்சியும் அவரைப் பேசாது அருந்திவிடச் செய்து, வாயிற்பக்கம் கொண்டு தள்ளியது. மனத்தில் மட்டிலும் தன் மனையாளோடு பேச வேண்டும் என்ற அவா குறைவுபடாது இருந்தது போலும். அப்போது தன் எதிரில் ‘கூர்ச்சம் மாதிரியாக ஏட்ராவ் நிற்பதைக் கண்டார்.

‘என்ன மேன், நீ ரொம்ப சோம்பேறி. சொல்லச் சொல்ல நிற்கிறாய்? என்ன அப்பா? என்றார்சோணாசலம். ஒருவகைக் கொஞ்சுதலைப் போன்றும், ஆத்திர மூட்டப் பட்டது போன்றும் தோன்றியது அவரது பேச்சுத்தொனி. ஏட்டிற்கு சந்தோஷமேயாயினும், பயந்ததாகத்தான் வெளிக்குக் காட்ட வேண்டும் என்பது தெரியும். உச்சி குளிர்ந்ததை, யார் முன்னிலையில் எவ்வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டவன் போன்றே பயந்துதான் அவர் எதிரில் நின்று கொண்டிருந்தான்.

நீபோடா சுத்த சோம்பேறி-சுத்தப் போக்கிரிப்பயல்... உன்னை நம்பவே கூடாது என்று சோணாசலம் அர்த்தமற்ற மூளைப்பேச்சின் வெளி விளக்கத்தையும், தன் மனைவியின் ஞாபகத்தையும் கலந்து கொட்டாவி விட்டுக் கொண்டே சொன்னார். திறந்த வாயில் எத்தனை காவி ஏறிய பற்கள் இருக்கின்றன என்பதை "ஏட் எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அவனுக்கு ஆனந்தம் தாங்க வில்லை. தலை தரிக்கவில்லை. 'ஸார், நீங்க சொல்லுங்க ஸார். அந்த விஷயம்- இவ்வகையாக சோணாசலத்தை'ஸாராகப் பாவிக்க நேர்ந்ததும் சுமார் மூன்று மாதத்திற்கு முந்தித்தான் அதற்குப் பிறகு அடிக்கடி அவரை நெருங்கி ராவ் ஒவ்வொரு நாளும் தவறுகள் - உலக நடப்பு - டிபார்ட்மெண்ட் விஷயம், யோசனைகள் எல்லாம் பேசுவது தான் வழக்கம். என்றைக்காவது ஒருநாள், அவருடன் ஒரு வார்த்தை பேசி, பதில் கேட்காவிட்டால் "ஏட் உள்ளத்தில் ஒரு துயரம் உறையும். பழையபடி சோணாசலம் 'எஜமானாகி விடுவாரோ, தானும் தனித்தன்மையற்ற 272 ஆகப் போய்விடுவோமோ என்ற எண்ணத்தின் பயம். மற்றும் சிறிது நேரமாயினும் அவர் எதிரிலே தோன்றுவதி னின்றும் அநுபவிக்கிற இன்பம் இழந்த ஒருவகை வருத்தமும் அவன் மனது அடையும். அத்தகைய நாட்களில் மிகுந்த கோபப் புலியாகவே, வாடகை வண்டிக் காரர்களுக்கு "ஏட் தோன்றுவான்.

அன்றைய தினம் "ஏட் ராவுக்கு பத்து மணி டுடி’ பதினொரு மணி சுமாருக்கு அவன் சில அறிக்கைகளில் 'சர்க்கிள் கையெழுத்து வாங்கப் போகவேண்டி இருந்தது. ஒரு வாரமாக புதிதாக வந்த சர்க்கிளைப் பற்றி விவரமற்ற வதந்திகளேதான் வெளியில் உலாவியது. அவர் ஒரு கூடமான, மர்ம மனிதனாகவே இருந்து வந்தார்.

"ஏட் பேப்பர்களை எடுத்துக் கொண்டு அவர் வீட்டிற்குப் போக எண்ணியதும், அவன் மனது துள்ளி விளையாட ஆரம்பித்தது. நடுவில் சர்க்கிளை வைத்து யோசனைகள் சுற்றிச் சுற்றி வந்தன. முதலில் அவரைப் பார்ப்பது, கொஞ்சம் கொஞ்சமாக அவர் பழக்கம் ஏற்படுவது. பிறகு சிநேகம் என்பவைகளைப் பற்றி நினைத்தான். சப்-இன்ஸ்பெக்டர் சோணாசலத்துடன், தான் பழகும்விதம் - அவரைப் பிடித்தவிதம் - இப்போது சர்க்கிள், டிப்டி, அப்படியே ஜ.ஜி. என்று என்னவெல்லாமோ தாறுமாறாக அவன் மனத்தில் தோன்றித் தோன்றி மறையலாயின. ஒரு குதுகலம், முதல் தரம் பார்க்கப் போவதினால் ஒரு கூச்சம், ஒருவகை பயம் - மனத்தில் தோன்றின. வாயில் போட்டிருந்த வெற்றிலை பாக்கை வெளியே உமிழ்ந்து பல்லைச் சுத்தம் செய்து கொண்டான். ஒரு கையால் தலைக் குல்லாவைப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து, அரை பாட்டில் சோடாவைக் குடித்தான். பிறகு தலைக் குல்லாவை இரண்டுதரம் இரண்டு கைகளாலும் தூக்கித் துக்கி வைத்துப் பொருத்திக் கொண்டான். இரண்டுதரம் தூக்காமலே அதைச் சாந்தப் படுத்துவது போன்று தடவிக்கொடுத்து அதைச் சரியாக இருக்கச் செய்தான். தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் வாயிற்படியண்டை வந்தடைந்தான்.

அப்போது ஜட்கா வண்டிச் சுப்பன், எதிரே வெற்று வண்டியை, மெதுவாக ஒட்டிக் கொண்டு வந்தான். "ஏட்' அதைக் கண்டான். காலை முதல் வாடகை கிடைக்காத சலிப்பில், முழு வண்டியையும் தனி வண்டியாக பிறர்
பார்க்கும்வண்ணம் ஆக்கிரமித்து, குறுக்காக உள்ளே சாய்ந்திருக்கும் மைனரைப் போல, சுப்பன் உள்ளே உட்கார்ந்தவண்ணம் கடிவாளத்தை, கையினின்று நழுவி விழும் தோரணையில் பிடித்து ஒட்டிவந்தான். "ஏட் ராவ் சைக்கிளைத் திருப்பி உள்ளே வைத்துவிட்டு வாயிலில் வந்தபோது வண்டியும் எதிரே போய்க் கொண்டிருந்தது.

 'ஏய்! என்றான் ராவ்.

திடுக்கிட்டுப் பின்பக்கமாகக் குதித்து, எதிரே கைகட்டி 'எஜமான் என்றான் சுப்பன். அவன் மனத்தில் ஆத்திரம் ஒரு பக்கம்; பயமும் ஒரு பக்கம்.

 'என்னடா எலெ லாக்கப் கேக்குது என்ன குஷால்டா என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டு 'சர்க்கிள் வீட்டிற்கு ஒட்டச் சொன்னான் ஏட்.

 'சைக்கிளில் வேர்க்க விருவிருக்க முதல்தரம் அவரைப் பார்க்கபோனால்- என்பதெல்லாம் "ஏட்’ மூளையில் வண்டியைக் கண்டவுடன் தோன்றாமல் இல்லை. வேகமாக துரத்தப்பட்டு ஓடின வண்டி ஓட்டத்தை விட துரிதமாகவே ராவின் மனத்தில் யோசனைகள் போய்க் கொண்டிருந்தன. சர்க்கிள் வீட்டை வெகு சீக்கிரமாகவே அடைந்ததாக நினைத்த சுப்பனைவிட, சீக்கிரமாகவே வந்துவிட்டோம் என்ற எண்ணம்தான் ஏட்டுக்கு.

மாலை நாலரை மணி ஆகப்போகிறது. ஆநந்த ராவின் 'டுடி முடியப்போகிறது. சப்இன்ஸ்பெக்டர் சோணாசலம் இன்னும் ஆபீஸ் வரவில்லை. அவரைப் பார்க்காது பேசாது போவதில் ஏட்டுக்கு இஷ்டமில்லை. காத்திருப்போம் என்றாலோ, வீட்டிற்குச் சென்று உடைகளைக் கழற்றி, 'மப்டியில் கடைத் தெருவில் உலாவி சல்லாபம் செய்யவேண்டும் என்ற அவா, சீக்கிரம் வீடுபோகத் துண்டுகிறது. ஸ்டேஷனை விட்டு சுமார் ஐந்து மணிக்கு வீட்டிற்குக் கிளம்பினான். விதியை அடைந்தபோது பழக்கடை சாமித்தேவன் இவனைக் கண்டு அருகில் வந்தான்.

 "என்ன சார். காலையிலே சோக்கா - வண்டியிலே” என்றான் சாமித்தேவன்.

“என்ன? நீ பாத்தையா - சர்க்கிள் வீட்டிற்குப் போனேன்.”

"ஆமாங்க - கேள்விப்பட்டேனுங்க. எப்படி சார்-" என்றான் சாமித்தேவன்.

 "ஹா-ஹா அந்த சமாசாரமா- நெருப்பு ஐயா நெருப்பு - போலிஸே அப்படித்தான் தேவரே - பழைய சர்க்கிளா பாழா போச்சு - அல்லது நம்ப ஸாரா- சுட்டுடுவான் மேன்சுட்டுடுவான்’ என்றான் ஏட்ராயன்.

 இதற்குள் பேசிக்கொண்டே, வழியில் சோணாசலம் பிள்ளை வீட்டைக் கடந்துவிட்டார்கள். "ஏட் தன் சைக்கிளில், ஏறி, வீடுசேரப் புறப்பட்டுவிட்டான்.

முதல் முக்குட்டுச் சந்தியில் 472 பீட் இருந்தான். ஏட் அவனுடைய சாங்கோபாங்கமான சலாத்தைப் பெற்றுக் கொண்டு கொஞ்சதுரம் சென்றவன், போய்க்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தான். அப்போதுதான் சோணாசலம் ஆபீஸ் போவதற்காக வாசலுக்கு வந்தார். ஏட்டின் லாகவமான, ஒரு சைக்கிள் திருப்பல். சோணாசலம் புறப்பட்டுவிட்டார். அவரை அடைவதற்குள்ளேயே, அவரோடு பேசுவதற்கு அநேக விஷயங்கள் ஏட் மனத்தில் உதயமாயின. மற்றும் அன்று காலையில்தானே, அவன் முதலில் சர்க்கிளைப் பார்த்தது.

சோணாசலம் சைக்கிளில் ஆபீஸ் போய்க் கொண் டிருந்தார். அவரை அணுகினான். சோணாசலம் பக்கத்தில் திரும்பி என்ன, ஆநந்தம் என்னடா என்றார்.

 “ஸார், ஒரு "மிஸ்டேக் ஸார் - செஞ்சுட்டேன் என்று "ஏட் மிகுந்த சாவதானமாகச் சொன்னான்.

அவரும் இவன் பண்ணின மிஸ்டேக்கினால் தலையை இழந்துவிடவுமில்லை, இழந்துவிடப் போவது மில்லை என்ற நிதானத்தில்,

"என்னப்பா மிஸ்டேக்-?” என்று வாயில் போட்டிருந்த வெற்றிலையை அசைபோட்டுக் கொண்டே கேட்டார்.நல்ல பிள்ளையின் மனத்தில் தோன்றும், முதல் நாள் தான் வெளியில் செய்ததான கல்பிதக் குற்றத்தைத் தானாகவே உபாத்தியாயரிடம் சொல்லி, அவருடைய வசையை விரும்பும் ஆவலைப் போன்று, ஏட் ராயன் மனத்திலும் இருந்தது. முகமோவெனில், அவன் திவ்விய முகம் போன்றுதான் பிரகாசித்தது.

 "இன்னிக்கி சர்க்கிள் வீட்டிற்குப் போனேன். சார்வண்டியில்-”

"உனக்குத் தெரியவே இல்லைடா-அவன் ஒரு மாதிரி ஸ்டிரிக்ட் மேன்-என்ன செய்தாய்?" என்றார் சோணாசலம்.

"இல்லை சார்-வண்டியிலே போனேன். யோஜனை சார்- வண்டிக்காரப் பயல் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டான் சார் - இறங்கினேன் சார் - சர்க்கிளும் வாசலில் நின்றிருந்தார் சார்."

"என்னடா - நீ செய்றது? ரெண்டு வாசல் முன்னேயே நிறுத்தியிருக்கக் கூடாதா? யோஜனை என்ன யோஜனை வேண்டியிருக்கிறது."

"அவரைப் பார்த்தேன் சார் - வண்டிக்காரப்பய மட்டுமிருந்து - அவர் இல்லாவிட்டால், தோலை உரிச் சிருப்பேன் சார்-" என்றான் ஏட்.

"வண்டிக்காரப் பயல்களே அப்படித்தாண்டா. போக்கிரிப் பயல்கள் - ஏமாந்தா, சரி அப்புறம்-”

"அவர் சிரித்தார் சார்- எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஆனாக்கே குனிந்துவிட்டேன் சார்- அவர் ஒரு மாதிரிதான்.”

"அப்பவேதான் சொல்லி இருக்கேனடா-சீ, சீ போடா, என்ன பிசகடா - என்னடா நினைத்துக் கொள்ளுவான் - என்னைப் பற்றி.”

'டிப்டி இரண்டு நாட்கள் கழித்து சனிக்கிழமையன்று மந்திப்பேட்டையில் 'காம்ப் செய்வதாக சமாசாரம் வந்தது. மேற்சொன்னவைகள் நடந்த மறுநாள், சர்க்கிள், டிப்டி வரும் விஷயமாகப் பேச, சோணாசலத்தை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தார். பக்கத்தில் ஒத்து ஊதவும், தான் எப்படி அடித்துப் பேசுவது என்பதைப் புது சர்க்கிளுக்கு விளக்கிக் காட்டவேண்டியும், ஏட் ராயனையும் தன்னோடு அழைத்துச் சென்றார்.

சர்க்கிள் தன் வீட்டுத் திண்ணையில் நின்றிருந்தார். கீழே வாயிற்படியில் சோணாசலமும், மற்றும் கீழே படியோரத்தில், வீதியில், ஏட்டும் நின்றிருந்தனர்.

 ‘என்னய்யா இன்ஸ்பெக்டர் - டிப்டி நாளைக்குக் காம்பு- என்றார் சர்க்கிள்.

ஆமாம் ஸார் என்றார் சோணாசலம். எங்கே தங்க ஏற்பாடு செய்கிறது?

ஏட்டு ராவுக்கு, தான் இன்ஸ்பெக்டர் பக்கம் எவ்வளவு சமீபம் இருக்கிறோம் என்பதில் ஒரு திருப்தி, கொஞ்சம் எட்டியானாலும், சோணாசலத்தால் மறைக்கப் பட்டா ரெனினும், எதிரில் சர்க்கிளும் இருக்கிறார் என்பதில் ஒருவகை ஆனந்தம். எவ்வளவு கிட்ட, கொஞ்சம் கொஞ்சமாக எதிர்காலத்தில் தனது உத்தியோக உயர்வு எண்ணத்தில் படியேற முடியும் என்ற நம்பிக்கையின், நிரூபணம் போன்றுதான், எதிரே நடப்பது தோன்றியது.

‘ஏண்டா 272 -என்ன- என்று திடுக்கிட இவன் பக்கம் திரும்பிக் கேட்டார் சோணாசலம்.

"ஆமாங்க - எஜமான்-" என்றான் ஏட்.

"சரி ஸார்.” என்றார் சோணாசலம், ஸ்ர்க்கிளைப் பார்த்து.

ஸர்க்கிள் திண்ணை ஓரமாகக் கொஞ்சம் நகர்ந்து வந்து நின்றார். சப் இன்ஸ்பக்டர் நடுவாக இல்லாது, முக்கோணத்தின் மூன்று மூலைகளாக மூவரும் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்க்க முடிந்தது.

 "நேற்று நீதானே இங்கு-” என்று நிறுத்தினார் ஏட்டைப் பார்த்து சர்க்கிள்.\

 "ஆமாங்க-எஜமான் ஒருவகை நடுக்கம்; உள்ளுர புளகாங்கிதம் ராயனுக்கு.

"கையெழுத்து வாங்க-”

 "நேற்றைய தினமே என்னிடம் சொன்னான் ஸார் மிஸ்டேக்கை, முட்டாள்தனம் ஸார் - ஏக்ஸ்யூஸ்” சோனா சலம் நடுவில் குறுக்கிட்டார். பரிகாசமான ஒரு நகை சர்க்கிள் முகத்தில் தோன்றியது. சிறிதுபோழ்து நின்றார்.

ஏட்டைப் பார்த்துச் சோணாசலம், “புத்தியில்லை. ஆபீஸர்! முட்டாள், என்ன மிஸ்டேக்-” என்று, என்னவெல்லாமோ கடுமையாகச் சொன்னார்.

சர்க்கிள் "மிஸ்டேக் - முட்டாள்தனம்- என்று மெதுவாகச் சொன்னவர், தான் உலகில் பிறந்ததும் "மிஸ்டேக், போலீஸ் இலாகாவைச் சேர்ந்ததும் மிஸ்டேக்' இவ்வூரைப் பார்த்துவந்து, இவ்வகையில் இவர்கள் முன்னிலையில் நிற்பதும் மிஸ்டேக் - முட்டாள்தனம், என்று உணர்ந்தவர் போன்று தோன்றினார்.

சோணாசலம் "தவறுதல் ஸார்."

சர்க்கிள் "தவறுதல்?” என்றார்.

சோணாசலம் "மடத்தனம் சார் - எக்ஸ்யூஸ் செய்து விடலாம், முதல்தரம் ஸார் என்றார்.

மற்றும் ஏட்டைப் பார்த்து, "ஏய் போக்கிரித்தனமா என்னடா அது - குறும்புத்தனமா? மேல் உத்தியோகஸ்தர். வண்டி வீட்டடியில் அவர் முகத்திற்குக் கீழாக - உனக்கு ஒன்றும் புரியவில்லை. உடுப்பைப் பிடுங்கினால் தெரியும்" என்று அதட்டினார்.

 சாவதானமாக சர்க்கிள், "இல்லை இல்லை ஒருதனமும் இல்லை. என்ன விஷயம்? புரியும்படியாகச் சொல்லுங்களேன்-” என்றார். அப்போதுதான், அவருடைய அவ்வளவு நிதானப் பேச்சுகள் 272க்கு, அரட்டியை கொடுக்கலாயிற்று. சர்க்கிள் ஒருதரம் வாய்விட்டுச் சிரித்தார். இவர்கள் இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

"நேற்று ஸ்டேஷனிலிருந்துதானே வண்டி..? நடுவழியிலோ-”

 "இல்லை எஜமான் ஸ்டேஷனிலிருந்து எஜமான்”

சிறிது மெளனமாக இருந்து “வண்டிக்காரனிடம் மூன்று.அணா சில்லரை கொடு இருநூற்று-?”

 "எழுபத்திரண்டு எஜமான்."

"272 மூன்றனா. சில்லரை கொடு...”

"சரீங்க எஜமான்......

சிறிது நேரம் மெளனம்.

 "சரி. மிஸ்டர், முசாபரி பங்களாவில் எறக்கலாமா-” என்றார் சோணாசலத்தைப் பார்த்து, சர்க்கிள். -

“ஏண்டா மடையா...... 272 காதில் விழுகிறதா?...” என்றார் ராவைப் பார்த்து, சோணாசாலம்.

 "சரீங்க எஜமான்-”
 - "சரி ஸார்-"
 மறுபடியும் சர்க்கிள் ஏட்டைப் பார்த்து “ஏன் 272 உனக்கு வண்டிக்காரனைத் தெரியுமா, சில்லரை கொடுப்பதற்கு?’ என்றார்.

 கீழே பார்த்துக்கொண்டு ஏட் விழித்தான்.

 "148 நம்பர் வண்டி. தேடிப்பார்த்து, உடனே கொடு” என்றார் சர்க்கிள். அது ஒரு உன்னதமான கட்டளையைப் போன்று இருந்தது. அவர் சிரிப்பும் மாறிவிட்டது. ஒன்று சேர்ந்த பல் வரிசைகளின் இடைவெளி வழியாக, நல்ல பாம்பின் சீற்றம்போன்று உஸ் என்று வார்த்தைகள் வெளிவந்தன.

 சோணாசலத்திற்கும், சிறிது அரட்டி கண்டுவிட்டது. சிறிது சென்று சர்க்கிள் அவரைப் பார்த்து “சரி நான் - ஏற்பாடு செய்துவிடுகிறேன்- என்று சொல்லி, உள்ளே போகத் திரும்பினார்.

இரண்டடி வைத்தவர் ஏதோ நினைத்தவர் போன்று மறுபடியும் விதிப்பக்கம் திரும்பினார். அவர்கள் இருவரை யும் காணவில்லை. மிஸ்டேக் என்று தன்னை அறியாமலே தன்னுள் ஒருதரம் முணுமுணுத்துக் கொண்டார்.

272 எவ்வளவு பதட்டத்தில் 148-ம் நெ. வண்டிக் காரனை சில்லரை கொடுக்கத் தேடுவான் என்பதை அவர் நினைத்தபோது, அவரை அறியாமலே சிரிப்புவந்து விட்டது. வாய்விட்டு ஒருதரம் சிரித்தார். உரக்கச் சிரித்தும் ஆழமான மனதின் வெகு அடியில் ஏதோ ஒன்று கொஞ்சம் கடுமையாகவே மிஸ்டேக் என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதான உணர்ச்சியைத்தான் அவர் கண்டார்.

 எதிரே உற்று நோக்கினார். குளத்திற்கு அப்பால் நிர்மலமான வானவெளி நன்றாகத் தெரிந்தது.
 - மணிக்கொடி 1937

www.archive.org
google ocr______________
சிகிச்சை - மெளனி

ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அம்சத்தின் வருகையை சமீபத்தில் காட்டும் அறிகுறி போலவும், ஒரு விளங்காத முன்னெச்சரிக்கை போலவும், வைகறையொளி பரவுவதற்கும் முன்பே, முதல் காகத்தின் கரைதல் ஒலி கேட்டது. பொழுது மிகத் தயக்கத்துடன் புலர்ந்தது.

இரவு முழுவதும் மன நிம்மதியின்றி ஒவ்வொரு கணத்தையும் கணக்கிட்டுக் கழித்துக் கொண்டிருந்த சீனுவுக்கு மனசின் பாரம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. தன் பக்கத்தில் படுத்துக் கிடந்த தன் மனைவி கமலாவைப் பார்த்தான். இரவெல்லாம் மூடாத தன் கண்களை அவள் சிறிது மூடி உறங்குவதுபோல அயர்ந்து கிடந்தாள். சிறிது தூரத்தில் அவர்களது ஒரு வயதுக் குழந்தையும், வீட்டு வேலைக்காரக் கிழவியும் படுத்திருந்தார்கள். விளக்கு மங்கலுற்று எரிந்து கொண் டிருந்தது.

இரண்டு நாளாகக் கொஞ்சம் தலைவலி கடுப்பு ஜூரமாக இருந்ததை கமலா அலட்சியமும் செய்ய வில்லை. அதிகப்படுத்தவுமில்லை. தன்னுடைய கணவன் மனதை மிகப் பாதிக்கவிடக்கூடாதென்று சாதாரணத் தோற்றத்துடனிருக்க முயன்றாள். ஆனால், முந்தின மாலையிலிருந்து தேக அசெளக்கியம் தனக்கு மிஞ்சி விடவே, படுக்கையில் படுக்க நேர்ந்தது. சுரத்துடனும் முக்கலும், முனகலும் அதிகரித்தது.________________

அவர்களிருவரும் மணவாழ்க்கை நடக்க ஆரம்பித்து மூன்று வருஷமேயாயினும், இவர்களிடையே தோன்றிய அன்னியோன்னியம் காலத்தின் கட்டை மீறியதாக இருந்தது.

சீனு நன்றாகப் படித்தவன். சிறிது கருப்பாக இருப்பான். நெட்டையான மெல்லிய சரீரமுடையவன். படிப்பு முடிந்தவுடன் மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு ஒரு உத்தியோகம் கிடைத்தது. இதற்குப் பிறகு இவர்கள் ஒன்று சேர்ந்து மணவாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்கள்.

இவர்களுடைய இல்வாழ்க்கை, சதையுணர்ச்சி இன்பம் என்ற அஸ்திவாரத்தின் மேல் பூச்சு. காதல் சுவை கொண்டதல்ல. சிற்சில சமயம் இருவரும் ஒருவருக் கொருவர், சம்பந்தமற்ற தனி ஜீவன்கள் போலத் தோன்றுவது அவர்களது மிகமிக மர்மமான ஒற்றுமை வாழ்க்கையின் ஒருவிதத் தோற்றந்தான். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த போது சீனுவின் முகம் கறுத்தது. கர்ம வாழ்க்கையின் கடமையினால் பலமாகத் தாக் குண்டான் போலும்! தன் மனைவியிடம் அவனுக்கு இருந்த அன்பு முன்னிலுமதிகமாக இறுகியது.

கமலாவிற்கோ சதா தன் குழந்தை ஞாபகமும், சீனுவின் ஞாபகமுந்தான். தன்னை அறியாமலே ஆனந்த முற்று, மெய்மறந்து போவாள். வாய்விட்டுச் சிற்சில சமயம் குழந்தையுடன் கொஞ்சுவதும், அப்போது சீனு வந்தால் அவனுடன் பேசுவதும், பிறரிடம் பொறாமையை எழுப்புவதாக இருக்கும். தன் ஜீவிய லட்சியமும், வாழ்க்கைப் பயனும் இவ்வகை ஆனந்தத்தில் எல்லையை எட்டி விட்டதென்ற ஓர் எண்ணம் அவள் மனதில் எழும். அப்போது மரண பயத்தை வென்றவளாகப் புன்முறுவல் கொள்வாள்.

காலை கண்டவுடன், சீனு புழக்கடை சென்று, பல்தேய்த்து முகங்கழுவி, உள்ளே வந்தான். கண்மூடிய
வண்ணமே கமலா சிறிது அங்குமிங்கும் புரண்டுவிட்டு மெதுவாகக் கண்ணை விழித்தாள். தன் எதிரில் நின்று கொண்டு குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தன் கணவனைப் பார்த்தாள். "இரவெல்லாம் தூக்க மில்லையே உங்களுக்கு. சிறிது படுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லியவள், "குழந்தை” என்றதும், சிரமத்துடன் எழ முயன்றாள்.

அவளைத் தடுத்து சீனு 'குழந்தை அதோ தூங்கு கிறது. பேசாமல் படுத்துக்கொள். நான் காப்பி சாப்பிட்டு விட்டு யாரையாவது டாக்டர் ஒருவரை அழைத்து வருகிறேன். ஒத்தாசைக்கு அம்மாவுக்கு சொல்லி அனுப்புகிறேன்......” என்றான்.

கமலா மெளனமாக அவனைப் பார்த்தாள். அவனும் ஒருகணம் பார்த்துவிட்டுச் சென்றான். அப்பார்வையின் அர்த்தமே மிகத் தெளிவானது போன்றும், அவர்கள் பேசுவது சாதாரண உலக நடப்பு செளகரிய சாதகத்திற்குத் தான் போலும் இருந்தது.

2
மிஸ் கோமதி வைத்தியக் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், காலியாக இருந்த அவ்வூர்ப் பெண்கள் ஆஸ்பத்திரி தலைமை டாக்டராக நியமனம் பெற்று வந்து சேர்ந்தவள். முற்போக்கான கொள்கைகளுடைய ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவள். கல்லூரியிலும், மற்றும் சென்னையில் அவளை அநேகமாக முக்கியஸ்தர் எல்லோருக்குமே தெரியும். நான்கு பேர்கள் தன்னைக் கவனிப்பதில் அவளுக்கு கொஞ்சம் பிரியம் உண்டு. கடற்கரையிலோ, மற்றும் ஐந்து பேர்கள் கூடியிருக்கு மிடத்திலேயோ அந்தக் கூட்டத்தின் மத்தியிலில்லா விட்டாலும், சிறிது எட்டி அவள் நின்றிருப்பது என்னைப் பார் என்பது போலத்தான் பிறருக்குத் தோன்றும்.


நவீன நாகரீகத்தை அணிந்து நாணத்தை வீட்டில் வைத்து வெளிக்கிளம்பும் அநேக பெண்களைப் போல அவளும் வாலிபருடைய பார்வைக் காதலுக்கு ஆளானாள்.

கோமதி பாலியமுதல் செருக்கும் மமதையும் கொண்டவள். கிட்ட நெருங்கினால், அவள் பார்வையில் ஒரு வெடு வெடுப்புத் தெரியும். அது அவளுடைய இயற்கை சுபாவமா அல்லது செயற்கை மேலணியா என்பதை யாரும் கண்டு கொள்ளமுடியாத வகையில்தான் எல்லோரிடமும் எட்டி நின்று ஒட்டாமலே பழகுவாள். தன்னுடைய படிப்பின் காரணமாயும், வனப்பின் மிகுதி என்ற எண்ணத்தினாலும் மிகுந்த சுயப்பிரக்ஞை உடையவளானாள். தன்னை மெச்சுபவர்களின் வியப்பை எண்ணி ஆனந்தம் கொள்ளு வதைவிட, அவர்களை புறக்கணிப்பதினால் அவர்கள் அடையும் மனோநிலையைக் கண்டு களிப்பது கோமதிக்கு அதிகப் பிரியமாக இருந்தது.

தன்னால் உணரப் படாததாயினும், உணர முடியாத தாயினும், பிறர் தன்னிடம் காட்டும் மதிப்பு, தன்னைக் கண்டவுடன் அடையும் வியப்பும், மயக்கமும் எதற்காக என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தால், அந்த நவீன வாலிபர்கள் எத்தகைய கேவலத் தன்மையை அடையத் தான் காரண கர்த்தாவாக ஆகிறாள் என்பது அவளுக்குப் புலப்பட்டிருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக கோமதியின் மனதில் ஆடவரை வெறுக்கும் சுபாவம் நன்றாய் வேரூன்றிவிட்டது. உண்மையோ, பொய்யோ, பெண்கள் வெகுவாக மண வாழ்க்கையில் ஆடவரால் அடிமைப்படுத்தப் படுகிறார்கள் என்ற தனது மனதிற்கிசைந்த காரணத்தையும் காட்டிக் கொண்டாள். நாளடைவில் இவளுடைய 'காதலுக்காகவும், இவளை மணப்பதற்கும் நெருங்கிய வாலிபர்களின் தொகை தானாகக் குறைந்துவிட்டது.

மூக்கில் அழகிய சிறு கண்ணாடி அணிந்து, அதிக ஆடம்பரமற்ற ஆபரணம் பூண்டு, உடம்போடு ஒட்டிய_
துல்லிய ஒற்றை வர்ணப் புடவை அணிந்து ஒரு கொடிபோல அவள் கடற்கரையில் நடப்பது, ஆடவர் மனதின் அமைதியைக் குலைப்பதாக இருக்கும். ஆயினும் அவளுடைய இறுகிய வாயும், கடுகடுத்த பார்வையும், ஆடவரை அவளிடம் நெருங்கவொட்டாது தடுத்ததுமன்றி, மானசீகமாகவே அவளைப் பூஜிக்கவும் செய்தன.

தன்னுடைய பிற்கால வாழ்க்கையைப் பற்றி கோமதிக்கு நிச்சயமான திட்டங்கள் ஏதும் கிடையாது. முடியுமானால், மேல் படிப்பிற்காக சீமைக்குப் போகலாம் என்ற உத்தேசம் கொஞ்சம் உண்டு.

கோமதி காலையில் காப்பி அருந்திவிட்டு, அன்றையப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தாள். சீனு அப்போது உள்ளே நுழைந்தான். இவனைப் பார்த்ததும் அலட்சியம் நிறைந்த மரியாதையோடு என்ன வேண்டும்? என்றாள்.

“ஒரு நோயாளியைப் பார்க்க என் வீட்டிற்கு வரவேண்டும்" என்றான்.

“உங்கள் அட்ரஸ் வைத்துவிட்டுப் போங்கள். சிறிது நேரம் சென்று வந்து விடுகிறேன்” என்றாள் கோமதி.

சீனு வீடு சேர்ந்து பத்து நிமிஷங்களுக்குள் கோமதி வந்துவிட்டாள். கமலாவின் கரம் தணியும் குறியேயின்றிக் கடுமையாகவே இருந்தது. ஆனால், தன் கணவரது கவலையை அதிகரிக்கவும், அதைரிய மூட்டவும் காரணமாகி விடக் கூடாதென்று தன் வேதனையை, வெளிக்காட்டிக் கொள்ளாது சிரமப்பட்டுக் கொண்டு படுத்து இருந்தாள். சீனுவின் மனம் வெடித்துவிடும் போல் இருந்தது. கட்டுக் கடங்காத துக்கத்தை அடக்கி வைப்பதன் சிரமம் முழுவதையும் அவன் அனுபவித்தான். வாய்விட்டு அலறி அமைதியை நாடுவதை எதற்காக இப்போது? என்ற எண்ணம் குறுக்கிட்டு தடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் மேலே, தனியாக, கமலாவின் உடம்பு அசெளக்கியம் என்ற நினைவையும் தாண்டி, அவன் மனதில் ஏதோ ஒரு தாங்கமுடியாத சுமையின் பாரம் அழுத்துவது போன்ற ஒரு உணர்ச்சியும் வளர்ந்து கொண்டிருந்தது. வானக்கூரை இவன் தலையை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி இறங்குவது போன்ற ஒரு பிரக்ஞை வளர்ந்து கொண்டிருந்தது.

டாக்டரைத் தன் மனைவியிடம் அழைத்துச் சென்றான். டாக்டர் சீனுவையும் கமலாவையும் இரண்டொருதரம் மாறிமாறிப் பார்த்துவிட்டு "இவள்?” என்றதும், "என் மனைவி என்று பதிலளித்தான். "எத்தனை நாளாக?” எனக் கேட்டுக் கொண்டே டாக்டர் நோயாளியைப் பரிசோதிக்க ஆரம்பித்தாள். பரிசோதனை முடிந்தவுடன், மருந்து எழுதிக் கொடுத்துவிட்டு சாயந்திரம் நிலைமையை வந்து தெரிவிக்கும்படி சீனுவிடம் சொன்னாள். மற்றும் அவசியமானால் தான் வருவதாகவும் சொல்லிச் சென்றாள்.

 கமலாவின் தோற்றமும் பார்வையும் கோமதி மனதில் சங்கடம் கொடுத்தது. கமலாவைப் பார்த்ததும், கணவ னுக்கு அடிமைப்படுதல் என்பதான மணவாழ்க்கையைப் பற்றிய தனது வியாக்யானம் பிசகு என்பது போன்ற ஒரு எண்ணம் அவள் மனதில் எழுந்தது. இந்த எண்ணம், தன் மனதில் திடமாக வேரூன்றி விட இடம் கொடுக்க அவள் இஷ்டப்படவில்லை. கமலாவின் சுரமும்கூட அவள் மனதைப் பாதிக்கவில்லை. அவள் பக்கத்தில் ஒரு ஆடவன் மிகுந்த பாத்தியத்துடன் நின்றிருப்பதும், முகத்தினாலும், ஒருவகை உணர்ச்சியையும் தெரிவிக்காது இவளுக்கு விளங்காத ஒரு பாஷையில் பேசுவது போன்ற பார்வை யாலும், இருவரும் பேசிக்கொண்டது போன்ற தோற்றமும் கோமதிக்குக் கோபத்தையும், வருத்தத்தையும் கொடுத்தது.

 கோமதி திரும்பிப் போகுமுன் மற்றொரு முறை கமலாவைத் திரும்பிப் பார்த்தாள். அவள் சாந்தமே உருக்கொண்டது போலத் தோன்றியது கோமதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய நோய் கடுமை யானது என்பது கோமதியின் டாக்டர் மனதுக்குத் தெரியும். இருந்தும் எதனால் அவள் அவ்வளவு ஆறுதலோடு சாந்தி நிறைந்து விளங்கினாள் என்பதுதான் டாக்டருக்குப் புரிய வில்லை. அவளுக்கே அவள் நோயின் கடுமை தெரியாது என்று நினைப்பதற்குமில்லை. அவள் முகம் அவளுடைய புத்திசாலித்தனத்தை நன்கு எடுத்துக் காட்டியது. இந்த யோசனைகளெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். அவ்விடம் விட்டகன்றதும் அவ்வளவும் அவள் சிந்தனைக்கு வெகு துரத்தில் சென்று மறைந்தன. வாசலில் வண்டியேறும்போது கையினால் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டபோது மூளையை யும் சஞ்சலம் நிறைந்த எண்ணங்களினின்றும் விடுவித்துச் சரிசெய்து கொண்டாள்.

3

அன்று மாலை ஐந்து மணிக்கு கோமதி நாசுக்காக உடை தரித்து, தேயிலைப் பானம் அருந்திக் கொண்டிருந் தாள். அப்போது சீனு வந்தான். அவனைப் பார்த்த போது கோமதிக்கு மனதில் கொஞ்சம் ஆத்திரம் பிறந்தது. கமலா இவனுக்கு அடிமைப்பட்டு விட்டாள் என்பதனால் போலும்! ஆனால், சீனுவைப் பார்க்கும்போது பிறரை அடக்கியாளும் சுபாவஸ்தன் என்று தோன்றவேயில்லை. ஆனால், ஏதோ மனதில் தோன்றித் தோன்றி ஒரு உருவிலாத சஞ்சலத்தைக் கொடுத்து மறைவதைத்தான் கண்டாள்.

"ஏதாவது விசேஷம் உண்டோ?” என்றாள் சாதாரணமாக.

"நிலைமை அப்படியேதான் இருக்கிறது. ரொம்ப சோர்வடைந்து இருக்கிறாள்; மூச்சு திணறுகிறது......... -- என்று சொல்லி அவளைக் கூட்டிப் போக வந்திருப்பதாகத் தெரிவித்தான். “சரி, கொஞ்சம் உட்காருங்கள். தேத் தண்ணிர் அருந்திவிட்டுப் போகலாம்” என்று சொல்லி அவனை உட்கார வைத்தாள். அவள் எதிரில் உட்கார்ந்து
இருக்கும்போது அவன் தோற்றம் உணர்ச்சியற்ற சிலை முகமாக விளங்கியது.

"அதிகமாக பயப்பட வேண்டாமாயினும் உங்கள் மனைவியின் நோய் கொஞ்சம் கடுமையானதுதான். என்னால் ஆவதைச் செய்கிறேன். இரண்டு நாள் பார்த்து விட்டு அவசியமானால் பட்டணம் போக நான் பெரிய டாக்டருக்கு லெட்டர் தருகிறேன்” என்றாள்.

"சரி, ஆகட்டும்” என்று சாதாரணமாக பதில் சொன்னான் சீனு, "நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. நோய் கடுமையானதுதான். இப்போது அதிகமாகாது பார்த்துக் கொள்ளுவதைத் தவிர வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை. தானாகவே சரியாகிவிட வேண்டும்...... இப்போது தெரிந்து கொள்ளுவதில் உங்களுக்கு துன்பமதிகமானாலும் விஷயம் கையை மீறிய பிறகு தெரிந்துகொள்ளுவது இன்னும் அதிகக் கஷ்டமாக இருக்கும் என்று தான் இப்போதே சொல்லுகிறேன்” என்று, ஏன் இவ்விதம் பேசுகிறோம் என்பது புரியாமலே பேசினாள் கோமதி.
சீனு "சரி, வரப்போவது எதுவும் எனக்கு ஆச்சரியமா யிராது. எதுவானாலும் எப்படியும் நடக்கப் போவது தானே; சரி புறப்படலாமா?” என்றான்.

கோமதி கெட்டிக்காரிதான். ஆயினும் சீனுவுடன் ஒப்பிட்டால் அவள் வெகு மந்தம். அவன் அதிகமாகப் பேசாவிட்டாலும் பேசின கொஞ்சமும் அவளுக்குப் புரியவில்லை. பேச்சிற்கு அடிப்படையான அவன் மனோபாவத்தை அறிந்தால்தான் அவன் பேச்சின் அருத்தம் விளங்கும். அவன் எதிரில் மட்டும் தன்னுடைய மதிப்பு மட்டுப்பட்டுப் போனது என்ற ஒரு எண்ணம் நடுநடுவே அவள் மனதில் பிறந்தது. தனக்குத்தானே "தடிக் கழுதைகள் இவ்வாடவர்கள்; இவர்களிடம் பெண்கள் படும் சிரமம்' என்று சொல்லி மனதைக் கொஞ்சம் தேற்றிக் கொண்டாள்.

கமலாவிற்கு சுரம் கடுமையாக இருந்தது. டாக்டருக்கு நம்பிக்கை மிகக் குறைந்துவிட்டது. தன்னுடைய முழு வன்மையையும் காட்டி கமலாவை சொஸ்தப்படுத்த வேண்டுமென்ற ஆத்திரம் கொண்டாள். ஏன் இவ்வகை மனோபாவம் கொண்டாள் என்பது அவளுக்கே புரிய வில்லை. கமலா சாதாரணத் தோற்றத்திலேயே விளங்கினாள். தான் இறப்பினும் தன் pவிய ஞாபகத்தை ஒரே பார்வையில் பதித்துச் செல்ல முயலுவது போன்று தன் கணவனை மிக ஆறுதலாகப் பார்த்துக் கொண் டிருந்தாள். சீனுவிற்கு மூளை சுழல ஆரம்பித்தது. ஒருபோதும் இருவரும் இவ்வளவு நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. அவன் கண்கள் ஈரமுற்றன. கமலா சிறிது பரிகாசம் தோன்ற "ஏன் கவலை? பைத்தியம் பிடித்து விட்டதுபோல இருக்கிறீர்களே. குழந்தையைப் பாருங்கள்; விளையாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள்-”

"ஆம் கமலா; உனக்குப் பிறகு.?”

"நீங்கள் ஜீவித்து இருங்கள். நம்முடைய குழந்தை இல்லையா? என்னுடைய நியாபகம் இல்லையா?”

“பரிகாசம் செய்கிறாயே உன் நிலைமை உனக்குத் தெரியாது. தெரிந்தாலும் இப்படித்தான் இருப்பாய். என்னைக் கண்டாலே உனக்குப் பரிகாசம்தானே. கமலா உன்னைப் பிரிந்து வாழ முடியாது என்று நான் சொல்லவில்லை. என்னைப் பொருத்தவரை உனக்கு அழிவில்லை. எப்படி வாழ்வது என்பதுதான் புரியவில்லை. எவ்வகை யோசனையாலும் அதை நிதானிக்க முடிய வில்லையே, கமலா” என்றான் சீனு.

"என்ன என்னவோ சொல்லுகிறீர்களே நீங்கள், நான் இறக்கும் முன் சாக வைத்துவிட்டீர்களே! நீங்கள் பெரிய அசடு. உங்களோடு வாழ்ந்து பட்ட கஷ்டம் போதும்" என்று கமலா சிறிது சிரித்த வண்ணம் "கிட்டே வாருங்கள்; ஒரு ரகசியம் சொல்லுகிறேன்” என்றாள்.

அவள் அருகில் சீனு தலையைக்கொண்டு போன வுடன் அவன் முகத்தில் ஒரு முத்தம் அளித்தாள். 'இப்போது தெரிந்ததா உங்களுக்கு பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று? ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்!

டாக்டர் அருகில் நின்று இருந்தாலும் அவளை இரு வரும் கவனிக்கவில்லை.

"ஆம் கமலா, நான் பைத்தியம்தான். இப்போது உனக்கு உடம்பு எப்படி இருக்கிறது?’ என்று சீனு கேட்ட போது டாக்டர் கமலா அருகில் வந்து அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தாள். கோமதியால் கமலாவை நன்கு உற்றுநோக்க முடியவில்லை. அவளுடைய ஜீவிய ஆனந்தத்தை எண்ணும்போது தன்னுள் அடங்கிய ஒரு குறை நன்றாகத் தலைகாட்டுவது போல இருந்தது அவளுக்கு. கமலாவிடம் பொறாமை கொண்டாள். அவள் ஆனந்தத்திற்கு சீனு காரணமென்று கருதிய கோமதிக்கு அப்போதைய நிலைமையில், சீனுவிடம் ஒரு அநுதாபம் ஏற்படலாயிற்று.

டாக்டர் பரிசோதனையில் தெரிந்து கொண்டவை, அவள் மனநிலைக் கேற்றவையாகவே இருப்பது போலிருந்தது. கமலாவின் நிலை மிக சந்தேகமாக இருந்தது. அவள் அநேகமாக இறந்துவிடுவாள் என்ற எண்ணமும் பலப்படலாயிற்று. டாக்டர் தன்னை வெகு நேரம் ஊன்றிப் பரிசோதித்தது கமலாவிற்கு ஒருவிதமாக இருந்தது. தான் இறப்பது நிச்சயம் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளத் தான் இந்த ஆழ்ந்த பரிசோதனை என்பதாகத் தோன்றியது. ஏன் என்று நினைக்கும்போதும், டாக்டரும் ஒரு பெண் என்பதை எண்ணும்போதும், கமலாவின் மனதில் பட்டவை அவளுக்கு சஞ்சலமுண்டாக்கின. மற்றும் தன்னுடைய வாழ்நாள் குறுகிவிட்ட தென்பதும் உறுதியடைந்தது.

தன்னுடைய கணவனையும் கோமதியையும் மாறி மாறிப் பார்த்தாள். கணவன் முகத்திலும் மனதிலும் துக்கத்தைக் கண்டாள். டாக்டரிடமும் துக்கச் சாயையைப் பார்த்தாள்.

கமலாவின் நெஞ்சம் நேர்மை நிறைந்தது; உண்மை யின் மேல் வளர்ந்தது. விரிந்த மனசு. உலகத்தையே ஆட்கொள்ளக்கூடிய பெரும் புத்தி படைத்தவள்.

அதனால்தானே அந்த துக்கத்திலிருந்து இருவரும் ஆனந்தம் பெறுவர் என்று கமலா நினைத்தாள். ஏன் அப்படி நினைத்தாளென்பதும் அவளுக்கே விளங்கவில்லை.

கமலாவிடம் சுர மூளையில் இவ்வகை எண்ணங்கள் வெகு வேகமாகப் பதியலுற்றன. அவள் முகம் பிரகாச மடைந்தது. தன்னை இழந்த தன் கணவனின் பிற்கால வாழ்க்கையைக் காண ஆவலுற்றவளே போன்று அவள் கண் ஓடி வெகு அப்பாலே எட்டிய வெற்று வெளியிற் சென்று பதிந்தது. தன் குழந்தை விளையாடுவதைப் பார்த்தாள். டாக்டரை வெகு அன்போடு நோக்கினாள். குழந்தையைத் தவிர மற்றையோரெல்லாம் இவளை நேராகப் பார்க்க முடியவில்லை. தாங்கமுடியாத துக்கத்தி னால் வாய் அடைக்கப்பெற்று தலைகுனிந்து நின்ற சீனுவின் முகம் களை குன்றியது.

"கமலா குழந்தையையும் என்னையும் அழைத்துக் கொண்டு போ; யார் எனக்கு இருக்கிறார்கள்? கமலா! ஏன் எப்போதும் துர இருந்தே என்னோடு கலக்கிறாய்? என்னையும்கூட” சீனுவின் மனதில் நிச்சயமாகத் தன் மனைவியை இழந்துவிடப் போகிறோம் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. டாக்டர் சிறிது கூர்ந்து கவனித்தவள் திடீரென வியப்படைந்தாள்; ஸ்தம்பித்து சீனுவைப் பார்த்தாள். கமலாவினுடைய நிலைமை சிறிது சிறிதாக மாறிக் கேவல மாகியது. திடீரென எழுந்து "நான் போய் வருகிறேன்” என்றுசொல்லி வெளியேறிவிட்டாள் கோமதி.


ஒருமணி நேரத்திற்குப் பிறகு கமலா சவமானாள். சீனுவின் மனதைப் பிளக்கும் துக்கமும் அவன் நெஞ்சி லேயே அடைப்பட்டு வெளிவரவும் இயலாது புழுங்கியது.

4

மறுநாள் சாயந்திரம் சீனு யோசனையற்ற யோசனை களில் ஆழ்ந்தவனாக, தன் குழந்தைக்குப் பால் ஊட்டிக் கொண்டு இருக்கும்போது டாக்டர் கோமதி உள்ளே வந்தாள். இவன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண் டிருக்கும் தோற்றம் அவள் மனதில் நன்றாகப் பதிந்தது.

"ஐயா, என்னுடைய வருகை என் வழக்கத்திற்கும் தொழிலுக்கும் பொருத்தமல்ல. ஆயினும் உங்களைப் பார்த்து என் ஆறுதலைத் தெரிவித்துப் போக வந்தேன்" என்றாள். பதிலொன்றும் தோன்றாமல் மெளனமாக அவளைப் பார்த்தவண்ணம் இருந்தான். குழந்தை தவழ்ந்துகொண்டு கோமதி காலருகில் சென்று அவள் புடவையைப் பிடித்து இழுத்தது. கோமதி குனிந்து அதைத் தூக்கி முத்தமிட்டாள்.

சீனு, "எவ்வகை நிகழ்ச்சியும் விநோதமாகத் தோன்றாமல் போவதில்லை. எதுவானாலும் மனோகற்பித மான அனுபவத்திற்கு அகப்பட்டாலும், அனுபவபூர்வமாக நிகழ்ச்சிகளை உணருவது வேறு மாதிரியாகத் தான் இருக்கிறது. நடந்ததைப் பற்றியோ, நடக்கப் போவதைப் பற்றியோ, நான் ஒன்றும் யோசிக்கவில்லை. களையின்றி எல்லாம். ஏதோ கனவு போலத் தான் தெரிகிறது. உங்கள் சிரமத்திற்கு -” என்று எப்போதையும் விடக் கொஞ்சம் அதிகமாகவே பேசினான்.

"இல்லை, ஐயா, உங்கள் மனைவியைப் போன்ற வளை இழப்பது உங்களை மட்டுமல்ல, சிறிது நேரப் பழக்கமேயுள்ள என்னையும் பாதித்துவிட்டது” என்றாள்.

குழந்தை இதற்குள் அவளிடம் வெகு ஆர்வமாகக் கொஞ்சலுற்றது. "ஐயா, குழந்தையை நினைக்கும்போது வெகு கவலையாக இருக்கிறது. குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேனே. நீங்கள் அடிக்கடி வந்து பார்க்கலாம்-” என்றாள்.

சீனுவுக்குக் கொஞ்சம்கூட அர்த்தமாகவில்லை. அவன் பழக்கநிமித்தம் சொல்லும் 'சரி என்னும் வார்த்தை வாயைவிட்டு வெளிவந்தது. அவ்வளவுதான், கோமதியும் குழந்தையுடன் வெளியேறிவிட்டாள்.
அன்றிரவு சீனுவுக்குத் தூக்கமில்லை. முதல்நாள் நிகழ்ந்த சம்பவம் அவன் மனதை அன்று பாதிக்கவில்லை. ஆனால், அன்றிரவு அவன் உலகில் தனிப்பட்டவனாகி விட்டதாக எண்ணினான்.

5

கோமதி மேல் படிப்புக்காக சீமை சென்று திரும்பி வந்து ஒரு வருடமாகிறது. சீனுவின் குழந்தை சின்னப் பையாவுக்கு ஏழு வயதாகிறது. கோமதியின் வீட்டிலேயே அவன் செல்வமாக வளர்க்கப்பட்டு வந்தான். சமீப ஐந்தாறு வருஷங்களில் கோமதி எப்படி மாறிவிட்டாள் என்பது ஒரு தனி அத்தியாயந்தான்.

சீனுவிற்கும் கோமதிக்கும் ஆடம்பரமின்றி சென்னை யில் மணம் நடந்தது. மணம் முடிந்த அன்று மாலை சீனுவும் கோமதியும் தோட்டத்தில் தனியாக உலாவி வரும்போது இருவரும் உணர்ச்சி மிகுதியாலோ உணர்ச்சி யற்றதாலோ ஒன்றும் பேசாமலே கொஞ்சம் தூரம் நடந்தார்கள். கோமதி அடிக்கடி சுற்றிச் சுற்றித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள். கமலாவைத் தேடிச் சுற்றி சூழ கவனிப்பது போலவும், தன்னை அவள் ஆட்கொண்டு அவள் அடைந்த அமைதியை தனக்கும் கொடுக்க வேண்டுவது போன்றும் இருந்தது அவளுடைய தோற்றம்.

உலகத்தின் மாலை மங்கல் ஒளி அதிகமாகவே மயங்கித் தோட்டத்திடையே சிறிது இருட்டாக இருந்தது.
மனதில் வாய்விட்ட குதுகலம் காணாவிட்டாலும், வசீகரமான ஒரு புன்முறுவலைக் கண்டதாக எண்ணினாள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்ததை எங்கும் காண முடியாதவள் போல ஒரு பெருமூச்செறிந்தாள்.

தன்னை யாரோ பின் தொடருவதாக ஒரு உணர்ச்சி தோன்றித் திரும்பினாள். சின்னப்பையா குதித்து ஓடி வருவதைக் கண்டாள். கமலாவின் ஞாபகம் எங்கும் நிரம்பியது. சீனுவை கோமதி பார்த்தபோது அவனும் திரும்பித் தன் மகனைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். உணர்ச்சியற்று, ஆனால் பிறரது உணர்ச்சிகளை மாத்திரம் தன்னிடம் பிரதிபலிக்கச் செய்யும் கண்ணாடி போன்று ஸ்வச்சமாக இருந்தான் சீனு, கோமதி கமலாவைப் பற்றி பிரக்ஞையில் கலந்து நிற்கும் சீனுவைத் தான் அப்போது பார்த்தாள். அவ்வகையிலே அவனைக் காண வேண்டுமென்பதுதான் அவள் ஆசை. அவன் புறம் திரும்பி "உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத் தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்” என்று சொல்லி அவன் கன்னத்தில் ஒரு செல்ல அடிகொடுத்து ஒரு முத்தமும் கொடுத்தாள். அருகில் நின்ற சின்னப்பையா வெட்கம் கொண்டு வெளியே ஓடினான்.
- ஹனுமான் மலர் 1937

மனக்கோலம் - மௌனி
https://archive.org/stream/orr-11357_Manakkolam?ui=embed#page/n6/mode/1up
இரவுவெகுநேரம் கழிந்தபின்பு சிறிது அயர்ந்தவன் ஒரு ஒலக் குரல் கேட்க, திடுக்கிட்டு விழித்தெழுந்தான். கடிகாரம்_அப்போது இரண்டு மணிதான் அடித்தது. கனவு என்பதாக எண்ணி, அவன் மனது நிம்மதி கொள்ள வில்லை. சஞ்சலத்திலும், ஒரு நிகழ்ச்சி நேரப் போவதை எதிர்பார்த்தலிலும், நிசியைத் தாண்டி வெகுநேரம் நின்றிருந்தவனுக்குக் கொஞ்சம் அயர்வு தோன்றுகிறது. சாமக் கோழி அப்போது இரண்டுதரம் கூவி விட்டு நிசப்தமாகியது. நான்கு கவரால் அடைபட்டது போன்ற அவ்விரவின் இருள் அவனை அச்சுறுத்தவில்லை. ஆனால் கவர்க்கோழியின் இடைவிடா சப்தம் கருதியாக மெளனம் பயங்கரமாகியது. அவன் எழுந்து மேற்கு நோக்கிய ஜன்னல் கதவுகளைத் திறந்தான். சந்திரன் வானத்தின் உச்சியிலிருந்து வெகுதூரம் சரிந்துவிட்டது. மெல்லிய மேகங்கள் ஆகாயத்தைத் துளவிமேய்ந்தன. ஜில்லெனக் காற்று அவன் முகத்தில் பட முகம் வியர்வை கொண்டது. "சிறிதுதான் அயர்ந்தேன். ஆம். அவள் இன்னும் வர வில்லை. உதயம் காணுமுன் வருவதற்கு இன்னமும் நேரமுண்டு. ஒருக்கால் நான் அயர்ந்தபோது வந்து போய் விட்டாளோ இல்லை. அவளால் முடியாது. எல்லோ ருடைய தூக்கத்திலும் வருபவள் நான் துங்கும் போதா வருவாள். என்னைத் தட்டி எழுப்பாமலா போய் விடுவாள்_அவன் மனது மிகுந்த வேதனை அடைந்தது. மறுபடியும் அவன் விடியுமுன் துங்கவில்லை

விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும்போலும் கருதி விலகி எட்டியா நின்று இடை விடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றிநின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம் அச்சம் கொள்கிறது. மெளனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்.அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான். கப்பையர் அருகில் அடுத்த விட்டில் கெளரி அயர்ந்து இருந்தாள்_அவள் பெயரை அவன் ஒருதரம் அழுத்த மாகவே உச்சரித்தான்.

அவனுக்கு வேதனை கொடுக்கவே வெகு சீக்கிரமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறதுஅவள் வரவில்லை என்பதில் நேரம் நகரவில்லை. ஒவ்வொரு சமயம் இருளைக் கிழித்துக் கொண்டு உன்னத ஒளியாய இதோ நிற்பாள் என்பதாக எண்ணுவான். கெளரி என்று மெல்லென அவன் வாய் அப்போது முணுமுணுக்கும். பதில் இராது. ஆம், அவள் பேசமாட்டாள். யாருக்காவது தெரிந்து விட்டால்_ஆனால் எனக்கும் தெரிய மாட்டாளா?_இன்னும் அவள் வர நேரம் இருக்கிறது.! தன்னைச் சிறிது தேற்றிக் கொள்வான்.ஒவ்வொரு சமயம் அவன் மனது பயம் கொள்ளும் அப்போது வாயிற்புறத்தி லிருந்து மலரின் மணம் மெல்லெனக் காற்றில் மிதந்து வரும். அந்த இரவின் இருளில்தான் அந்த மலரின் மணம் கணிசம் கொள்ளுகிறது. எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த இன்பம் இந்த வேதனை பெயர்த்து எறிய முடியாத இந்த இருளில் அவள் ஏன் தன் எதிரில் நிசப்தத்தில் நின்றிருக்கக்விடுவாள்அவன் மனது மிகுந்த வேதனை அடைந்தது. மறுபடியும் அவன் விடியுமுன் துங்கவில்லை. விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும்போலும் கருதி விலகி எட்டியா நின்று இடை விடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றிநின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம் அச்சம் கொள்கிறது. மெளனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்.அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான். கப்பையர் அருகில் அடுத்த விட்டில் கெளரி அயர்ந்து இருந்தாள்அவள் பெயரை அவன் ஒருதரம் அழுத்தமாகவே உச்சரித்தான். அவனுக்கு வேதனை கொடுக்கவே வெகு சீக்கிரமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறதுஅவள் வரவில்லை என்பதில் நேரம் நகரவில்லை. ஒவ்வொரு சமயம் இருளைக் கிழித்துக் கொண்டு உன்னத ஒளியாய இதோ நிற்பாள் என்பதாக எண்ணுவான். கெளரி என்று மெல்லென அவன் வாய் அப்போது முணுமுணுக்கும். பதில் இராது. ஆம், அவள் பேசமாட்டாள். யாருக்காவது தெரிந்து விட்டால் ஆனால் எனக்கும் தெரிய மாட்டாளா?இன்னும் அவள் வர நேரம் இருக்கிறது.! தன்னைச் சிறிது தேற்றிக் கொள்வான்.ஒவ்வொரு சமயம் அவன் மனது பயம் கொள்ளும் அப்போது வாயிற்புறத்தி லிருந்து மலரின் மணம் மெல்லெனக் காற்றில் மிதந்து வரும். அந்த இரவின் இருளில்தான் அந்த மலரின் மணம் கணிசம் கொள்ளுகிறது. எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த இன்பம் இந்த வேதனை பெயர்த்து எறிய முடியாத இந்த இருளில் அவள் ஏன் தன் எதிரில் நிசப்தத்தில் நின்றிருக்கக் கூடாது என்று அந்த அறையைக் குறுக்கு நெடுக்காக நடந்து துளாவுவான்.

கிழக்கு வெளுத்து உதயம் கண்டது. இருட்டு உள்ளளவும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்குமொரு அமைதி அவள் வராதது கண்டு மறுபடியும் பகலைக் கழித்து இரவு வருவதை எதிர் பார்த்தலில் அமைதி இன்மையாக மாறக் கண்டான். உறங்குவதற்கு இரவு அவனுக்கு உறுத்தாத பாயாக விரியவில்லை. புரண்ட விழிப்பிலோ வேலை கொள்ளப் பகலில்லை. மறுபடியும் இரவைத்தான் எதிர்பார்க்க ….

கேசவனுக்கு வாழ்க்கை லட்சியம் என்பது என்ன வென்றே புரியவில்லை. உலகில் எத்தனையோபோபுரியாத வாழ்க்கை நடத்தும் விதமும் அவனுக்குப் புரியவில்லை. அவன் மனோபாவம் வெகு விநோதமாகத்தான்_அமையப் பெற்றது. அவன் பிறந்த வேளையின் கோளாறு போலும்! எந்த விஷயமும் இவ்வளவுதான் என்ற மதிப்பிற்கு அகப்பட்டுநிலைத்தால் அல்லாது.அதன் தேவை எவ்வளவு என்பது புலனாகாது. நிலை கொள்ளாது இச்சைகள் மன விரிவில் விரிந்துகொண்டே போனால், மதிப்பிற்கான துரத்துதலில் தானாகவா இச்சைகள் பூர்த்தியாகின்றன? பிடிக்க முடியாதெனத் தோன்றும் எண்ணத்தில் இந்தத் துரத்திப் பிடிக்கும் பயனிலா விளையாட்டு எவ்வளவு மதியீனமாகப்படுகிறது. எல்லாம் தெரிந்தும் கூட அவனால் ஒன்றையும் செய்ய முடியவில்லை. இந்த மன வெறி யாட்டத்தில் களி கொண்டு எட்டிப் பார்த்து நிற்பவனா கடவுள்? அப்படியாயின் அவனை கேசவன் கருணையில் பார்க்க முடியவில்லை. பிடிபடாத பைத்தியக்காரத் தனத்தில் தான் சிற்சில சமயம் அவன் அகப்படுவதான எண்ணம் அவனுக்கு.

கேசவனுக்குப் பழமையில் நம்பிக்கை இல்லாதத னால், புதுமை என்பது மனத்திற்கு இசைவதாக இல்லை. பச்சைவெட்டாக, உயிரற்று அழுகும் பழமையிலும் கேவலமாகத் தான் தெரிந்தது புதிய நாகரீகப் பண்பு. வாழ்க்கைப் பாட்டையில் அநேக விஷயங்களைப் பழக்க வழக்கங்களாக்க வேண்டும். அவைகளிடம் சிந்தனை களைக் கொள்ளவே இடமிருக்கக் கூடாது. ஒவ்வொரு நித்திய விதியையும் ஆராய்ந்து செய்ய மனிதனுக்கு அவகாசம் கிடையாது. ஒளியற்ற பழைய வழியிலும் மனது செல்லாது. புதிது என்ற ஆபாசத்திலும் சுருக்கம் கொண்டு கேசவன் சிந்தனைகளிலே காலத்தைக் கழிக்க ஆரம்பித் தான். அதிர்ஷ்டவசமாக அவன் தாயார் தகப்பனார் அவனுக்கு நல்ல ஆஸ்தியைவிட்டு, அவனுடைய இருப தாவது வயதிலே இறந்து விட்டார்கள். சென்ற நான்கு வருஷங்களாக அந்த நகரில் தன் வீட்டில் தனியாகக் கல்யாணமின்றி தன் சிந்தனைகளிலே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.

யோசனைகளிலேயே ஒருவன் எப்போதும் வாழ்க்கையைக் கழிப்பது முடியாது. பசிப்பிணி முதலியவை களின்றிக் காலம் கடத்தும் மிருக வாழ்க்கையாகத் தோன்றும் அது. தான் படைக்கப்பட்டவன் என்று எப்போதாவது உணரும்போது, ஏன், எதற்காக என்ற கேள்விகள் தானாகவே மனதில் எழும். இத்தகைய கேள்விகளை மனது விழுங்கவேண்டுமாயின், புற உணர்வு மயமாகவும், காரணகாரியமற்று சம்பவங்களைக் கொள்ளும் விதமாகவும் தான் ஒருவன் இருக்க முடியும். எப்போதும் எவ்விதம் இவ்விதமாக இருக்கமுடியும் ஒருவனால்?

கேசவன் வாழ்க்கையில் கெளரி குறுக்கிட்டபோது அதையும் ஒரு சம்பந்தமற்ற நிகழ்ச்சியாகத்தான் அவன் எண்ணினான். அண்டை விட்டு கப்பையர் மனைவி என்பதைத் தவிரவும் காலையில் வாயிலில் சிற்சில சமயம் கோலம் போடுவதை இவன் திண்ணையில் நின்று பார்ப்பது என்பதைத் தவிரவும் வேறொரு சம்பந்தமும் முதலில் இல்லை. இவன் மனம் சித்திரம் கொள்ளக் கோலம் வரைகிறாள் என்று எண்ணிய இவனை ஒருநாள் நிமிர்ந்து உள்ளே போகுமுன் பார்த்தாள். சூனிய வெளியில் வாழ்க்கையின் லக்ஷயப் பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தனவெனக் கண்டான். அவள் முகமே விழிகளென இவனைப் பார்த்துவிட்டு உட்சென்று விட்டாள் கெளரி. அவள் எண்ணம் அவன் மனத்தை விட்டு அதற்குப்பின் அகலாது ஒரு லகூடியமாக நீண்டது. அவள் வேறு ஒருவரின் மனைவி என்பதை அவன் மனது ஏற்க மறுத்தது.

இரவு காணும் முன்பே மெல்லெனக் காற்று வீச ஆரம்பிக்கும். வாயிற்புறத்திலிருந்துமலரின் மணம் மிதந்து வந்துமயக்கம் கொடுக்கிறது. அந்திவேளையின் சூரியஒளி ஒரு இன்ப வேதனை நிறத்தில் தோன்றுகிறது. சில சில நாட்களில் சூரியன் மறையுமுன்பே மேற்கிலிருந்து மேகத்திரள்கள் மேலோங்கி விடும். மேக முகப்பு பலவித வர்ணப்பாடுகளுடன் காணப்படும்_அவன் இவைகளை, பார்த்து உணரும் உணர்ச்சிகள், இரவின் வருகையில் கொள்ளும் இன்பமயமான கனவுகள்தான். அவ்வேளை களில் அவன் தவறாது மேற்குப் பார்த்த அந்த ஜன்னலின் முன் நிற்பான். சில சமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்கு போகப் பார்க்க நேரிடுவதும் உண்டு.

அவை காரணமின்றி நடக்கும் சம்பவங்கள் என அவன் கொள்ளுபவைகள்தாம். துக்கத்தில் கண்ட இன்பக் கனவுகளைத் திரும்பக் காண ஞாபகம் கொள்ளுவது போன்றவையே அவன் மறதியும் ஞாபகமும் அவன் நின்று பார்க்கும் மறதியில் எவ்வளவு நேரம் அவன் வாழ்க்கை துங்கிவிட்டது. நீளுகிறது. நேற்று நடந்ததை ஞாபகப் படுத்திக் கொள்ளும்போது நடந்ததா என்பதாகிறது. நடக்கிறதோ எனில் அப்படியே காலமென்பதின்றி. காலத்தையும் மீறியதாகிறது. நாளைக்கு நடக்கப்போவது

அவனுக்கு நிச்சயமில்லை. எதிர்பார்க்கும் சந்தேகத்தில் அவன் இளமையும் சிக்குண்டு பாழாகிறது. அமைதியை இவ்விதம் அடிக்கடி இழப்பவன் அமைதியை வேண்டுபவன் அல்ல. அமைதியை இழப்பதில்தான் அவன் அமைதி அடைகிறான் போலும். அது கேசவனுக்கு சாந்தமும் சமாதானமும் கொடுக்கவில்லை.உயிர்வாழ்ந்த ஒவ்வொரு கணமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது. விடை கண்டால் புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது. எனினும் அறியாததொன்றுதன்னை எதிரே சூனியத்தில் பலமாக உந்தித் தள்ளுகிறதா இழுக்கிறதா காலை கண்டுவிட்டது காகங்கள் கூட்டை விட்டு வெளியே பறந்து சென்று கொண்டிருந்தன. உலகமும் பகலில் நகர ஆரம்பித்தது. நிம்மதியின்றிப் பகலெல்லாம் இரவின் வரவே எதிர்நோக்கி நிற்க வேண்டும். இரவிலோ வெனில் அவளை எதிர்பார்த்து நிற்பது கொஞ்சம் அமைதியைக் கொடுப்பதாக இருக்கிறது.

கையால் ஆகாதவன்தான் கணவன் ஆகிறான். பசிக்குப்பிச்சை கேட்கயாரிடமும் எந்நேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு தனக்கென்று ஒரு மனைவி தன் பலவீனத்தைணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ எனில் தன் பலத்தை மறக்க மறைக்கதான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான். கேசவனுக்கு கப்பையரின் மனைவி அருவருப்பைத் தான் கொடுத்தாள். ஆனால் கெளரியின் நினைவில் ஒரு பயங்கரம் சப்தித்தது.

இரவு கண்டுவிட்டது மனவேதனை இன்பவேதனை என மாறாமலே கொஞ்சம் குறைவதாயிற்று. அவன் மனது சொல்லிக்கொண்டது.அவன் காதில் விழவில்லை. இன்று அவள் நிச்சயம் வருவாள். நேற்றிரவு அவள் வந்ததோ வராததோ ஒன்றாகத்தான் அவன் மனதில் சந்தேகத்தில் மறந்து மடிந்தது. ஒருணம் அவள் வருவதும் போவதும் என்ற எண்ணம்கூட சரியெனப்படவில்லை. இவ்வகை நிலையில் வெகுநேரமானதாய் ஒரு தோற்றம் கப்பையரின் அருகில் கெளரி துங்கிக் கொண்டு இருக்கிறாள். பின் நின்று கொண்டு இருக்கிறாள். இந்த இருளும், எதிரில் நிற்கும் அவளுடைய முகம் காண ஒளி கொடுக்க வில்லையே! உள்ளுற உறைந்து தடித்ததொரு உணர்ச்சி வேகம் அவனை வெகு துரம் உந்தித் தள்ளிவிட்டது. நிற்கும் இடத்திலிருந்து வெகு சமீபத்திலேதான் ஆரம்ப . இறுதிகளின் எல்லை. மயங்கிய தோற்றம் கொடுக்கிறது. மனது வெடிக்கும் ஏக்கத்தின் புரளலில் ஏதாவது இடம் சித்திக்காதா என்ற நம்பிக்கைதான். கேசவனால் பிறிதான ஒரு பெண்ணையும் புறத்தில் பார்க்க முடியவில்லை. அகத்தில்தான், பிளவுபட்ட ஒரு பாகத்தில் கெளரியைக் காண்பான் ஒரு சமயம் அக்கணமே அழிந்து சுப்பையரின் மனைவியாக மாறி விடுகிறாள் அவள். கொஞ்சம் இரைந்தே கெளரி எனக் கேசவன் கப்பிட்டான்.

பின்னின்று யாரோ அவனை அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம். ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவமாகும் கற்பனைக் கோட்டை  அணைத்த கை சர்ப்பமாக அன்றோ அவன் மேல் நெளிந்தது ஆம் சர்ப்பம் ஒன்றல்ல. சர்ப்பங்கள் அவன் மேல் கற்றி ஆசை கொண்டு, அவன் முகத்தை முகர்ந்து நக்கி முத்தமிடும் ஆர்வத்தில் - நீட்டி விழுங்கும் அவைகளின் நாக்குகள். அவை ஒளிக்கதிர் ஈட்டிகளா! அவனால் அந்தப் பயங்கர அணைப்பைத் தாங்க முடியவில்லை.

பயங்கரமும் அருவருப்பாக மாறி உடம்பில் நெளிகிறது. அந்த அணைப்பினின்றும் திமிறி விடுவித்துக் கொள்ளுவதற்குத்தான் போலும் அவன் உடம்பு மயிர் கூச்செறிந்தது. தன்னை எந்நிலையினின்றும் விடுவித்துக் கொண்டான் என்பது தெரியாதெனினும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து விடுவிக்க விழிப்புக் கொண்டது போன்ற தொரு உணர்வை அவன் நெஞ்சம் கொண்டது. அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது. காலை காண ஆரம்பித்தது.