தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

கலாப்ரியா கவிதைகள்


கலாப்ரியா கவிதைகள்
நன்றி : http://eluthu.com/kavignar-kavithai


விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை.

நீ
என் கற்பனையில்
கருத்தரித்துப் பெற்ற
பால் தந்து பழக்கியிராத
பிள்ளைகள்
அழுகின்றன
தங்களுக்கு உன்
ரத்தம் வேண்டுமென
(1970)
எப்போது தியானிக்கப் போகிறாய்?

‘பரம
உருவக
குறியீட்டு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ
எப்போது தியானிக்கப் போகிறாய்?

வளர்ச்சி

எங்கள் வீடுகளையொட்டி
ஒரு வாய்க்கால்
ஒரு காலத்தில்
அதன் நீர்
எல்லோருக்கும்
பல வழிகளில்
பயன்பட்டது
நாங்கள் குழந்தைகள்
வாழை மட்டையில்
தெப்பம் செய்து
தெரிந்தவரை
அலங்கரித்து கட்டி
படித்துறையில் இருந்தபடி
எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்
இழுத்துக் கொள்வோம்
மறுபடி செல்ல அனுமதிப்போம்
மறுபடி…மறுபடி
தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து
மட்டைகளாகி நீரோடு போகும்
மனமில்லாமல்
விளையாட்டை பிரிவோம்.

இப்போது கெட்டுப்போய்
இழுப்பறுத்துத் தேங்கிய நீரில்
குப்புற மிதக்கும்
என்புத்தோல் பிணமொன்று
வீட்டருகே
ஒதுங்கி நிற்பதாய் சொல்ல
கழியெடுத்து போய்
தள்ளிவிட்டோம்
எங்கள் எல்லைத் தாண்டி
எங்கள் எல்லைக்குள் நின்று
தயாராய் இருந்தார்
அடுத்தடுத்த வீடுகளில்
அவரவர் கழிவுகளோடு.


நெருநல் நினைவுகள்


‘‘வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
  வாழ்ந்துவிட்டுச் சொல்லுகிறேன் அந்த
  வித்தியாசம்’’


நம் சந்திப்பு


நம் சந்திப்பு
நிகழாமல் போனது.
பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கெனவே
சற்றே மனம் பகிர்ந்து.

புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத் தவிக்கும்
இரும்பு புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம்பெயர்ந்து
படித்து கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு விரலாய்
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக்குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்.
துணைத் தலைப்புகளையே
பார்த்துக் கொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றதில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவறவிட்டதுபோல.

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று.

காலைப் பறவை...

நேற்றைய ஏமாற்றங்கள்
இனம் புரியா பயங்களாக
எழுதா நிழலாய் உடன் வர
நெடு நாளாய்த் தடைப் பட்ட
காலை நடை இன்று
தொடர்ந்தது
அழகிய பழைய மதுச் சீசாவில்
அன்றைய தாமரைப் பூவை சொருகி
வழக்கம் போல் பத்தி கொளுத்தி
சிகைதிருத்தகம் மணக்க வைத்து
வாசலில் அமர்கிறான்
புகையும் பீடி தந்திப் பேப்பர் சகிதமாய்
படித்துச் சொல்லவும் முடி திருத்தவும்
வாடிக்கை எதிர் பார்த்து
நான் வெறுமே கடப்பதை
ஏமாற்றப்புன்னகையுடன்
ஜீரணிக்கிறான்..
தந்தையர் விழிக்கும் முன்
சேரிக்குள் காலி பிராந்திக் குப்பிகள்
முந்திச் சேகரித்த பிள்ளைகள்
பழைய இரும்புக் கடை திறக்க
காத்திருக்கின்றன
உரசுகிறாற் போல் வந்து
பாதையோரத்தின்
புழு கொத்தி
பட்டென்று பறக்கிறது
பறவையொன்று

அன்பு மிதித்தெழும்

அன்பு மிதித்தெழும்
கோபம்.
ராகம் மிதித்தெழும்
ஆலாபனை.
யதார்த்தம் மிதித்தெழும்
படிமம்.

சாப்பாடில்லாத பிள்ளைகள்

சாப்பாடில்லாத பிள்ளைகள்
புழுதிக் காலுடன்
அடுப்பெரிகிறதை
வந்து வந்து பார்த்து
விளையாடப்போகும்,
பசியை வாசல்ப்படியிலேயே
விட்டுவிட்டு.

யாரால் செமிக்க முடியும்

ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கும் கல்யாணங்களில்
தோட்ட வேலைக்கைதிகள்
மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி
உள்ளே ஓடற ஓட்டத்தை
யாரால்
செமிக்க முடியும்

ஒரே மாதிரி

பிள்ளைகளின் பசியடக்க
புதிய வசவுகள் தேடி
மூலையடைவாள்,அம்மை.
பீடிகள் தேடிச்சலித்து,
யூனிபாரத்தை தேடச்சொல்லி
அன்பாய்க் கூப்பிடுவான்
‘ஒரே மாதிரி’வசவுகளில்
அழவும் மரத்துப்போன
பிள்ளைகளை
அப்பன்.

என்பிலதனை

புழுவெனச்
சொருகிய வார்த்தைகளுடன்
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறான்.

கள்ளப்பட்டுப் போன மீன்கள்
எல்லை தள்ளி
வளைய வருகின்றன.

எல்லை தாண்டியோரின்
எலும்புகளை
குறிப்பாய் முதுகெலும்புகளை
வலையினடியில்க்
கனத்துக்காய்க் கோர்த்து
வீசுவோருண்டென

அவை பேசிக் கொள்வதைக்
கேட்க விடுவதில்லையவனது
‘ஞாபகங்களை அழிக்கும்
ஒரே ஞாபகமான பசி’

புழுவெனச் சொருகிய்
வார்த்தைகள்
மிதக்கிறது
தென்கடலெங்கும்
அவன் கை விட்ட
தூண்டிலுடன்...

தோழி

நீ அதிர்ச்சியடையக்
கூடிய
சொல்லொன்றைச்
சுமந்து நிற்கிறேன்

சிறு திருட்டுகள்
செய்யப் பழகிய
வீட்டுப் பிராணியொன்றை
சாக்குப் பையிலிட்டு
மூடி
எங்கேனும்
கண் காணா இடத்தில்
விட்டு வருவது போல
சுமந்து செல்கிறேன்

வார்த்தைகள்
வளர்த்தெடுக்கும் முன்
முத்தமிட்டு
உன் இதழ் பூட்டத்
துணிகிறேன்
அதிர்ச்சியுறும்
ஆதிச் சொல்லொன்றை
நீ சொல்கிறாய்

வாசலில்
வளர்ப்பு மிருகம்
வாலாட்டியபடி...




 http://www.siren.co.in/

புத்தகம்-கவிஞர் கலாப்ரியா

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

------------------ 

பிரிவுகள்

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்





-------

பாதுகாப்பு குறித்து..* 


வாழ்தலின் பாதுகாப்பு 

குறித்து 
பிரக்ஞை ஏதுமற்றிருந்தேன் 
உருளும் எதிர்காலம் விழிகளினுள் தேக்கி 
வேட்டுவனின் 
விரல்களிடை யொழுகும் 
கயிற்றின் நுனியில் தலைகீழாய்ப் படபடக்கும் 
பறவைகளிரண்டின் 
பயணமென்றினைக் 
கடக்காத வரை 

-------------------

ஆயினும் - இரண்டு கவிதைகள்

=============================

-கலாப்ரியா


ஐந்து நிலத்திலும் 
அவள் போல் சாயலில் 
ஒருத்தியையாவது 
பார்க்க முடிந்தது 
ஆயினும் மெய் தேடி 
அலைந்த காலில் 
ஐந்திணை வேர்களும் 
பதியமிட்டு விட்டன 

அவள் பெயரைச் 
சொல்லியழைத்து 
நன்றோ தீதோ 
என்னால் வரக்கூடாது 

எழுத்தாணியொன்றை 
அழுத்தமாய் 
நாவில் 
அலகு குத்தியிருக்கின்றேன்.

----------- 

இதுகாறுமான 
எழுத்துகளை 
அழிக்கவுண்ணி 

காவியம் தொடங்கி 
கழிப்பறைச் சுவர் 
கல் வெட்டு 
வழிகாட்டி மரம் 
என 
ஒன்றையும் விடாது 
அழித்துதிர்த்து 
மயிலிறகாய் 
மயிர்க் கற்றையாய் 
அச்சிறும் வரை பெய்தோம் 

கடலோரம் வரை 
பிரயாசையுடன் 
எடுத்துச் சென்றோம் 

வெற்றி பெற்று 
சற்று ஓய்வாய் 
நிலவுதிக்கும் வரை 
கலவியைக் குறி வைத்து
காதல் மேற்கொண்டோம் 

என் பெயரழிய நீ 
எப்படிச் சம்மதிப்பாய் 
என்றாய் 
உணர்ச்சி மேலிட்டும் 
ஒரு வகைக் கேலியோடும் 

அலையின் மூர்க்க வருடலில் 
அச்சிறுந்து 
கரையெங்கும் 
கற்றையாய் எழுத்துக்கள் 
உள் வாங்கும் கடலுக்கு 
உன்னையும் ஒப்புக்கொடுத்து 

உன் மார்க்கச்சையுடன் 
இரண்டு முற்றுப் புள்ளிகளுடன் 
ஊர் திரும்பினேன் 
என் பெயரற்று.
=================================== 


உறவுகள்.

------------------


"அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்."
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன 
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸ¤க்காய்
அம்மாவும்
அப்பாவும்!


கலாப்ரியா.

------------------------------------


பயணம்.

கூட்டிலிருந்து
தவறி விழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே 
தானும் பறப்பதாய்
நினைத்தது.
தரையில் மோதிச்சாகும்வரை.


கலாப்ரியா.

அவளின் பார்வைகள்

காயங்களுடன் 
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும் 
காக்கைகள்


தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின


கைகள் காதலித்த
கண்ணாடி தம்ளர் 
காதலை ஏற்காதென்
காலடியில்
நொறுங்கிச் சிதறியது
உடைந்த துகள்கள்
காலில் குத்தி
உறவாகி விட்டன
என் ரத்தத்தோடு


எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு 
கவிதை தரப்பார்க்கிறது


கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம் 
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்


கூட்டிலிருந்து 
தவறிவிழுந்த 
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை


அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை


என்ன செய்தும் 
இவன் காலடியில் 
தலைவைத்துப் பணிய
மறுக்கிறது நிழல்
இவனின் நிழல்


தூண்டில் மீனின்
துடிப்புகளைப் பாடுவதற்காய்
மட்டுமே நான்
ஆற்றோரம் காத்திருக்கிறேன்
அரை நிர்வாணிகளுக்காயில்லை


ஒப்பனைகளை
அழித்துவிட்டு
என்னுடைய 
நாடகத்தை
நானே 
என்று பார்க்க


ஒரு
தென்னம்பிள்ளையின் 
கீழ்
சில கனகாம்பரம்
ஒரு செம்பருத்திச் செடி
எனத் தோட்டம் வளர்த்து
தண்ணீர் பாய்ச்சுகிற
தம்பியின்
மத்யான நிழல் மகிழ்ச்சிகளை
உன்னால்
அவனின் பரிமாணப் பிரக்ஞை
வெளித் தெரிய 
கவிதையாக்க முடிகிறதா


எப்படியென்று 
தெரியவில்லை
தாமரையிலையில்
நரகல்


அத்தனை 
தூரம்
கடந்து
பார்க்க
வந்திறங்கினேன்
கூப்பிடும் தூரத்தில்
எதிர்த்திசையில் 
பஸ் ஏறப்போகிறான்
கூப்பிடவில்லை


என் தலைக்குள் வலி

“தொடந்து மழை நாட்களில்
தொழுவம் விட்டகல
மறந்த பன்றிகளும்
காய்ந்து
மக்கிப்
போக முடியாத
மந்தை நரகல்களும்”
என்றொரு படிமம்
திணிந்து கொண்டு

என்னுடைய மேட்டு நிலம்
 http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=180&pno=204
 என்னுடைய மேட்டு நிலம்
நேற்றுப் பெய்த மழையில்
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது

என்னுடைய மேட்டு நிலத்தை.
இன்றை வெயில்
நெருப்பால் வருத்திக்கொண்டிருந்தது

(என்னுடைய மேட்டு நிலம்
நாளைய ‘வெறுமையில்’
தவம் புரிந்து கொண்டிருக்கும்)
என்னால்- அதன்
எல்லா அனுபவங்களையும்
உணர முடிகிறது.

ஏனென்றால்,
இறந்துவிட்ட - என்னை
அதில் தான் புதைத்திருக்கிறார்கள்.


DID WE MEET?
http://kakithaoodam.blogspot.in/2010/07/blog-post_20.html - மொ.பெ : பத்மா

WE FAILED TO MEET
THOUGH
WE DID MEET

BY CONSENSUS
WE CHOSE
NOT TO SIT BY THE TREE
WITH TREPIDATION
FOR THE BIRDS DROPPINGS
ON US

THE MOMENT
WE SAT ON GRASS
WE GLIMPSED AT AN ANTHILL
FRANTICALLY TRYING TO CAVE IN ,
AND OUT CAME SOME INSECTS
UNBALANCED AND SCURRYING ....
YOUR FORE FINGER TOO REMAINED
A BOOK MARK, 
TO OPEN THE PAGE YOU LIKED
HOWEVER IDLE FOR LONG

AS WE FAIL TO NOTE ,
THE FINEST ATTRIBUTES OF A MOVIE ,
JUST BY READING AND FAILING ,
AND TRAILING BEHIND THE SUBTITLES ..

WE COULD NEVER
MEET EACH OTHER
ALTHOUGH...
WE MET ONE FINE DAY 

-----------------------------------------------------------------------------------------------------------------

                                           துணைத்தலைப்பு
நம் சந்திப்பு
நிகழாமல் போனது

 பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .

புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு  விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்

துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று




சினேகிதனின் தாழ்வான வீடு:
......................................................................
கறுப்பேறிப்போன
உத்திரம்.
வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.

காலேஜ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறள்
பொன்மொழிகள்-
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் என
எழுதியெழுதி அழிப்பான்
எழுதுவான்.

படிப்பை நிறுத்திவிட்டு
பழைய பேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விளம்பரம் ஒட்டிய
வெட்டும்புலி தீப்பெட்டியும்
உத்திரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து)வைத்திருப்பான்.

அப்பா வெறுமனே
பத்திரப்படுத்தி வந்த
தாத்தாவின் -பல
தல புராணங்கள்
சிவ ஞானபோதம்
கைவல்ய நவநீதம்

சைவக்குரவர் சரித்திரங்கள்
பலவற்றை.
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில்- பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்,
கெஞ்சி வாங்கி
விளக்கு மாடத்தில்
அடைத்தது போக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்துவைத்திருப்பாள்
அவன் அம்மா.

முதல்பிள்ளையை
பெற்றெடுத்துப் போனபின்
வரவே வராத அக்கா
வந்தால்-
தொட்டில் கட்ட
தோதுவாய்-அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள்.
* * * *
நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று
சம்மணமிட்டுக்
காலைக் கயிற்றால் பிணைத்து-
இதில்
தூக்கு மாட்டித்தான்
செத்துப் போனார்
சினேகிதனின்
அப்பா



வளர்ச்சி…
எங்கள் வீடுகளையொட்டி
ஒரு வாய்க்கால்
ஒரு காலத்தில்
அதன் நீர்
எல்லோருக்கும்
பலவழிகளில்
பயன் பட்டது
நாங்கள் குழந்தைகள்
வாழை மட்டையில்
தெப்பம் செய்து
தெரிந்தவரை
அலங்கரித்து கயிறு கட்டி
படித்துறையில் இருந்தபடி
எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்
இழுத்துக் கொள்வோம்.
மறுபடி செல்ல அனுமதிப்போம்
மறுபடி.....மறுபடி
தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து
மட்டைகளாகி நீரோடு போகும்
மனமில்லாமல்
விளையாட்டைப் பிரிவோம்.
**** **** ****
இப்போது கெட்டுப் போய்
இழுப்பற்றுத் தேங்கிய நீரில்
குப்புற மிதக்கும்
என்புதோல்ப் பிணமொன்று
வீட்டருகே
ஒதுங்கி நிற்பதாய்ச் சொல்ல
கழியெடுத்துப் போய்
தள்ள்ளி விட்டோம்
எங்கள் எல்லையைத் தாண்டி
எங்கள் எல்லைக்குள் நின்று

தயாராய் இருந்தார்
அடுத்தடுத்த வீடுகளிலும்
அவரவர் கழிகளோடு.


        -கலாப்ரியா

காலைப் பறவை...
நேற்றைய ஏமாற்றங்கள்
இனம் புரியா பயங்களாக
எழுதா நிழலாய் உடன் வர
நெடு நாளாய்த் தடைப் பட்ட
காலை நடை இன்று
தொடர்ந்தது

அழகிய பழைய மதுச் சீசாவில்
அன்றைய தாமரைப் பூவை சொருகி
வழக்கம் போல் பத்தி கொளுத்தி
சிகைதிருத்தகம் மணக்க வைத்து
வாசலில் அமர்கிறான்
புகையும் பீடி  தந்திப் பேப்பர் சகிதமாய்
படித்துச் சொல்லவும் முடி திருத்தவும்
வாடிக்கை எதிர் பார்த்து

நான் வெறுமே கடப்பதை
ஏமாற்றப்புன்னகையுடன்
ஜீரணிக்கிறான்..

தந்தையர் விழிக்கும் முன்
சேரிக்குள் காலி பிராந்திக் குப்பிகள்
முந்திச் சேகரித்த பிள்ளைகள்
பழைய இரும்புக் கடை திறக்க
காத்திருக்கின்றன

உரசுகிறாற் போல் வந்து
பாதையோரத்தின்
புழு கொத்தி
பட்டென்று பறக்கிறது
பறவையொன்று
                                -கலாப்ரியா

இதை
வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா,
எனில் நீங்கள்தான்
ஏழு கடல்தாண்டி
ஏழுமலைதாண்டி
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
சிமிழ் தேடிப் போகும் இளவரசன்.

முதல் கடலின் கரையில்
நம்பிக்கையளிக்கும் விதமாய்
'உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது' என்கிறது
பிரமிளின் வண்ணத்துப் பூச்சி

மலையேறி இறங்கிக்
கடலேகும் முன் கழிமுகத்தில்
அள்ளிப் பருகிய நீரில்
சுகுமாரன் கை கவிழ்த்த நீரும்
கலந்திருக்கிறது

கானகமொன்றின் இசை
உங்கள் முகம் கை கழுத்தைத்
தழுவி உவகையுறுகிறது
நகுலனின் அம்மா என
'நண்பா, அவள் 
எந்தச் சுவரில் 
எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்' என
அவர் காதில் விழும் குரலை
நீங்களும் செவியுறுகிறீர்கள்
அது அவரது அம்மாவா
கொல்லிப் பாவைகளா

தீவை விட்டுத் தெப்பத்தை
அலையுள் சரிக்கும்பொழுது
கரையில் வேறெதுவும்
செய்ய முடியாமல்
ஒதுங்கப் பாடை நிழலுமின்றிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஞானக்கூத்தனின் நாய்

தெப்பம் சிதையக்
கடலுக்குக் கீழ் 
ஓட்டமும் நடையுமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன 
தேவதச்சனின் அன்பின் சிப்பிகள்

பொன்னிலைகள் ஆபரணமாய் உதிர்ந்து கிடக்கும்
மரத்தின் கழுத்தைக் காலடி எனக் கற்பித்து
இளைப்பாறியதை நினைக்கக்
கவ்விக்கொள்ளும் தேவதேவனின் வெட்கம்

கண்டு கொள்கிறீர்கள்
பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஜோடிக் கண்களென 
இரண்டு வண்டுகளைச் சிமிழுக்குள்
எதில் மந்திரவாதியின் உயிர்

படைப்பின் மகத்துவம் புரிந்த
வாசகன் நீங்கள்
கொல்ல மனமின்றி
இரண்டையும் தப்பவிட்டு
மறுபடியும் தேடத் துவங்குகிறீர்கள்
இம்முறை என்னோடு.

நன்றி : yathrigan-yathra.blogspot.com/.../blog-post_12.html



கலாப்ரியா கவிதைகளைத் தேடித்தேடி வனம்புகுதல் தொகுப்பு மட்டுமே கிடைந்திருந்தது. அவரின் பழைய கவிதைத்தொகுப்புகள் கிடைக்காதிருந்தது. அவரின் மிகச்சில ஆரம்பகால கவிதைகளை அவரின் வலைத்தளத்தில் வாசித்திருந்தேன், அவரின் மொத்த கவிதைகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாயிருந்தது. தற்போது சந்தியா பதிப்பகத்தில் கலாப்ரியா கவிதைகள் மொத்த தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இன்னும் முழுதாக வாசிக்கவில்லை, வாசித்தவரையில், சில கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்

கலாப்ரியா பற்றி விக்ரமாதித்யன்

எழுபதுகளின் கவிஞரான கலாப்ரியாவின் கவிக்குரல் முழுக்கவும் தனியான ஒன்று, அன்றும் சரி, இன்றும் சரி, நவீன தமிழ்க் கவிதையிலேயே தனித்த ஒரு விசேஷமான வடிவம், நெகிழ்ச்சிகூடிய ஒரு அருமையான கட்டமைப்பு, ஆகச்சிறந்த ஒரு தனிக் கவிதைமொழி, அழகுபட்ட ஒரு கவிதைகூறல் ( பின்நாள்களில் இது கதைகூறல் போல இருக்கும் ) செய்நேர்த்தி, காட்சிகளாய் விரியும் உலகம் இவையெல்லாம் ஒன்று கூடித் திரண்டு சமைந்த புதுக்கவிதைகள் அவருடையவை, இந்த பண்புயல்புகளுககெல்லாம் மேலாய்ச் சொல்லவேண்டிய ஒரு பண்பியல்பு, மனவெழுச்சி கொண்ட கவிதைகள் அவை என்பது. எவ்வளவு பெரிய கவிதைக் கூட்டத்திலும் கலாப்ரியா கவிதையைத் தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதிலிருந்தே அருடைய தனித்தன்மையை கவி ஆளுமையைத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்க் கவிதை சரித்திரத்திலேயே கலாப்ரியா கவிதைகள் தனியானவை, இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதையிலேயே காணக்கிடைக்காத உணர்வெழுச்சியும் துடியும் கட்டவிழ்ந்த மனவெளிப்பாடும் கொண்ட அபூர்வமான கவிதைகள், முற்றிலும மனத்தடைகளை உதிர்த்து உதறியெழந்து நிற்கும கவிதைகள். கலாப்ரியாவின் கவித்துவம் ஒப்பிட இயலாதது என்பது மட்டுமில்லை. ஒரு இனத்தில் / மொழியில் எப்பொழுதோ நிகழ்க்கூடியதுமாகும்.

நவீன கவிதை என்று மட்டுமில்லை, தமிழ்க் கவிதையிலேயே பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், ஆகியோரின் பங்களிப்பும் ஸ்தானமும் எந்த அளவுக்கு முக்கியமானதும் நிச்சயமானதுமோ அதே அளவுக்குக் கலாப்ரியாவின் இடமும் கொடையும் உறுதியானதும் முதன்மையானதும் ஆகும், இந்த ஐந்து பேரையும் எந்தத் தயக்கமுமில்லாமல் மகாகவிகளாக வரித்துக் கொள்ளலாம். காலம் இப்படியே இவர்களை ஏற்றுக் கொள்ளும்.

**********************************************************

நன்றி : கொல்லிப்பாவை இதழ் 2
https://www.facebook.com/velmuruganperiavan?hc_ref=NEWSFEED
Automated GOOGLE-OCR AND SOME HEAVY WORK 
நீ கண்ணாமூச்சி 
சொல்லித் தராததால்
நான்
தூங்கத்தெரியாமலே
போனேன்.

-கலாப்ரியா
________________
ஞான பீடம் ” (குறுங்காவியம்)
சிவசங்கரிக்கும்
ஹரிக்கும்."

ஏகலைவம்
விதுரக்கண்களும்
அறியாமல்
குருக்ஷேத்ரம்
ஏகலைவ வதத்தில்
ஆரம்பமாச்சு.

பார்த்திப வெற்றிக்காய்,

துரோணன்
கட்டை விரல்
காணிக்கை வாங்கினான்.

துரியோதன ஜெயம்
ஏகலைவத் திறமையில் எனும்
துரோண நிச்சயம்

இன்றுமென்ன
செத்தா போச்சு.

2
பள்ளியில் சேர்ந்த
அடிநாட்களில்
பரிமாணப் ப்ரக்ஞையின்றி
பூத்தனமான

மழலை முதிர்ச்சியுடன்
டைம்டேபிளை

"
ஒட்டி:

புத்தகங்களுக்கு
நினைவாய் அட்டைபோட்டு
அடை காக்கத் தொடங்குவாய்
கனவுகளை;

உன் பட்டங்களே,
ஜாதி நீரில்
சொந்தக் காரத் தாழ்வாரத்தில்

உட்கார்ந்தபடி

கப்பல் செய்து விடப்

போகும்

கனவான்களை நினையாமல்.

சிறுத்தொண்டம்

விடுமுறைக்கு
அக்கா தன்குழந்தைகளுடன்
வருவாள்.

வெறுங்குழி துடைத்து
அடுத்த குழிஎதிர்த்த குழி
யின்
முத்தள்ளுகிற
பல்லாங்குழி லாகவத்தோடு
சிதறிக் கிடக்கிற
வீடு நேர்ப்படும்.

"முத்தாயம்முப்பண்ணென்டு
மூணு –“
விருத்தம் போடுகிற
அக்காவின் கைக்கெதிராய்
அம்மாவின் காய்கள்
சவங்களாகும்.

மத்யான
அனாதியில்
வில்வ மரத்து
அணில் ராகங்களுக்கிணையாய்
புழக்கம் பேசி
அம்மாவுக்குப் பேன் பார்ப்பாள்

"எம்புட்டு முடியிருந்துது
உன்னைப் பெத்தவீட்டில் தான்
என் தலை கழிஞ்சு போச்சு”.

அக்காவின் சாமர்த்தியங்களைப்
பொறாமல்
மெய்யாய்ப் பொய் சொல்லி
தன் ஈகோ " –
சமனப் படுத்துவாள்
அம்மை,

நினைவாய்
நாலு மணிக்கு
யேனம் ஒழிச்சுப்போட
எந்திரிப்பாள்.
".கிடக்கட்டுண்டீ
வந்த இடத்திலயும் வாரிப்
பெறுக்கித்
தாளிக்கணுமாக்கும்".
அம்மா உண்மையாய்
ஆத்ங்கப் படுவாள்.

அக்காவின் ஆர்வம்
அவளின் ஆர்மோனியத்தையும்
விற்றுத் தின்றதிற்கான
நளினச் சீறலில்
சுருதியற்றுப் போகும்

உன் வேலையற்ற
பொழுதுகளின்
வழக்கமான சீறல் கூட
அவளிடம் பணிந்து
சிரிக்கும்.

ஆனாலும்
தனக்கு பொங்கல்ப்படி
தர முடியாததை
மாமியார் சொன்னதாய்ச்
சொல்லி
உன் மூளையில் முளைத்த
மீசையை
இரக்கமின்றிச்
சுட்டெரிப்பாள்.

என் தோழனே.
"அக்காக்களால்"
பிரியங் கொட்ட
முடிகிறதே தவிர
பால் தர முடிகிறதில்லை."

துஷ்டி வீடு நெருங்க நெருங்க
கூந்தல் அவிழ்த்துக்
கோடாலிக் கொண்டைபோட்டு
சோகம் வரவழைத்துக்
கொள்கிற
பொம்பளைகளின்
சம்பிரதாயச் சாதுர்யம்
நினைவை ரெண்டாம் பக்கங்களி
லிருந்து
வருகிற விலக்கப் பார்க்கும்.

3



கூட்டுக் குடும்பத்தின்
மூத்த பிள்ளை
உன் காலேஜ் நோட்டிஸ்களை
திருடி விற்றதுக்காக
வயசு மறந்து
அடிததுத்தைத்து சத்தம்
போட்டது
நினைவாய் இன்டர்வ்யூவுக்கு
முன்தினம்.
உடம்பெங்கும்
ரீங்காரிக்கும்.

இவளுக்கான சில
காதல்வரிகளை
பிள்ளைகள் கிழித்துக்
கப்பல் செய்யும் போது
உன் வாசலுக்கு வரவேசெய்யாத
தபால்காரனையும் மறந்து
புதிதாய் அழும்.
மூளை
காலுக்கடியில்.

உன் வீட்டுக்கு வருகிற எப்போதாவது
அழகான அதிதி மனைவிக்குப்  
போட
வீட்டில் தடுக்கு இருக்காது.
நினைப்பைக் கழற்றி
அவளிடமுன்
செளந்தர்யச் சாமர்த்தியம்
உணர்த்தும் முன்

துணை வந்த
வேலைக்காரப் பெண்
உன்னை நந்தனாக்குவாள்

நந்தனுக்கு
மன மைதுனமும்
இழந்த  கோ
தனித்துப் போய்

நாயாய்ச் சுருண்டு
கொள்ளும்
வேலைக்காரியின்
சேத்துப் புண் படர்ந்த
காலுக்கடியில்.


4 ,
 உன் மூளைச்சதையை
குடும்பத்தின்
பகலுணவுக்குப்
பங்கிட்டுக் கொடு

உன் கையில்
ஒட்டின திருவோடு
நிறையவும்   வேண்டாம்
கழறவும் வேண்டாம்

சாபவிமோசனம்
உனக்கெதுக்கு
தின்னப் பதமாய்ச் 
சதை வளர் (?)த்துப் 
போ

அந்நியம்

உன் பதவியும்
சம்பளமும்
முக்கியப்பட்டுப் போகும்

பந்திச் ஜமக்காளப்
புழுதியில்
மணவறைப பூ
பிய்த் தெறிந்து
விளையாடிப் புரள்கிற
குழந்தைகள்,

பந்திக்கு அவசரப் படுத்துகிற
பொறுப்பான நண்பர்கள்
எல்லாக் கும்மாளிக்கும்
மெளன சாட்சியாகிற
கல்யாணியண்ணன்கள்:

ரசித்து மகிழ்கிற
உன் மனச் செளந்தர்யங்களே,
சம்பளம் கேட்டு
நீ உதைத்து எறியப்பட்ட
10. A 1 வேலை குறித்து
வக்ரமாய் வருத்தப்பட்டு
சொந்தக்காரக் கும்பல்
கற்பழித்துப் போகும்.

'மீன் கொத்திகளின்
அழகும் வண்ணமும்
இன்னும் சிலாகிக்கப்படவில்லை
என் தோழனே'.

2
அம்மாவின்
"சகுனம் பார்த்துப் போ"
வாசல்ப்படியில் விட்டுவிட்டு
தெருவுக்கு வந்தபோது
நீ தங்கத்தாள் தந்து
வாத்சல்யங் கொட்டின

பால்ய கால ஸ்னேகிதி
பெயரிடப்படாத தன்
சிசுவுடன் எதிர்ப் படுவாள்
கண் முழுக்க
கானல்ப் பிரியம் குளமிடும்.

தெரு முனையில்
எதிர்ப்படுகிற
டாக்ஸி டிரைவர்,

பணத்தை வைத்துவிட்டு
வெறும் டின்னுடன்
பெட்ரோல் வாங்கப்
போனதை

தன் அந்நியத்தனம்
நினையாமல்
சம்பந்தமற்ற உன்னிடம்
உரிமையாய்ச் சொல்லி
போவான் 
அவனின் அசாதாரண 
"இனஞ்சேரல்
உனக்கு வர்க்கவிதியை 
பாசத்துடன்
தெரிவிக்கும்.

பஸ்ஸில்
சமாதானப்படாத 
மற்றவர்கள் எரிச்சலிக்கிற 
குழந்தையின் அழுகீதங்களை 
மீறி
தாயின் தவிப்பு 
உன் இண்டர்வ்யூ 
நினைப்பைக் கரைக்கும்
"என் தோழனே 
இனி இண்டர்வ்யூக்களுக்குத் 
திருவோ டேந்திப்போ"-

________________
3
உனக்குப் பிரியம் செய்திருக்கிற
பழைய சேக்காளியின் 
மறந்து போன பெயர் 
பொருட்காட்சியில் 
ராட்டினத்தருகே ஆளைப்பார்த்ததும்
இனிஷியலுடன் நினைவுவரும்.

நிகொடின் புணர்ந்த
உன்
நுரையீரலுக்குள் 
'சிலேட்டுப் பிரியம்’ ஒன்று 
பரவும்.

தாச்சி தொடவிடாமல் 
உன்னையே கண்வைத்து 
விரட்டின பள்ளிச்சினேகிதன் 
உன் உள் வாங்கின
கண்ணின் சோகம் விசாரித்துக்
கல்யாணக் காய்தம் தருவான்
அது மாடியானால் 
விழுந்து நொறுங்கிச் சாகு 
சுகமாயிருக்கும். - 

"ஆனாலென்
தோழனே",
அவர்களின் 
"என்ன செய்யறே இப்போவில்
நீ சம்ஹாரிக்கப்
படுதல் தவிர்க்க முடியாதது.

4
உன் பார்வைக்கு மட்டுமே 
பரிமாணம் நிறைய 
உண்டு--

பஸ் நடுவழியில் 
நின்ற போது 
பக்கத்து மண்டபத்தில் 
ஆடு மேய்க்கிற 
கிழவன் உனக்கு மட்டுமே 
தர்சனப்படுவான்
செருப்பு முள்ளைக் 
கடித்திழுத்தபடி 
தன் கனவை --

தான் கானல் மேய்ந்து 
வளர்க்கிற
ஆடுகளின் குட்டிகளொன்றை 
தன் முதலாளி 
சம்பளமாய்த் தந்து 
அந்த மேய்ப்பனின் 
மந்தை பெருகப் போகும் 
ர்ப்பந்தரிக்காத 
எதிர் காலத்தைச் 
சொல்வான்
அந்த எழுபது வயதுக் 
கிறிஸ்தவனின்
முடியாத உயிர்த்தெழுதல் 
குறித்து
மந்தமாய்ச் சிரி

அவனிடம் பீடி வாங்கி 
வலிப்பதோ 
ஸ்தூபியின் நாலாவது 
சிங்கத்தைப் பார்க்கிறதோ 
ஒரு தளப்பட்ட 
பார்வைக்கார 
உன் மூத்த புத்திசாலிகளுக்கு 
முடியாத 
விஷயமென் தோழனே.
________________
5
நடுத்தெருவில் 
முத்துச் செதுக்கி 
விளையாடுகிற பையன்கள் 
கண்டு
கரண்டைக்காய்
பயப் படும். ::-:: 

இரட்படையடிக்குப் பத்தாயிரம்
பதினஞ்சு கவுண்டி
பேசி விளையாடும் 
டிராயர் மனுஷர்களின் 
குச்சிக்கம்பு கண்டு 
மூளையிருக்கிற தலை பயப்படும்

வாசலில்
போஸ்ட் மேன் பார்த்து 
தவமிருக்கும்
மனசிலோ--

குளியலறைக்குள்
தானும் வரணு"மெனத்தாயிடம்
கூப்பாடு போடும்
ஆண் குழந்தை 
வெளியிலிருந்து.


பயம் – 
அணில்ப் பல்லாய் 
கொறிக்கக் 
கொறிக்க
வளரும்வாய் மூடிக்காத்திரு 
வளர்நது தாடையைக்
குத்திக்கிழிக்கும்--

7
வயக குறித்த 
பயம் வளர்கிறபோது
தனித்த கிராமத்திற்குப் போ

பூச்சுப் பெறாத 
ப்ரைமரி ஆஸ்பத்திரி 
சீமைக் கருவேல் 
நடுவில் முளைத்த 
தெரு வென்றில்லாத 
மண் விரிப்புகள்,

கோரிக்குப் பக்கத்தில் 
உடைக்கும் சத்தம் 
கேட்டுப் பழகி 
பயம் மறந்த--

தேரை தேடும் 
பாம்புக் குஞ்சுகள் 
பொறுக்க வருகிற 
மயில்க் கூட்டம்

கொடை தராததால் 
கோப முற்று 
மழை வராமற் 
சபித்து 
கெட்ட வார்த்தை 
எழுதின
சுவருடன் 
பிரகாரமற்ற 
வண்டி மறிச்சாங்கோயில் 
கடுங்காப்பி,
பீடி
காகிதம் கற்பழிக்காத 
கிராமப் பொருளாதாரம் 
எல்லாமும் 
உன்னை இன்னும் 
அன்னியப் படுத்தி 
பயம் விலக்கும்.
________________
உபாசனை

1
கேமரா தின்ன முயன்று 
தோற்றுப் போன 
ஜூலியின் அழகுடன் 
இரவு தொடங்கும்
விளைக்கணைத்துப் படுக்கையில் 
சாய்கிறபோது 
தேள் கொட்டும் சுருக்காய் 
சசிக் கூந்தல் 
மூளை பெருக்கிப்போகும்
ராத்திரிகள்
பழையதில்லைபழையதேயில்லை.
......

நீ முட்டுக்கட்டி

காரணமற்றுக்
கலந்திருக்கிற 
நிசியில்

ரயில்ச் ஜன்னலில் 
கூப்பிடாத முகங்கள் பார்த்து 
ஏமாந்துவிலைபோகாத 
"சுக்காஃபியுடன் திரும்பி 
ஊருக்குள் கூவி 
பசியைக் கடைசியாய் 
மறந்து விட வரும் 
ஒரு தர்மபுத்ரனுடன்
ரயில்வே ஸ்டேஷன் நாயொன்று
கூடவே வரும்.

அவனுே நீயோ 
கனவு காணுகிற 
சொர்க்கம் எங்கேயும் 
நிதர்சனப்படும்
முன் 
சோர்வாய்த் தூக்கம் 
வரும்.

ஊர் முழுக்கப் 
போஸ்டர் ஒட்டி 
ராவு கழித்து 
கடைசிப் போஸ்டரை 
படித்துறை மண்டபத்தில் 
ஒட்டித்தீர்த்து 
அண்டிறாயர்பையிலிருக்கும்
பீடியெடுத்துத் தர 
சுற்றும் முற்றும் 
ஆள் பார்ப்பான்,

சவரம் 
வெறுத்த முகத்துடன் 
சசிகலாக்கள் 
வந்து போன 
ராத்திரிக் கனவின் 
மிச்சத்தை 
பாதி வழிவரை அசைபோட்டு 
மீதிக்கு--

முதலில் அம்மணம் 
மறைத்த நாற்றங்கால்ப்
பூமியின் ரம்மியம்
சவைத்து..
.
சலித்து வரும் 
உன்னைக் கூப்பிடுவான்;
"அண்ணேன்.

உபாசனை வழியாய் 
உன் கண்ணுக்குள் 
மூளை வந்ததை யாரறிந் 
தாரிங்கே
3

வெறும் பவள மல்லிக் 
கனவுகளுக்கு மட்டுமில்லை
சிபாரிசுக்குக் கூட 
ஒரு முகம் வேண்டும்.

தாவரங்களற்ற 
புதுமழை புணர்ந்த 
குளத்தில் 
சாப்பாட்டுச்சட்டியில் 
மீன் பிடித்து விளையாடும் 
சாயந்தரப் பிள்ளைகளைத் 
தரிசிக்கிற முகம் 
ஒரு வேலை வாங்கித்தர 
வக்கற்றுப் போகும்.
________________
குழூஉ

1
"சம்போ மகாதேவ 
சாம்ப சிவா”.போடு 
சம்போ மகாதேவ 
சாம்ப சிவா....
 சாமி சாமி சாமியென்று
  நாமஞ்சொல்லிப் பாக்கனும் 
நாவினில் வராதுபோனால்
  நால்வரோடு சேரனும்....

வாழ்க வாழ்க அண்ணா வாழ்க....
 வாழ்க வாழ்க எம்ஜியார் வாழ்க
லைஞர் படை போதுமா.
இன்னுங் கொஞ்சம் வேணுமா . 
மார்க்ஸிஸ் பார்ட்டி ஜிந்தாபாத்

முழுதுமாய் 
குழுவுக்குள் அடைந்து 
நட்புக்குள் சிறைப்பட்டுப்போ 
பந்தயங்களின்
நீள அகலம் 
வாழப் போதுமானது,

ஆனாலும் 
செண்பகப் பூவின்
மணங்களில் 
சோகபாவம் 
தர்சிக்கிற 
"ரசிகமணிமூஃளயை
எங்கே அடகுவக்ய...
2

முழுதுமாய்
நடப்புக்குள்
சிறைப்பட்டு 
மூலை தேடுகிற தவம் 
வேறும் காத்திருத்தலாகி.
குழந்தைகளை
முந்தானையால் 
க்கடைசியாய் முகந்துடைத்து 
குழந்தைகளை 
நர்சரிக்கு அனுப்பி 
முந்தானை நேர்ப்படுதித் 
திரும்புவாள்
நீ தரிசிக்கிற முடியாமையைச் 
சொல்கிற
மாதிரி
உதடுமடித்துச் 
சிரித்துப் போவாள்
கீழ்வீட்டுப் பத்மாக்காவின் 
மேலுதட்டு மருகூடச் 
சந்தனம்...

யாரோ
வாலில் நூல்கட்டி
வெளி"யில் வெயில் மேய முடியாமற்போன 
தட்டான்
நூல் கழண்டபோது 
அந்தியில்
பஜாரில்
தாமதமாய்த்

தரையில் பறக்கும்.
________________
ஞானபீடம்

குறியில் 
காயங்களுடன் 
இன்னும் சுவாரஸ்யமாய்ப் 
புணர்ந்து
ஈந்த 
உன் சிந்தனைகளில்
நீ 
மூலைகளற்றுப் போனாய்
 "ஞானவான்களின் 
சாமர்த்தியத்தை 
மேடையேற்றுகிற 
சொறியல்ச்சுகம் 
உன் மூளையிலும் படர்ந்தாச்சு
உன் மூலைகளற்ற 
பரந்தவட்டத்தின் 
எந்த ஆரங்களிலும் 
உன்னை 
இளைப்பாறவிடாதுன் 
சாமர்த்தியம்.
நீ
தலைசாய்க்கச் 
சஹிருதயத் 
தோளின்றிப்போனாய்
சாபத்திற்குப்பயந்து 
மரணதேவதையான
ம்ருத்யு கூட 
உன்னைக் காதலிக்க மாட்டாள்.
"காயே தவஜெய ஹாதா”.