தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, April 24, 2018

ஆல்பெர் காம்யுவின் மனித நேயம் - வெ. ஸ்ரீராம் :: காலச்சுவடு - ஆண்டுமலர் 1991

www.padipkam.com
ஆல்பெர் காம்யுவின் மனித நேயம்
வெ. ஸ்ரீராம்
இருபதாம் நூற்றாண்டின் மேற்கத்திய தத்துவ ஞானிகள் வாழ்வின் வெறுமையைப் பற்றிப் பல கோணங்களில் அலசி யுள்ளனர். இரண்டு உலகப் போர்களின் சூழ்நிலை யில், அரசியல் நிர்ப்பந்தங்கள் என்ற பெயரில் தனி மனிதன் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்ததில் மனித நேயம் பலியாகிக் கொண்டிருந்தது. தெய்வ நம் பிக்கையை இழந்து, கடவுளை மறுத்த சில சிந்த னையாளர்கள் இயற்கையின் உலகத்தையும் அதில் மனிதனின் பங்குகளையும் குறித்து தீவிர மாக மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார்கள். மானுட உலகுக்கு அப்பால் மனித வாழ்க்கைக்கு எந்தவிதப் பொருளும் இருக்க முடியாது என்கி றார் காம்யு. சாவிற்கு அப்பால் இருப்பதாகச் சொல்லப்படும் வேறு உலகிலி ருந்தோ, வாழ்வின் ஓட்டத்தை முன் கூட்டியே நிர்ணயித்து விட்டதாகக் கருதப்படும் விதி யிடம் இருந்தோ வாழ்க்கைக்கு அறிவுபூர்வமான ஒரு விளக் கம் கிடைப்பதில்லை . ஆகவே, தன்னைச் சூழ்ந்துள்ள உல கத்தை மனிதன் தானாகவே அறிந்து, புரிந்து கொள்ள வேண்டியதாகிறது. இயற்கை யின் உலகம் நமது ஆசைகளின் உலகமாக - இருப்பதில்லை .
காலச்சுவடு --

________________
மேலும், மற்ற உயிரினங்கள் இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழும்போது, மனிதன் மட் டுமே தன் அறிவின் மூலம் அதை எதிர்கொள்ள முனைகிறான். அவன் காணும் நிகழ்வுகள் எல் லாமே காரணகாரிய ரீதியாக அமைவதில்லை. ஆனாலும், அவற்றுடன் அவனும் பிணைக்கப் பட்டு இருப்பதால், அவனது செயல்களும் பொருளற்றுப்போய்விடுவதாக அவன் உணர்கி றான். வாழ்க்கை அர்த்தமற்றுப் போகிறது. இந்த அபத்த நிலையைத்தான் தனது தேடலுக்கு ஆரம்பமாக எடுத்துக்கொள்கிறார் காம்யு, 1938 இல், சார்த்தரின் குமட்டல்' என்ற நாவலைப்பற்றி அல்ஜேர்ரிபப்ளிகன் என்ற பத்திரிகையில் விமர் சிக்கும்போது அவர் சொன்னார்: "வாழ்வின் அபத்தத்தை சுட்டிக்காட்டுவது ஒரு தீர்வாக
இருக்க முடியாது; அது ஒரு ஆரம்பமே. பல பெரிய அறி ஞர்களின் தேடலுக்கு இந்த உண்மை ஆரம்பமாக இருந்தி ருக்கிறது. நமக்கு முக்கியம் இந்த கண்டுபிடிப்பு அல்ல; அதிலிருந்து தெரிந்துகொள் ளக் கூடிய விளைவுகளும், செயல்முறைகளும்தான்.''
- ஆக, காம்யுவின் மனித நேயத்தின் முதலாவது அஸ்திவாரம்: மனிதன் தன்னுடைய நிலையைப் பற்றி ஒரு தெளி வான பிரக்ஞை கொள்ள


________________
|
வேண்டும்,
- 'அந்நியன்' நாவலில் வரும் மெர்சோ தனது தாயாரின் சவ அடக்கத்திற்கு மறுநாள் தனது தோழி மாரியை சந்திக்கிறான். அவனது கறுப்பு டையைப் பார்த்து, அவன் துக்கம் அனுசரிக்கி றானா என்று கேட்கிறாள். "என் அம்மா இறந்து விட்டாள் என்பதைத் தெரிவித்தேன். எப்பொ ழுது என்று அவள் கேட்டதால், ''நேற்றுத்தான் " என்று சுருக்கமாகச் சொன்னேன். சற்றே பின் வாங்கிய அவள் எதுவும் கேட்கவில்லை. அம்மா வின் மரணத்திற்கு நான் பொறுப்பில்லை என்று கூறலாம்போல எனக்குத் தோன்றினாலும், ஏற்க னவே என் முதலாளியிடம் அவ்வாறே சொல்லி யிருக்கிறேன் என்ற நினைவு வரவே நிறுத்திக் கொண்டேன். எல்லாம் அர்த்தமற்றதாகப் பட் டது. எப்படியும் எல்லாரிடமும் ஏதாவதொரு தவறு இருக்கத்தான் செய்கிறது.''
காம்புவின் அபத்த நாயகன் மெர்சோவிற்கு இதுபோன்ற தெளிவான பிரக்ஞை எப்பொழுதும் இருப்பதைப் பார்க்கலாம். அவள் பேசிக் கொண்ட டிருக்கும்போதே அதில் ஒரு அர்த்தமின்மை இருப்பதையும் உணர்கிறான். தன் தாயாரின் மர ணத்திற்கு தான் பொறுப்பில்லை என்று அவனுக் குத் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், எல் லாரிடமும் ஏதாவதொரு தவறு இருக்கிறது . என்று அறிந்திருக்கிறான்.
''சிசிஃபின் புராணம்' என்ற தத்துவக் கட்டுரை யில் காம்யு சொல்கிறார்: "இந்த பிரக்ஞை ஒரு தனி மனிதனின் சொந்த விவகாரம், மற்றவர்கள் ளுக்குத் தெரிவிக்கப்பட முடியாதது. குறிக்கோ எற்ற. இயந்திர கதியில் இயங்கும் இருத்தல் (வாழ்க்கை) ஏற்படுத்தும் குமட்டல் போன்ற உணர்விலிருந்து இப்பிரக்ஞை பிறக்கலாம். ஒரு நாள் இந்த இயந்திர கதி நின்றுவிடுகிறது. 'ஏன்' என்ற கேள்வி பிறக்கிறது. ஏமாற்ற உணர்வில்
காலச்சுவடு --

________________

- தோய்த்த சலிப்பில்தான் எல்லாமே தொடங்குகிறது.'
இந்த ஏமாற்ற உணர்விற்கு அடிப்படை காரணங்கள் : 1. உலகின் விரோதப்பாங்கு, 2. காலத் தின் முரண்பாடு, 3. சாவின் நிச்சயம்.
1. உலகின் விரோதப் பாங்கு என்பது தனி மனி தனின் மனித நேயத்திற்கு ஒரு சவால் என்று காம் யுவின் சக சிந்தனையாளர்களும் கூட சொல்லி யுள்ளனர். இந்த விரோதப் பாங்கை வன்மையாக எதிர்த்துப் போராடுவது, அல்லது அலட்சியப்ப - டுத்துவது என்ற செயல்பாடுகள், அவற்றின் விளைவுகள் பற்றி அவர் பின்னால் ஓரிடத்தில் சொல்லுகிறார். இங்கு வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பிற்குக் காரணங்கள் என்ற அளவில் மட்டும் இதைப்பற்றி குறிப்பிடப்படுகிறது. 'அந்நியன்' நாவலில் நாயகன் மெர்சோவிடம், முன் காரணங் கள் எதுவுமின்றி, சமூகத்தின் பல பிரதிநிதிகள் ஒரு விரோதப் பாங்கு கொண்டுள்ளனர்: நீதி மன் றத்தின் ஜூரிகள், மாஜிஸ்டிரேட், பார்வையாளர் கள். வழக்கு விசாரணையின் ஆரம்பக் கட்டத் தில், முதியோர் இல்லத்தலைவரை குறுக்கு விசா ரணை செய்து முடித்தபின் மெர்சோ சொல்கி நான்: ''பல வருடங்களுக்குப் பிறகு முதல்முறை யாக, அழ வேண்டும் போன்ற அசட்டுத்தனமான ஒரு ஆசை என்னுள் தோன்றியது. ஏனென்றால், இங்குள்ள மனிதர்கள் என்னை எவ்வளவு தூரம் வெறுத்தார்கள் என்பதை உணர்ந்தேன்.''
1 2, வாழ்வின் பொருள் என்ன என்பதை அறிய யாத நிலையில், இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒளிமயமற்ற இருத்தலின் ஒவ் வொரு நாளும் மடத்தனமாக 'நாளையை நோக் கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் காலம் என்ற எதிரி நாளை என்று சொல்லி மனிதனை அழைத்துச் செல்வது அவனுடைய இருத்தலை அழித்துவிடும் சாவு என்ற முடிவை நோக்கித் தான். ஆக, காலத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு என்ன? காலம் மனிதனுக்கு அளிப்பது நாளை என்ற எதிர்பார்ப்பா அழிவு என்ற முடிவா? இந்த முரண்பாடும் ஏமாற்ற உணர் விற்கு ஒரு காரணம்.
76
ஆண்டுமலர் 1991

________________

- 3. சாவு என்பது நிச்சயம் என்பதும், ஆனா லும் அது எப்படி, எப்பொழுது நேரும் என்பது நிச்சயமில்லை என்பதும் இந்த ஏமாற்ற உணர் விற்கு ஒரு அடிப்படை காரணம். மரண தண்ட னையை எதிர் நோக்கியிருந்த மெர்சோ, பாதிரி யாரைச் சந்தித்த பிறகு, சொல்கிறான்: ''இருந்தா லும் நான் அவரை விட நிச்சயத்துடன் இருந் தேன். என்னைப் பற்றிய நிச்சயம், எல்லாவற்றை யும் பற்றிய நிச்சயம், என் வாழ்வைப்பற்றிய நிச்ச யம், எனக்கு வரவிருக்கும் மரணத்தைப் பற்றிய நிச்சயம். ஆம் என்னிடம் இருந்ததே இதுபோன்ற நிச்சயுங்கள் தாம். எதற்குமே முக்கியத்துவம் இருக்கவில்லை ; ஏன் என்று எனக்குத் தெரியும்.''
ஆக, இந்த சலிப்பின் பின்னணியில், தெளி வாக பிரக்ஞையோடு இருக்கும் மனிதனுக்கு உல கம் அபத்தமானது என்று தோன்றுகிறது. அப்ப டித்தான் அவன் அறிவு சொல்கிறது. ஆனால் காம்யு சொல்கிறார்: "அபத்தமாக இருப்பது உல கம் அல்ல. காரண - காரிய ரீதியாக இல்லாத உலகத்தில் அவ்வாறு இருக்க விழையும் மனிதன் தூக்கி எறியப்படுகிறான். இது ஒரு மோதல்." A ''மனிதனின் உரத்த கூவலுக்கும், உலகின் நியாயமற்ற மௌனத்திற்கும் ஏற்படும் மோதலில் பிறப்பதுதான் அபத்தம்" - ஆல்பெர் காம்யு.
(இந்த மெளனம் என்பது காம்யுவின் உலகில் பல தளங்களிலும் செயல்படுகிறது. உண்மையான சமூகப் பிரக்ஞை உள்ள ஒரு கலைஞர் காம்யு, ஆழ்ந்த மனித நேய உணர்வுடன், தனி மனித னின் நிலைமையைப் பற்றித் திறம்பட தன் படைப் புகளில் எழுதியுள்ளார். அதே சமயம், எந்த ஒரு மனிதனும் தன்னுடைய சமூக, அரசியல், பொரு ளாதார சூழ்நிலைகளுக்கு அப்பால் இருந்து கொண்டு தன் வாழ்வை நிர்ணயித்துக் கொள்ள முடியாது என்பதைப் பற்றியும் தெளிவாக இருந் தார். சமூக, அரசியல், பொருளாதார நிர்ப்பந்தங் கள் மனிதனைப் பாதிக்கும் போது, நியாயம் நேர்மை என்ற அளவுகோல்களை மீறாமல் அவற்றை எதிர்கொள்ளும் முயற்சியில் அவன் மௌனம் சாதிக்க நேருகிறது. இந்த மௌனத்திலி ருந்து மனத்தெளிவோ, அலட்சிய பாவமோ
காலச்சுவடு
2

________________

கிளர்ச்சி உணர்வோ பிறக்கலாம். எப்படியும் அவ னுடைய சிந்தனையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம் இந்த மௌனம். காம்யு வின் வாழ்க்கை வரலாறு, அரசியல் ஈடுபாடுகள், கடிதங்கள், நாட்குறிப்புகளில் இந்த மௌனத் திற்கு ஒரு தத்துவார்த்த, தார்மீகப் பரிமாணம் இருப்பதைப் பார்க்கலாம். தவிர, அவரது இலக்கி யப் படைப்புகளிலும் மெளனத்தை ஒரு இலக்கிய | உத்தியாகக் கையாண்டிருக்கிறார்.)
ஆக, அபத்தம் அடிப்படையான ஒரு அம்சம் என்றால், நமது நிஜங்களில் முதன்மையானதும், முக்கியமானதும் என்றால், இந்த மானுடப் பிரச்சி னைக்கு முன் வைக்கப்படும் எந்தத் தீர்வும் இதை - மறக்கக்கூடாது. அபத்தம் என்று ஒன்றும் இல்லை என்பது போல் நடிக்கக் கூடாது. விழிப்புணர்வு டன் இதைப்பற்றித் தெளிவாக இருக்கும் மனிதன், இதை எதிர்கொள்வது எப்படி? இதை எதிர் கொள்வதில் மனிதர்களிடம் காணப்படும் மனப் பான்மைகளை இருவிதமாகப் பிரிக்கிறார் காம்யு: துரோக மனப்பான்மை, விசுவாச மனப்பான்மை. இந்த அணுகலிலும் இவரது மனித நேயம் மேலோங்கி இருக்கிறது.
- துரோக மனப்பான்மை :
11. தற்கொலை : இது ஒரு தப்பித்தல் உபா யம்; எதிர்கொள்ளல் ஆகாது என்கிறார் காம்யு. மேலும், இது பிரக்ஞையை அழித்து விடுகிறது. அபத்தத்தின் பல அம்சங்களையும் தெரிந்து கொண்ட பின், வாழ்க்கை என்பது இவ்வளவு பெரிய சுமையா என மனம் அசந்து போய் விடுகி றது. தற்கொலை ஒரு சுலபமான முடிவாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் அது கோழைத்தனம் என்கிறார். சரித்திர ரீதியாகப் பார்த்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந் திய காலகட்டத்தில் ஐரோப்பிய இலக்கியத்தில் தற்கொலை அளவுக்கு அதிகமாகவே இடம் பெற் றிருக்கிறது. ஐரோப்பிய சமூகத்திலும் கூடத்தான். சமூகவியலாளர்களும், மனோதத்துவ நிபுணர்க ளும் கூட தற்கொலையின் காரணங்களைப் பற் றிப் பல ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளனர். இந்தப் பின்னணியில்தான் காம்யு தன்னுடைய முதல் தத்
ஆண்டுமலர் 1991

________________
|
துவக் கட்டுரைப்புத்தகத்தின்(சிசியின்ஃபுராணம்) ஆரம்பத்தில் சொல்கிறார்; ''உண்மையிலேயே மிக முக்கியமான தத்துவப் பிரச்சினை ஒன்றே ஒன்றுதான்: தற்கொலை"'. அதன் பிறகுதான் வாழ்க்கையின் அபத்தநிலையைப் பற்றித் தெளி வாக அலசுகிறார். ஆகவேதான், தெளிவாக பிரக்ஞை உடைய மனிதன் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவெடுப்பது துரோக மனப் பான்மை என்கிறார்.
- 2. வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கக்கூடிய காரணங்களையும், நம்பிக்கைகளையும் உலக வாழ்க்கைக்கு அப்பால் நிறுத்தும் கோட்பாடு கள்: இதற்கு ஒரு உதாரணம் மத நம்பிக்கை . ஏனெனில், இதில், ஐம்புலன்களால் உணரப்பட முடியாத ஒரு சக்தியை நோக்கி மனிதனின் கவ னம் திருப்பப்படுகிறது. மெர்சோவை விசாரணை செய்யும் மாஜிஸ்டிரேட் "இறைவனை நிராகரிக்கி றவன் உள்பட எல்லோருமே இறைவன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் கூறினார். அவருடைய அசைக்க முடியாத கொள்கை அது தான். அதிலேயே அவருக்கு சந்தேகம் ஏற்படுமா னால், அவரது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல் லாமல் போய்விடும்" என்கிறார், சிறைச்சாலை யில் பாதிரியார் அவனைச் சந்திக்கிறார். எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று பதிலளித் தேன். 'உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?' என்று கேட்டார். இந்தக் கேள்வியை என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்கவில்லை; என்னைப் பொருத்தவரை எனக்கு நம்பிக்கை இருப்பதும் இல்லாததும் அப் படியொன்றும் முக்கியமானதல்ல என்று தோன்றி யது.
(இந்த இடத்தில் காம்யு நாஸ்திகரா இல் லையா என்ற கேள்வி எழலாம். இந்தக் கட்டுரை
| காலச்சுவடு

________________

யின் வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயம் அது என் பதால் அதை இப்பொழுது விட்டுவிடுகிறேன். இங்கு அவர் சொல்வதெல்லாம் வாழ்க்கைக்கு அப்பாலில் நம்பிக்கைகளை நிறுத்தும் ஒரு கோட் பாடு அறிவுபூர்வமாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சியிலிருந்து மனிதனைத் தடம் புரள வைக்கும் என்பதுதான்.) - இதற்கு மற்றொரு உதாரணம், இருத்தலியல் வாதிகளின் தத்துவார்த்த தற்கொலை. அர்த்த மின்மை என்பதையே தெய்வமாக்கி வழிபடுப் வர்கள் இவர்கள் என்கிறார் காம்யு. இதற்கு உதார ணமாக, ஜாஸ்பர்ஸ், கிர்க்கார்ட், செஸ்டோவ் (Jaspers, Kierkegaard, Chestov) போன்ற சில இருப் தாம் நூற்றாண்டின் தத்துவ ஆசிரியர்களையும், அவர்களுடைய தத்துவ கோட்பாடுகளையும் சொல்கிறார்.
(அவற்றைப் பற்றி விரிவாகப் பேச இங்கு இடமில்லை; சுருக்கமாகச் சொன்னால், காம்பு வைப் பொறுத்தவரை, இதுபோன்ற தத்துவங்க ளில் அர்த்தமின்மைக்குக் கொடுக்கப்படும் முக்கி யத்துவம் மனிதன் அதை எதிர்கொள்ள முடியும் என்ற சாத்தியக் கூற்றிற்கு இடமில்லாமல் செய்து விடுகிறது. இவர்கள் சமூகத்தை அராஜகத்திற்கு இட்டுச் செல்கின்றனர்.)
விசுவாச மனப்பான்மை:
காம்யு இதுவரை விளக்கமாக சுட்டிக் காட்டிய துரோக மனப்பான்மை என்பதெல்லாம் எதிர் மறை மனநிலைகள். மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கக் கூடியதாகச் சொல்லப்பட்ட சக்திகள் அவனுடைய மானுட அனுபவ அறி
விற்கு அப்பாற்பட்டவை. அனுபவ ரீதியாகத் தானாகவே ஒரு சக்தியையோ, கொள்கை யையோ அவன் தேடுவதற்குப் பதிலாக, ஏற்க னவே இருப்பதாகச் சொல்லப்படும் சக்திக்கு, கொள்கைக்கு அடிபணியும்படி அவனுக்குச் சொல்லப்படுகிறது. நமக்கு தெரிந்தவற்றை வைத் துக் கொண்டு வாழ்க்கையை எதிர் கொள்வது தான் விசுவாச மனப்பான்மை' என்கிறார் காம்யு. தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மெர்சோவிடம் ('அந்நியன்') பாதிரியார் பேசுகி
78
ஆண்டுமலர் 1991

________________

றார். ''என் அப்பீல் ஏற்றுக் கொள்ளப்படுமென்று அவர் நிச்சயமாக இருந்தார். ஆனால் அதற்கு 6 முன்னால் நான் சுமந்திருந்த பாவச்சுமையிலி ருந்து என்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றார். அவரைப் பொறுத்தவரை மனிதனின் தீர்ப்பு ஒன்றுமேயில்லை; இறைவனின் தீர்ப்பு தான் எல்லாம். எனக்குத் தீர்ப்பளித்தது மனிதன் தானே என்றேன். இருந்த போதிலும் அது என் னைப் பாவத்திலிருந்து விடுவிக்கவில்லை என் றார். இதில் 'பாவம்' என்ன இருந்ததென்று எனக் குப் புரியவில்லை . நான் குற்றம் புரிந்தவன் என்று மட்டும்தான் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் குற்றவாளி, அதன் பலனை அனுபவித் தேன். அதற்கும் அப்பால் என்னிடமிருந்து எது - வும் எதிர்பார்க்கக் கூடாது. இப்படி நான் சொல் லிக் கொண்டிருக்கையில் அவர் மீண்டும் எழுந் தார். அப்போது நான் நினைத்துக் கொண்டேன், இவ்வளவு குறுகலான இந்த அறையில் அவர் சற்றே அசைய விரும்பினாலும் அவருக்கு அது சாத்தியமில்லை; ஒன்று உட்கார வேண்டும் அல் லது நிற்க வேண்டும்.''
மேலே உள்ள மேற்கோளில், தடிமன் எழுத் தில் இருக்கும் சொற்றொடர்களை மட்டும் ஒன் றன்பின் ஒன்றாக படித்துப் பார்த்தால் காம்பு சொல்லும் 'விசுவாசமனப்பான்மை' யின் வரைய றைகள் என்ன என்பது தெரியும். மற்றபடி, குற் றம், பாவம், தீர்ப்பு, தண்டனை என்பதெல்லாம் உதாரணங்கள் காட்டி மானுட நிலையைப் பற்றி விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட, இலக்கியக் குறியீடுகள். பாதிரி, மெர்சோ போன்ற வர்கள், துரோக விசுவாச மனப்பான்மையின் பிர திநிதிகள். விசுவாச மனப்பான்மை நமக்குக் காட் டும் வழி என்ன?
''அபத்தத்திலிருந்து நான் பெறுவது மூன்று விளைவுகள்: என்னுடைய கிளர்ச்சி, எனது சுதந் திரம், என்னுடைய தீவிர ஆசைகள். என்னுடைய பிரக்ஞையின் உதவியை மட்டுமே கொண்டு, 1 1 சாவிற்கு அழைப்பாக இருந்த ஒன்றை வாழ்க்கை யின் நியதியாக மாற்றி அமைத்து, தற்கொ லையை மறுக்கிறேன். இது கொடுமையானதும், அற்புதமானதுமான ஒரு சவால். இறுதியில் மனி
-
காலச்சுவடு
279
|
________________

நன் அபத்தம் என்ற மதுவை அருந்தி, அலட்சியம் என்ற ரொட்டியை உண்டு தனது உயர்வைப் பரா மரித்துக் கொள்வான்." -
1. கிளர்ச்சி : அனுபவங்களின் வாயிலாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தே தீருவோம் என் பதான மனத் திண்ணம்தான் இந்த கிளர்ச்சி. அபத் கத்தில் முரண்பாடுகளுக்குச் கண்களை மூடிக் கொள்ளாமல், அல்லது அது அப்படித்தான் இருக் தம் என்ன செய்வது என்று அவற்றிற்குத் தலை வணங்காமல், இவையெல்லாம் வாழ்க்கைக்கு நாம் அளிக்க வேண்டிய விலை என்றும், நம்மு டைய வாழ்க்கையின் மகத்துவமே இந்தப் போராட்டத்தில் தான் இருக்கிறது என்றும் சொல்லி நம்மை இயக்குவதுதான் இந்தக் கிளர்ச்சி. தன்னையும் மீறி இருக்கும் உண்மை நிலையைத் தன் கரங்களில் பற்றிக் கொண்டிருக் தம் மனிதனின் கர்வத்தையும், அறிவையும் அது பறை சாற்றுகிறது. அபத்தத்தினூடே அறிவின் உதவி கொண்டு ஆக்கபூர்வமான செயல்களை - வெற்றி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் - செய்ய வேண்டும் என்பது அவருடைய கருத்து.
2. சுதந்திரம் : அபத்தத்தைச் சந்திக்கும் பரை. மனிதன் தான் சுதந்திரமாக இருப்பது போன்ற ஒரு மாயையில் இருந்தான். ஆனால் உண்மையில் அவன், தன் வாழ்க்கைக்கு ஒரு தறிக்கோளையும் மதிப்பையும் அளிப்பதுபோல் தோன்றிய சில விருப்பு - வெறுப்புகளுக்கும், பழக்கங்களுக்கும் அடிமையாகவே இருந்தான். இப்பொழுது அவனுக்கு ஒரு புதிய பார்வை கிடைக்கிறது. பழக்கம், விருப்பு - வெறுப்பு என்ற தளைகளிலிருந்து விடுபட்டு, போலி நம்பிக்கை களுக்கு மனதைப் பறிகொடுக்காமல் தானாகவே செயல்படுவதற்கு உண்டான சுதந்திரத்தைப் பெறுகிறான்.
3. தீவிர ஆசை : கிளர்ந்தெழுந்து சுதந்திர மாகச் செயல்படும் பொழுது கிடைக்கப்பெறும் தெளிவான அனுபவங்களைத் தீவிர ஆசையுடன் சேகரிப்பதுதான் இந்த எதிர்கொள்ளலின் மூன்றா வது கட்டம், அனுபவங்களின் ஆனந்தம்தான் அபத்தத்தினூடேயும் மனிதனை மகிழ்ச்சியாக
ஆண்டுமலர் 1991

________________

வைத்திருக்கிறது. ''நிகழ்காலமும், எப்பொழுதும் தெளிவான பிரக்ஞையுடன் இருக்கும் ஒரு ஆத் மாவின் முன்னால் அணிவகுத்துச் செல்லும் அல் றாட நிகழ்வுகளும்தான் அபத்த மனிதனின் இலட் சியம்" - காம்யு. காம்யுவின் படைப்புகளில் முதல் கால கட்டத்தில் 'சிசிஃபின் புராணம்" (1942) என்ற நீண்ட தத்துவக் கட்டுரையும், ''அந்நியன்' (1942) என்ற நாவலும், ''புரிதல் கோளாறு'' "காலிகுலா" (1944) என்ற இரு நாடகங்களும் இடம் பெறும். பின்னர் 1947 இல் கொள்ளை நோய்' நாவலும், 1951 இல் "புரட்சி மனிதன்' என்ற கட்டுரையும் வெளிவந்தன. முதல் கால் கட்டத்தில் வாழ்க்கைப் பிரச்சினை பற்றி ஒரு தனி மனிதனின் பார்வையிலும், பிறகு சமூகப் பிரச் சினை குறித்து சமுதாய, தார்மீக, அரசியல் கண் ணோட்டத்துடனும் எழுதியுள்ளார். அதற்குப் பிற கும் அவர் எழுத்துக்களைப் படிக்கும்பொழுது அவரது கருத்துக்களின் பரிணாம வளர்ச்சியை நன்றாகக் காணமுடிகிறது. இருத்தலியல்வாதத்த டன் (Existentialism) அவரைச் சேர்த்துப் பேசுவது தவறு. அவருடைய சம காலத்தவரும் புகழ் பெற்ற இருத்தலியல்வாதியுமான சார்தர் (Jean : Paul artre) 'அபத்தம் என்ற தத்துவக் கோட் பாட்டை அறிமுகப்படுத்தி, விஞ்ஞான ரீதியில் அதைப் பற்றித் தெளிவாகக் கூறியிருக்கும் தத் துவ ஆசிரியர் ஆல்பெர் காம்யு' என்கிறார். இவ ருடைய எழுத்துக்களில், அபத்தம், அபத்த நாம் கன், கிளர்ச்சி, சுதந்திரம் போன்ற பதங்களுக்கு ஒரு விசேஷ அர்த்தம் இருக்கிறது.
''சிசிஃபின் புராணம்" என்ற படைப்பில் காம்யு சொன்ன கருத்துக்களின் முக்கியமான அப் சங்களை, ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ள "அந்நியன்' நாவலுடன் ஒப்பிட்டு ஓ ளவு விளக்கமாக இந்தக் கட்டுரையில் எழுதியும் "ளேன். மேலெழுந்த வாரியாகவோ, அல்லது அவருடைய ஒரு சில படைப்புகளை மட்டுமே படித்தாலோ. அவருடைய கருத்துக்களில் ஒரு சோகமூட்டம் இருப்பது போலவும், வாழ்க்கை என்பது வெற்றி காண முடியாத ஒரு போராட்டம் என்றுதான் அவர் சொல்வது போலவும் தோல் றும். ஆனால், ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்புகளில் மனித குலத்திடம் அவருக்
காலச்சுவடு -
-- --
________________

5
இருந்த ஈடுபாடு ஒரு முக்கிய அம்சம் என்பதை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள்கூட ஒப் புக் கொள்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு அவருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் எல் ம் லாம் இன்னும் கிடைக்கப் பெறாத இந்நிலையில் ) இதற்கு சான்றாக நிறைய உதாரணங்கள் கொடுக்க இயலாத நிலை இப்பொழுது. 'அந்நி யன்' - மெர்சோ - இறுதியில் சொல்வதும்
அதுதானே?
2
L.
|
--- ''.இவ்வுலகின் மென்மையான அலட்சி யத்தை மனந்திறந்து வரவேற்றேன். என்னைப் போலவே அது இருந்தது என்பதை உணரும் போது, அந்த சகோதர மனப்பான்மையில், நான் மகிழ்ச்சியாக இருந்தேன், மகிழ்ச்சியாகவே இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டேன்'', 'கொள்ளை நோய்' என்ற நாவ
லின் நாயகன் டாக்டர் ரியு சொல்கிறார்: "வீரம் து என்ற குணத்திற்கு ஒரு முக்கிய இடமளிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் மனிதன் ? மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்ப
தற்கு அடுத்தபடியாகத்தான் வீரம் இருக்க வேண் டுமே தவிர, அதற்கும் மேலான ஒரு முக்கியத்து வம் வீரத்திற்கு அளிக்கக்கூடாது. அதே நாவலில், கொள்ளை நோய் என்ற தொத்து வியாதி ப _யால் ஓரான் (Oran) நகரில் பல்லாயிரம் பேர்கள் - இறக்கிறார்கள். நோய் பரவாமல் இருக்க நகரின் எல்லா எல்லைகளும் மூடப்பட்டு யாரும் வெளியே போக முடியாத, யாரும் உள்ளேயும் வர முடியாத நிலை. பாரிஸில் இருக்கும் தன் காதலியைப் பிரிந்து இந்நகரில் மாட்டிக் கொண்ட ப் ராம்பெர் (Rambert) என்ற பத்திரிகை நிருபர் ஒரு
வன் திருட்டுத்தனமாகத் தப்பி ஓட முயல்கிறான், ர் நோயை எதிர்த்துப் போராடுபவர்களின் மைய து - மாக இருக்கும் பாத்திரமான டாக்டர் ரியு அவ ம னுக்கு உதவ மறுத்தாலும், தப்பி ஓடுவதால் ராம்பெர்க்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் மனிதாப க ரீதியில் அதைத் தான் புரிந்து கொள்ள முடியும் ம் என்றும் சொல்கிறார். சில நாட்களில் தப்பி ஓட ன் வாய்ப்பு கிடைத்தும், ராம்பெர் போவதில்லை. ப எல்லோரும் ஒரு கொடிய நோயை எதிர்த்துப் கு போராடும்போது தான் மட்டும் தன் சொந்த
280
ஆண்டுமலர் 1991

________________

மகிழ்ச்சியைக் கருதி ஓடிப் போவது சரியல்ல : என்று சொல்கிறான். "மகிழ்ச்சியாக இருக்க ஒரு வன் விழைவதில் அவமானம் ஒன்றும் இல்லை யே", என்கிறார் ரியு. ராம்பெர் சொல்கிறான்; ''தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒருவன் நினைப்பது அவமானப்பட வேண்டிய விஷயமில்லையா?''
1960 ஜனவரி 4 ஆம் தேதி, ஆல்பெர் காம்யு ஒரு கார் விபத்தில் இறந்தார். 1952 முதலே அவ ருக்கும் சார்த்ருக்கும் இடையே கருத்து வேறு பாடு காரணமாகப் பிளவு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் காம்யுவின் ''தூய, எளிய, உணர்வு பூர்வமான மனிதாபிமானத்தைப் பற்றிக் குறிப் பிட்ட சார்தர். "அந்தக் கால கட்டத்தின் முகமற்ற, பூதாகரமான நிகழ்வுகளை எதிர்த்து முடிவில்லா மல் போராடுவதில் பிடிவாதமாக இருந்தது அவ ருடைய மனித நேயம்" என்றும் சொன்னார்.
முடிவாக, அவருடைய நாட்குறிப்புகளில் ருந்து ஒரு பகுதி: ''நான் அல்ஜீரியாவில் இருந்த போது. குளிர் காலத்தில் மிகவும் பொறுமைக்காகக் காத்திருப்பேன். ஏனெனில், ஒரு இரவுப் பொழுதில், மிகவும் குளிராகவும் தூய்மையாக கவும் இருக்கும் ஒரே ஒரு பிப்ரவரி மாத இரவில், கான்ஸல் பள்ளத்தாக்கில் உள்ள பாதாம் மரங்கள் முழுவதும் தூய வெள்ளை நிறப் பூக்களால் மூடப் பட்டு இருக்கும். அதற்குப் பிறகு வரும் மழை, கடற்காற்று இவற்றையெல்லாம் மிருதுவான உலர்பனி போன்ற இம்மலர்கள் எதிர்த்துப் போராடி நிலைத்து இருப்பதைப் பார்த்து ஆச்சரி யம் அடைவேன். எப்படியிருப்பினும் ஒவ்வொரு வருடமும் காய்கள் தோன்றும் வரை, அதற்கு வேண்டிய அளவு பிடிவாதத்துடன் இருக் கத்தான் செய்தன இம்மலர்கள்.''
(சென்னை அலியான்ஸ் பிரான்சேஸ்-ல், 1990 நவம்பர் 21 ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆல் பெர் காம்யு பற்றிய கருத்தரங்கின் போது வாசிக் கப்பட்ட உரையுடன் சில குறிப்புகள் சேர்த்து எழு தப்பட்டது.)

Sunday, April 22, 2018

மலர் உதிரும் ஒலி - ராஜன் :: சுபமங்களா , நவம்பர் 1992 இதழ்

மலர் உதிரும் ஒலி - ராஜன்

சுபமங்களா , நவம்பர் 1992 இதழ்
http://www.subamangala.in/archives/199211/#p=104

கைக்குச் சிக்காத எதையோ பிடித்துவிட காற்றில் துழாவியபடி இருக்கும் விரல்களின் தவிப்பை கவிதையில் நாம் காணலாம். ஏனெனில்  கவிதையின் சாரம் எந்நிலையிலும், எவ்விதத்திலும் கூறிமுடிக்கப்பட இயலாத ஒன்றாகவே இருக்கும்.
கவிதை எழுதப்பட்ட வரிகளுள் முடிவடைய இயலாது. வாசகனை தன் சாரத்தை அடையக்கோரி திறக்கும் முதல் வாசல் மட்டுமே கவிதையின்  அந்த வரி வடிவில் இருக்கும். கூறப்படாத தளமே கவிதையை கவிதையாக்குகிறது. சொல்லி முடித்த கவிதை உள்ளங்கையில் ஒடுங்கும் ஒரு வட்டம்.  சொல்லி முடியாத கவிதை முடிவின்மை நோக்கி நீட்டப்பட்ட ஒரு கோடு.
________________
உவமைகள் என்ன, படிமங்கள் என்ன, வடிவங்கள் என்ன, பிறழ்வுகள் என்ன, தாளமென்ன, இசையென்ன - கவிஞனின் தவிப்பு கண்டு பிடித்த  முறைமைகள் ஆயிரமாயிரம். அவற்றிற்கு முடிவும் இல்லை . சகல வடிவங்கள் வழியாகவும் தன்னால் | சொல்ல முடியவில்லை என்பதையே  சொல்கிறான்
கவிஞன். இசை வழியாக மவுனத்திற்கு இட்டுச்செல்கிறான். சொற்கள் வழியாக சொல்லற்ற . நிலைக்கு கொண்டு செல்கிறான். இருத்தலின் பாரமும், இல்லாமையின் எடையின்மையும் அவனை வதைக்கின்றன. இன்பத்தின் உச்சிகளும், துன்பத்தின் உச்சிகளும் ஒன்றேயாகிவிடும்
கணங்களில் வார்த்தையற்ற அனுபூதிகளில் அவன் திளைக்கிறான். உள்ளுணர்வுகள் வரைந்த பிம்பங்களை அள்ளிப் பரப்பி தன்னை |
வெளிப்படுத்த முயல்கிறான். படிமங்களும் வார்த்தைகளும் அவனேயறியாத பித்து நிலையில் முயங்கும்போது ஒரு வாசல் திறக்கிறது. நீண்ட பாதை முடிவின்மை நோக்கி அழைக்கிறது. அனுபூதியின் வெளி நம் கண்முன் விரிகிறது.
________________
உன் பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையை
தானே
விழுங்கத் தேடி
எனக்குள் நுழைந்தது

துடித்துத் திமிறி
என் மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்
பெயர் பின் வாங்கியது
அப்பாடா என
அண்ணாந்தேன்,

சந்திர கோளத்தில் மோதி அது
எதிரொலிக்கிறது
இன்று இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்து இறங்கி
என்மீது சொரியும்
ஒரு ரத்தப் பெருக்கு.
________________
மொட்டை மாடி. தனிமையை பூதாகர் வடிவுபெறச் செய்கிற விரிந்த வானம். பனியில் சிவந்த நிலவு. கரிய ஜொலிப்புடன் சத்தமின்றி வளைந்து  வழிந்தோடி வருகிறது உன் பெயர். காரணம் அதன் தலை எனக்குள் இருக்கிறது. விழுங்கும் தவிப்பு அதற்கு. தன் வடிவ முழுமையை அடையும்  உத்வேகம் அதற்கு. படமெடுத்து நிற்கிறது. சிவந்த கண்களை உருட்டிப் பார்க்கிறது. பின்பு என் மீது கவிகிறது. எனக்குள் நுழைகிறது. துடித்து, வால்சுழற்றி, திமிறி எனக்குள் இறங்குகிறது - அதன் விஷமுத்தங்கள். உதறி உதறி என் இதயம் விம்மியழுகிறது. வலியில் துடிதுடிக்கிறது. நுழைய  முடியாது சோர்ந்து தளர்கிறது உன் பெயர். படம் சுருக்கி தணிகிறது. இருளுக்குள் மவுனமாக பின் வாங்குகிறது. பேரமைதி. வலியற்ற நிமிடங்களின்  சுதந்திர எழுச்சி. சுதிமீட்டி விழுங்கும் கண நேர நிம்மதி. ஆனால் உன் பெயர் பூமியிலிருந்து வானோக்கி பொங்கி எழுகிறது. கடல் கொதித்து | மேலெழும் நீராவிபோல. சந்திர கோளத்தின் செம்மையில் அது மோதுகிறது. திசைகள் முழுக்க எதிரொலிக்கிறது. நிலவிலிருந்து இறங்கி பூமிமீது பொழிகிறது. ரத்த மழை போல அனைத்தையும் மூடிக் கொள்கிறது. இடையறாத உன்பெயர் | எங்கும்...
________________
உத்வேகமிக்க கணம் ஒன்று கவிதையாக மாறும் | அற்புதம். அந்த மாற்றியமைக்கும் தருணத்தை எட்ட நாம் மனதால் தாவுகிறோம். படிமங்களும் வார்த்தைகளும் அனுபூதியாகி நம்மை இட்டுச் | செல்கின்றன. பின்பு நின்று விடுகின்றன. பூரணத்தின் மிக அருகே, மிக மிக அருகே,  வார்த்தையேற்ற மவுனத்தில், நின்று கொண்டிருக்கிறோம். படைப்பின் | மகத்தான அந்தக் கணம் தொடும் தூரத்தில், தொட முடியாதபடி, நின்று
ஜ்வலிக்கிறது. கவிதையின் அனுபவம் இதுவே. இது மட்டுமே. ஒரு சொல் அதிகமில்லை இங்கு. ஒரு படிமம் கூட அதிர்ந்து - மேலெழவில்லை.

வார்த்தை வார்த்தையல்லாமலாகிறது. ஒரு இடத்தில் அதன் அர்த்தம் கழன்று விழுகிறது. ஒலி மட்டும் எஞ்சுகிறது. பின்பு ஒலியும் மறைந்து அனுபூதி மட்டும் மீதியாகிறது. 'இடையறாத உன்பெயர்' | உச்சரிப்பில் விரியும் புத்தம்புது வார்த்தைப் | பிரயோகம், சகல அர்த்தங்களையும் மீறியது. 'ஆடி பாயும் புத்தம்புது வார்த்தைப் வரும் தேன்' போல. 'கனல் மணக்கும் பூ' போல. இந்தக் கவிதையில் பாம்பு எனும் படிமம் மிக நளினமாக உள்ளுறைந்துள்ளது. பாம்பு எனும் ஒற்றை வார்த்தை, அல்லது மொட்டை மாடி பற்றிய தகவல், அல்லது பனியும் நிலவும் உருவாக்கும் செம்மை பற்றிய ஒரு குறிப்பு இக்கவிதையை எந்த அளவு கீழிறங்கும் என்பது யோசித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் எதுவுமே கூறப்படவில்லை. எல்லாம் ஒன்றான ஒரு வடிவம் மிக இயல்பாக இல்லாமையில் இருந்து இருத்தலுக்கு வருகிறது. ஆம்; விளக்குதல் அல்ல, அறைகூவல் அல்ல, உரைத்தலோ சித்தரித்தலோ அல்ல கவிதை. அது ஒரு கீற்று. வானத்தில் மின்னல் இழுக்கும் கோடு போல ஒரு கணநேரப்பிரம்மாண்டம். புல்நுனியின் பனித் துளியில் அதன் பிரதிபலிப்பு போல அவ்வளவு சிறிதுதான் வார்த்தைகளில் கவிதையின் அம்சம்.
________________
'கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி '
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே ...'

ஊர் உறங்கி விட்டது. இருள் எங்கும் கவிந்து விட்டது. நாங்கள் தூங்கவில்லை. நானும் என் தோழியும். குடிசைக்குள் கண்களைத் திறந்து இருட்டைப்பார்த்தபடி படுத்துக்கிடந்தோம். உனது காலடியோசைக்காக செவிகூர்ந்திருந்தோம். எங்கள் வீட்டருகே ஏழில் மலை மீது நிற்கிறது நொச்சிமரம், மயில்பாதம் போன்ற இலைகளும் கரிய பூங்குலைகளும் கொண்ட பூமரம். அதன் பூத்துக்கனத்த கிளைகள் இரவின் தென்றலில் அசைந்து பூக்களை
உதிர்த்துக் கொண்டே இருந்தன.
மலர் உதிரும் ஒலியை கேட்டபடி இரவு முழுக்க விழித்திருந்தோம். நீ வரவில்லை நேற்று. சங்ககாலக் காதலி காதலனிடம் சொல்கிறாள். எளிய வருணனையில் அவளது மன எழுச்சியின் எல்லையின்மை துடிக்கிறது. பூ உதிரும் ஒலி | கேட்டாளா? அந்த அளவு உன்னிப்பாக கேட்டிருந்தேன் என்கிறாளா? அது எண்ணங்கள் சத்தமின்றி உதிர்ந்தபடியே இருந்த ஒலிதானா? இல்லை நிமிடங்களும் வினாடிகளும் மவுனமாக உதிர்ந்தவண்ணம் இருந்த அனுபவம் தானா? பூ உதிர்ந்து வெறுமையாகும் மரம் போல நம்பிக்கைகளை உதிரவிட்டு வெறுமை கொண்ட மனசைப்பற்றிக் கூறுகிறாளா? அவன் வரும் பாதையில் மலர் தூவிக் காத்திருக்கும் நொச்சிமரம் நான் என்கிறாளா? மூன்று வரிகளில் அவள் இருப்பின் சகல அர்த்தங்களும் உறைந்திருக்கின்றன,
________________
அவள் அன்பும், நம்பிக்கையும், தவிப்பும், தனிமையும், காலமும் அதில் கலந்திருக்கின்றது. கவிதை அதன் அற்புதமான தருணத்தின் உச்சியில் முடிவின்மையை தொட்டு மீள்கிறது. குறுந்தொகைக் கவிஞன் கொல்லன் அழிசிக்கும் தருமு ஜீவராம் பிரமிளுக்கும் இடையே இரண்டாயிரம் வருடங்கள், எத்தனையோ தலைமுறைகள். எப்படியோ மாறிவிட்ட மொழி. ஆயினும் பிரமிள் கவிதையை குறுந்தொகைக்குள் சுவைப்பிசகின்றி கலந்துவிட முடியும். நவகவிதையின் சகல தருக்கங்களையும் மீறாது கொல்லன் அழிசியை நவீன கவிஞன் என்று ஏற்கவும் இயலும். காலம் மாறும். கவிதை மாறுவதில்லை .
- ஒரு புல்லசைவில் பிரபஞ்ச சலனத்தை' காட்டுவதாகவே அது என்றும் இருக்கும். அதன் அனுபூதி தளம் எப்போதும் கூறப்படாத
வார்த்தைகளிலேயே இருக்கும். அத்தனைக்கும் அப்பால் கவிதையின் மையம் தன் பூரண வெளிப்பாடு நிகழாமல் தவித்தபடியே தான் இருக்கும். எக்காலமும் அது அப்படியேதான் நின்றிருக்கும் அதுவரை கவிதைக்கு முடிவில்லை. கவிஞர்களுக்கு ஓய்வுமில்லை.
________________
உன் பெயர், பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து எனும் தொகுப்பில் உள்ளது. 'எழுத்து' காலகட்டத்தைச் சார்ந்த கவிஞர்களில் பிரதானமானவர் பிரமிள். கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம் ஆகியவை பிற கவிதை நூல்கள். லயம் பிரசுரம். 
(கொல்லன் அழிசியின் பாடல் குறுந்தொகையில்  38-வது பாடலாகும்.)

Wednesday, April 18, 2018

அன்புப்பிடியில் இருவர்.- வில்லா காத்தர் :: முதல் அத்தியாயம் :: முதல்பாகம்

ஜோதி நிலையம் வெளியீடு


அன்புப்பிடியில் இருவர்.- வில்லா கேதர் :: 
மொ.பெ : சி.ஸ்ரீநிவாசன்


முதல் பாகம்

விகார் விரைகிறார் !

சிலுவையுருவ மரம்

1351-ம் வருடம், இலையுதிர்காலத்தில் ஒரு நாள், பிற்பகல் நேரம், மத்திய நியூமெக்ஸிகோவில் ஒரு பாலை வெளி வழியே குதிரையேறிச் சென்று கொண்டிருக்கிறார் ஒருவர் ; பின்தொடரும் பாரக் கழுதை தவிர அவருக்கு வேறு துணையில்லை. வழி தவறிவிட்டது; எனவே பாட்டையைத் திரும்பக் கண்டுபிடிப்பதில் அப்போது அவர் ஈடுபட்டிருந்தார். அதில், திசை காட்டும் கருவியும், திக்குகள் பற்றிய அவருடைய உள்ளுணர்வும் தான் உதவி செய்தன. மற்றப்படி, அடையாளம் கண்டு கொள்ளத்தக்கதாக அப்பகுதியில் இயற்கையம்சம் ஏதும் கிடையாது. எந்தப் பக்கம் திரும்பினாலும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே மாதிரியான செம் மணற் குன்றுகள் எங்கணும் நிறைந்து அலுப்பூட்டின. தன் திருஷ்டிப்பரப்புக்குள் இப்படி ஒரே சீரான மணல் திட்டுகள் இத்தனை இருக்கக்கூடுமென எவரும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது - அதிகாலையிலிருந்தே அவற்றிடை அலைந்து கொண்டிருந் தார் அவர்; எனினும், இருந்த இடத்தைவிட்டு இம்மியும் நகரவில்லை என்றே நினைக்கும்படியாக இயற்கைக் காட்சி மாறாமலே இருந்தது. கூம்பு வடிவமுடைய இந்தச் சிவந்த குன்றுகளினிடையிலிருந்த குறுகிய சந்துகள் வழியே அதுவரையில் குறைந்த பட்சம் முப்பது மைல்களாவது அவர் சுற்றித் திரிந்திருப்பார்; எனவே, இனி வேறெதையும் காணவே மாட்டோம் என்றே எண்ண ஆரம்பித்துவிட்டார் அவர். அந்தக் குன்றுகள் அனைத்தும் ஒரே அச்சாக இருந்தமையால், தாம் ஏதோ க்ஷேத்திர கணிதச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டதாகவே அவருக்குப் பிரமை ஏற்பட்டு விட்டது ! உச்சியில்

________________

20

தட்டையாயிருந்த அந்தக் கும்பங்கள், வைக்கோற் போர்களை விட மெக்ஸிக மோஸ்தர் அடுப்புக்களை ஒத்திருந்தன என்று கூறுவதே பொருந்தும் - ஆம். அசல் மெக்ஸிக அடுப்புகளே தான் அவை ! செங்கற் பொடி தூவியது போன்றிருந்த அவற்றில் சிறிய ஜூனிபர் மரங்களைத் தவிர வேறெவ்விதத் தாவர வர்க்கமும் காணப்படவில்லை. அந்த மரங்களும் கூட மெக் மிக அடுப்புகளைப் போலவே இருந்தன ! கூம்பு வடிவிலான ஒவ்வொரு குன்றிலும் சிறிய கூம்புருவான அம் மரங்கள் முளைத்திருந்தன; குன்றுகளெல்லாம் ஒரே மாதிரியாகச் சிவப்பு நிறமுடையனவாயிருந்தது போலவே, அந்த மரங்களிலும் ஒரே சீராக மஞ்சள் பூத்த பச்சை வர்ணம். ஒன்றையொன்று முட்டித் தள்ளுவது போலத் தோன்றுமளவு அடர்த்தியாக அக்குன்றுகளனைத்தும் பூமியிலிருந்து பீறியெ ழுந்திருந்தன.

இம்மாதிரிப் பல நூற்றுக்கணக்கான தடவைகள் அந்த முனை மழுங்கிய குன்றுகளே அவ்வழிப்போக்கரின் கண்களைத் திரும்பத் திரும்பத் தாக்கியதுடன், வெய்யிலின் உக்கிரமும் சேரவே அவர் குழம்பித் தத்தளித்தார். 'என்னே விசித்திரம்! என்று முனகியவாறே, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்த அந்த முக்கோண வடிவங்களினின்றும் கணமேனும் விடுதலை பெறும் பொருட்டுக் கண்களை மூடிக்கொண்டார். திரும்ப விழித்துக் கொண்டபோது, மற்றவைகளிலிருந்து தோற்றத்தில் வேறுபட்ட ஒரு ஜூனிபர் மரத்தின் மீது அவர் பார்வை தேங்கியது- அடர்த்தியாக வளர்த்த கூம்பாக இல்லை அம் மரம். இலைகளற்றிருந்த அதன் நடுப்பாகம் முறுக்கிக் கொண்டிருந்தது. சுமார் பத்தடி உயரமேயிருந்த அதன் உச்சியில் இரு கிளைகள் பிரிந்து, பக்கவாட்டில் படந்திருந்தன. அவை பிரியுமிடத்துக்குச் சற்று மேலே சிறியதொரு இலைத் திட்டும் மையத்தில் காட்சியளித்து-உயிருள்ள தாவர மெதுவும் இதைவிடச் சிறப்பாக சிலுவையின் வடிவத்தை உருவாக்கியிருக்க முடியாது.

அதைக் கண்டதும், குதிரையிலிருந்து குதித்தார் அந்தப் பிரயாணி. மிகவும் நைந்துபோன புத்தகமொன்றைத் தம் சட்டைப் பையிலிருந்து உருவியெடுத்தார். பின்னர், தொப்பியை அகற்றிவிட்டு அந்தச் சிலுவையுருவ மரத்தினடி

________________

யில் மண்டியிட்டு அமர்ந்து விட்டார். - முயல் தோலாலான சவாரிக் கோட்டிற்கு அடியில் கருப்பு நிற நெட்டங்கி, பாதிரிக்குரிய கழுத்துக் குட்டை, பட்டை முதலியவற்றை அவர் தரித்திருந்தார். எனவே, பிரார்த்தனையிலீடுபட்ட அந்த இளைஞர் ஒரு பாதிரியே என்பதில் ஐயமில்லை. அது மட்டுமா , ஆயிரத்திலொரு பாதிரி என்று எவரும், பார்த்த மாத்திரத்தில்லேயே கூறிவிடுவர் என்பதும் திண்ணம்! குனிந்திருந்த அவரது தலை, சாதாரண மனிதனொருவனுடையதல்ல; அரியதொரு மூளை உறைவதற்கு உருவாகியதே அது. விரிந்து பரந்த நெற்றி, அவரது உதார குணத்தையும், சிந்தனா சக்தியையும் சுட்டியது. பொதுவாக அவரது அங்க அமைப்பில் சற்றுக் கடுமை தெரிந்ததாயினும், பார்க்க லக்ஷணமாக இருந்தார். முயல் தோல் சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகளில், தனியொரு எழில் திகழ்ந்தது. அவரை யொட்டிய ஒவ்வொரு அம்சமுமே, அவர் நற்குடியில் பிறந்தவர் என்பதை எடுத்துக் காட்டின ; தைரியம் மிக்கவர். இளகிய இதயமுடையவர். மரியாதை அறிந்தவர் என்பதைப் பறைசாற்றின. அந்தப் பாலை நிலத்தில் தனித்திருந்த அவ்வேளையிலும் கூட, அவருடைய நடத்தையில் பண்பு துலங்கியது. தம்மிடத்திலேயும், தம் குதிரை, கழுதையினிடத்தும் தாம் முழந்தாளிட்டுள்ள அந்த மரத்தின் பாலும், ஆண்டவர்னிடமும் ஒரு விசேஷ மரியாதையை வெளிக்காட்டினார் அவர்.

பிரார்த்தனை சுமார் அரைமணி நேரம் நடந்தது. அதை முடித்துக் கொண்டு அவர் எழுந்திருந்தபோது, மறுபடியும் அவரிடம் தென்பு தென்பட்டது. உடனே தன் குதிரையுடன் தமக்குத் தெரிந்த அரைகுறை ஸ்பானிஷ் மொழியில் பேசத் தொடங்கி விட்டார் - களைப்புற்றிருந்த போதிலும் நேர்ப் பாதையைக் கண்டு பிடிக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து செல்வது தான் நல்லது என்ற தம் கருத்தை அது ஒப்புக்கொள்கிறதா என்று வினவினார் அவர். அவரிடமிருந்த குடிதண்ணீர் தீர்த்துவிட்டது. முதல் நாள் காலையிலிருந்து குதிரையும், கழுதையும் தண்ணீர் குடிக்க வில்லை. எனவே மரணாவஸ்தையுடனேயே மேற்கொண்டு அடி எடுத்து வைக்கக் கூடிய நிலைக்கு அவை வந்துவிட்டன. ஆகையால் கொஞ்ச

i

________________

22

நஞ்சமிருக்கும் பலத்தையும் நீரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் செலவழிப்பது தான் உத்தமம் என்று அவருக்குத் தோன் றியது.

ஒருமுறை டெக்ஸாஸ் பிரதேசத்தில் நெடுந்தொலைவு பிரயாணம் செய்ய நேர்ந்தபோது, அவர் அடங்காத் தாகத்தை அனுபவித்ததுண்டு. தொடர்ந்து பல தினங்களை அற்ப ஜல வசதியுடனேயே சமாளிக்கும் நிர்ப்பந்தம் அப்போது பன்முறை ஏற்பட்டது. ஆனால் அவருடைய அப்போதைய அவதி, இப்போதைய கஷ்டத்துக்கு உறைபோடக் காணாது! மேலும், அன்று காலையிலிருந்து அவரது உடல் நிலையும் சரியாயில்லை, வாயெல்லாம் காய்ச்சல் கசப்பு; கடுமையான தலை சுற்றல் வேறு. இந்நிலையில், கூம்புருவான இக்குன்றுகள் இருபுறமும் மென்மேலும் தம்மை நெருங்கி வருவதைக் கண்டபோது, தாம் பிறந்து வளர்ந்த ஆவர்ண் மலைகளிடை தொடங்கிய தமது நீண்ட வாழ்க்கைப் பிரயாயாணம் ஒருகால் இங்கேயே முற்றுப் பெற்று விடுமோ என்று நினைக்கலானார் அவர். அப்போது சிலுவையிலறையப்பட்ட ரக்ஷகரின் திருவாயிலிருந்து 'தாகத்தால் தவிக்கிறேன்' என்ற கூக்குரல் வெளிப்பட்டது அவர் நினைவுக்கு வந்தது. நம் பிரபு எத்தனையோ கஷ்டங்கள் பட்டபோதிலும் தாகத்தால் தவிக்கிறேன்' என்ற அந்த ஒரே சொற்றொடர் தவிர அவை குறித்து அவர் வேறெதுவும் சொன்னதேயில்லையல்லவா ?- வெகு நாளையப் பழக்கத்தால் தம்மை அறவே மறந்து, கர்த்தரின் துன்பத்தைப் பற்றியே அவ்விளம் பாதிரி சிந்திக்கத் துவங்கினார். இயேசுவின் உபாதை மட்டுமே அவர் கருத்தை நிறைத்தது. சொந்த தேகத்தின் தேவைகூட அச்சிந்தையில் ஒடுங்கிவிட்டது !

குதிரையின் தடுமாற்றம் அவரது சிந்தனைத் தொடரை அறுத்தது. தம்மைவிட அந்த வாயில்லா ஜீவன்களிடம் தான் அவருக்கு பச்சாத்தாபம் பெருகியது. அம்மிருகங்களைக் காட்டிலும் அறிவு மிக்கவராகக் கருதப்படும் அவர் தானே, முடிவேயில்லாத இந்த அடுப்புத் தொடர்ப் பாலைவனத்தில் அவற்றைச் சீக்க வைத்துவிட்ட்ார். மறதி வீசப்பட்டு, நம் பிரச்னையைப்பற்றியே சிந்தித்துக் குழம்பி, வழி தவறி விட்டோமே என்று வருந்தினார் அவர். தம் அத்தியட்ச குரு மண்டலத்தை

என்று வருந்தினர் இதுக் குழம்பி, வபபட்டு, நம் பிரச்னை

________________

23

எப்படி மீட்பது என்பதுதான் அவரை ஆட்டி வைத்த பிரச்னை. பிரதிகுருவாக அவர் நியமிக்கப்பட்டு விட்ட போதிலும் அந்த குருபீடம் இன்னும் அவருக்குக் கிட்டிய பாடில்லை. எப்படியோ அப்பதவிக்கு அவர் நெட்டித் தள்ளப் பட்டு விட்டார்; ஆனால் அவருடைய மத ஆளுகைக்குட்பட வேண்டிய மக்களோ அவரை வேண்டவேயில்லை !

ஆம், அப்பிரயாணி தான் நியூமெக்ஸிகோவின் பிரதி குருவும், அகாதோனிகாவின் அத்தியட்ச குருவுமான ஜீன் மேரி லாடூர்! இப்பதவிகளுக்கான பட்டாபிஷேகம் ஓராண்டுக்கு முன்பே எசன்ஸினாட்டியில் நடைபெற்று விட்டது. தம் மண்டலத்தை அடைய அப்போதிலிருந்தே அவர் முயன்றாரெனினும் இப்போது தான் பயணம் கைகூடிற்று. நியூமெக்ஸிகோவை எய்த எவ்வழி செல்வது, எவ்வாறு செல்வது என்பதைப் பற்றி மின்மினாடியில் அவருக்குச் சொல்வார் யாருமில்லை; அங்கு யாராவது சென்றிருந்தாலல்லவோ தெரியும்? அவ்விளம் பாதிரி அமெரிக்காவுக்கு வந்த பிறகே நியூயார்க்கிலிருந்து ஸின்ஸினாடி வரை இருப்புப் பாதை போடப்பட்டது; அவ்விடத்துடனேயே அது நின்றுவிட்டது. எனவே இருண்ட கண்டமொன்றின் இடையிலேயே இன்னமும் கிடந்தது நியூ மெக்ஸிகோ. அங்கே செல்ல இரண்டேயிரண்டு வழிகளைத் தான் ஓஹியோ வியாபாரிகள் அறிந்தனர். ஸெயிண்ட் லூயியிலிருந்து புறப்படும் ஸாண்டாஃபே பாதை அவற்றிலொன்று; ஆனால் அது அவ்வமயம் இந்தியர் தாக்குதல்களுக்கிலக்காகி அபாயகரமாகி விட்டிருந்தது. ஆகவே அவரது நண்பர்கள், மிஸிஸிபி நதி வழியே முதலில் நியூ ஆர்லீன்ஸுக்குச் சென்று, அங்கிருந்து படகு மூலமாக கால்வெஸ்டனுக்குப் போகச் சொன்னார்கள். பின்னர், டெக்ஸாஸைக் குறுக்காகக் கடந்து, ஸான் அன்டோனியோவை அடைந்து, அப்பால் கிராண்ட் நதிப் பள்ளத்தாக்கு வழியாக நியூ மெக் ஸிகோவுக்குப் போய்ச் சேரலாமென்றார்கள் - அவரும் அப்படியே செய்தார். ஆயினும், அவ்வழியிலும் தான் எவ்வளவு இடர்கள் !

விபத்துக்காளாகி கால்வெஸ்டன் துறைமுகத்தில் மூழ்கி விட்டது. அவர் சென்ற நீராவிக் கப்பல். அதில் புத்தகங் கள் தவிர தமது இதர உடைமைகள் அனைத்தையும் இழந்து

11:11

-

________________

*24

விட்டார் அவர். அப்புத்தகங்களையும் கூடத் தன் உயிரைப் பணயம் வைத்துத்தான் அவரால் காப்பாற்ற முடிந்தது. பின்பு, வியாபாரிகள் கோஷ்டியொன்றுடன், சேர்ந்து டெக்ஸாவைத் தாண்டினார். ஆனால் ஸான் அன்டோனியாவை நெருங்குகையிலோ, அவர் ஏறியிருந்த வண்டி குப்புறக் கவிழ்ந்த போது கீழே குதித்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. அது நேராகி நடக்கச்சக்தி பெறுமளவு, சம்ஸாரி யான ஏழை ஐரிஷ்கார ரொருவரின் இல்லத்தில் மூன்று மாத காலம் நெருக்கியடித்துக் கொண்டு படுத்திருக்க நேர்ந்தது.

எனவே மிஸிஸிபி நதியில் பிரயாணம் செய்யத் துவங்கியதிலிருந்து ஏறக்குறைய ஓராண்டு கழிந்த பின்பே தம் இலக்கை அவ்விளம் பாதிரி எட்டிப் பிடிக்க முடிந்ததுஅப்போது கோடை காலம். சூரியன் மலைவாயில் விழும் தறுவாயில், அதைக் கண்ணுற்றார். மெழுகு மரங்கள் மிகுந்த சமவெளி வழியேதான் பூராவும் ஊர்ந்து கொண்டிருந்தது; அவர் பயணம் செய்த வண்டித் தொடர், அந்தி மாலையில் அவரது சகபிரயாணிகள் 'அதோ ஊர் தெரிகிறது!' என்று கூவினர். அந்தத் திசையில் பார்த்தபோது, மணல்மேடுகளைப் போல் தோற்றமளித்த குட்டையான பழுப்புநிறத் திட்டுகளைத்தான் பூஜ்யர் லாடூர் காணமுடிந்தது. அமைதியான கடலில் பெரும் புயலால் எழுப்பப்பட்ட பேரலைகளை நிகர்த்த மலைத்தொடரின் அடிவாரத்தில் அந்தப் பழுப்புக் குவியல் இருக்கக் கண்டார். மடிப்பு மடிப்பான அம்மலைகளின் உச்சியில் எவ்விதத் தாவரத்தையும் காணோம். மற்றப் பகுதிகளிலோ வெளிர்ப்பச்சையும் கரும்பச்சையும் திட்டுத் திட்டாக ஒளியும் நிழலுமாடின.

வண்டிகள் மேலே தொடர்ந்து சென்றன. சூரியனும் அடிவானத்தை நோக்கி விரைந்தான். அத்தருணத்தில் செக்கச் செவேலென்று சுடர்விட்ட குன்றுக் கும்பலொன்று மலையடிவாரத்தில் தெரிந்தது. சமவெளியிலிருந்த ஒரு தாழ்ந்த பிரதேசத்தைச் சுற்றி இரு கைகளைப்போல் அணைத்திருந்தன அக்குன்றுகள். அந்தத் தாழ்வெளியில் தான் ஸான் டாஃபே உள்ளது. அப்பாடா, ஒரு வழியாக அதை எட்டிப் பிடித்துவிட்டார் லாடூர்!

முற்றிலும் பச்சை வெட்டுக் கற்களாலான வீடுகளே

________________

25

கொண்ட நகரம் அது. அகலம் அதிகமின்றி, நீண்டு நெளிந்து கிடந்தது. பசும்புல் சதுக்கமொன்றும் இருந்தது. ஒரு கோடியில் மாதா கோயில் காட்சியளித்தது; அதன் இரு மண் கோபுரங்களும், தட்டையான அந்நகரக் கூரைகளுக்கிடையே உயர்ந்தோங்கி நின்றன. நகரின் முக்கியத் தெரு அந்த மாதா கோயிலிலிருந்து துவங்கியது - ஊற்றுக்கண்ணிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஓடையைப் போல அந்நகரம் அந்த ஆலயத்திலிருந்தே தொடங்கிப் பெருகியிருந்தது - கோயில் கோபுரங்களும், தாழ்ந்த வீடுகளும் அந்த அஸ்தமன ஒளியில் ரோஜா வண்ணமாகத் திகழ்ந்தான். அவ்வப் போது காற்றில் தழைந்தாடிய பெருமரங்கள், அவ்வினிய காட்சிக்குச் சுவை கூட்டின.

உள்ளத்தையள்ளிய அந்நேரத்தில் அவ்விளம் பிஷப் தனியாக இருக்கவில்லை. பால்ய நண்பரும், இந்த நீண்ட யாத்திரையில் பங்கெடுத்து, ஆபத்துக்களைப் பகிர்ந்து கொண்டவருமான பூஜ்யர் ஜோஸப் வெய்லாண்டும் உடனிருந்தார் : ஆண் டவன் கீர்த்தியை நிலை நாட்ட ஒன்றாகவே ஸான்டாஃபே நகரினுள் நுழைந்தனர். அவ்விருவரும் .....

அந்த பூஜ்யர் லாடூர் இப்போது இந்த மணல் குன்றுகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டது எப்படி? தமது தலைமையகத்திலிருந்து வெகு தூரத்துக்கப்பால் தன்னந்தனியாய்த் திண்டாடுவதேன் ? வழிதவறிப்போய் திரும்பவும் பாதையை அடையத் தெரியாமல் முழிப்பானேன்?

அவர் ஸான்டாஃபேயை அடைந்ததும், நடந்தது இது தான் : அங்கிருந்த மெக்ஸிகப்பாதிரிகள் அவரது அதிகாரத்தை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். பிரதி குரு அல்லது அக தோனிகாவின் பிஷப் என்று எவரும் இருப்பதாகத் தங்களுக்குத் தெரியவே தெரியாதென அவர்கள் கூறிவிட்டனர். டூராங்கோ பிஷப்பின் ஆளுகைக்கே தாங்கள் உட்பட்டவர்கள் என்றும், அதற்கு மாறான ஆக்ஞை எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் சாதித்தனர். பூஜ்யர் லாடூர் உண்மையிலேயே அவர்களுடைய பிஷப்பாக இருப்பாரேயா னால் அவருடைய அதிகாரப் பத்திரங்கள் எங்கே என்றும் கேட்டனர். அப்படிப்பட்ட ஒரு தோற்பத்திரமும், கடிதங் களும் டூராங்கோ பிஷப்புக்கு அனுப்பப் பட்டது லாடூருக்குத்

530 - 2

________________

26

தெரியும். ஆனால் இப்போதோ அவை அந்த பிஷப்பினிடமே முடங்கிவிட்டன என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த பிராந்தியத்தில் இன்னும் தபால் போக்குவரத்து வசதி ஏற் படவில்லை; டூராங்கோ பிஷப்புடன் தொடர்பு கொள்ள வேண்டு மென்றால் அதற்குத் துரிதமான நிச்சயமான ஒரேவழி, அவரிடம் நேரிடச் செல்வதுதான்!- ஆகவேதான், சுமார் ஓராண்டு காலம் பிரயாணம் செய்து ஸான்டாஃபேயை அடைந்த பூஜ்யர் லாடூர், மீண்டும் சில வாரங்களுக்குள்ளாகவே பழைய மெக்ஸிகோவுக்குப் பயணம் புறப்பட வேண்டியதாகிவிட்டது. போகவர மூவாயிரம் மைல் பிடிக் கும் அப்பிரயாணத்தைத்தான், குதிரை, கழுதை தவிர வேறு துணையின்றி அப்போது மேற்கொண்டிருந்தார்,

கிராண்ட் பள்ளத்தாக்கின் பிரதான சாலையிலிருந்து பல பாதைகள் பிரிந்து போகின்றனவாதலால், அவ்வழியில் புதிதாகச் செல்பவருக்கு எளிதில் திசை தவறிவிடுமென முன்னதாகவே அவர் எச்சரிக்கப்பட்டிருந்தார். எனவே முதல் சில நாட்களுக்கு அவர் ஜாக்கிரதையாக, வழியைப் பார்த்துப் பார்த்தே சென்றார். ஆனால் அதற்குப் பிறகு அலட்சியம் ஆட் கொள்ளவே, அவ்வட்டாரப் பாட்டைகள் ஏதோவொன்றில் அவர் திரும்பிவிட்டார். தாம் வழிதவறி வந்துவிட்டோம் என்பதை அவர் உணர்வதற்குள் அவருடைய தண்ணீர்ப்பை காலியாகிவிட்டது; குதிரை, கழுதையும், வந்தவழியே திரும்ப முடியாத அளவு களைப்படைந்துவிட்டன. ஆயினும் அந்தப் பொதி மணல் பாதையில் போகப் போகச் சுவடுகள் மறைந்து கொண்டே வந்தன; அது எங்காவது ஓரிடத்துக்குக் கொண்டு போய் விட்டேயாக வேண்டுமென்று நினைத்து, விடாமுயற்சியுடன் அப்பாதையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருந் தார் பாதிரியார். -

திடீரெனத் தம் குதிரையின் தேகத்தில் ஏதோ மாறுதல் ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். நீண்ட நேரத்துக்குப் பின்னர் அப்போது தான் தலையை நிமிர்த்திய அக்குதிரை, தனது பலத்தையெல்லாம் கால்களிலே பாய்ச்சியதாகத் தோன்றியது. சுமை கழுதையும் அவ்வாறே செய்தது. இரண்டும் நடையை துரிதப்படுத்தின. தண்ணீரைத்தான் அவை மோப் பம் பிடித்து விட்டனவோ ?

எல்லாம் காயை நிமிர்த்னட நேரத்துக்

________________

27

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழிந்தபின், இதுவரை தாம் கடந்து வந்திருக்கும் நூற்றுக் கணக்கானவற்றைப் போலவேயிருந்த இரு குன்றுகளுக்கிடையே நுழைந்து வளைந்து செல்கையில் இருமிருகங்களும் மகிழ்ச்சியுடன் கனைத்தன, கீழே, அலைபாய்ந்த அந்த மணற் கடலின் மத்தியில் பசும்புல் தரையும், நீரோடை யொன்றும் தென்பட்டன. பாலையிலிருந்த அந்தப் புல்திட்டின் அகலம், கல்லெறி தூரம் தான் இருக்கும் போலிருந்தது. எனினும் இதுவரை கண்டிருந்த யாவற்றையும் விடப் பசுமையாக இருந்தது அது. ஐரோப்பாவிலேயே பசுமை மிக்கதான தம்முடைய சொந்த ஊரில் கூட இவ்விதச் செழிப்பைக் கண்டதில்லை அவர்! குதிரையின் கழுத்தும், தோள்களும் சிலிர்த்திராதிருந்தால் இது வெறும் உருவெளித்தோற்றமே, தாகத்தால் ஏற்பட்ட பொய்க் காட்சியே என்று தான் அவர் முடிவு கட்டியிருப் பார்.

ஓடும் நீர், தட்டைப் புல் நிலங்கள், பருத்திக் காடுகள் வேல மரங்கள், அழகிய தோட்டங்களைக் கொண்ட சிறிய மண்வீடுகள், வெள்ளாட்டு மந்தை யொன்றை ஓடையை நோக்கி ஓட்டிப்போகும் ஒரு சிறுவன்- இவை யாவும் அந்த இளம் பிஷப்பின் கண்களில் பட்டன.

சில விநாடிகளுக்குப் பிறகு, மிதமிஞ்சித் தண்ணீர் குடித்துவிடாதபடித் தமது குதிரைகளைக் கட்டுப்படுத்த அவர் முயன்று கொண்டிருக்கையில், கருப்புக் கம்பளியால் முக்கா டிட்டிருந்த ஒரு சிறு பெண் அவரை நோக்கி ஓடி வந்தாள். அவளுடைய கனிவான முகத்தைப்போல் தாம் ஒருபோதும் கண்டதில்லை யென்றே எண்ணினார் அவர். கிறிஸ்தவ பாணி யில் முகமன் கூறிய அவள், 'ஐயா, மேரியாப்யூரிஸிமா தங்களை வணங்குகிறாள். தாங்கள் எங்கிருந்து. வருகிறீர்கள் ?' என்று வினவினாள்.

'அருள் பெற்ற குழந்தாய்! வழி தவறிவிட்ட பாதிரி நான். தாகத்தால் தவிக்கிறேன்' என்று ஸ்பானிஷ் மொழி யில் அவர் பதிலளித்தார்.

''பாதிரியார்?'' என்று ஆச்சரியம் மேலிடக் கூவினாள் அவள். "நான் காண்பது கனவா, என்ன ? இல்லை, இதோ உங்களைப் பார்க்கிறேன் ! ஆகவே, நனவுதான் இது ! சுவாமி

________________

28

இது போன்ற பாக்கியம் எங்களுக்கு இதுவரை கிடைத்ததில்லை. என் தந்தையின் பிரார்த்தனைகளின் பலனேதான் இது ... ரெட்ரோ , ஓடு. தந்தையாரிடமும், ஸால்வடோரிடமும் போய்ச் சொல்லு!''

பாலையிலே சோலை

ஒரு மணி நேரத்திற்குப் பின்பு, மணற் குன்றுகள் மீது இருள் கவியத் தொடங்கியபோது அந்த மெக்ஸிகோ கிராமத்தின் பிரதான வீட்டில் உணவுண்ண அமர்ந்திருந்தார் அவ்விளம் பிஷப், 'பாலையிலே சோலை' என்று அவ்விடத்துக்குப் பெயர் என்பதை அப்போது அறிந்தார்; பொருத்தமான பெயர்தான் என்று சிலாகித்தார். அவருக்கு உணவளித்து உபசரிக்க முன்வந்த பெனிடோ என்ற பெரியவர், அவரது மூத்த மகன், இரண்டு பேரப்பிள்ளைகள் ஆகியோரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். பெரியவர், தாரத்தை இழந்தவர். பிஷப்பை ஓடைக் கரையில் சந்திக்க ஓடிவந்த ஜோஸபா என்னும் அவருடைய மகள் தான் வீட்டைக் கவனித்துக் கொள்பவள், இறைச்சியுடன் சேர்த்துப் பக்குவம் செய்யப்பட்ட மொச்சை, ரொட்டி, ஆட்டுப்பால், புதிய பாலாடைக் கட்டி, பழுத்த ஆப்பிள்கள்- இவையே விருந்துப் படையல்கள்.

பச்சை வெட்டுக் கற்களால் கட்டப்பட்டு வெள்ளை யடிக்கப்பட்ட கனமான சுவர்களைக் கொண்ட அவ்வறையில் நுழைந்தபோதே, அங்கு ஒருவித அமைதி நிலவுவதை பூஜ்யர் வாடூர் உணரவாரம்பித்து விட்டார். அதனுடைய வெறுமையிலும், எளிமையிலும் ஏதோ ஒரு நேர்த்தி பரிமளித்தது. அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு, சுவரோரமாக நிழலில் ஒதுங்கி நின்று, பாதிரியார், முகத்தின் மீது தன் ஆவல் சொட்டும் கண்களைப் பதித்திருந்த அப் பெண்ணிடமும், அதே போன்ற அடக்கமான எழில்தான் கொழித்தது.

Tuesday, April 10, 2018

பிரதிரூப சம்வாதம் - பிரமிள் :: நன்றி - கொல்லிப்பாவை சிற்றிதழ்

thanks to https://www.facebook.com/velmuruganperiavan for கொல்லிப்பாவை flipbook


பிரதிரூப சம்வாதம்

பிரும்மிள்ஜ் தாநமோ :சீவராம்
-முன்னுரை:-

ஒரு கலாச்சாரச் சூழலில் எழும் பிரச்னைகள், அந்த சூழல் ஆரோக்ய மாக இருக்கும் பட்சத்தில், பதில்களையும் தெளிவுகளையும் மறுப்புகளையும் ஆதரவுகளையும் ஒரு செவ்விய நெறியில் பெற்று மேல்விரிவும் ஆழமும் கொண்டு தொடரத் தக்க ஊக்கத்தை அடையும். சமீப வருஷங்களில் இத்தகைய ஆரோக்யம் தமிழுலகில் நிலவுவதாக இல்லை: முந்திய ஒருசில சந்தர்ப்பங்களில்கூட அபூர்வமானதாகவே இந்த ஆரோக்யம் இருந்திருக்கிறது. இன்று, எனது கட்டுரைகளிலிருந்து தொடரக்கூடிய சிந்தனைகளை நானே ஊக்குவித்துக் கொள்ள வேண்டி இருப்பதுடன் இலக்கிய சிற்றேட்டுலகின் குழப்பமான நிலைகளிலிருந்து ஒதுங்கி சம்பாஷணைகளிலேயே நான் என்னை வெளியிட்டுள்ளேன் இதுவரை எழுத்துவடிவின் மூலம் மட்டுமே என் கருத்துக்களை அறிந்துள்ளவர்களின் விஷயத்தில் என்னுடன் அவர்களது சம்பாஷணைத் தொடர்பு இல்லாமையால் இவ்வகைத் தெளிவு அவர்களுக்கும் அவசியமமாகலாமே என்ற உளைச்சல் சில விபரங்களை 'கொல்லிப்பாவை' மூலம் எழுத்துவடிவில் முன்வைக்கும்படி தூண்டுகிறது. இத்தகைய நிலையில் ஒரு தீவிர கலாச்சார இயக்கம் பிரச்னையாளனை பேட்டிகள் மூலம தெளிவுபடுத்தும், ஆனால் தமிழில் 'பேட்டி' என்ற கலாச்சாரக் கருவி உரியமுறையில் செயல் பட்டதே இல் லை. பெரும்பாலும் “பேட்டி' காண்பவர் தமது சுயமுடிபுகளை பிரச்னையாளரின் முலம் வருவிப்பதாகவும், எரியும் கலாச்சார சமூகப் பிரச்னைகளிலிருந்து தம்மை மேலும் ஒதுக்கிக் காட்டும் சுயாபிமானமாக பிரச்னையாளரின் உரத்த சிந்தனைகள் அமைவதாகவும் தான் தமிழில் இந்த மிக உரமான வெளியீட்டுருவம் கீழ்மைபெற்றுத் தொங்குகிறது. பேட்டி காண்பவன் பிரச்னையாளனுடன் ஏதோ உடன்படிக்கை ஒன்ற தயார் செய்கிற போக்கு தான் தமிழுலகில் இந்த கருவியின் அடிப்படை உபயோகம். உண்மையில் பேட்டியின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும் தொடர்பின்மையும் கொண்ட ஒரு வகை அந்தரங்கத்தை பிரச்னையாளனிடமிருந்து வரவழைத்து அவன் சம்பந்தப்பட்ட பொதுவாழ்வின்மீது தெளிவுகாண உபயோகிக்கவேண்டும். ஒருவனது கருத்துக்களிலும் படைப்பு களிலுமிருந்து தழைத்து நிற்கும் தீர்க்கப்படாத அல்லது அந்தரங்கங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் பேட்டிகாணத் தூண்டும் ஒரு வியக்தியுள்ளே பொதிந்திருக்கும். இவ்வளவும் கொண்ட ஒரு சுரங்கம.1 கி நிற் கும் பிரச்னையாளனை சுயாபிமானம் தூண்டாது. பேட்டியின் மூ ல ம் தனது பொதுவாழ்வை மீறியும், தொட்டும், தெளிவுபடுத்தியும் நிற்கிற சில அந்தரங்கங்களை வெளியிட கூசியும் வெளியிட விரும்பியும் நிற் கிற ஒரு 'தயங்கிய உத்வேகமே பேட் டியின் மூலம் இவனிடமிருந்து வெளிப் படுகிறது. தனது பொதுவாழ்வுடன் சம்பந்தமே இல்லாததென தோற்ற மளிக்கிற ஒரு வேறு துறைபற்றி இவன் தனது மொத்த முடிபை சொல்வதற்கு இந்த கருவியின் வழியிலேயே இவன் சுதந்திரம் பெற்றுகிறான். ஒரு குறிப்பிட்ட பொதுப்பிரச்னைபற்றி ஏதும் சொல்லத்தக்க வகையில் இவனது படைப்புகளோ, கருத் துருவ வெளியீடுகவோ அமைந்திராத நிலையில் அந்த பொதுப்பிரச்னை பற்றி இவன் பேசுவதற்கும், தனது நிபுணத்வமோ தனது சம்பந்தமோ

________________

அற்ற பிரச்னைகள் பற்றி அபிப்ராயம் தெரிவிப்பதற்கும்கூட பேட்டி பயன் பட முடியும். பிரச்னையாளன் பேச 'விரும்பாத' விஷயங்களைக்கூட பேச வைக்கிற ஒரு பேட்டியாளன் மூலம் இவ்வளவும் நிறைவேறி ஒரு கலாச்சார நிலை உருப்பெறவும் வளரவும் முடியும். தமிழுலகத்து சுயாபிமான ‘பிரச்னை' யாளர்களது “நழுவி ஓடுகிற' - குணாதிசயங்களும் அவர்களுடன் உல்லாசமாக 'பேசி' பொழுது போக்கி யவற்றை போட்டிகளென ந ம் பி குறித்து வெளியிடும் பேட்டியாளர்களும் நான் மேலே தந்துள்ள லட்ச சணங்களில் எந்த ஒன்றையும் கூட பூர்த்திபண்ணியதில்லை. உண்மையில் தமிழ் நிலை இதைவீடகீழ்த்தரமானது: பேட்டி காணப்பட்டவரின் கருத்துக்கு முரணான ஒன்றை பேட்டிகண்டவர் தவறாகவோ திரிபுக்கைங்கர்யத்தின் மூலமோ எழுதி வெளியிட்டுள்ளதைக் கண்டும் வாளாவிருக்கிற பேட்டி காணப்பட்டவரது மனோநிலை ! ஒன் றுக்கு மேற்பட்ட தடவைகள் இத்தகைய நிலையை பேட்டி காணப்பட்டோரிடத்தில் அவதானித்துள்ளேன், இப்படி திரிபுக்கு உட்பட்ட பிரச்னையாளர்களுடன் . இதுபற்றி பேசிய போது ஒருவர் (மிகப்பெரிய புள்ளி இவர்) சொன்னார். 'என்ன பண்ணச் சொல்றேள்? சொன்னதை மாத்தி எளுதிப்புட்டான். நான் அப்படிச் சொன்னதே இல்லை- இதுக்காக அதை திருத்தி" எடிட்டருக்கு லெட்டர் எழுதலாமா என்ன? தப்பாச்சே, மெனக்கெட்டு நம்மை இண்டர்வியு செய்து ஒருவர் எழுதினதை திருத்தி நாமே எளுதறது!” நான் இதைக்கேட்டு, இந்த புள்ளியின் எந்த ஒரு அதி முக்யத்துவம் வாய்ந்த அடிப்படையில் எத்தகைய ஒரு குறை இருக்கிறது என அறிந்து, அதிர்ந்துபோனேன். இவரது மனோ பாவம் தமிழகத்தின் நடைமுறை ஆகும். பேட்டிகாண வந்தவர் பிரச்னையாளருக்கு ஏதோ ஒத்தாசை செய்ய வந்தவர் என்ற

________________

மனோபாவத்திலிருந்து விளையும் 'பெருந்தன்மைவாய்ந்த' மடமை இந்த குறைபாடு. (அந்த புள்ளி எனது ஆழ்ந்த நன் மதிப்புக்குரியவர். இருந்தும் இந்த தவறின் பொதுமுக ஆபத்தை வலியுறுத்தவேண்டி இந்த அளவு கடுமையை சுாட்டவேண்டிய வனாகிறேன்.) இந்த “ பெருந் தன்மை'யை கொஞ்சம் கிளறினால் உள்ளே தமது கருத்தைவிட தமது 'பேர்' அவசியம் என்ற ஒரு மனோபாவம், ஒரு சுயாபிமானம், பல்லைக் காட்டவும் கூடும். ஆனால், தமது கருத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள், ஆரோக்யமான பிறசூழல்களில், திரிபு பெற்று பகிரங்கம் அடைந்து விட்ட தமது கருத்துக்களை காரசாரமான தந்திகள் மூலம்கூட திருத்துமளவுக்கு தீவிரமாக செயல்படுவதை காணலாம். அங்கே அத்தகையோருக்கு தமது பேர் என்ற நிலை தமது கருத்தின் உருவமே, இத்தகையோர் எவருமே தமிழ் நாட்டில் 'பேர்' பெற முடியாது. நமது அடிப்படை அவலம் அது. தீவிரம் என்பது அகௌரவமானது என்பதே இந்த அடிப்படை, எனவேதான் தீவிரமானவர்களும் கௌரவத்தினுள் முடங்கி தமது தீவிரத்தையும் இழந்து, அதன் விளைவாக கருத்து நிலையை இழந்து, அதன் விளைவாகப்பெறும் 'பேர்' இவர்கள் எது சுயாபிமானத்துக்கு கௌரவம் தருகிற முகமூடிகளாகி என்னை ப் போன்ற ஒருவனுக்கு அருவருப்பை உண்டாக்குகின்றன. இத்தகைய முக மூடிகளுள் ஒன்றாக நானும் தொங்க விரும்பாததால் என்னை : 'பேட்டி' காண ஓரிருவர் முயன்ற சந்தர்ப்பங்களை உதாசீனப்படுத்தி இருக்கிறேன். அப்படி ஒரு சமயத்தில் ஒருவர் கண்டு பிரசுரமாகாமல் இன்றுவிட்ட சிறு பேட்டி ஒன்றையும் நான் படித்து, பதில்களை நானே எழுதுமளவு முனைந்து செயல்பட்டிருக்கிறேன். மற்றபடி இங்கே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட, ஆனால் எழுத்தில் பதிவு

________________

பெறாத நேர்ச்சந்திப்புகளே நான் தந்த 'பேட்டி'கள் எனவேண்டும். இந்த சந்தர்ப்பங்கள் தீவிரமானவை. இந்த வேளைகளில் என்னைத் தூண்டியவர்கள் தம்மையறியாமலே ஒரு பேட்டியாளனின் முக்ய வேலையைச் செய்தனர். அதாவது 'தயங்கிய உத்வேகம்' என்று நான் முன்னே குறிப்பிட்டுள்ள நிலையை என்னிடத்தில் தூண்டி, பேசவைத்து, முன்னே குறிப்பிட்டுள்ள 'பொதுமுக அந்தரங்கங்கள்' பலவற்றையும் வெளிவரவைத்துள்ளனர், இதுவே பேட்டியாளன் செய்ய வேண்டியது. இதன் விளைவாக வெளிப்படுகிறவற்றை பதிவு செய்து கொள்கிற செயல்முறைக்கு பிரச்னையாளனின் உதவியும் பேட்டியாளனின் பொறுப்பும் அவசியம், மேல் குறிப்பிட்ட நிலைமைகளில் என்னைச் சந்தித்தவர்கள் நான் சொன்ன வற்றை பதிவு செய்கிற உத்தேசத் பிரும்மிள்ஜ் ராம்:

பிரதி:

"ஏன் எழுத ஆரம்பித்தாய்?' என்ற கேள்வியோடு ஆரம்பிக்கலாம். ஆனால் ஏதோ குறைபாடுகொண்ட சம்பிரதாயம் தான் இந்த கேள்வியும் என்று நினைக்கிறேன்,

ரூபம்: '

எழுதுவதற்கு இத்தகைய தூண்டுதல்கள்?' என்ற வகையான கேள்வி நல்லது. ஆனால் இதுகூட 'பூ ஏன் மலர்கிறது?' என்றவகை கேள்வி தான். சம்பிரதாயமாகிவிட்ட அளவில் 'ஏன், எதற்காக எழுதுகிறாய்?' என்ற கேள்வி, 'உன்னைப்போன்றவனெல்லாம் ஏன் எழுதி எங்களைப் போன்றவர்களுக்கு சங்கடம் கொடுக்கவேண்டும்?'' என்ற தொனியிலோ, 'என்னென்னமோ எல்லாம் எழுதுகிறாய். உண்மையில் எங்கள் இஸம், எங்கள் கும்பல், அல்லது கட்சிக்கு ஏற்றபடி இன்ன - காரணத்துக்காக எழுதுவது தான் எழுத்து என்று தெரிவதோடு மேற்சொன்ன விளைவுகளை ஏற்படுத்தவில்லை எனவேதான் பதிவு செய்கிற பொறுப்பை நானே நிறை வேற்றுகிறேன். என்னைத் தூண்டிய வர்களுக்கு ஒரே குரலை தரும் நோக் கத்துடன் அவர்களை 'பிரதி' என, எனது 'ரூப்'த்தின் பிரதி என பாவனை கொண்டதோடு, 'எனது பிரதி' ஆகி விட்டதால் பிறர் கேட்காத சில கேள்விகளையும், பிறர் கேட்டுள்ள கேள்விகளை ஆழமாக்குகிற புதிய கேள்விகளையும் நானே உருவாக்கிக் கொண்டு ரூபத்தை தூண்டிய நிறைவேறிய சம்வாதம் இது. இந்த இப்போதைய பக்கங்கள் பின்னாடி தொடர்ந்து வேறு பிரச்னைகளை ஆராயக்கூடும். இங்கு ஓரிரு குறிப்பிட்ட பிரச்னைகளே ஆராயப்படுகின்றன. பொதுமுகப்படத் தக்க அந்தரங்கங்கள் தவிர்ந்தவை இவை. அவை பின்பு தொடரக் கூடும். யாமல் ஏன் எழுதுகிறாய்?' என்ற தொனியிலோ தான் பிறக்கிறது.

பிரதி: 
- அத்தகைய தொனிகளுக்கு எப் படி பதில் தருவாய்?

ரூபம்:

அத்தகைய தொனிகளுக்கு தரப்படும் பதில் 'பதில்' ஆகாது. ஒன்று அந்த , தொனியின் தேவைகளைப் பூர்த்தி பண்ணும் உடன்பாடு அல்லது எதிர்க்கும் மறுப்பு என்ற நிலை தான் விளையும். 'பதில்' என்பதோ சிந்தனைத் தொடர்ச்சி எனவேண்டும். மேற்படி 'தொனிகளில் தொடர்ச்சியை ஊக்கும் சிந்தனை இல்லை,

பிரதி:

நுட்பமான விஷயங்களில் நம்மிடையே அந்த மறுப்புகள் உடன் பாடுகள் வந்தால் வரட்டும். இப்போது நீ எழுதுவதன் காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

- ஒரே வார்த்தைப்பதில் கூட இவ் விடத்தில் - சாத்ய ம்: 'நெருக்கடி'.

________________

இந்தச் சொல் ' ஒரே பதிலின் பல முகங்களுள் ஒன்று. 'உளைச்சல்' என்றும் சொல்லலாம் எவை எனக்கு உத்வேகத்தை, உளைச்சலை, நெருக்கடியை உண்டாக்குகின்றன என்பது

அடுத்த கட்ட கேள்வி. இந்த அடுத்த கட்டம் வேறு ஒரு பிரச்னையை இங்கே வரவழைக்கிறது. எனது உத்வேகத்துக்கான காரணமே இன்னொரு எழுத்தாளருக்கும் இருந்தாக வேண் டும் என்பதில்லை என்பதும் ஒவ்வொருவருக்குமுள்ள இந்த வேறு வேறு தன்மைகளை நான் ஆராய்ந்த பல்வேறு வகைகளுள் அதிசயிக்கத்தக்க விதமாக தீர்க்கமான பதில்களை தந்துள்ள ஒரு துறை ஜோதிடம் என்பதும் தான் இந்த பிரச்னை.

, பிரதி: 
இலக்கிய விமர்சனத்துறையில் ஜோதிடத்துக்கு என்ன வேலை?

--ரூபம்:

மனித உள்ளத்தைப் பற்றியது என்ற தொடர்பு உண்டு. ஜோதிடம் என்பதற்குப் பதிலாக Cosmic Chemistry-விண்ணக ரஸாயனம்-என்ற ஒரு நவீனமான பிரயோகத்தையும் இந்த விண்ணக ரஸாயனம் ஜோதிடத்தின் முக்யமான ஒரு அடிப்படையை விஞ்ஞானபூர்வமாக ஏற்று எந்த முடிபை அடையுமோ என்று இப்போது நிச்சயிக்க முடியாத வளர்ச்சிகளைப் பெற்றுவருகிறது என்பதையும் வைத்துப் பார்த்தால் நான் குறிப்பிட்ட அம்சத்தை சர்ச்சைக்கு எடுக்கலாம். ஜோதிடத்துறையின் பிரகாரம் கிரகங்கள் பூமியின் ஜீவ வாழ்வை ஆள்கின்றன, இந்த மொத்தமான அடிப்படை முடிபு அசைக்க முடியாத நிரூபணம் பெற்றுவிட்டது. அதே சமயத்தில் ஒவ்வொரு மனிதனது விசேஷமான குணாதிசயங்களுக்கும், அவனது ஒவ்வொரு கணவேளை வாழ்வின் தீர்மானங்கள் நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும், அவனது உத்யோக பதவி எது என்பதிலிருந்து அவன்

________________

இன்ன நாள் இன்ன மணி மினிட்டுக்கு இ ன் ன வ ல க வாழைப்பழத்தின் தோலில் சறுக்கியடித்து விழுந்து சாவான் என்பது வரை வகுத்துள்ள விதியை மேனாட்டு ஜோதிடமுறை முன்கூட்டியே சொல்லி விடும் என்ற முடிபை தகர்த்து விட்டனர், ஆனால் மேனாட்டு முறையைவிட ஆழமான வகைகளில் வித்யாசமான , இந்திய முறையை  மேற்படி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்லிவிடவேண்டும் இதனால் இந்திய முறை விஞ்ஞான பூர்வமாக தகர்க்க முடியாதது என்று நான் நிச்சயிப்பதாக கொள்ளக்கூடாது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவே பட்டாமல் “ தப்பித்து' இருக்கிறது எனலாம். இதே சமயத்தில் மேலே குறிப்பிட்ட மேனாட்டு ஜோதிட அடிப்படை எனத் தக்க 'அசட்டு விதி' ஒன்றன் கருவிகளாக கிரகங்கள் மனிதனை ஆட்டுவதில்லை என்று பங்களூர் வெங்கட் ராமன், காலஞ்சென்ற சென்னைவாசியான கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகிய இந்திய ஜோதிட நிபுணர்களின் கருத்துக்கள் கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட அலை அல்லது முகில் தனது சகலவிதமான வடிவ விசேஷத்தன் மையையும் எண்ணிறந்த வகையான காற்று. அழுத்தம் முதலிய பிற சக சக்திகளின து தாக்கங்களின் விளை வாக எப்படிப் பெறுகிறதோ அவ்வகையில்தான் ஒவ்வொரு குறிப்பிட்ட சமயத்திலும் நக்ஷத்ரங்களின் விண்ணக தாக்கங்கள் ஜீவன்மீது கிரகசாரத்தின் வாயிலாக குவிகின்றன என்ற முடிபு ஏற்றுக்கொள்ளத்தக்கது எனலாம். இதையே இவர்கள், விசேஷமாக இத்துறையில் சிந்தனை சார்ந்து எழுதும் பி. வி. ராமன், தங்களது சொந்த வார்த்தைகளில் வேறு உதாரணங்களோடு கூறுகின்றனர். இந்திய கருத்துலகவாதிகளும் சிந்தனையாளர்களும் மூக்கை நிமிர்த்தி க் கொண்டு இவர்களை 'பத்தாம்பசலிகள்' என ஒரேயடியாக உதாசீனப்

________________

படுத்துவது தவறு என நினைக்கிறேன். மேனாட்டு ஜோதிடமுறை போலன்றி இந்திய முறையில் ஏதும் இருக்கலாம் என்பது எனது நீண்டகால் அவதானங்களின் முடிபு. விஞ்ஞானபூர்வமாக இந்திய முறையும் தகர்க்கப்படும் வரை கொஞ்சம் தைரிய மாக இந்த முடிபை-என்னளவிலான அவதானங்களில் காலூன்றி--நான் அங்கீகரிக்கலாமல்லவா?

பிரதி: 
“அப்படியானால் இங்கே உன் அவதானங்கள் முடிபுகள் யாவற்றையும் சொல்லியே அடுத்த கட்டத்துக்குப் போகவேண்டிவரும். * ஏற்கப் பட்ட விஞ்ஞான பூர்வமான ஒரு நிலையை சுருக்கமாக திருப்பிச் சொல்லி மேலே போவது தான் இப்போதைக்கு நல்லது.

ரூபம்:

வாசகர்கள் Cosmic Clocks என்ற Michael Gauquelin எழுதியு ள் ள (Paladin Paper Back), நூலைப் படித் திருந்தால் அந்த சிரமம் கூட இங்கே இராது. ஆனால் நாங்கள் 'ஸ்பெஷலைஸ்டு ரீடர்ஸ்' ஆயிற்றே. இலக்கியம் என்றால் அதிலும் சிவப்பு, கடுஞ் சிவப்பு, இளஞ்சிவப்பு இலக்கியம், அல்லது 'சுத்த (?) இலக்கியம்' பிற துறை நூல்களை ஏறெடுத்துப் பார்ப்பதும் தீட்டு. பார்த்தாலும் நமக் கேற்ற இஸமாகயிருக்கவேண்டும் ........ போகட்டும் ....... இந்த நூல் Cosmic Chemistry யை-'விண்ணக ரஸாய னம்' எனது தாழ்மையான தமிழாக் கம்-அறிமுகப்படுத்துகிறது. இதன் ஆரம்பம் ஸ்டாலினிஸ ேச ா வி ய த் ரஷ்யா! கம்யூனிஸத்தின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு முரண A. L. TOHIJEVSKY என்ற ரஷ்ய விஞ் ஞானி இருபத்தைந்து ஆண்டுகளுக் கும் மேலாக சூர்யனது ஜ்வாலை எகிறல்கள் (Solar Flares) நிகழும் சமயங் களையும் அதே சமயத்தில் நடந்த மனித சரித்திர கணங்கள் திடீர்

________________

வெப்பம் திருப்பம், தீவிரம், பெறுவதையும் உறவுபடுத்தி ஆராய்ந்து சில முடிபுகளுக்கு வந்திருந்தார். இவை மார்க்'ஸீய பஞ்சாங்க முடிவுகளுக்கு வந்திருந்தார். இவை ' மார்க்ஸிய பஞ் சாங்க முடிபுகளுக்கு விரோதமான *ஜோதிட' விவகாரம் என்று ஸ்டாலினின் அரசு முடிவுகட்டி விஞ்ஞானியைப் பிடித்து சைபீரியாவுக்கு அனுப் பியிருக்கிறது, ஆனால் உலகின் இதர பாகங்களில் உள்ள விஞ்ஞான அவதானிகளும் இதே வகை முடிவுகளுக்கு வந்து கொண்டிருந்தனர். கம்யூனிஸக் கருணை தங்கள் அரசுகள்மீது பரவாதி காரணத்தால் மேற்படி ரஷ்யவிஞ் ஞானியின் கருத்தை பிறநாட்டினர், கேவலம், சுதந்திரமாக ஆராய்ந்தனர் ஸ்டாலினிஸத்தை ஒழிக்க முயன்ற குருஷேவ் காலத்தில் மேற்படி விஞ்ஞானி சைபீரியாவிலிருந்து விடுவிக் கப்பட்டு ஆராய்ச்சி செய்ய சுதந்திர மடைந்தார். இருந்தும் நீண்டகால தண்டனைகளின் விளைவாக உடல் ஆரோக்யம் சீரழிந்திருந்த - இந்த மேதை அகால மரணமடைந்திருக்கிறார். விண்ணக ரஸாயனத்துறையின் முக்கியமான ஆரம்ப ஆய்வுகள் இவருடையவை. (விஞ்ஞான பூர்வமான சித் தாந்தம் தங்களுடையது என்று ஜம்பம் அடிக்கும் தோழர்கள் இந்த தகவலை ஆராய்ந்தால் 'விஞ்ஞான பூர்வமான து' என்ற பகட்டு. முரட்டு கொடுங்கோன்மை ஒன்று தனக்கே தரும் வெகுஜனரஞ்சக மான ஒரு முகமூடி என்பதையும், இதே வகையில் அன்று வெகுஜன ரஞ்சகமாக இருந்த ஆபீஸ் கிறிஸ்துவம் இதேவிஞ் ஞான சுதந்திரத்தை கிறிஸ்துவ நம்பிக்கைகளின் அடியில் அடக்கி ஒடுக்க முயன் றிருக்கிறது என்பதையும் உணரக்கூடும்.) மனிதனை அவனது 'பூமிச்சூழலிலிருந்து தனிமைப்படுத்தி விண்வெளியின் இதர இடங்களில் நீண்ட - காலங்களோ தொடர்ந்தோ பயணம் செய்ய அல்லது வசிக்க செய்யும் விஞ்ஞான தீர்க்க தரி சன சிந்தனைத் துறை அதைச் சார்ந்த விண்ண கபெளதிகம் (Astrophysics:

________________

Laws governing influences of space on man: விண்ணக நியதிகள் மனிதனை ஆளுமைகொள்வது பற்றியது) போன்ற துறையினர் சகலவிதமான விண்ணகத் தாக்கங்களையும் , பரிசீலித்தே முடிவுகளுக்கு வரவேண்டிய நெருக்கடியை சமீப காலங்களில் அடைந்ததின் அதிசயமான புதுத்துறைத் தோற்றம் விண்ணக ரஸாயனம், சூர்யனது. ஜ்வாலை எகிறல்கள் மட்டுமல்ல, சந்திரனின் திதிகள் கூட. முக்யமாக சந்திர பௌர்ணமிகூட பூமியின் ஜீவ வாழ்வை பாதிக்கிறது என ஆயிரக்கணக்கான - அவதானங்கள் நிரூபிக்கின்றன,  ரஸாயன ஆய்வுகளில் திரவங்களின் கலப்புகளும் ஆய்வு நிறை வேற்றங்களும் கூட சந்திரனின் மாசுகளால் ஆளப்படுவது நிரூபணமாகி இருக்கிறது. அமெரிக்காவில், நியுயார்க்கில் இளம் பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலீஸ் ரிக்கார்டுகளை அவதானித்து, சந்ரதிதிக்கும் சில விசேஷமான குற்றவாளிகளின் நடைமுறைகளுக்குமிடையே உறவுகாட்டி இதை ஆராயும்படி வேண்டி வானிலை விஞ்ஞானிகளுக்கு எழுதிய விபரத்தினடிலே பெளர்ணிமை யில்- இன்னவகை குற்றங்கள் சாத்யம் என்ற ஜோஸ்யரீதியான ஹேஷ்யம் இங்கே கவனிப்புக்கு உரியது. நூல் இவ்வகையில் குவிக்கும் எல்லா தகவல்களையும் இங்கே தரமுடியாது என்பதோடு அந்த 'நூலே ஒரு பிரம்மாண்டமான ரிப்போர்ட் டைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிற ஒன்றுதான். பூமியின் தாவரங்களிலி ருந்து மனிதன் வரை சகல ஜீவன்களினதுமான, உயிரியல் அலையேற்ற இறக்கங்களை - (biological rhythme) -கிரகங் கள் ஏதோ வகைகளில் ஆள்கி ன் ற ன என்பதும், கிரகங்களின் அசைவுகளை தன்னுணர்வுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு அடிப்படைப் பிரக்ஞை நிலையில் சகல உயிரினங்களும் அறிந்து கிரக ஓட்டங்களை தங்களது உயிரியக்கத்தின் அலையேற்ற இறக்கங்களுக்கு கடிகாரங்களாக உபயோகிக்கின்றனவோ என்ற -கேள்வியும் இந்த நூலின் மொத்த முடிபு ஆறாயிரம் ஆண்டுகளாக நீடித்து

1

1111

________________

வந்துள்ள ஜோதிடத்தின் பிரச்னை இந்த திருப்பத்தில் விஞ்ஞான சிந்தனைக்கு தனது அடிப்படையை ஈந்துள்ளது. மனிதனை பூமிச்சூழலிலிருந்து பிரித்து விண்ணகப்பயணம் முதவியவற்றுக்கு அனுப்புவதை ஜோதிடர்களது அடிப்படைக் கொள்கையின் மூலம் காண முற்பட்டதின் விளைவே இந்த திடீர் துறையாக முன்னிற்கிற. இதுவரை கவனிக்கப்படாத பிரச்னையி ன் திடீர் வளர்ச்சி. ஜியோர்ஜியோ பிக்கார்டி (Giorgio Piccardy) யுனிவர்ஸிட்டி ஆஃப் ஃபுளோரன்ஸில் பெளதிக ரஸாயன (Physical Chemistry) துறையின் தலைவர். விண்ணக ரஸாயனத்தின் முன்னிலைப் பிரதிநிதித்துவம் இவருடையது. "விண்ணக விளைவுகளுக்கு மனிதனை ஆட் படுத்தி அவதானிப்பதற்காக அவனை வெளிமண்டலத்திற்கு அனுப்பவேண்டிய தில்லை. அவன் வீட்டைவிட்டு வெளியே கூட வரவேண்டியதில்லை. மனிதன் சதா காலமும் பிரபஞ்சத்தினால் சூழப்பட்டி ருக்கிறான். ஏனெனில் பிரபஞ்சம் எங்குமாக நிரம்பி இருக்கிறது.” (“To be subjected to cosmic effects, man does not bave to be shot into. space, he does not even have to leave his home. Man is always surrounded by the Universe, since the Universe is everywhere ”') இவை பிக்கார்டியின் வாசகங்கள் இந்த பிரபஞ்ச ஆளுமையைக் கிரகிக்கிற ஜீவனின் சக்திகள் பற்றி நூலாசிரியர் கொகலின் கூறுகிறார்: ''இதுவரை அறியப்படாத நுண்ணிய கிரகிப்புணர்வுகள் மனிதன் உட்பட சகல உயிர்களிலும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள து." (“Previously unknown sensory receptors have been discovered among all forms of life, including man.”') இனி, ஜோதிடத்தின் முடிவுகளை நிராகரித்தாலும் கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் குரு கீழ்வானிலோ மேற்குவானிலோ, அதாவது உதயமாகும்போதோ அஸ்தமிக்கும் போதோதான் பிறந்திருக்கிறார்கள் என்பதையும் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் இருப்போர் செவ்வாயினால் இதே விதமாக ஆளப்படுகிறார்கள் என்பதையும் போன்ற சில உண்மைகளை மறுக்க முடியாமல், பல பிறப்புக்குறிப்புகளைக் கொண்டு, கண்டமை ஜோதிடத்தின் முழு முடிவுகளையும் உ த ற முடியாத நிலையை ஆராய்ச்சியாளர்களுக்குத் தந்துள்ளது. இதன் விளைவாகவே குறிப்பிட்ட குடும்பங்களில் ஒரே கிரக ஒற்றுமை கவனிக்கப்பட்டு அந்தந்த குடும்பங்களில் பிறப்போரது ஜன்ம வேளைகளுக்கு கரு விலுள்ள ஜீவன் தானாகவே குறிப்பிட்ட ஒரே கிரகத்தை கடிகாரமாக உபயோகிக் கிறது என்ற ஒரு அநுமான முடியை கொள்கிறார்கள். விண்ணக ரஸாயனம் மேலும் வளரும்பட்சத்தில் இந்த முடிபு கூட ஜோதிடசார்பை நோக்கி மாற்ற மடையக் கூடும் என இந்திய ஜோதிடத்தை அடிப்படையாக்கி கருத இட முண்டு........ இவ்வளவும் நான் இப்போது சொல்ல வந்ததுக்கு அ வ சி ய ம ா ன பீடிகை.

பிரதி:
உனது. பிரத்யேக உளைச்சல்களின் தன்மையே பிற எழுத்தாளர்களையும் தூண்டவேண்டும் என்பதில்லை...

ரூபம்:
ஆம் அதுவே இப்போதைய பிரச்னை, ஒருவகை நெருக்கடி எனக்கு தூண்டுதலாகி ஓரு வகை இலக்கிய சாதனையை அல்லது கருத்து வகை சாதனையை நிறைவேற் றினால் வேறொருவருக்கு இன்னொன்றாகலாம். இங்கே தான் மேலே ஒரு குறிப் பிட்ட அலை அல்லது முகிலின் வடிவ விசேஷத் தன்மையின் காரண அழுத்தங்கள் பற்றிய உதாரணத்துக்கு இடம் உண்டாகிறது. ஒரு மனோ விசேஷம் கிரக நிலைகளின் விசேஷ அமைப்பின் (ஒவ்வொரு வினாடியும் மொத்தமான கிரக நிலைகளின் அமைப்பு இதுவரை அமையாத வகையாகவே சம்பவிக்கிறது.) விளைவானால் இன்னொரு மனதிற்கு இன்னொரு அமைப்பு, இந்த அளவுக்கு நான் ஒரு 'பத்தாம் பசலி' கருத்தை முன்வைத்து

________________

தீர்வை அடைய முயற்சிக்கிற அளவு எட்டாமல் மீறுகிற பிரச்னை எழுதத்தூண்டும் உளைச்சல், நெருக்கடி, உத்வேகம் பற் றிய பிரச்னை. ஆனால் மார்க்ஸிய ஜோதிடத்தின் பிரகாரமோ 'எழுத்தாளன் எழுதாமல் இருப்பது குற்றம், எழுதினாலும் எங்கள் கட்சி எழுத்தாளர்களுக்கு சங்கடமாக எழுதுவது. அதைவிடக் குற்றம்" என்ற எழுதாக் கிழவி ராஜ்யமும் இதன் அடிப்படையில் விமர்சனமும் வெகு சாங்கோபாங்கமாக நடக்கிறது. இவர்களது சுத்தசூனிய ஜோதிடத்தைவிட மேலுள்ள 'பத்தாம்பசலி' ஜோதிடம் நூற்றுவீதம் கண்யமானது. ஏனெனில் ‘பத்தாம்பசலி' ஜோதிடம் வரம்புகளுக்கு அடங்காத அளவு Combinations and Permutations - சேர்க்கை மாற்றுச்சேர்க்கை - வழியில் எண்ணிறந்த சாத்யங்களுக்கு இடம் தருகிறது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா வகை அமைப்புகளினுள்ளும் அதி ஆச்சர்யமான அளவு பின்னலானது மனித மூளையின் அமைப்புதான் என்பதை எடுத் துக்கொண்டால் . Fanatical ஆ ன - முரண்டு பிடிக்கிற - மார்க்கீஸிய ஜோதிடத்தைவிட 'பத்தாம்பசலி ஜோதிடத்தின் *சேர்க்கை மாற்றுச்சேர்க்கை' விசேஷத் தன்மையே மூளை அமைப்பின் சேர்க்கை மாற்றுச் சேர்க்கைப் பின்னலுக்கு பொருந்தும் மனித உத்வேகங்களின் அலை யேற்ற இறக்கங்களை இந்திய ஜோதிடம் தெளிவாக ஒரு மிக நுட்பமான அலைப் பதிவுப்" படம்போல் காட்டிவிடுகிறது. தசை, புக்தி, அந்தரதசை, சூஷ்மம் என்ற நுண்ணிய காலரீதியான பிரிவும் சமவேளைகளின் கிரகசார அவதானமும் ஜாதகமும் இந்த உத்வேகங்களை விளக்குவது போல் இலக்கிய சித்தாந்தங்கள் - கூட விளக்குவதில்லை எனலாம் உதாரணமாக ''எழுத்தாளன் பணத்தைப்பற்றி மூச்சுக் காட்டப்படாது. காட்டினால் செம்மையாக உதைப்பேன்" என்ற வகைச் சித் தாந்த போலீஸ் அல்லது “ சும்மா பணம் வாங்காமே கதையைக் குடுத்தா அதிலே ஜோர் இல்லே ஸார்'' என்ற வகைச் சித்தாந்த பிளாக்மார்க்கெட் வா - இரண்டுமே இலக்கிய சாதனைக்கு ஒரு நிமிஷம் ஊக்ககமாகவும் மற்றொரு நிமிஷம் குந்தகமாகவும் இருக்கும், தியாக உணர்வும் கலையுணர்வும் இணைந்த விளைவை குறிப்பிடும் ஒரு கிரக சேர்த்திக் கணத்தில் கிளரும் இலக்கிய உத்வேகம் முதல் வகை சித்தாந்திக்கு பலம் தருகிற ஒரு எழுத்தாள உதாரணத்தை கண்டால், லாப உணர் வும் கலையுணர்வும் இணைந்த நிலையில் பின் வகைக்கு உதாரணத்தைக் காணலாம். ஜோதிடம் ஒருபுறம் கிடக்க அநுபவத்தி லும் இலக்கிய அவதானத்திலும் இதை காணமுடிகிறது என்பது தான் முக்யம், லட்சியபூர்வமாக, தியாக உணர்வோடு, இன்னும் குறிப்பிடத்தக்க உயர் நோக்கங்கள் பலவற்றின் கணிசமான டோஸ்களோடு உட்கார்ந்து எழுதியும் கூட ஒரு திவலைகளைச் சத்துகூட இல்லாத அறுதல் நார்களை வெளியிடுகிறவர்கள் இருக்கிறார்கள். மிக மட்டமான ஒரு தேவையைப் பூர்த்திசெய்ய உடனடியாக பணம் வேண் டும் என்ற நோக்கத்தோடு எழுதியே உலக இலக்கிய சிகரங்களைத் தந்தவர்கள் கூட உள்ளனர். இதற்காக உயர்ந்த லட்சியம் உயர்ந்த எழுத்துக்கு முட்டுக் கட்டை என்றால் அது கீழ்த்தரங்கள் கெளரவம் சம்பாதிக்க எழுப்பும் சதிக்குரலாகவே முடியும்.

பிரதி: 
- இவ்வளவு சொல்லிவிட்டாய். ஆனால் நீ எழுதுவதுக்கு எது உத்வேகம் தருகிறது என்ற கேள்விக்கோ, இலக்கிய விமர்சனத்துக்கும் ஜோதிடத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கோ பதில் நீ சொல்லவில்லையே.

ரூபம்:

சொல்லியாயிற்று. விளக்குகிறேன். நான் எழுதுவதுக்கு இது தான் உத்வேகம் தருகிறது எனபதில் தருவதே தவறு, “எவனும் எழுதுவதற்கு உத்வேகம் பெற சரியான காரணம் அதுவே' என்ற வகையில் அது நிலைபேறு அடைந்து இன்னொரு வகையில் உத்வேகம் பெறுகிறவனுக்கு தடையாகலாம். அல்லது என்னை தரம் இல்லாத எழுத்தாளன் என்று கருதுவோரின் பார்வையில் எனக்கு உத்வேகம் தரும் தூண்டுதல்களும் தரக் குறைவாகப்படலாம், வேறு வேறு வகை தூண்டுதல்களை அழுத்தமாகக் குறிப்பிடவே நான் ஜோதிடம் பற்றி பேசினேன். அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில் அல்ல, ஆனால் இரண்டிலும் பொதுவான ஒரு செய்தி இருக் கிறது: இரண்டுமே மனித உள்ளத்தின் சேர்க்கை மாற்றுச் சேர்க்கைகளிலுள்ள அருந்தத்தைக் காட்டக்கூடியவை,ஒரு விவேகிக்கு ஜோதிடத்தைப்பற்றிய பேச்சு இல்லாமலே இந்த சேர்க்கை மாற்றுச் சேர்க்கை வி ஷ ய ம் பிடிபடலாம்  எனினும் நான் இங்கே குறிப்பிட்ட கோணத்தில் அது ஜோதிடத்தின் மூலம் அழுத்தம் பெறுகிறது. இது மட்டுமல்ல, இந்த  சேர்க்கை மாற்றுச் சேர்க்கையை உணராமலே சித்தாந்தக் கெடுபிடியைக் கொண்டுவர முயற்சிக்கிற தமிழ் விமர்சகர்களுக்கும் எனது இலக்கிய ஜனனத்துக்கு தங்கள் சூழ்நிலையே காரணம் என்று கூறுவோருக்கும் ஒரு சுவாரஸ்யமான வேண்டுகோளைத் தர இது ஒரு முகாந்தரமாகிறது: கொஞ்ச காலம் விமர்சனத்தை விட்டு வைத்து ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்,

பிரதி: 
மொத்தத்தில் எவை உன து உத்வேகங்களுக்கு காரணங்கள் என்று சொல்லாமலே தப்பித்துவிடப் பார்க்கிறாய்; அவ்வளவு தானே?

ரூபம்: 

மேலே குறிப்பிட்ட எச்சரிக்கையை தந்துவிட்டபிறகு நான் எனது உத்வேகத்தின் காரணங்களை சொல்வதில் ஆட்சேபனை இல்லை, இருந்தும் காரணங்கள் என்பதை விட நொண்டிச் சாக்குகள் தாம் அவை என்று சொல்வதே பொருந்தும். உதாரணமாக உலக இலக்கியத் தரத்தில் எழுதுகிற ஒருவன் சாயந்தரம் குடிப்பதற்கு பணம் வேண்டிய காரணத்தினாலேயே அந்த உத்வேகத்தைப் பெறுகிறான் என்பது அபத்தம். உத்வேகம் ஏதோ

________________

ஒரு நொண்டிச் சாக்கை வைத்து அவன் மூலம் வெளிப்படுகிறது என்பதுதான் சரியான பார்வை. எனவே உத்வேகத்தின் உண்மையான காரணம். உத்வேகமே. மற்றையயாவும், அவை எவ்வளவு உன்னதமானவையானாலும் சரி, இரண்டாம் பட்சமானவை, காரணங்களல்ல, இந் நிலையில் எனக்கு உத்வேகம் தந்த காரணங்கள் இதுவும் இதுவும் தான் என்று சிலவற்றைச் சொல்ல முற்படுவது எப்படி? உத்வேகத்துக்கு உன்னத , காரணங்களை எதிர் பார்த்து காரணம் கேட்கிற அபத்தமான

விசாரணையை மடக்குவதற்காக சில மேதைகள் “பணத்தையே ஜபித்துக் தொண்டு எழுதினேன்” என்று கூடச் சொல்லி இருக்கிறார்கள், சில மண்டு கள் இதை வைத்தே தங்களது இலக்கிய சித்தாந்தங்களை உருவாக்கிக்கொள்ளுகிறார்கள். உத்வேகம் உன்னதமான து என்று பிறர் உணரவேண்டும் என்ற நோக்கத் தோடு அதை உந்தமான காரணங்க ளோடு இணைக்கிற ேவ று மேதைகள் வேறுவகைச் சித்தாந்தக் கெடுபிடிகளை ஊக்குவித்து இருக்கிறார்கள். உண்மை யாக உத்வேகத்திற்குப் புறம்பாக அதன் காரணத்தை நான் அறியேன் என்று அடக்கத்தோடு பதில் சொல்பவனோ கல்லடி படுகிறான். கல்லடி தேவலை.

பிரதி: 
அப்படியானால் தனது எழுத்தின் உத்வேகத்துக்கு இன்ன காரணம் என்று ஒரு வன் சொல்வது அவன து எழுத்தை தரம் காட்டாது என்கிறாய்.

ரூபம்: 
மொத்தத்தில் நான் சொல்ல விரும்பு வது அது தான். இன்ன காரணத்துக்காக எழுதினேன் என்பது இரண்டாம் பட்சம்மான து. இதை உணராமல் - எழுதுவதற்கு தங்களை தூண்டியவற்றின் தற் செயல் தன்மையை உணராமல் - தாங்கள் எந்த காரணங்களுக்காக எழுதுகிறார்களோ அவையே ஸ்டாண்டர்டு' காரணங்கள் என்பவர்களின் எழுத்தை ஆராய்ந்தால் அதில் உத்வேகமே - இல்லாத

________________

சக்கைத்தனம், அல்லது கோணங்கித்தனமான ஆவேசம், அல்லது போலியான பிற தொனிகள் பல்லிளிக்கக் காணலாம், எத்தகைய காரணமும் உத்வேகத்தை : வர வழைத்துவிடாது. மாறாக உத்வேகம் எத்தகைய. காணத்தையும் உயிர்ப்பித்து அதனூடே வெளியீடு கொள்ளும்.

பிரதி: 
இந்த உத்வேகம் எத்தகைய வேளைகளில் என்ன தோரணையில் செயல்படுகிறது என்றுகூட சொல்லமுடியாதா?

ரூபம்: 
சொல்கிறார்கள் ஆனால் இங்கேகூட நான் முன்னாடி குறிப்பிட்ட ஜோதிட சக்திகளின் ஆளுமைகளை கவனித்திருக்கிறேன். எனவே இந்த உத்வேக வேளைகளும், செயல்படும் தோரணைகளும் கூட அநந்தம். ஒருவர் 'ஒரே கதையை ஐந்து வருஷமாக திருப்பித் திருப்பி எழுதினேன். இன்னும்கூட திருத்தலாம். ஆனால் என்னால் முடியவில்லை' என்கிறார் என்றால் இன்னொருவர் ஏதோ 'இயல்பாக' தாம் ஒரே மூச்சில் எழுதியதாகவும், திருப்பி எழுதி திருத்தப் போவதில்லை என்றும்கூட சொல்லக் கேட்கலாம். தாங்கள் எழுதும் தோரணைகளைப் பற்றி இவர்கள் சொல்கிறவை எத்தனையோ போலிகளுக்கு மாடல்களாகி, விஷயம் ஒரே கோணங்கிக் கூத்தாகக்கூட மாறியிருக்கிறது. பேட்டி என்ற பெயரில் ஒருவர் பக்கம் பக்கமாகப் பேத்துகிறார் என்றால் இன்னொரு பிரபலமான போலி தாம் ஏதோ ஒரு பார்க்கில் ஏதோ ஒரு குழாயின் ஏதோ 'பொத்தல்கள் வழியே ஏதோ வெளியேறுவதைப் பார்த்துப் பார்த்தே கதை எழுதுவதாகவோ ஏதோ தமது சிறுகதைகளுக்கு முன்னுரை தருகிறார். இதற்கு ஜோதிட ரீதியாக என்ன கிரகங்ளில் 'பொத்தல்கள்' விழுந்து இவரை ஆட்டுகின்றன என்று அறிய ஆசையாக இருக்கிறது: ஆளின் ஜாதகம் தான். தேவை நிற்க, கலையுலக உயிர் கொண்டு எழுந்து நடமாட வைக்க , -எழுதினேன் , இ ந் த சமுதாயத்தைப் புரட்டியடிக்க எழுதினேன், ஆத்மீக நெருப்பிலே குடும்ப உணர்வைப்

________________

?

58,

* போட்டு நானும் அதிலே குதித்து நின்று  எழுதினேன், எத்தனையோ நாட்கள் 'ஓம் தத் சத்' என்று தியானம்பண்ணி எழுதினேன், சோதனைக்காக எழுதினேன், என்னாலா எழுத முடியாது - எழுதிக் காட்டுகிறேன் பார் என்று எழுதினேன், எழுதலாமா முடியாதா என்று கண்டுபிடிக்க எழுதினேன் எத்தனை, எத்தனை!  இவ்வளவும் கவனிக்கப்படுகின்றன என்றால் இவற்றைக் கூறியவர்கள து படைப்புகளின் விசேஷத் தன்மைகளுக்காகத்தானே அன்றி இந்த எழுதிய தோரணைகளின் விசேஷத்தன்மைக்காக  அல்ல இது வலியுறுத்தப்படவேண்டிய குறிப்பு. இது போக இன்னென்று: இவையாவற்றிலுமே முக்யமான ஒரு விஷயம் நிறைவேறவில்லை, அது, உத்வேகம் வெளியே வருவதிலுள்ள சிரமம் சம்பந்தமானது. எழுதி முடிந்து படைப்பும் சிறந்ததென முடிவான பின்பு தாங்கள் அதை எழுதிய தோரணை பற்றி இப்படி இவர்கள் பேசுவது உத்வேகவேளை. ஏதோ சுளுவான ஒன்றாகவே தென்பட வைத்துவிடுகிறது. | உலகின் இலக்கிய சிகரங்கள்* எழுதப் பட்ட விபரங்களைப் படிக்கிறபோது உத்வேகமும் எழுதுகிற மனித மனமும் யோகம் பெறுகிற வேளையின் அதிசயமான கடினமும் எதிர்பாராத தன்மையும் நம்மை வருந்தி பிரமிப்பூட்டுவனவாகும்.

பிரதி:
அப்படியானால் ஒருவரது எழுத்துக்கு அடியில் சுத்தமான உணர்வு ஊக்கங்கள் இருந்திருக்கின்றனவா என்று காண்பது எப்படி? *

ரூபம்;
அவரது எழுத்தை வைத்துத்தான்! இவ்விடத்தில் உன் கேள்வி பற்றி ஒரு குறிப்பு: இலக்கியமாக மாறும் வேளையில்.

* டால்ஸ்டாயின் - அன் னா கரேனின்' எழுதப்பட்ட விபரத்தினது மொழி பெயர்ப்பு 'கொல்லிப்பாவையில் வெளியாகும் போது இது சம்பந்த மான விபரத்தெளிவு இடம்பெறும். :பிரேம். சிவராம்.

குறிப்பு:-

________________

14

சுத்தாசுத்தங்களை மீறிய உத்வேகத் திலே உணர்வூக்கங்கள் புடம் போடப் பட்டுவிடுகின்றன. எனவே சுத்தமான என்பதை நீக்கிவிட்டு உன் கேள்வியை பார்த்தால் கேள்வியின் அவசியமின்மை - தெரியவரும். 'அவரது எழுத்தை வைத்துத்தான்' என்ற பதிலைப்புலன் கொண்ட கேள்வியாகவே அது தன்னை நிறை வேற்றி நிற்கும்.

'பிரதி:

எனது கேள்வியில் சுத்தமான' என்பதற்கு 'உண்மையான' என்ற சாயலும் உண்டு. இந்தச் சாயலை வெளிப்படுத்த கேள்வியை மாற்றிப் போடுகிறேன்: உண்மையிலே தனக்கு நடந்ததையே ஒருவர் எழுதுகிறார் என்ற காரணம் அவரது எழுத்தை - இலக்கியமாக்காதா?

ருபம்:
இலக்கிய விழிப்பு உள்ள கண்ணிலே மண்ணைத்தூவும் பிரயோகங்களுள் ஒன்று இந்த 'உண்மை '. உள்ளபடி நடந்ததை எழுதுவது விவரணையோ , தகவலோ, சரித்திரமோ, சுயசரிதமோ ஆகலாம். அந்த தன்மைகளை அடைவதற்கே அந்த வெளியீட்டுத் துறைகளான பத்திரிகை - இயல், சரித்திர இயல் சம்பந்தமான தேவைகளை எழுதப்பட்ட விபரங்கள் - பூர்த்திசெய்தாகவேண்டும் உண்மையில் நடந்தது' என்பது கலைத்துறையைப் பொறுத்தவரை கலைத்தன்மை பெறுவ தற்கு லைசென்ஸை வழங்கிவிடாது. ஒரு நாடகாசிரியை தமது நாடகத்தை எனது நேர்முக உரையாடல் விமர்சனம் தகர்ப்பதை கண்டு, நான் அவரது பாத்திரங்களின் உரையாடல் அவ்வளவும் போலியானவை என்று கூறுவது கேட்டு. அவ்வளவு சம்பாஷணையும் தமது வாழ்கையில் அப்படியே நடந்தது என்று கூறி னார். இது ஒரு விமர்சக நண்பரை மடக்கிய இவரது வாதம் என்பதையும் அறிந்தமை நாடகாசிரியை, விமர்சகர் இருவருக்குமே போலித்தனம் என்பது பற்றி நான் விளக்கவேண்டிய நிலையை வ ரு வி த் து விட்டது, - 'உண்மையில் நிஜவாழ்வில் இருவர் அபத்தமாக பேத்திக்கொண்டு

________________

உட்கார்ந்திருக்க முடியும்' என்பதை நான் சுட்டிக்காட்டிய போதுதான் நாடகாசிரியைக்கு எனது வாதம் புரிந்தது (?)*.

பிரதி: 
அப்படியானால் கலைத்துறையில் உண்மைக்கும் உண்மை நிகழ்ச்சிகளுக்கும் இடமில்லை என்றாகிவிடுகிறதே.

ரூபம்: 
என் கூற்றை நீ திரிக்கிறாய். 'உண்மையில் நடந்தது' என்ற லீலைக்குத்தி விட்டால் எதுவும் கலையாகிவிடும் என்ற வாதத்தை நான் தாக்கும்போது கலையுருப் பெற்றுவிட்டால் உண்மை நிகழ்ச்சிகள் தனியே ஒதுங்கி ஸ்திரம் பெறவே செய்யும்,

கலையுலகில் கலையுருவமே 'உண்மை ' என்ற குணத்தின் உரைகல். கலைத்தன்மையே அற்ற ஒரு எழுத்தை உண்மை என்ற லைசன்ஸ் கலைத்தரத்துக்கு உயர்த்த முடியாது. மாறாக, கலையுருப்பெறாத, அதாவது வாசகனை கலைரீதியாக ஆட்கொள்ளாத வெளியீட்டின் கீழ் எத்தகைய உண்மை இருந்தாலும் அதன் உண்மைத் தனங்கூட சந்தேகத்துக்குரியதாகிவிடும்,

பிரதி: 
 கலையுருவம் என்பது ஒரு அலங்கார வடிவம்தானே . அதற்கு ஒரு அர்த்தத்தை ஏற்றும் உயிர்ப்பொருள் அல்லவா உண்மை நீயோ கலையுருவமே உயிர் என்றும் அதன் மூலம் தான் உண்மை நிகழ்ச்சிகள் கூட வெளியீட்டுருவில் ஒரு உண்மைத்தன்மையைப் பெற இயலும் என்று கூறுகிறாயே?

ரூபம்: '
கலை' என்ற சொல் இந்திய, தமிழ், சிந்தனை மரபில் அலங்காரம் என்றே "இன்று நிலவுகிறது இது தவறு. தமிழன து இன்றைய 'கலை'களின் வெகுஜனரஞ்சகத்தனத்தின்படி கலை அலங்காரமும் பொழுது போக்கும் தான். ஆனால் உண்மையான ஆழ்ந்த பொருளில் கலை நிதர்சன. உணர்வைத் தூண்டுகிறசக்தியாகும். *, - 
அம்பை : 'பயங்கள்' நாடகம். •

________________

இது உண்மை . இதை மறுக்க முடியவில்லை. இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை' என்ற முன் நிலைத் தோற்றமாக, அதாவது நிதர்சனவடிவாக எழும் சக்தி தான் கலை, ஆகவே கலையுருவமே நிதர்சன சக்தியாக உண்மை நிகழ்ச்சிக்கோஉண்மை அல்லாத நிகழ்ச்சிக்கோ மறுக்க முடியாத உண்மைத்தன்மையைத்தருகிறது .

பிரதி: 
சரித்திரம், செய்தி ஆகியவற்றிலும் கூட கலைத்தன்மையின் துணை இன்றியே இந்த உண்மைத் தன்மையை உண்மை நிகழ்ச்சிகள் பெறுகின்றனவே.

ரூபம்: 
முன்னொரு கேள்வியில் திரிபு செய்தாய். இப்போது உளறுகிறாய். சரித்திரத்திலும் செய்தியிலும் உண்மைகள் என்று தரப்படுகிறவை அந்த சரித்திர செய்தி மரபுகளின் நேர்மையையும், பிற சரித்திர செய்தி ஸ்தாபனங்களினோடு இவை ஒத்திருப்பதையும். ஆதாரங்களையும் கொண்டே உண்மை என்று ஏற்கப் படுகின்றன. உண்மை என்று ஏற்கப் படுவது வேறு. உண்மைத் தன்மையை அடைவது' அதாவது ஒரு வாழ்நிலையாக நிதர்சனம். கொள்வது வேறு. உதாரணமாக உன்னைப்பற்றி ஒரு பொய்யான செய்தியை பத்திரிகை வெளியிடுகிறது என வைத்துக்கொள். செய்திப்பத்திரிகை என்ற ஸ்தானத்தைப் பெற்றுவிட்டமையால் இந்த பொய் உண்மை என்று பத்திரிகை மூலம் வாசகர்களால் ஏற்கப் படும். மறு இதழில் செய்தியை நீ மறுத்தமை வெளியாகிறது. உடனே உண்மை என ஏற்கப்பட்ட செய்தி - பொய் என கை விடப்பட்டுகிறது. சரித்திரத்திலும் இப்படியே, ஆனால் உன்னைப்பற்றிய அசல் பொய்களை நீயே கலாசிருஷ்டியாக மாற்றும்போது என்ன செய்கி றா ய் ? அல்லது உனது பெயர் முதலியவற்றை ஒரு பாத்திரத்துக்கு தந்து நடக்காத ஒன்றை சிருஷ்டிக்கும்போது என்ன நிறைவேறுகிறது? பொய்யா நிறைவறுேகிறது?

________________

பிரதி: 
பொய்தானே!

ரூபம்: 
அப்படியானால் 'இவ்வளவும் பொய்' என்ற குறிப்புடன் விஷயத்தை வெளியிடு கிறோம் வாசகர்கள் அதை எவ்விதமாக கிரகிக்கிறார்கள்? ஏற்பு மறுப்பு அற்ற இன்னொரு வகையில் அல்லவா?

பிரதி: '
இது பொய்' என்ற தகவல் கலையுருவைப் பொறுத்தவரை அர்த்தமற்ற தாயிற்றே!

ரூபம்: 
எனவே 'இது உண்மை ' என்ற தக வலும் கலையுருவத்தைப் பொறுத்தவரை

அர்த்தமற்றது தானே!

பிரதி: 
அப்படியானால் கலைப்பொருளில் நிறைவேற்றமடைவது என்ன? பொய்யுமல்ல, உண்மையுமல்ல என்றால் அது என்ன ? -

ரூபம்: 
உத்வேகம் தான் நிறைவேற்றம் பெறுவது. கலை வடிவாக உருப்பெறும்

கய உண்மையையும் பொய்யையும் கலைஞனது உத்வேக சக்தி உயிர்கொள்ளச் செய்து நிதர்சனப் பொருளாக்கித் தருகிறபோது உண்மையும் நிறைவேறுவதில்லை பொய்யும் நிறைவேறுவதில்லை, அவற்றின் சாக்கில் உத்வேகமே நிறை வேறுகிறது.

பிரதி: 
அப்படியானால் குறிப்பிட்ட ஒரு செய்தியை உலகுக்குச் சொல்லவேண்டும் என்று எண்ணும் கலைஞர்கள் இருந்திருக்கிறார்களே. அந்த செய்திகளை தங்களது கலைப் பொருளில், இ ன ம் காட்டிக்கூட இருக்கிறார்களே. :


ரூபம்:

அவர்கள் அந்த கலைப் பொருள்களைச் சிருஷ்டித்த இலக்கியத்தைப்பற்றிய விபரங்கள் அவர்களது செய்திகளின் முக்யத்வத்தை இரண்டாம் பட்சமாக்கிவிடுகின் றன், தாங்கள் சொல்ல வந்த செய்தியைப்பற்றி ஓரளவு தெளிவு இருந்தும். கூட. அதைக் கலைவடிவாக்குகிற இயக்கத்தில் இந்த செய்தியைச் சார்ந்த புத்திபூர்வமான மனித மனம், உணர்வு பூர்வமான உத்வேகத்துடன் யோகம் பெறும் நிலை ஏதோ ஒரு அற்புதமான எதிர் பாராத கோடை மழைபோல்தான் சம்பவிக்கிறது. முழு சிருஷ்டிப் பரப்பையும் மொத்தமாகப் பார்க்கிறபோது உத்வேகத்தின் அதிசயத்தன்மைதான், முக்யத்வம் பெறுகிறது. அதன் ஒளியில்தான் சொல்லவந்த செய்திகள் கூட தெளிவு கொண்டு 'அவற்றை வெளியிட இனி நாம் முன் வரலாம்' என்ற நம்பிக்கையையே கலைஞனுக்குத் தருகிறது. ஆனால் உத்வேகத்தின் ஜீவிதம் உணர்வுமயமான கலையுள்ளத்திலேயே சாத்யம். இந்த உணர்வுமயமான . உள்ளம் பிரச்சனைகளுக்கு லேசில் வசமாகக் கூடியது.

பிரதி: 
பார்த்தாயா? இங்கே அகப்பட்டுக் கொள்கிறாய் சிலர் தொடர்ந்து எழுதாமல் நின்றுவிட்டு ஏதேதோ சாக்குகள் சொல்கிறார்களே -:நான் எழுதுகிறாப்போல் பாஷை வளரவில்லை, அதனாலேயே எழுதாமலிருக்கிறேன்'' என்று உலகில் எந்த வேளையிலும் எவரும் எழுப்பாத குரல்கூட - தமிழ் நாட்டில் கேட்கிறதே அவர்கள் விஷயத்தில் மட்டும் எங்கே குடியோடிப் போய்விட்டது உத்வேகம் என்று கேட்க வாயெடுத்தேன். நீயாக வந்து வலையில் விழுகிறாய், விழு!

" ரூபம்: 
உண்மையில் உத்வேகம் உ ள் ள கலைஞர்கள் எத்தகைய வரம்புகளினுள் தாம் நி ற்கிறோம் என்று பேசாமல் வரம்பை முறிக்கவும் கூடும், வரம்புகள் தம்மை மறிப்பதாக கூறுகிறவர்களோ பெரும்பாலும் தங்களது ஆரம்ப கால வீர்யத்தின் இயல்பான ஒரு உந்துதலையே உத்வேகத்திற்குக் கருவியாக்குகிறார்கள் . இந்த நிலையைத் தொடர்ந்து கலைஞன் தன்னைத்தானே போஷிக்கிறதானால் பிரச்னாபூர்வமான விழிப்பு நிகழவேண்டும்,

________________

தமிழில் இத்தகைய விழிப்பு பெரும்பாலான சிறந்த கலைஞர்களுக்கே தொடர்ந்து இருப்பதில்லை. சுயாபிமான த்திலும் அதைச்சார்ந்த இன அரசியலி லு ம் லெளகீகத்திலும் மூழ்கி மறைகிறார்கள். அதே சமயத்தில் தாங்கள் ஏதோ ஒரு சம்மத்தில் சாதித்தவற்றின் விளைவாக க் கிடைத்த கௌரவத்தை தொடர்ந்து காப்பதற்காக தொடர்ந்து எழுதுவதற் குப் புறம்பான செயல் முறைகளில் இறங்குகிறார்கள். இதன் இன்னொரு காரணம் வெறும் திறன் மட்டுமே முடிவான து என்ற மனோபாவமே என்றுகூடச் சொல்லலாம். வெறும் திறன் கூட உத்வேகத்தை செயல்படுத்தாது. உத்வேகம் நெருக்கடிகளினால் கதவு இடிக்கப்பட்டாலே வெளியேறும். இந்த நெருக்கடி பிரச்னாபூர்வமான விழிப்புகளை மேற்கொள்ளுகிற மனசுக்கே இருக்கும்.

பிரதி: 
இப்போது நீ பின்னிய வலையில் நீயே மாட்டிக்கொண்டாய். இப்போதே னும் சொல்லவந்த விஷயம், அதாவது பிரச்னை, முக்யமானது என்று ஒப்புக் கொள்கிறாய் அல்லவா?

ரூபம்: 
பிரச்னாபூர்வமான விழிப்பைத்தான் முக்யமானது என்கிறேனேயன்றி பிரச்னைகளையல்ல, உன் திசை புரிந்துகொள்ளத்தக்கது. பிரச்னை தான் முக்யம் என்றால் அவற்றைத் தொடர்ந்து பிரச்னைக்கு முடிவுகள் என்ற கட்டமும் தொடர்ந்து அந்த முடிவுகளுள் சரியான முடிவு என்ற ஸ்தம்பிதமும் நிகழும். பிறகு பிரச்னாபூர்வமான விழிப்புக்கே அவசியமற்று பிரச்சாரக் குறட்டை விடுவதில் இறங்கவேண்டியது தான்,

பிரதி: இருந்தும் இந்த 'பிரச்னாபூர்வமான விழிப்பு' என்ற அளவுக்கு நீ இறங்குவது எனக்கு திருப்தி, உத்வேகத்துக்கு நெருக்கடி என்ற காரணத்தை இந்த விழிப்பு ஏற்படுத்துகிறது. உத்வேகம் காரணங்களால் தீண்டப்படாதது என்ற உன்

________________

17

நிலையை இந்த இடத்தில் விட்டுக்கொடுக் கிறாய்.

- ரூபம்: --- 
உத்வேகம் என்ற ஜீவன் உயிரோடு இருக்கிற உள்ளத்தில்தான் பிரச்னாபூர்வ மான விழிப்பும் இருக்கும் என்று நான் கூறிவிட இயலும் - எனது இதுவரைய கூற்று எதனுடனும் முரண்படாமலே!

பிரதி: 
ஓ! -

இருந்தும் மி கலைஞனின் கண்காணிப்பு இல்லாவிட்டால் எத்தகைய நுண்மையும் தொடர்ந்து ஜீவிக்காது” என் பதை ஒரு அவசியமான - கலாச்சார வாழ்வுக்கு அவசியமான - சூத்ரமாகக் கொள்ளலாம், இந்த அவசியம் கருதியே பிரச்னாபூர்வமான விழிப்பை நான் குறிப்பிட்டேன். எந்த உள்ளம் இந்த பிரச்னாபூர்வமான விழிப்பை கலைத்துறையின் சாதனங்கள் மூலம் வெளியிடும்படி தூண்டுகிற உத்வேகங்களை மறுத்து, ஒதுக்கி அல்லது துறந்து தன் தன் போக்கில் லெளகீகம். இனம், அரசியல், மதவியல், என இறங்கி வேறு துறைகளுக்கு வசமாகிறதோ அது இலக்கிய ரீதியாக கவனிப் புக்கு உரியதல்ல.

பிரதி: 
லெளகீகமும், அரசியல் மத சமூகப் பிரச்னைகளும், இல்லாமல் 'பிரச்னாபூர்மான விழிப்பு' என்று எதைப் பார்த்து விழிப்பது?

ரூபம்:

இலக்கிய கலையுருவமாக வெளியீடு பெறுவது எந்த ஒரு பிரச்னையுமோ எந்த ஒரு பிரச்னைக்கும் முடிபு இது எனக் கண்டமையோ அல்ல, இதை எத் தனை வகைகளில் சொன்னாலும் உன் மர மண்டையில் ஏறாது போலிருக்கிறதே! பிரச்னையின் உக்ரத்தையே வெளியிடு கிற ஒரு அதிசயத் தன்மையைக் கொண்ட நிலையே கலை. பிரச்னையின் துறைக்கு முக்யத்துவும் ஏற்பட்டால் அல்லது இது தான்

________________

பிரச்னைக்கு முடிவு என்று கருதினால் அந்த பிரச்னையைச் சார்ந்த துறையினுள்ளேயே மனிதன் திசைகொள்வான், கலைஞனோ பிரச்னை களுடன் தொடர்பு கொண்டவனாயினும் அவற்றின் உக்ரத்துக்கு முக்யத்துவம் தந்து அந்த உக்ரத்தை தனது உத்வேகத்தின் சாதனமாக்கும்வரைதான் கலைஞனாவான். அதை மீறி பிரச்னையை அதன் துறையாக மேற்கொண்ட உடனேயே அந்த பிரச்னைக்கு உரிய துறையினனாகி, லௌகீக வாதியாகவோ, இன அரசியல் வா தியாகவோ, மதவாதியாகவோ மாறு கிறான். இதற்கு உதாரண சிகரங்களை நான் இங்கே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை ,

பிர்தி:

 'கைப் பிடியளவு கடல்* முன்னுரையில் ஆன்மீகபூர்வமான தர்சன நிலையை அடைந்த உன்னதமான மனிதர்கள் கவிதைகளை எழுதாதவர்களெனினும் அவர்களே உண்மையான கவிஞர்கள் என்று கூறுகிறாய். இங்கே முரண்படுகிறாயே,

அதே

ரூபம்:

கவித்வ நிலை உண்மையில் உத்வேகத்தை ஒரு பிழம்பென வெளியே எகிறுகிற அக ஆழத்துப் பரிதி என்பதே அந்த கூற்றின் கருத்து. இங்கே அரசியல், மத, இன, சமூக இயல்களுக்குப் புறம்பான ஆன்மீக விழிப்பு கவனிப்புக்கு வருகிறது, ஆன்மீக வாதி கவிஞனாகிவிட்டவனல்லன். அப்படி அநுமதித்தால் ஏன் அரசியல்வாதி கலைஞனல்னோ என்றெல்லாம் சில மண்டூ கங்கள் கிளம்பிவிடக்கூடும், அவற்றை விடப் பெரிய மண்டூகங்கள் 'கவிதைகளை எழுதாதவனெனினும் அக ஆழத்தில் கிடக்கும் கவித்வ உணர்வை எனக்குத் தெரியும், ஆகவே நானும் ஒரு கவிஞன் , என்னைப்பற்றி ஒரு விமர்சனம் எழுது' என்றும் ஆரம்பிக்கலாம். நான் உத்வேகத்துக்கு தரும் முக்யத்வம் அழுத்தம் பெறும் போது உத்வேகம் எதன் ஜ்வாலையோ அந்த அகப் பிழம்பு இன்னும் அதிக முக்யத்துவம் பெறவேண்டும் என்பதற்காகவே அந்த அக நிலையின் கணம்தான்

________________

உண்மையான கவித்வம் என்று கூறுகிறேன். அந்த அக நிலையின் - கணத்தில் லயம்கொள் ளும் 'ஆன்மீகவாதி' என்ற தன் நிலை அழிகிறது. அடையாளமற்ற அக நிலையே எஞ்சுகிறது. எனவே ஆன்மீகவா தியே கவிஞன் என்ற கூற்றுக்கு இடமில்லை, அந்நிலையை விட்டு வார்த்தைதளை அவன் உபயோகிக்க வரும்போது அந்த வார்த்தைகளின் மூலம் அவனது பயிற்சியும் திறனும் சார்ந்த அளவுக்கு சாதனையாகும் கவிதையைக் கொண்டே அவனது இலக்கியத் தரம் கணிக்கப்பட வேண்டும், அந்த முன்னுரைக்கு அவசியமான பின் குறிப்பு இது. இலக்கியத்துக்குப் புறம்பான ஆன்மீகச் செய்திகளை நிறைவேற்றும் சாதனைகள் பற்றி இங்கே பேச்சில்லை.

பிரதி: 
கலைஞன். பிரச்னைக்குரிய முடிவுகளை விட பிரச்னையின் உக்ரத்துக்கே முக்யத் துவம் தருகிறான் என்றாய். பிரச்னைக்கு முடிவு காணவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பிரச்சனையே இல்லை.

-

ரூபம்:*

 பிரச்னைக்கு முடிவுகாணவே கூடாது என்று எண்ணுபவனல்ல.கலைஞன், பாவம்! பிரச்னைகளுக்கு லெளகீக, இன, அரசியல், மத வாதிகள் தரும் முடிவுகளை இவனது நுண்ணுணர்வும் விழிப்பும் குறைபாடுகள் மலிந்த முடிவுகளாகக் கண்டுவிடுகின்றன, கலைஞனின் எதிர்ப்பியல்பாக இந்த விழிப் பும் நுண்ணுணர்வும் வெளித் தெரிகின் றன, அவ்வப்போது வெளியிடத்தக்க - செய்திகள். இவை. என்று சில தெளிவுகளை உணர்கிறானேயன்றி முன் கூறிய ஸ்பெஷலைஸ்டு துறையினரின் ரெடிமேட் வகை முடிவுகள் பிரச்னைகளைத் தீர்ப்பதில்லை என்றே இ வன் வெளிப்படையாகவோ உள்ளுணர்விலோ உணர்கிறான். ஸ்பெஷலைஸ்டு துறையினரின் முடிவுகள் தானே பிரச்னைகளாக வாழ்வை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன! அதை உணர்ந்தால் உன் கேள்விக்கே இடமில்லையே. வாழ்வின் அடிப்படைகளை மூ டி மறைப்பவையே

________________

ஸ்பெஷலைஸ்டு முடிபுகள். நிற்க விழிப்பை யும்  நுண்ணுணர்வையும் கலைஞன் இழக்கும்போது அவனது கலா சக்தி வலுவிழக்கிறது. தொடர்ந்து எழுதினால் தனது முந் திய சாதனைகளின் நிழல் பிரதிகளையே அரைத்துத் தள்ளுகிறான். தொடர்ந்து எழுதினாலும் எழுதாவிட்டாலும் பிரச்னா பூர்வமான விழிப்பை இழந்து ஸ்பெஷலைஸ்டு முடிபு க ளை மேற்கொண்டவன் உள்ளூர் கலைஞனாக நீடிப்பதில்லை; லெளகீக வாதி, இன வாதி, அரசியல்வாதி மத வாதி சம்பிரதாயவாதி என்ற வகைகளுள் ஒன்றாகி முகத்தை இழந்தவனாகிறன். கலைஞர்கள் என்று தொடர்ந்து கருதப்பட்ட பலர் இத்தகையவர்கள் தாம், பிரச்னாபூர்வமான விழிப்பு வாழ்வி ன் அடிப்படையை நோக்கி கலைஞனை ஈர்க்குமளவுக்கு அவனிடத்தே விவேகமும் பரிசுத்தமும் இருக்குமானால் கலைஞன் என்ற தகுதியையும் மீறிய உந்நதத்துவத்தை அடைகிறான்; ஆன்மீகவாதியாகிறான், இது வேறு விஷயம்,

பிரதி: 
ஆன்மீக வாதியாக இத்தகைய கலைஞனிடமிருந்து உத்வேகம் குடியோடிப் போய்விட்டதாக கொள்ள முடியாதா?

ரூபம்: 
மாறாக உத்வேகத்தை, வெளியீடு கொள்ள நாடுகிற மனோ பாவங்களுக்கு கருவியாக்காமல், அந்த மனோ பாவங்களின் மறைமுகமான தன்மைகளை முடிச்சவிழவைக்கும் பிழம்பாக மாற்றுகிற அபூர்வமான மனிதனே ஆன்மீகவாதியாக மாறி விடுகிற கலைஞன், கலைஞன் அல்லாத 'பாமர' மனிதனாக இருந்து ஆன்மீகவாதியாகிறவனிடத்தும் இதுவே நிறைவேறுகி றது. தன்னை, தனது உளைச்சல்களை கலாகிருஷ்டியாக்குகிற விசேஷ -திறன் களை தன்னுள் ஊக்குவிக்காமல் ஆன்மீக நிலை

________________

பெறும் இவன் உண்மையில் கலைஞனை விட ஒருவகையில் விவேகி என வேண்டும். ஏனெனில் உத்வேகம் கலையுருவாக வெளிப்பு டும்போது அது விரயமாகிறது. இதை 'பாமர' ஞானிகள் உண்மை உணர்ந்தவர்கள் என்றே தெரிகிறது. இது மட்டுமல்ல. வெளியீட்டுருவின் வழியில் கலைஞனது மனிதார்த்தமான அ க ம் பாவத்திற்கு போஷிப்பே கிடைக்கும். மிக, மிக அபூர்வமான கலைஞர்கள் - அதாவது, ஒருவகை யில் ஆன்மீக வாதிகளாக மாறத்தக்க கலைஞர்கள் தாம் - தங்களது படைப்புகள். மூலம் தங்களது அகம்பாவத்தைப் போஷிக்காதவர்கள் எ ன் று சொல்ல வேண்டும்.

பிரதி: 
உத்வேகம் கலையுருவாகும்போது விரயமாகிறது என்றா சொன்னாய்?

ரூபம்: 
ஆம், உத்வேகம் அகம் பாவத்தின் நெருக்கடிகளை வெளியீடாக மாற்றுவதற் காக பிறப்பதில்லை; அதற்காக மனிதார்த்தமான கலைஞனா ல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெருக்கடிகளை உணரும் சிறு உள்ளத்தை தனது அகண்டத்தினுள் ஈர்த்துவிட வாழ்வே மயமான ஒரு பெருநிலை நீட்டும் தீவிரல்தான் உத்வேகம். இது ஒரு அதிசயமான ரகஸ்யம். இந்த ரகஸ்யத்தை பகிரங்கமான நடைமுறையாக்கிவிட்டால் கலாச்சாரச்செழிப்பே இராது, பகிரங்க நடை முறையாக இது மாற்றப்பட்டதும் தனது அடிப் படையான ஆன்மீக உக்ரத்தையும் இது இழக்கும். இந்நிலை யி ல் கலாச்சாரச் செழிப்பு இல்லாததோடு ஆன்மீக ச் செழிப்பும் .அற்ற ஒரு பாலையாக வாழ்வு மாறிவிடும், இந்தியா அதிலும் முக்யமாக உயிரிழந்த நடைமுறையாகிவிட்ட ஆன் மிக மதிப்பீடுகளின் ஆதிக்கங்கள் மலிந்த தமிழ்நாடு இவ்வகைப் பாலையாகிக் கிடப்பதற்கு இது ஒரு பார்வைக் கோணமாக ஆய்வாளருக்கு உதவலாம்,

InfoBegin

InfoKey: Creator

InfoValue: Sejda 3.2.49 (www.sejda.org)