தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, March 20, 2018

மறைக்கப்பட்ட உண்மை ஃபிராய்டு பற்றிய மேசனின் விமர்சனம் :: Tr. ? by கால சுப்ரமணியம்

யாதும்சுவடுபடாமல்
கால சுப்ரமணியம்

இத்தொடரில் காலத்தாலும் வரலாற்றாலும் ஆதிக்க மேனிலைப் நோக்காலும் இலக்கிய ரசனை மாற்றங்களாலும் தற்செயல் விளைவுகளாலும் வேண்டுமென்றேயும்கூட, மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு மீண்டும் கண்டடைந்து தமது தனிச்சிறப்புகளை நிலைநிறுத்திக்கொண்ட சில இலக்கியப் பிரதிகளைப் பற்றி அறிமுக நிலையில் சொல்லப்படுகிறது. நீண்ட பழமையிலிருந்தும் இன்றைய நவீனகால் நடப்பின் குறுகிய எல்லைக்குள்ளும் இப்படியான பல பிரதிகள் இருக்கவே செய்கின்றன. முன் இதழ்களில் 'கில்காமிஷ்', "ஸ்வப்ன வாள்பவத்தம்', 'சீதக்காதி நொண்டி நாடகம்', 'தக்கை ராமாயணம்', 'மத்தவிலாசம்', 'தம்பிரான் வணக்கம்', 'கதா சரித் சாகரம் என்னும் பெருங்கதை பற்றிப் பார்த்தோம். இந்த இதழில்.


மறைக்கப்பட்ட உண்மை
ஃபிராய்டு பற்றிய மேசனின் விமர்சனம்



உண்மையைச் சொன்னால்,சைக்கோ அனாலிசிஸ் என்ற உன்னதமான, அழகிய, நவ புராணிகத்தைத் தோற்றுவித்தவர் என்ற முறையில், நாடகார்த்த ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்பவர் ஃபிராய்டு. புதையுண்ட ஓர் உண்மையின் கவித்துவமும் நாடகீயமும் கலந்த வெளிப்பாட்டையே புராணிகம் என்று இங்கு கூறுகிறேன். இந்த இலக்கியத்தனமான அழுத்தத்தை சைக்கோ அனாலிசிஸ சுக்கு நான் கொடுத்தாலும், சைக்கோ அனாலிசிஸின் விஞ்ஞானத் தகுதியை நான் கேள்விக்குட்படுத்த நினைக்கவில்லை, '- இது, உளப்பகுப்பாய்வு உத்தியில் நாவலொன்றைப் படைத்த பின் நவீனத்துவ எழுத்தாளரான டி. எம். தாமஸ், தன் 'வெண்ணிற விடுதி' நாவலின் முன்னுரைக் குறிப்பில் கூறியது. (The White Hotel by D. M, Thomas, Penguin, 1981),

ஆனால், இதே 1981-இல்தான், இந்த விஞ் ஞானத் தகுதியையும் கேள்விக்குட்படுத்தினார் ஜே. எம். மேசன். இவருடைய ஃபிராய்டு பற்றிய புத்தகம், எண்பதுகளின் மத்தியில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. நிறுவனமாகிவிட்ட ஃபிராய்டு பற்றியும், உளப்பகுப்பாய்வுத் துறை பற்றியும், பல்வேறு எதிர் விமர்சனங்கள் பிறந்துள்ளதையும் ஃபிராய்டை பின் அமைப்பிய உளவியலாளரான லக்கான் போன்றோர் மறுவாசிப்பு செய்துள்ளதையும் அறிந்துள்ள நிலையிலும், மேசனின் விமர்சனம் அதிர்ச்சியையே அளிக்கும்.________________




இன்றைய வளர்ச்சி, இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விமர்சனத்துக்கு உட்படுத்துவது போலவே, அக விஞ்ஞானியான ஃபிராய்டையும் விமர்சிக்கிறது. இலக்கிய உலகில் ஃபிராய்டை மிகவும் கிண்டல் செய்த பேர்வழி நெபக்கவ்; 'வியன்னாவின் சூனியக்கார டாக்டரையும் அவர் வழியினரையும்' சமயம் கிடைத்த போதெல்லாம் கடுகடுத்த வர் அவர் (Strong Opinions by Vladimir Nabokov), நோயாளிகளை அடிப்படையாக வைத்துப் பிறந்த கொள்கைகள், எல்லா மனிதருக்கும் பொதுவாகா என்றும், கத்தோலிக்க சர்ச்சில் பாவமன்னிப்புக் கேட்கும் மன நிலையிலேயே இன்று நோயாளி உளமருத்துவரை அணுகுகிறான் என்றும், பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காரல் சாபிரோ என்ற கவி-விமர்சகர் (எஸ்ரா பவுண்டு வழிக் கவிதையையும் கவிஞர்களையும் கடுமையாக எதிர்த்தவர்) ஓர் உளவியலாளனும் கவிஞனும் சந்தித்துப் பேசுவதை சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார் (Kari Jay Shapiro, The Poetry Wreck, 1975), அகப்புரட்சி பற்றிப் பேசிய ஜே, கிருஷ்ணமூர்த்தி, ஃபிராய்டுக்கு வெகுவாக மாறுபட்டே பேசியுள்ளார். ஜே. எம். மேசனோ, அஸ்திவாரத்தையே குலைத்து, ஆதாரங்களைக் காட்டி அதிரவைத்துள்ளார் (The Assault on Truth: Freuds Suppression of the Seduction Theory, 1984)

ஜே, எம், மேசன் (Jeffrey Moussaief Masson, 1941) ஒரு சைக்கோ அனாலிஸ்ட். டோரொன் டோ கல்வி நிறுவனத்தில் நேரடி மருத்துவப் பயிற்சியும் ஹார்வர்டில் சமஸ்கிருதத்தில் பட்டமும் பெற்றவர். (இதற்காக கல்கத்தா, பூனா பல் கலைக் கழக நல்கைகளைப் பெற்றவர்) சர்வதேச உளவியல் கழகத்தில் உறுப்பினர், சமஸ்கிருதத்தையும், இந்தியக் கல்வியையும், தெற்கு - தென்கிழக்கு ஆசியக் கல்வியையும், போதித்தவராகவும்; கலிபோர்னிய பெர்க்லி, டோரொன்டோ பல்கலைக்கழகங்களின் பேராசிரியராகவும் விளங்கியவர், இப்போது நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையின் கெளரவ ஆய்வாளராக இருக்கிறார். நூல்களாகவும் கட்டுரை களாகவும் எரிக் எரிக்சன் என்ற உளவியலாளர் காந்தி பற்றி எழுதியதற்கும், யோகாவும் செக்ஸம் பற்றியும், சைகோதெரபிக்கு எதிராகவும், ஆன்மீகமும் உளவியலும் பற்றியும் எழுதியுள்ளார். | A Dark Science; Women, Sexuality, and Psychiatry in the Nineteenth Century என்ற இவரது நூலுக்கு இவர் மணக்கவிருந்த ஒரு பெண்ணியவாதி முன்னுரை எழுதியிருக்கிறார். தற்போது நியூசிலாந்தில் வசிக்கும்________________




இவர், விலங்குகளின் மனப்பாங்கு பற்றியே பல புத்தகங்களை எழுதியுள்ளார் (When Elephants Weep - உலகப்புகழ் பெற்றது). வீகன் உணவாளராகவும் மிருகவதைத் தடுப்புச் செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார். இவரது முப்பாட்டனார் ஒரு கபாலியவாதி, தாத்தா ஹென்றி Moussaief என்ற தன் பெயரினை ஹென்றி மேசன் என்று மாற்றிக்கொண்டார். மேசன் தன் நடுப்பெயராக Moussaieff என்பதைச் சேர்த்துக்கொண்டார். 'In The Freud Archives' என்ற 'நியூயார்க்கர்' கட்டுரையில் பின்பு புத்தகமாகவும் அதே பெயரில் தொகுக்கப்பட்டது) Janet Malcolm என்ற உளவியல் பற்றி எழுதும் பெண் எழுத்தாளர், தான் சொன்னவற்றைத் தவறாகப் வெளியிட்டுவிட்டார் என்று மேசன் வழக்குத்தொடுத்து, நீண்ட காலம் அது நடந்து, நிரூபிக்க முடியாமல் தனக்கு எதிராகத் தீர்ப்புப் பெற்றது பரபரப்பான ஒரு நிகழ்ச்சி.

0 பிராய்டுக்கும் அ வ ரோடு ஆரம்பத்தில் - 00இணைந்திருந்த மருத்துவர் ஃபெலிஸ க்கும் உள்ள தொடர்பு, உளப்பகுப்பாய்வுத்துறையின் பிறப்பு ஆகியன பற்றி அறிய மேசன் 1970-இல் ஆவல் கொண்டார். இவை பற்றிய முக்கியத் தகவல்களைக் கொண்ட, ஃபெலி சுக்கு ஃபிராய்டு எழுதிய கடிதங்கள், சுருக்கமாகவே வெளியிடப்பட்டிருந்தன. அவற்றை வெளியிடும் உரிமையை வைத்திருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்துடன்

மேசனுக்குத் தொடர்பு இருந்ததால், முழுமையாக அவற்றைப் பிரசுரிக்க விரும்பினார். ஃபிராய்டின் சொந்த நூலகத்தை ஆராயும் வாய்ப்பும், இளைய மகள் அன்னா ஃபிராய்டின் முழு ஒத்துழைப்பும் கிடைத்தன. பிறருக்கு ஃபிராய்டு எழுதிய கடிதங்களும் ஃபிராய்டின் மாணவரும் உளவியல் பகுப்பாய்வு அறிஞருமான பெரெங்சியின் கடைசிக் கட்டுரையும் அகப்பட்டன. ஃபிராய்டின் ஆவணக் காப்பக இயக்குநராகவும் ஆனார். ஃபிராய்டின் வீட்டை மியூசியமாகவும் ஆய்வு மையமாகவும் மாற்றினார். எல்லா ஆவணங்களும் தொகுக்கப்பட்டன. ஃபிராய்டு காப்பிரைட்டுகளின் இயக்குநர்களில் ஒருவராகவும் | மேசன் உயர்வு பெற்றார்.

ஃ ெப லி ஸ் க டி த ங் க ைள .ெ வ ளி யி ட ஆராய்ந்தபோது, சில விஷயங்கள் அவருடைய கவனத்தை ஈர்த்தன. ஃபிராய்டின் மேற்பார்வையில் மன நோயாளிகளைக் கவனித்து வந்த எம்மா பற்றிய ஒவ்வொரு தகவலும் முன் பதிப்பில் வெட்டப்பட்டிருந்தன, 1897-இல் ஃபிராய்டு தனது "செடக்சன் கோட்பாட்டைப் கைவிட்ட பின், அதற்குச் சாதகமாகக் கிடைத்த பரிசோதனைக் குறிப்புகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டிருந்தன. செடக்சன் | கொள்கையை ஃபிராய்டே கைவிட்டுவிட்டதால், அது பற்றிய அவரது ஆரம்பத் தயக்கங்கள் வாசகரைக் குழப்பிவிடும் என்றே முன்பதிப்பில் நீக்கப்பட்டதாயும், | மேசனும் இவற்றை வெளியிடக் கூடாது என்று________________




அன்னா ஃபிராய்டு வேண்டினார். எம்மா பற்றிய செய்திகளும் பெரெங்சியின் கட்டுரையும் பிரசுரிக்கத் தேவையற்றவை என்று வற்புறுத்தினார்.

மேசனுக்கு இவற்றையெல்லாம் வெளியிடுவதுதான் வரலாற்றுக்குச் செய்யும் நியாயமாகவும், உண்மைக்கான வழியாகவும் தோன்றியது. செடக்சன் கொள்கையை முழுதாகக் கைவிடாமல் ஃபிராய்டு தொடர்ந்து மதிப்பளித்தே வந்துள்ளார் என்பதும், வாழ்நாள் பிரச்சினையாக அது அவரை அலைக்கழித்துள்ளது என்பதும், விடுபட்ட தகவல்களில் தெரிந்தது. அனைத்தையும் பதிவு செய்வது நம் கடமை; சரி தவறு பற்றி பிறர் பின்பு தீர்மானித்துக் கொள்வார்கள் என்று நினைத்தார் மேசன்.

அன்னாவுடனும் பிற குடும்ப நண்பர்களுடனும் விவாதித்தபோதுதான், தொடக்கூடாத விவகாரத்தில் தாம் தடுமாறி வீழ்ந்துவிட்டதை உணர்ந்தார். உண்மையைத் தேடியலையும்போது அகப்பட்ட வி ஷ ய ம ல் ல, மற்றவர் களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதே இது என்பதைக் கண்டார். இதை பகிரங்கமாக்க நினைத்தால், அவர் வாழ்க்கையே உருக்குலைந்து விடும் என்று (நல்லெண்ணத்துடன்தான்) புத்திமதி கூறப்பட்டது. முன்பு ஃபிராய்டுக்கு நேர்ந்து ஒரு இக்கட்டே தமக்கும் ஏற்பட்டதை அறிந்த மேசன், அவரை போல் பணிந்து விடக்கூடாது என்ற வைராக்கியம் கொண்டு ஆழமாக ஆராயலானார்.

பிரச்சினை வளர்ந்தபின் 1981-இல் தம் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேச, அன்னாவால் கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த ஆரம்ப உரைக்கு, அவையினரிடம் இருந்து அவருக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. பலவிதங்களில் தாம் பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும்கூட அவர் ஆய்வை மேலும் தொடர்ந்தார். எனவே, மீண்டும் ஒருமுறை விளக்கியுரைக்கக் கோரப்ப ட்டார், 'The Seduction Hypothesis in the Light of New Documents' என்ற விரிவான உரையாக அது அமைந்தது. உளப்பகுப்பின் ஆணிவேரையே அது அசைத்ததாலும், ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட உண்மையைப் பேசியதாலும், நிரூபணத் தகவல்களையும் மீறி எல்லோருடைய | கோபமும் அவர் மீது பாய்ந்தது. அஞ்சாமல், 'நியூயார்க் டைம்'ஸில் (1981) தொடராகச் சில கட்டுரைகள் எழுதினார், மேசன், ஆவணக்காப்பகப் பதவி பறிபோனது. ஆனாலும், விடவில்லை அவர், 1984-இல் புத்தகமாக எழுதி விரிவாக இப்பிரச்சினையை விவாதத்துக்குக் கொண்டுவந்தார், 1985-இல் புதிய முன்னுரை முடிவுரைகளுடன் 'The Assault on Truth: Freuds Suppression of the Seduction Theory' என்ற நூலும் மொழிபெயர்த்து விளக்கவுரை செய்த ஃபெலிசுக்கான கடிதங்களும் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் முழுமையாக வெளியிடப்பட்டன.

உளப்பகுப்பாய்வுத் துறையின் வாட்டர் கேட்டாக ஒரு புயலை உருவாக்கிய மேசனின் புத்தகம், அமெரிக்காவில் முதல் பக்கச் செய்தியானது. மேசனின் விமர்சனத் திறமையை ஜார்ஜ் ஸ்டைனர் போன்றோர் பாராட்டினர். ஆனால், சனாதன மரபுவாதிகளின் பலத்த எதிர்ப்பு எழுந்தது. புத்தகம் வெளிவரும் முன்பே, பலர் தவறான வழியில்________________




விமர்சனத்தைத் திருப்பிவிட்டனர். எனவே, புத்தகம் வந்ததும், சந்தர்ப்பவாதமும் சிறு பிள்ளைத்தனமும் நிறைந்தவராயும் கோமாளியாகவும் ஏமாற்றியாகவும் முட்டாளாகவும் மேசன் பரவலாகத் தூற்றப்பட்டார். எ ழுதப்பட்ட விஷ யத்தின் முக்கியத்துவம் ஒதுக்கப்பட்டு எழுதியவர் தாக்கப்பட்டர். ஆனால், மேசனுக்குத் தான் இன்று ஆதரவு வலுப்பெற்றுள்ளது. நேரடியாக மேசனின் புத்தகத்தைப் படித்தால்தான் அதன் பிரம்மாண்டம் வாசகருக்குப் புலப்படும்.

இங்கே, சுருக்கமாக மேசனின் ஃபிராய்டு பற்றிய நூலறிமுகம்.. மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்டு,

சார்கோட் என்ற புகழ் பெற்ற டாக்டரின் கீழிருந்து பயிற்சிபெற 1885-இல் பாரிஸ் சென்றார் ஃபிராய்டு. இரண்டு ஆண்டுகள் அங்கிருந்தார். தமது பிற்கால வாழ்க்கையைப் பெரிதும் பாதித்த நாட்களாக இவற்றைக் குறிப்பிட்டுள்ளார் ஃபிராய்டு.

பாரிசில் அச்சமயம், பலாத்காரப்படுத்தப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளும் சவப்பரிசோதனைகளும் நிறைய நடந்தன. இறந்த குழந்தைகளைச் சவப்பரிசோதனை செய்து, நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய கடமை, மருத்துவத் துறைத் தலைவரான டார்டியு (Tardieu) என்பவருக்கு வாய்த்ததால், குழந்தைகள் பலவந்தப்படுத்தப்படுவது உண்மைதான் என்று நிரூபித்து, முதன்முதலாக புத்தகம் எழுதினார் அவர். பலரும் அதை நம்ப மறுத்தனர். ஆனால், பின்பு, பெர்னார்டு, புரோவர் டெல் போன்றோரின் புதிய ஆய்வுகளும் டார்டியுவுக்கு சாதகமாய் வெளியாயின. எனவே, வாதப்பிரதிவாதங்கள் அக்காலகட்டத்தில் பலமாக எழுந்திருந்தன. அதுசமயத்திலேயே ஃபிராய்டு பாரிசில் இருக்க நேரிட்டது. அன்றைய மருத்துவ மாண வர்கள் சவப்பரிசோதனைச் சாலைக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். அங்கு வந்த பெரும்பாலான கேஸ்கள், பலாத்காரப்படுத்தப்பட்ட குழந்தைக ளு டைய வைதாம். இவை பற்றிய புரோவர்டெலின் நேர்முக சவப்பரிசோதனை விளக்கங்களைக் கேட்கும் வாய்ப்பும் ஃபிராய்டுக்கு கிடைத்தது. விஞ்ஞானத்தால் ஒதுக்கப்பட்ட புதிய விஷயங்கள் அவருக்கு அங்கு கிடைத்தன. பாலுறவு வக்கிரங்கள் பற்றிய மாக்னன் நூல்களில் ஈடுபாடு கொண்ட ஃபிராய்டு, அவற்றை மொழிபெயர்க்கவும் செய்தார். உளவியல் மருத்துவம், சவப்பரிசோதனை என்ற இருவேறு துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்த சார்கேட்டின் பாதிப்பும் அவரிடம் உயிர்ப்புடன் விளங்கியது.

குழந்தைகள் பலவந்தப் படுத்தப்படுவதே அதிகம் - அதைப் பற்றிக் குழந்தைகள் பொய் சொல்வது குறைவு என்ற டார்டியுவின் கொள்கைக்கு எதிராக, பலவந்தம் குறைவே - குழந்தைகள் அதைப் பெரிதுபடுத்துவதுதான் அதிகம் என்ற எதிர் கொள்கையும் பலம் பெற்று விளங்கியது. இரண்டையும் தெரிந்து வைத்திருந்தார் ஃபிராய்டு.

ஆனால், தம்மைப் பாதித்த விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறாததோடு, பிரஞ்சுக்காரர்களை மேற்கோள்கூட காட்டாமல், இவ்விஷயங்களைத்________________




தமது சொந்தக் க ண் டு பிடிப்புகளாக வே பிற்காலத்தில் ஃபிராய்டு வெளிப்படுத்தினார். பிரஞ்சுக்காரர்கள் செய்தது, மருத்துவரீதியான உடலியல் பற்றியதும் குற்றவாளிகள் பற்றியதும்தான். ஆனால், ஃபிராய்டு, பாதிக்கப்பட்டவர்களை உளவியல் ரீதியில் ஆராய்ந்தார். இது முக்கிய வேறுபாடு. பலாத்காரம் பற்றிய குழந்தையின் பொய்யும் வளர்ந்த மனநோயாளிகளின் பொய்யும் பொதுத்தன்மையுடையன என்பதும் நோய்க்குக் காரணம் பலவந்தமா அல்லது அது பற்றிய கற்பனையா என்பது பற்றியும் உண்மையிலிருந்து வேறாக நோய்க் கூறான கற்பனைகள் எப்படிப் பின்பு பிறக்கின்றன என்பது பற்றியும்ஃபிராய்டு ஆராய்ந்தார். (பின்பு இடிபஸ், எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் பற்றி அவர் விவரித்தபோது கற்பனையின் / மனப்பதிவின் பங்கு பற்றிக்கூறியவை குறித்து அறிந்திருந்தால் இந்த நோய்க்கூறு பற்றிய அவரது அன்றைய கருத்து மிகத் தெளிவாகும். )

பாலுறவில் ஈடுபாடோ, அதற்கான எண்ண

வளர்ச்சியோ அற்ற குழந்தைகளை , வளர்ந்தவர்கள் ஏமாற்றிப் பலாத்காரப்படுத்திச் சீரழிப்பதை பற்றிய 'செடக்சன் கோட்பாடு', 1896இல் வியன்னாவில், ஒரு சொற்பொழிவின் வழி ஃபிராய்டால் முதலில் வெளியிடப்பட்டது. உலகின் ஒருவித உறக்க நிலையைக் கலைக்கும் எண்ணம் அவருக்கு அச்சமயத்தில் இருந்தது. தற்பாதுகாப்பற்ற பலவீன நிலையில் உள்ள குழந்தையை, தம் அதிகாரத்தின் மூலம் பயமுறுத்தி, தன் வக்கிர ஆசையைத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பெரியவர்கள். இந் நிகழ்வின் குரூரமும் வன்முறையும் குழந்தையை வாழ்நாள் முழுதும் அநேக விதங்களில் பாதித்து ஆறாத வடுவை ஏற்படுத்துகின்றன._

குழந்தையின் உணர்வுகள் அறியாப்பருவத்திலேயே பலவந்தமாகத் தூண்டப்பட்டு, அது எல்லாவித அவநம்பிக்கைக்கும் வெறுப்புக்கும் ஆளாகிறது. இயல்புக்கு மீறிய இடையீடுகளால் அதன் சமநிலையும் குலைகிறது. ஃபிராய்டின் இக்கோட்பாட்டை அன்று கேட்ட கிராப்ட்எபிங் போன்ற உளவியல் மேதைகள் எள்ளி நகையாடினார்கள். நீண்ட காலப் பிரச்சினையின் நதி மூலம் பற்றிய ஆய்வு இவ்வாறு அசட்டை செய்யப்பட்டதில் ஃபிராய்டுக்கு மிகவும் | கோபம். இக்கோட்பாட்டை வந்தடைய தமக்கே நீண்டகாலம் பிடித்தது என்பதால், இப்புரட்சிகரக் கண்டுபிடிப்பு உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவது சிரமம் தான் என்றும் அவருக்குத் தெரியும். அவரைவிட்டு எல்லோரும் விலகத் தொடங்கினர். ஆனாலும், எதிர்ப்புணர்வு மங்காமல், தமது உரையைக் கட்டுரையாக (The Aetiology of Hysteria) பிரசுரித்தார். (ஆனால், அவ்வாறு அவசரப்பட்டு | வெளியிட்டதற்குப் பிற்காலத்தில் வருத்தப்பட்டார்).

பிறரால் கைவிடப்பட்ட நெருக்கடியான காலத்தில், 1894-1900களில் ஃபிராய்டின் நெருக்கமான நண்பராயிருந்தவர் வில்ஹெல்ம் ஃபெலிஸ் (Wilhelm Fliess), தமது கண்டுபிடிப்பை - மனநோய் மூலத்தை - பற்றி விவாதிக்கக் கிடைத்த ஒரே நபர், ஆனால், பெலிஸ், ஃபிராய்டின் ஆய்வு முக்கியத்தை உணர்ந்து மதித்தவர் எனினும் உடலியல் ரீதியானவை பற்றியதே அவர் அக்கறை. உளரீதியானவை பற்றி அவ்வளவாக அவர் அக்கறை காட்டியவரல்ல. இதை வெகுகாலம் கழித்தே ஃபிராய்டு உணர்ந்தார்,

எம் மா எக்ஸ் டீன் (Emma Eckstein) என்ற மற்றொருவரும் இக்காலத்தில் ஃபிராய்டுடன் நெருக்கமாயிருந்தவர்; உளவியல் வரலாற்றில் இன்று மறுக்கப்பட்ட - மறைக்கப்பட்டுவிட்ட ஒரு பெண் அவர், வசதியான குடும்பத்தில் பிறந்து, பெண்ணுரிமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு,________________




ஃபிராய்டின் ஆய்வுகளுக்கு உதவியாளராக இருந்து, குழந்தைகளின் பாலுணர்வு பற்றி சிறு நூலொன்றும் எழுதியவர் எம்மா, ஃபிராய்டுடன் மிக நெருங்கி வாழ்ந்தவராயும் மணமாகாமலே குழந்தையொன்றுக்கு தாயாகினார் என்று சந்தேகிக்கப்படக் கூடியவராகவும் விளங்கியவர், எம்மாவின் சரிதை, மர்மம் சூழ்ந்தே காணப்படுகிறது. அவர் நோய்வாய்ப்படுகிறார். என்ன நோய் என்று தெரியவில்லை. மாதவிலக்குப் பிரச்சினை, வயிற்றுவலி போன்றதாயிருக்கலாம். ஆனால், அவருக்கு கர மைதுனப் பழக்கமும் இருந்திருக்கிறது.

ஹிஸ்டீரியா போன்ற மனநோய் (Neurosis)களுக்கு எதற்காக அறுவை சிகிச்சை செய்யத் துணிந்தார் ஃபிராய்டு என்பது விளங்கவேயில்லை, ஃபெலிஸ் - இப்படி ஆலோசனை வழங்கியிருக்கலாம். எனவே, ஃபிராய்டின் முதல் 'பகுப்பாய்வு' நோயாளியான எம்மாவுக்கு 1895-இல் ஃபெலிசால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் ஜெர்சென்னியை துணைக்கு வைத்துக்கொள் ளும்படி ஃபிராய்டு | சொன்னதைக் கண்டுகொள்ளாமல், தனது முதல் | 'மேஜர் ஆபரேசனைச் செய்தார் ஃபெலிஸ்.

ஃபெலிஸின் உடலியல் பற்றிய கோட்பாடு விசித்திரமான ஒன்று. அது பற்றிப் புத்தகமும் வெளியிட்டவர் அவர். மூக்குக் கும் பாலுறவு உறுப்புகளுக்கும் ஒரு தற்செயலான தொடர்பு இருக்கிறது என்பது அவர் கண்டுபிடிப்பு. எம்மாவுக்கு கரமைதுனப் பழக்கமிருப்பதால், அவர் மூக்கில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்தால் நோய் தீரும் என்பது ஃபெலிசின் தீர்மானம். ஃபிராய்டு இதற்கு ஒப்புக்கொண்டதுதான் ஆச்சரியமானது. நோயாளியை ஓர் ஆய்வுக் கருவியாக அவர் உபயோகித்துக்கொண்டதையே இது உணர்த்துகிறது. கூடவே ஃபெலிசை பிரமாதமாக நம்பியதையும் காட்டுகிறது. பாலுறவுச் சிக்கலால் விளையும் மனநோய்களில், கரமைதுனம் முக்கிய பங்கு வகிப்பதையும், நோய்நிலையில் ஒரு பிரச்சினை மற்றொன்றாக மாற்றங்கொண்டு விடுவதையும் இ ரு வ ரு மே நம்பியவர்கள், உண் மை யான காரணத்திலிருந்து துன்பம் குறைந்த உளரீதியான தன்மைக்கு, பிரச்சினை மாறுகிறது என்று ஃபிராய்டு எண்ணினார், குறியிலிருந்து மூக்குக்கு பிரச்சினை மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்குச் சிறு அறுவை சிகிச்சை செய்து, பிறகு உளச்சிகிச்சையால் கரமைதுனப் பழக்கத்தை தடுத்துவிட்டால் நோய் நீங்கிவிடும் என்றும் ஃபெலிஸ் கருதினார். தனது செடக்சன் கோட்பாடு போலவே ஃபெலிசின் | கோட்பாடும் யாராலும் ஒப்புக்கொள்ளப்படாததாயும் விசித்திரமானதாயும் இருந்ததால் புரட்சிகரமாக ஃபிராய்டுக்கு பட்டிருக்கிறது. மேலும் ஃபெலிசுடன் மிக | நெருங்கிய தொடர்பைப் பெற (ஹோமோசெக்சுவல் ரீதியில்) விரும்பியதால், எம்மாவை அவரிடம் ஒப்படைக்கத் தயங்கவில்லை அவர். ஆனால், இதனால் எம்மாவுக்கோ விபரீதம் விளைந்தது. சிகிச்சைக்குப்பின் வலியும் இரத்தப்போக்கும் வீக்கமும் நாற்றமும் தோன்றி சிக்கல் பெரிதானது. - ஃபெலிசோ, சிகிச்சை முடிந்ததும் தொலைவில் இருந்த அவரது இருப்பிடத்திற்குப் போய்விட்டார். எனவே, ஜெர்சென்னி வந்து பார்த்துவிட்டு, மிகவும்________________




வற்புறுத்தி மறு ஆபரேசனுக்கு ஃபிராய்டை இணங்கச் செய்தார். ஆபரேசனில், ஃபெலிஸ் தவறுதலாக அரைமீட்டர் நீள நூல் ஒன்றை அகற்றாமல் போனதுவே மூலகாரணம்,

ஆனால், ஃபிராய்டு மாறியதற்கு எம்மாவுக்கு இழைத்த ஒரு தவறுக்கு காரணம் கற்பித்தலும், அ றி வுரீதி யி லும் உணர்வு ரீ தி யி லு ம் தான் தனிமைப்பட்டு விட்டதிலிருந்து தப்புதலும்தான் காரணம் என்று தெரிகிறது. Studies of Histeria என்ற புத்தக ஆய்வில் சேர்ந்து உழைத்த பிரூயர்கூட அவரை விட்டு விலகினார். (இந் நூலில்தான் மனநோயை விளைவிப்பதில், செக்ஸ் வாழ்க்கை முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆராய்ந்து கூறப்பட்டது. இதற்கே பலத்த எதிர்ப்பு) ஆரம்பத்தில் அவரிடம் ஈடுபாடு காட்டிய லோ யென்பீல்டும் பின்பு செடக்சனைக் கைவிடும்படி வற்புறுத்தினார். ஒரு ஆதரவுக் குரல்கூட இல்லை. பிரான்சில் அதிகாரவர்க்க மருத்துவர்கள் உண்மைக்குக் காட்டிய ஆதரவு போன்ற ஒரு சாதகமான சூழல் வியன்னாவில் கிஞ் சித்தும் இல்லை. எனவே, தார்மீகமான ஒரு பைத்திய நிலைக்குத் தள்ளப்பட்டார் பிராய்டு.

புதிய கோட்பாட்டில், குழந்தைக்கு எதிராகப் பெற்றோர் செய்த வன்முறையை, தான் நம்பியதை மறுத்து, பெற்றோருக்கு எதிராகக் குழந்தையின் ஆதிக்க உணர்வு எழுவதைப் ஃபிராய்டு காட்டினார், உண்மையில் பெற்றோர் மேல் எழும் வன்முறை என்ற வழிமுறை ஆரோக்கியமானதாகவே கருதப்படும். ஆனால், கற்பித்துக் கூறப்படும்போது, தவறு குழந்தைகளுடையதாகிறது. ஆதிக்க சமுதாயமாக நமது சமுதாயம் இருப்பதால் சமூகத்திற்குத் திருப்தியையும் ஆறுதலையும் தரும் விளக்கமாகவும் இது அமைந்தது. மேலும் தெராபி ஸ் டு கள் எல்லாம் வல்ல சக்திமான்களாகவும் நோயாளிகள் பாவப்பட்ட பலிக்கடாக்களாகவும் மாறினார்கள். 'உளப்பகுப்பாய்வியல்' என்ற புதிய துறையும் அதற்கான கோட்பாடுகளும் பிறந்தன. இடிபஸ் காம்ப்ளெக்ஸ், பாலுணர்வு விதிகள், அதன் வளர் நிலைகள் போன்றவை இவை, உள்முகத்தின் கற்பனா சக்தியும், நோயாளி தன் சுய சித்ரவதைகளைத் தானே கற்பித்துக் கொள்கிறான் என்பதும், கோட்பாடுகளாயின. உண்மை பின்னுக்குத் தள்ளி மூடி மறைக்கப்பட்டது. 'செடக்சன் கோட்பாட்டைத் தொடர்ந்து வைத்திருத்தல் என்பது இடிபஸ் காம்ப்ளக்ஸ் கோட்பாட்டைக் கைவிடுதல், அத்துடன் கற்பனா வாழ்வின் மொத்த உருவாக்கத்தையும் கைவிடுதல் என்பதாகும். உண்மையில் 'சைக்கோ அனாலிசிஸ்' என்ற துறையே இதன் பிறகு இருக்கமுடியாது; இவ்வாறுதான் எல்லாருமே கருதுகிறார்கள். எனவே, தான் ஃபிராய்டின் தடுமாற்றங்களை மறைக்க முயல்கிறார்கள்.

|ப்படைதல், பெண்களுக்கு வலி நிறைந்த அனுபவம். பழைய அழுத்தப்பட்ட நினைவுகளை அது நினைவிலி மனதிலிருந்து எழுப்பி விடுகிறது. நிகழ்காலத்தை விடத் துன்பமான கடந்தகால நினைவு ஆறுதல் தருகிறது. ஆனால், மனநோயுள்ள பூப்புப் பருவத்தினர், தம் செக்ஸ் தேவையைஒடுக்கிக்கொண்டு, தாம் பலவந்தப்படுத்தப்பட்டதாகக் கற்பித்துக்கொள் கிறார்கள். இதற்குப் பாலியல் விதிமுறைகளும் அதன் வளர்ச்சிப்போக்கும் காரணமே தவிர செடக்சன் அல்ல என்றார் ஃபிராய்டு. | 'செக்சுவல் கான்ஸ்டிடியூசன்' போன்ற புதிய கொள்கைகள் இப்படி அவரால் கற்பிக்கப்பட்டன,

ஃபிராய்டு தன் கோட்பாட்டின் தவறை உணர்ந்ததும் உடனே அதைக் கைவிட்டார் என்ற தவறான படிமத்தை உளவியல் வரலாறு ஏற்படுத்தி உள்ளது. அவருடைய பிந்திய ஆய்வு அனுபவங்கள் முந்திய தவறை ஒப்புக்கொள்ளும் புரட்சிகரத்தைக் கொணர்ந்தது என்பது ஸ்தாபிதமாகியுள் ளது. ஃபெலிசுக்கு ஃபிராய்டு எழுதிய கடிதங்களை வெட்டிச் சுருக்கித் தொகுத்தோர் சொன்னவையே பின்பு வேதவாக்குகளாயுள் ள ன. (The Origins of | Phychoanalysis: Letters to Wilhelm Feliss, Drafts and Notes; 18871902, Edited by Marie Bonaparte, Anna Freud and Ernest Kris)

ஆனால், ஃபிராய்டு உடனே செடக்சன் கொள் ைக யைக் ைக வி ட் டு வி ட வி ல் ைல . கைவிடுவதற்குத் தடுமாறிக் குழம்பி வதைபட்டிருக் கிறார். பிறர் அக்குரலை வெளித்தெரியாமல் பின்பு அமுக்கியுள் ளார் கள், தாம் சரியான காரியத்தையே செய்ததாக முழுத் திருப்தியையும் அவர் கொண்டிருக்கவில்லை என்பதை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.

செடக்சன் கொள்கைக்கு ஆதர வா ன தகவல்கள் அவர் ஆய்வில் தொடர்ந்து கிடைத்தே வந்துள்ளன. எம்மா இவ்விதத்தில் பிற பெண்களை ஆராய்ந்து தெரிவிப்பதில் அவருக்குத் தொடர்ந்து உதவியிருக்கிறார். 1902-இல் லியோபோல்டு லோ வென்பீல்டு என்ற உளவியலாளருக்கு எழுதிய கடிதமும், மிகக் குரூரமான செடக்சன் நிகழ்ச்சி ஒன்றை ஃபெலிசுக்குத் தெரிவித்த கடிதமும், "நான் முன்பு அவசரப்பட்டு முடிவு செய்திருந்தாலும், சரியாகவே நினைத்துள்ளேன்" என்று கூறும் பிராய்டின் பிந்திய ஒரு கடிதமும், அவர் அக்கொள்கையைக் கைவிடாமல் வைத்திருந்ததற்கு ஆதாரங்கள், 1916-இல் கூட, குழந்தைப் பருவ நிகழ்ச்சியில் - கற்பனையா யதார்த்தமா - எது முக்கிய பங்கு வகிக்கிறது என்று வேறுபடுத்திக் கூறுவதில் ஃபிராய்டு வெற்றிபெற்றிருக்கவில்லை. அவருடைய கடைசி காலத்தைச் சேர்ந்ததும் புகழ்பெற்றதுமான 'ஓநாய் மனிதன்' பற்றிய ஆய்வு வரலாற்றில் செடக்சனுக்கான பங்கு இருந்திருக்கிறது. அவருடைய இந்த ஆய்வை மறுபரிசீலனை செய்ய ஃபிராய்டால் பணிக்கப்பட்ட ருத் என்ற பெண் உளவியலாளர், குழந்தையின் குடும்பத்தார் ஒருவரால், ஓநாய் மனிதன் கட்டாய ஆசனவாய் குதப்புணர்ச்சிக்கு பலவந்தப்படுத்தப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்தார், ஆனால், ஃபிராய்டுக்கு இதை அறிவிக்கவில்லை, ஏ னெ னில் இவ் விஷயத்தை அறிய அவர் விரும்பமாட்டார் என்று ருத் உணர்ந்ததே காரணம். தமக்கு மாறுபட்ட கருத்தையும் பிடிக்காததையும் ஃபிராய்டு எதிர்கொள்ளும் கடுமையை எல்லோரும் அறிவார்கள். எனவே, “செல்வம், சுதந்திரம், பயணம், குழந்தைகளை (எனக்குக் கிடைக்காதவற்றை அவர்களுக்குக் கிடைக்கச் செய்து) கவலையில்லாமல்________________




வளர்த்தல் ஆகியவற்றைப் போலவே அமரத்துவப் புகழை எதிர்பார்ப்பதும் மனதுக்கு மிகவும் உகந்த அழகான காரியமே " என்ற ஃபிராய்டு, சமூக அங்கீகாரத்துக்கும் புகழுக்கும் வாய்ப்புக்கும் மயங்கித்தான் உண்மையைக் கைவிட்டாரோ?

மேலும் ஃபிராய்டுக்கு செடக்சன் நடந்தது பற்றி கவலையே இல்லை, அதன் பிற்கால உளவியல் விளைவு பற்றி மட்டுமே கவலை. ஆனால், உண்மையோ கற்பனையோ, இரண்டிலும் விளைவுகள் ஏற்படவே செய்கின்றன. உண்மையில் நடந்த ஒன்றை ஏற்கமறுத்தால், அதற்கான பதிலியை புறஉலகம் கொடுக்கா விட்டால், எதார்த்தத்திலிருந்து ஒருவன் விலகுகிறான். ஆனால், கற்பனைக்கு இந்த விபரீத விளைவு இல்லை . எனவே, சிறுவயதில் தீவிரப் பாதிப்பு நிஜமாக நிகழாத நோயாளியையே உளவியல் மருத்துவன் சரிபடுத்தமுடியும் என்றாகிறது. உ ண் மை யில் பாதிக்கப்பட்ட வர் க ளு க் கோ கதிமோட்சமே கிடையாது!

தமது புதுக் கொள்கைக்கு ஆதாரமாக, இளம் வயதில் பலவந்தப்படுத்தப்பட்ட பலர் பின் வாழ்வில் ஆரோக்கியமாக இருப்பதைப் பற்றி ஹாவ்லக் எல்லீஸ் என்ற புகழ்பெற்ற பாலியல் ஆய்வாளர் ஆராய்ந்து கூறியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார் ஃபிராய்டு. ஆனால், இது பற்றித் துருவித் தேடிய மேசன், எல்லீஸ் எங்கும் இப்படிக் கூறவில்லை என்கிறார். எல்லீசின் புத்தகத்தை ஃபிராய்டு படிக்காமல், தன் அவசரத்தில், அப்புத்தகம் பற்றி யாரோ எழுதிய மறுவிமர்சனத் தைப் படித்து விட்டு, எல்லீஸ் சொன்னதாக ஃபிராய்டு எழுதிவிட்டார் என்று தெரிகிறது. மேலும் எல்லீஸ், கின்சே போன்றோர் தம் பாலியல் ஆய்வுகளை ஆதாரபூர்வமாயும் முறைப்படியும் செய்யவில்லை என்பதை இன்றைய ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுவதையும் இங்கு கூறலாம். பாலுணர்வு வளர்ச்சி விதிகளை ஃபிராய்டு சொன்னது போல்________________




அதற்கு முன்பு யாரும் கூறியதில்லை . ஆனால், அவர் சொன்னதற்கெல்லாம், தனது நோயாளிகளிடம் அவர் பெற்ற அனுபவங்களே அடிப்படையாகின்றன, எனவே, ஆரோக்கியமானவர்களின் மன வளர்ச்சி பற்றி இவை எப்படி விளக்க முடியும் என்பதும் இன்று பரவலாக எழுந்துள்ள விமர்சனக் குரலாகும்.

ஃபிராய்டுக்குப் பின்புதான் செக்ஸ் பற்றி தாராளமாகவும் வெளிப்படையாகவும் பேச முடிந்திருக்கிறது. ஆனால், சோகமும் துன்பமும் கொடூரமும் நிறைந்த உண்மை உலகை விடுத்து, கற்பனைக் கனவுகளை, இல்லாத பார்வையாளர்களுக்கு. உள்ளக அரங்கில், தம் சொந்தப் படைப்புகளாகக் கூறி நடிக்கவேண்டிய நடிகர்களின் உலகை அவர் காட்டியது, உளப்பகுப்புத் துறையின் இன்றைய காயடிக்கப்பட்ட நிலைக்குக் காரணமாகிறது. அவர் மறுத்த கொள்கையான செடக்சனே - குழந்தைப் பருவ பாதிப்பே பின்னைய வாழ்வில் மனநோயாகிறது என்பதே - அவரது மகத்தான கொள்கையாக மிஞ்சி நிற்கிறது. மனநோய் என்பது பாரம்பரியமானது என்பதே மரபு மருத்துவம், மரபை மீறியதுடன் அதிர்ச்சியையும் ஊட்டியது செடக்சன் கோட்பாடு. ஃபெலிஸ் மட்டுமே தனக்கு ஆதரவு என்று நம்பினார் ஃபிராய்டு. ஆனால், ஃபெலிசின் பார்வையே வேறு. பெலிசின் மகனான ராபர்ட் ஃபெலிஸ், தன் தந்தை செக்சுவலாக ஃபிராய்டுக்கு தொந்தரவு கொடுத்ததாகக் கூறுகிறார். மேலும் செடக்சன் கொள்கையைக் கைவிட்டது. ஃபிராய்டின் மாபெரும் தவறு என்றும் ராபர்ட் கடிந்துள்ளார். அவர் எழுதிய புத்தகத் தொடரில் கடைசிப் புத்தகமான Symbol, Dream and Psychosis (1973) என் பதில், உளப்பகுப்பாய்வு, செடக்சன் கோட்பாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதன் கட்டாயத்தை விளக்கியுள்ளார் ராபர்ட். எல்லாத் தீவிர மன நோயாளிகளும் நான்கு வயதுக்குள் பலவந்தப்படுத்தப்பட்டவர்களே என்பதை அவர் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன, பெரிய விஞ் ஞானியாக விளங்கினாலும், வெளியுலகுக்குச் சாதாரணமானவாராகத் தெரிந்து, மிக நெருங்கிய குடும்பத்தவரைத் தவிர வேறு யாரும் சந்தேகப்பட முடியாத மன நோயுள்ள வர்களை Ambulatory Psychotic என்பார்கள்,

ஃபெலிஸ் இப்படிப்பட்டவர். குழந்தைகளை ஏ மாற்றித் தொந்தரவு கொடுப்பவராயும், தன்னை சிறுவயதில் பலவந்தப்படுத்தி அதற்காக அடித்தவராகவும் தம் தந்தையைப் பற்றி ராபர்ட் நினைவு கூர்கிறார். இது பற்றி ஃபிராய்டு போன்றோரிடம் தாம் நேரில் விசாரித்தபோது அவர்களும் ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார், ஃபெலிஸ் ஒருவித மனநோய் பீடித்தவர் என்று ஃபிராய்டின் சரிதையில் எர்னஸ்ட் ஜோன்ஸ் லேசாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். இப்படிப்பட்ட ஃபெலிஸ் ஃபிராய்டின் கொள்கையை ஏற்றுக்கொண்டு விவாதிக்க முன் வருவாரா? ஒரு குற்றத்தைத் தீவிரமாகப் புலனாய்ந்து பல சிரமங்களுக்கு ஆளாகிக் கடைசியில் தன் நண்பன்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்த துப்பறிவாளனின் நிலைதான் பிராய்டுக்கு. இதற்காகவும் தன் கொள்கை மேல் அவருக்கு எரிச்சல் ஏற்பட்டு இருக்கலாம். நோய்க்________________




கூறு அல்லாத பாலுணர்வுகள் மன நோய்க்குக் காரணமல்ல என்கிறது செடக்சன் தியரி, ஆனால், எல்லாமும் தான் காரணம் என்றவர் ஃபெலிஸ், (ஃபிராய்டுக்கு முந்தியோ அல்லது சமகாலத்திலோ, குழந்தைப் பருவ பாலுணர்வுகளைப் பற்றி ஆராய்ந்து கண்டுபிடித்திருந்தவராக ஃபெலிசைப் பற்றி பிராங்க் சால்லோவே எழுதிய ஃபிராய்டு சரிதை கூறுகிறது, எனவே, இரு மாறுபட்ட துருவங்கள் பிரிந்தது இயல்பே. ஆனால், இது ஃபிராய்டை மிகவும் பாதித்தது.

தான் நம்பிய ஒரே நண்பரும்.- யாருக்காகத் தமது கொள்கையையே மாற்றினாரோ அவரும், தம்மைக் கைவிட்டதும் மன இறுக்கமடைந்தார் பிராய்டு. ஃபெலிசுக்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகள் நெருங்கிய நண்பனாயும் மகனைப் போலவும் பழகியவர் சான்டோர் பெரெங்சி (Sandor Perencezi), ஃபிராய்டின் உண்மை மாணவராய் இளம் தலைமுறையினருக்கு ஆதர்சனமாய் விளங்கிய அவர், கடைசி காலத்தில், ஃபிராய்டு அதிர்ச்சியடையும்படி, வேறுவழியில் திரும்பினார். தமது ஆய் வு அனுபவங்கள் , செடக்சன் கொள்கைக்கு இட்டுச் செல்லவே, அதில் தீவிரமாக ஆராயலானார் பெரெங்சி. தம் குருவுக்கு எதிராக அவர் திரும்பியது எர்னஸ்ட் ஜோன்ஸ் போன்றோருக்குப் பிடிக்கவில்லை. பெரங்சியுடன் உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பழகிய ஜோன்ஸ், தமது பிராய்டின் சரிதையில், இவரைப் பற்றித் தவறாகவே சித்தரித்துள்ளார். இவர் பற்றி ஃபிராய்டுக்கும் ஜோன் சுக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்துக்களும் பெரங்சியின் ெவ ளி வர ா த டைரியும் அதிர்ச்சி க ர ம ா ன விஷயங்களைத் தெரிவித்துள்ளன. கூட்டங்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பிலிருந்த ஜோன்ஸ், பெர ங் சி யி ன் விளக்கவுரைக் கூட்டத்தைக் கூட்டுவதிலிருந்தும் தப்பிக்க முடியவில்லை. தம்மேல் அவர் மனவருத்தம் கொள்ளக் கூடும் என்று பயந்தே, பிறர் தடுத்தும் கேளாமல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் ஜோன்ஸ். அதில் வாசிக்கப்பட்டதே 'Confusion of Tongues' கட்டுரை. ஃபிராய்டின் செடக்சன் கட்டுரைக்கு நிகரானது இது.

பிரபலங்களான ஃபிராய்டும் அன்னாவும் ஜோன்சும் டி சசூரும் மற்றவர்களும் இக்கட்டுரையை எதிர்மறையாகவே கணித்து, சமூகத்துக்குத் தீமை விளையும் இதனால் என்றனர். ஆனால், கட்டுரை பிரசுரம் பெற்றது. ஜெர்மனியில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆங்கிலத்தில் வெளிவர இருந்த சமயம் பெரங்சி இறந்துவிட்டார். எனவே, பிரசுரமாகாமல் பார்த்துக்கொண்டார் ஜோன்ஸ், உளப்பகுப்புத் துறைக்கு எதிர்ப்பையும் எதிராளிகளுக்கு வாய்ப்பையும் அது தந்துவிடும் என்ற காரணத்துடன், ஃபிராய்டின் ஒப்புதலுடன் இக்காரியம் நிறைவேறியது, ஃபிராய்டின் விருப்பமே ஜோன் ஸால் இவ்விதம் நடைபெற்று ள் ளது. தன் முன்னாள் நண்பனுக்குத் துரோகமாக மட்டுமல்லாமல், தம் சித்தாந்தத்துக்கு எதிரானதை நெறித்துக் கொல்லவும் ஃபிராய்டு தயங்கியதில்லை என்பதையே இது காட்டுகிறது. தந்தையின் அன்புக்கு ஏங்கிய பெரங்சியின் உளக்கூறே, பகுப்பாய்வில் புதிய மாற்றத்துக்கான தேவையைக் கொணர்ந்தது என்றார்________________




ஜோன்ஸ். முன்பு, நண்பராயிருந்த ஃபெலிசிடம் திறந்த மனத்துடன் பழகியது போல் (ஆனால், ஃபெலிஸ், பிராய்டிடம் அப்படிப் பழகவில்லை ) தன்னிடமும் ஃபிராய்டு இருக்க விரும்பினார் பெரங் சி. ஆனால், அவர் அப்படியில்லை . மனக்குழப்பத்திலும் தனிமைப்பட்டதிலும் உடலும் உள்ள மும் நலிந்து மரண மடைந்தார்; இந்தக் கைங்கர்யத்துக்கு ஃபிராய்டே முக்கியப் பொறுப்பு என்கிறார் மேசன். பெரங்சியின் கொள்கைகளும் ஒரு புரட்சியாளனையே காட்டுகின்றன,

வளர்ந்தவரின் அதிகாரம் கலந்த உணர்வுத் "அதீவிரம், குழந்தையை நோக்கித் திரும்புகையில், 'இடிபஸ் காம்ப்ளெக்ஸ்' உருவாகிறது. ஃபிராய்டு சொல்வதுபோல் இது ஆசையால் அல்ல பயத்தால் தான் குழந்தைக்கு உருவாகிறது - பெற்றோரிடம் அன்பு செலுத்தாவிட்டால், விருப்பத்திற்கேற்ப நடக்காவிட்டால் கொன்றுவிடுவார்கள் என்ற பயம்,

பகுப்பாய்வின்போது நாடகத்தனம் ஒன்று உருவெடுக்கிறது. நடுநிலையாளனாக ஆய்வாளன் நடிக்கிறான். ஆனால், இதற்கு எதிர்மாறாக இருக்கிறான். இதை

THE A, நோயாளிக்கு அவன் உணர்த்துவதும் இல்லை . இது போலித்தனம். ஆனால், நோயாளி உள்ளூர இதை உணர்ந்தே தன் உணர்வுகளை மறைக்கவும் ஆய்வாளனை ஏமாற்றவும் முனைகிறான். உண்மையிலும் நேர்மையிலும் நோயாளி ஏன் இவ்வாறு அக்கறை காட்டுகிறான்? ஏனெனில் அவன் முன்பே தீவிரமாக உ ரு க் கு ைல க் க ப் பட் டு ள் ள ா ன் , குழந் ைத யி ல் கி ட்டாத அ ன் பு,

|EFFREY இப்போதும்கூட கிடைப்பதில்லை. தன் அதீத விருப்பங்கள் நிறைவேறாதபோதே அவன் நோய்வாய்ப்படுகிறான்.

இவ்வாறு பெரங்சி, செடக்சன் கோட்பாட்டுக்குத் திரும்பியதோடல்லாமல், பிராய்டின் பிற்காலக் கண்டுபிடிப்புக்களான இடிபஸ் சிக்கல் போன்றவற்றையும் மறுவிமர்சனத்தோடு அணுகினார். ஆரம்பத்தில் அவர் இவை பற்றி ஃபிராய்டிடம் கலந்து பேசத் துணியவில்லை, மாற்றுக் கருத்துக்களின் மேல் ஃபிராய்டுக்குள்ள சகியாமை எல்லோருக்கும் தெரிந்ததுதானே? சரியான முறையில் பகுப்பாய்வு செய்வதுதான் சீக்கிரம் நோயைக் குணமாக்கும் என்றவர்தாம் ஃபிராய்டு, பெரங்சி தனக்குச் சரியென்று பட்ட விதத்தில் நோயாளிகளைக் கையாளத் தொடங்கினார். ஃபிராய்டும் பிறரும் சந்தேகத்துடன் பார்க்கலாயினர். குழந்தையில் பெறாத அன்பை நோயாளிக்குத் தர பெரங்சி முயன்றார். இது எதிர்ப்புக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. மரபிலிருந்து மாறுபட்டது ஃபிராய்டுக்கும் பிடிக்கவில்லை.

பெண் நோயாளி யை மடியில் இருத்திக் குழந்தைபோல் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், பொம்மையைக் கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறார் என்று பெரங்சி விமர்சிக்கப்பட்டார். லேசான பாலுணர்வுத் திருப்தியை நோயாளிக்கு அளிப்பது________________




RUTH

பற்றி ஒரு பூர்ஷ்வாத்தனமான மறுப்பை ஃபிராய்டு காட்டவில்லை என்றாலும், பெரங்சியின் முறைகளை வெளியிட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? ஏன் நோயாளியை முத்தமிடுவதுடன் நிறுத்த வேண்டும் என்பார்கள். கடைசியில் கேளிக்கை விடுதி நடத்துவது போலாகிவிடும் பெரங்சியின் உளப்பகுப்பாய்வு முறை, இப்படி பிராய்டு சந்தேகப்பட்டார், 'முடிவை மறைப்பது நேர்மையல்ல; அமுக்கப்பட்டதை வெளிக்கொணரும் சுதந்திரச் சூழலை, இன்ப மன நிலையையே உருவாக்குகிறேன் (Mutual Analysis)' என்றார் பெரங்சி. நோயாளியிடம் தக்க சமயங்களில் தனது பிரச்சினைகளைக் கூடப் பரிமாறிக் கொண்டு ஒரு சகஜ நிலையை உருவாக்கினார் அவர்,

நாம் நினைப்பதற்கு மாறாக, கட்டுப்பாடும் கெளரவமும் வாய்ந்த உயர் குடும்பங்களில்தான் குழந்தைகள் பலவந்தத்துக்கு ஆளாகிறார்கள். பெற்றோர், உறவினர், முதியோர், வேலைக்காரர், ந ம் பி க் ைக க் கு ரி ேய ார் கு ழ ந் ைத யி ன் கள்ளமின்மையைத் தவறாகப் பயன்படுத்தி தம் திருப்தியற்ற நோய்க்கூறான உணர்வுக்கு அவர்களை வடிகாலாக்குகிறார்கள். அன்புக்கு ஏங்கும் குழந்தை

இவ் வாறு வக்கிரமான வர் களால் SSAULT

சீரழிக்கப்படுகிறது. ஆனால், இதற்கு ஒரு பாதுகாப்புக்கவசத்தை (Defence Mechanism) குழந்தை மேற்கொள்கிறது. "பலாத்காரப் படு த் தி ய வ ருடன் த ன் ன ன அ டையா ள ப் ப டு த் தி க் கொள்ளுதல்" என்று இத்தன்மைக்கு முதன் முதலில் விள க் க ம ளி த் தார் பெரங்சி. பலாத்காரத்தைப் பெற்றோர் அறிந்தபோதும் கூட குழந்தையே அ தற் கு ப் பொறுப்பு என்று

தள்ளிவிடுகிறார்கள், தவறிழைப்போரே MASSON

அதை மறுப்பவராயும் அடித்துத் துன்புறுத்துவோராயும் மாறுகிறார்கள்.

இவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டு

அடிபடும் குழந்தை, பாலுணர்வையும் வன்முறையையும் தொடர்புபடுத்திக் கொள்கிறது. தன்னை மனதளவில் பாதுகாத்துக் கொள்ள, கனவுகளில் ஆழ்கிறது. கொடுமைப்படுத்தியவர்களைத் தவறான கோணத்தில் பார்க்கிறது, எ ன வே, நடந்ததையும் எதார்த்தத்தையும் மறுக்கிறது. நினைவின் இடுக்குகளில் பழைய ஞாபகம் என்றைக்குமாகத் தொலைந்து போகிறது. துன்புறுத்துவோரின் கோபத்துக்கு வெட்கப்படுகிறது. எனவே, வெறுப்பில் தோய்ந்து பாலுணர்வு வளராமல் நிலைக்கிறது. வக்கிர வடிவெடுக்கிறது. மனநோயாகிறது. இந்தத் தப்பித்தலில் வயதுவந்தோரின் தேவைகளான திருமணம், தாய்மை, தந்தைமை போன்றவை தேவையற்றவையாகின்றன. உணர்வுகளை அடக்கமாட்டாமல் கனிந்த நிலையும், வெளிப்படையாகச் சுயகட்டுப்பாடற்றுச் செயல் படுதலும் நேர் கிறது, ஒரு சிலரிடம் இது அன்பான நடவடிக்கை, குற்றங் களுக்கு கொதித்தெழுந்து தண்டித்தல் என்ற மூன்றாம் வடிவையும் பெறலாம். எல்லாச் சுமைகளையும் வலிந்து தானே ஏற்றுக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றுதல் இவ் வகைப்பட்டதே, ஆனால்,________________




சுயநலமற்ற நிலையல்ல இது. இழந்த அமைதியையும் நெகிழ்வையும் பெறும் காரியம். துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவிதப் பயங்கரவாதம் (ஒருவித மஸோக்கிசம்), உண்மையின் தாக்கம், மறு எதார்த்தம் ஒன்றைப் படைத்து முழுவேகத்துடன் நோயாளியைத் தாக்குகிறது. கனவு நிலையில் முன்னைய பயங்கரம் நினைவுகூறப்படுகிறது. சில மாறுதல்களுடன் கனவுப் படிமங்கள் வழியாகப் பழைய காட்சி மீண்டும் நிகழ்கிறது. தனக்கான தற்காப்புகளுடனேயே கனவு இதை நிகழ்த்தும். உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நிற்காமல், ஒரு தாயாக ஆய்வாளன் இருக்கும்போது, தன் திறமையாலும் மேதமையாலும் சுகமான சூழ்நிலையை உருவாக்கி, பழைய நோய் மூலத்தை மறு படைப்பாக்க உதவுகிறான். நோய் மூலம் நோயாளிக்குத் தெரிந்ததுமே மனநோய் நீங்குகிறது. இதுதான் Relaxation Principle.

இவ்வளவு விரிவாகவும் அனுதாபத்துடனும் இப்பிரச்சினைகளை யாரும் பெரங்சிக்கு முன்பு அணுகியதில்லை . முறைகள் அதீதமான வை என்றாலும் நோயாளியிடம் அவை பலித்தன. செவர்ன் என்ற நாட்டியக்காரி அவரிடம் பணிப்பயிற்சி பெற்று ஆய்வுகளில் உதவி வந்தார். இவர் உதவியாலேயே செடக்சன் கொள்கைக்கு அவர் ஆதாரங்கள் கண்டிருக்க வேண்டும். ஃபிராய்டு முன்பு கண்டதன் விளக்கமே இது என்றாலும் அவர் ஒதுக்கியதை மீண்டும் நிலைநாட்டியதால் பெரங்சியின் செயல் புரட்சிகரமானதாகிறது,

7ாழந்தைகள் மீதான பலாத்காரம் / வல்லுறவு பற்றி

இன்று சர்வ சாதாரணமாகப் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் காப்பு / தற்காப்பு பற்றிய செய்முறை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் அளித்துக் கனடாவிலும் அமெரிக்காவிலும் புகழ் பெற்றவராய் இருந்தவர் Kenneth Wooden. (Childlure-Family Guide, 1986). இது குழந்தையைப் பாலியல் வன்முறையிலிருந்து தடுத்து வளர்ப்பது பற்றியும் அதற்குக் கற்றுக்கொடுப்பது பற்றியும் கூறுகிறது. குழந்தைகளிடம் செக்சுவலாக ஈடுபாடு கொள்ளும் வயது வந்தவர்களின் (Pedophies) குற்றங்கள் பற்றி விளக்கி அன்றைய ரீடர்ஸ் டைஜஸ்ட் (The Murder by Childhood, April 1989) முதல் இன்றைய இணையம் வரை பல கட்டுரைகளும் காட்சித் தொகுப்புகளும் உள்ளன. கதையிலக்கியம், திரைப்படங்கள் என்று இப்படிப் பல உதாரணங்களைக் கூறலாம். நீதித் துறையினரும் அதிகாரிகளும் குழந்தைப் பாதுகாப்பு சங்கத்தினரும் (Victimology பற்றி) வேண்டுகோள்களையும் விளக்கங்களையும், கொடுத்து வருகிறார்கள். குழந்தைகள் இப்படி அதிக அளவில் சீரழிக்கப்படுவதையும் அதன் பின்விளைவு பற்றி பெருத்த அறியாமை நிலவுவதையும் சிறார் போர்னோ விளைவிக்கும் உற்பாதங்களையும் இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது விஷயத்தில் குழந்தைகள் சொல்வதை நம்புவதே முன்னேற்றத்தின் முதல்படி என்கிறார்கள்.

சமீப ஆய்வுகளின்படி பாலியல் வன்முறைக் காளானவர்களில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைப் பருவத்தினர், அமெரிக்காவில் நடந்த ஓர் ஆய்வு,________________




பத்தில் ஒரு குழந்தை இப்படி பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது. அதில் மூன்றில் ஒருவர், பெற்றோர், உறவினர், முதியோர், வேலைக்காரர்களால் பலவந்தப்படுத்தப்பட்டவர்கள், 45% தீவிரப் பெண் குடியர்களும் 75% விலைமாதர்களும் 80% வன்புணர்ச்சியாளர்களும் குழந்தைப் பருவத்தில் பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரிகிறது, எனவே, செடக்சன் கொள்கையைக் கைவிட்ட ஃபிராய்டின் நிலை பிரச்சினைக்குரியதாவதில் ஆச்சரியப்படுவதிற்கில்லை .

பொதுவாக எல்லா உளவியல் மருத்துவர்களும் ஃபிராய்டிசக் கோட்பாட்டு முறைகளைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். ஆட்லர், யுங் போன்றோரும் அவருடைய அடிப்படைகளில் அதிகம் கைவைக்காமல், மேல் கட்டுமானத்திலேயே மாறுதலைக் கொண்டுவந்தார்கள். செடக்சன் கோட்பாட்டைக் கைவிட்டதற்கு ஃபிராய்டின் தனிப்பட்ட தைரியமின்மையே காரணமாகிறது. அகத்தாக்கத்துக்கும் அகக்கற்பனைக்கும் முக்கியத்துவம் | கொடுத்ததற்கு அவரளவில் சரியான நியாயத்தைக் | கொண்டவராகக் கூட இருக்கலாம். ஆனால், இன்றைய ஆய்வுகள் அதற்குச் சாதகமாயில்லை. புறத்தாக்க மன நோய்க்கு அகக்காரணத்தை வைத்திருக்கும் பகுப்பாய்வுத் துறை, நோய் நீக்கம் செய்யமுடியாது. இதைப் பெண் நிலை வாத உளப் பகுப்பாய்வாளர்கள் இன்று உணர்த்தி வருகிறார்கள்,

நினைவிலி மனம் பற்றிய உண்மையான கண்டுபிடிப்புக்களையும் இச்சூழலில் சரியாகப் ப ய ன் ப டு த் த மு டி யாது. ேநா யா ளி யை நம் பாமல், நோயாளியின் குறையை நம்புவது முழு ஆய்வையும் குழப்பிவிடும். குழந்தையைப் பலவந்தப்படுத்தியவருக்குப் பதிலியாகவே இன்று ஆய்வாளன் நிற்கிறான். ஆய்வாளனால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத போதும், அவன் சொல்வதை நோயாளி நம்பினால்தான் நோய் நீக்கம் வெற்றி பெறும் என்கிறது உளமருத்துவம். எனவே, ஆய்வாளனின் நினைப்புக்கேற்றபடிதான் நோயாளி மாறுகிறான். அவனுடைய சுயமும் சுதந்திரமும் மரணமடைகிறது. பலவந்தப்படுத்தியவரைக் காட்டிக் கொடுக்காத சமூகத் தேவையே, இங்கு ஆய்வாளனை முன்னிட்டும் பிறக்கிறது. தவறு தொடர்கிறது.

ஃபிராய்டு செடக்சன் கோட்பாட்டைக் கைவிட்டாலும், அதன் பங்கை மறுக்கவில்லையே எ ன் ற எ தி ர் வ ா த மும் இன்று எ ழு கி ற து , மேசன் பெரிதுபடுத்துகிறார் என்று மறுத்தும் உளப்பகுப்பாய்வியல் துறையில் விமர்சனங்கள் பிறந்துள்ள ன, (Allen Esterson, Seductive Mirage : An Exploration of the work of Sigmund Freud& Jeffrey Masson and Freud's seduction theory: a new fable based on old myths). ஆனால், புற வன்முறையல்ல, அது பற்றிய நினைவை அழுத்திப் புதைத்து வைக்கும் குற்ற உணர்வே நோய்க்கு நேரடிக் காரணம் என்பதில் ஃபிராய்டு தீர்மானமாக இருந்தவர். கற்பனையின் எதார்த்தத்தை விட, அதன் உளரீதியான எதார்த்தமே அவருக்கு முக்கியம். அதனால்தான், குளிப்பாட்டல் போன்றவற்றால் ஆரம்ப செக்ஸ் உணர்வுகளைக் குழந்தைக்குத் தாய் ஊட்டவேண்டிய தேவையை அவர் வலியுறுத்துகிறார்,________________




சுதந்திரமான நோய் நீக்கம், பயமும் சந்தேகமும் உள்ள இடத்தில் கிடைக்காது. தன்துறையின் உண்மை வரலாற்றை எதிர்கொள்ளவே பயப்படும் உளவியலாளர்கள் நோயாளியின் பழங்காலத்தை எப்படி எதிர்கொள்ள முடியும்? தன் கண்டுபிடிப்பு விளைத்த களேபரங்களைக் கண்டே ஃபிராய்டு அதைக் கைவிட்டார், ஒரு தலைமுறைக்குப் பின் பெரெங்சி அதே கண்டுபிடிப்பைச் செய்தபோது ஃபிராய்டே அதை எதிர்த்தார். ஏனெனில் இப்போது அவர் ஒரு மரபாக ஸ்தாபிதம் பெற்றுவிட்டாரல்லவா? 40 வருடங்களுக்குப் பின் ராபர்ட் ஃபெலிஸ், செடக்சன் கொள்கையைக் கைவிட்டதை மறு பரிசீலனைக்கு உட்படுத்தச் சொன்னபோதும் இப்படியே எதிர்ப்பு எழுந்தது. 1981-இல் மேசன் இப்பிரச்சினையைக் கிளறியபோதும் இவ்வெதிர்ப்பு ஓயாமல் சுடர்விட்டது.________________




காரணம் இக்கோட்பாட்டின் உணர்ச்சிகரமான மூ லம் தான், ஆணாதிக்கத்து க் கு எதிரான பெண்நிலை வாதம் (The Freudian Cover-up byFlorence Rush) இவ்விஷயத்தில் கொஞ்சம் முன்னேறியுள்ளது. (Susan Brownmiller, Louise Armstrong, Diana Russell). மனிதனின் மொத்த ஆதிக்க உணர்வுகளைப் பற்றியும் ஆராய்ந்து உணரும்போது / உணர்த்தப்படும்போது தான் பிரச்சினைகள் முழுதாகத் தீரும். இதற்குத் திறந்த மனமும் தைரியமும் சார்பின்மையும் விஞ்ஞானப் பார்வையும் தேவைப்படுகின்றன.
| Jeffrey M, Masson: The Assault on Truth - Freud's Suppression of the Seduction Theory, (1985) 2003. & Against
Therapy, 1988 காலசுப்ரமணியம் ***********