தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, June 23, 2017

மாற்கு எழுதிய வேதாமகம் - Original- ஜோர்ஜ் லூயி போர்ஹஸ் (மொ.பெ பிரம்மராஜன்).

மாற்கு எழுதிய வேதாமகம் - Original- ஜோர்ஜ் லூயி போர்ஹஸ் (மொ.பெ பிரம்மராஜன்).

AUTOMATED GOOGLE-OCR
PDF Collection -Suyaanthan.
https://www.facebook.com/saravanakarthikeyanc?fref=ufi

இந்த நிகழ்ச்சிகள் யூனின் நகரத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லா கொலோராடோ கால்நடைப்பண்ணையில் 1928 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கடைசி நாட்களில் நடந்தன. இதன் பிரதான பாத்திரம் பால்த்தளலார் எஸ்பினோசா என்ற பெயர் கொண்ட மருத்துவம் படித்த மாணவன், இப்போதைக்கு அவனை நாம் போனஸ் அயர்சில் இருந்து வந்த சாதாரண இளைஞர்களில் ஒருவனாகச் சித்தரிக்கலாம். அவனிடமிருந்த ஏறத்தாழ ஒரு எல்லையற்ற கருணையும், மேடைப் பேச்சுக்கான திறனும் தவிர வேறு எதுவும் அவனிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கவில்லை. இரண்டாவது அவனுக்கு ரமேஸ் மெஜியாவில்இருந்த ஆங்கிலப்பள்ளியில் பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது. விவாதம் செய்வதை அவன் விரும்பவில்லை. கேட்டுக் கொண்டிருப்பவனே தன்னை விட சரியின் பக்கம் இருப்பதை விரும்பினான். அவன் விளையாடிய எந்த விளையாட்டிலும் அடங்கியிருக்கும் யதேச்சைத் தன்மையின் சாத்தியப்பாடுகள் அவனைக் கவர்ந்தாலும் அவன் ஒரு மோசமான ஆட்டக்காரனாகவே இருந்தான். காரணம், ஜெயிப்பது அவனுக்கு எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை. அவனது விரிவான அறிவுக்கூர்மை திசைப்படுத்தப்படாமலிருந்தது. முப்பத்து மூன்று வயதாகியும் பட்டப்படிப்பை முடிப்பதற்கான மதிப்பெண்கள் ஒரு பாடத்தில் அவனுக்குக் குறைவாக இருந்தது - அவனை அதிகம் ஈர்த்த பாடத்தில், அவனுடைய அப்பா (அவர் காலத்திலிருந்த எல்லாக் கனவான்களைப் போலவும்) ஒரு சுதந்திரச் சிந்தனையாளராக இருந்தார். அவனுக்கு ஹெர்பர்ட் ஸ்பென்சரின் பாடங்களை அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அவன் அம்மா, மாண்ட்டி விடியோவுக்குப் பயணம் கிளம்பு முன் ஒரு முறை அவனிடம் ஒவ்வொரு இரவும் கர்த்தருக்கான பிரார்த்தனையைச் சொல்லி சிலுவைக் குறி இடும்படி கேட்டுக் கொண்டாள். இத்தனை வருடங்களில் அவன் அந்த வாக்குறுதியை மீறவே இல்லை. 


எஸ்பினோசா ஆர்வத் துருதுருப்பில் குறைந்தவனல்ல. கோபம் என்பதை விட அதிக அக்கறையின்மையினால், பல்கலைக் கழக எதிர்ப்பு ஊர்வலத்தில் சேரச் சொல்லிக் கட்டாயப்படுத்திய சக மாணவர்களுடன் சில குத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறான். எதிர்ப்பின்றி உடன்பட்டு விடும் தனது தன்மையால் அவன் கேள்விக்குரிய கருத்துக்களை, அல்லது, மனதின் பழக்கங்களைக் கொண்டிருந்தான். அர்ஜன்டீனாவை விட, உலகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் நம்மை சிவப்பிந்தியர்கள் என்று எண்ணி விடக்கூடும் என்ற பயமே அவன் மனதை அதிகம் ஆக்கிரமித்திருந்தது. பிரான்ஸ் நாட்டினை வழிபட்டான். ஆனால், பிரெஞ்சுக்காரர்களை வெறுத்து ஒதுக்கினான். அவன் அமெரிக்கர்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்ற போதும் போனஸ் அயர்சில் இருந்த தங்களது உயரமான கட்டிடங்களைப் போலவே அமெரிக்காவில் நிறைய இருந்தன என்ற உண்மையோடு அவனுக்கு உடன்பாடு இருந்தது. மலை அல்லது குன்றுப் பிரதேசத்து மாட்டுக்காரர்களை விட சமவெளியில் இருந்த மாட்டுக்காரர்கள் கூடுதல் சிறப்பான குதிரை சவாரிக்காரர்கள் என்று நம்பினான். கொலோராடோவில் கோடை மாதங்களைக் கழிக்க அவனது மாமா பிள்ளை டேனியல் அவனை அழைத்தபோது அவன் உடனடியாக சரி என்று சொல்லிவிட்டான். கிராமப்புறம் அவனுக்கு நிஜமாகவே பிடித்திருந்தது என்பது மட்டுமல்ல இயல்பாகவே அவனிடமிருந்த தன்னிறைவினாலும், மற்றும், இல்லை என்று சொல்வதற்குப் பல காரணங்களைக் கற்பனை செய்வதை விட சரி என்று சொல்வது சுலபமாக இருந்த காரணத்தாலும் அவன் டேனியலின் அழைப்பை ஏற்றுக் கொண்டான். 

கால்நடைப் பண்ணையின் பிரதான விடு பெரியதாகவும், சிறிது பராமரிப்பு இல்லாமலும் இருந்தது. தலைமைப் பண்ணையாளான குட்ரெவின் குடியிருப்பு அதற்கு அருகிலேயே இருந்தது. குட்ரெயின் குடும்பத்தில் மூன்று அங்கத்தினர்கள். தந்தை, வழக்கத்திற்கு மாறான அசிங்கமான தோற்றமுடைய ஒரு மகன், யாருக்குப் பிறந்தாள் என்று தெளிவாகத் தெரியாத ஒரு மகள். அவர்கள் வலுவானஎலும்புகளுடன், உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார்கள். அவர்களின் தலை முடி சிவப்பு என்று சொல்லும்படியாகவும், முகங்கள் சிவப்பிந்திய பிறப்பினையும் தெரிவித்தன. அவர்கள் சரியாகப் பேசத் தெரியாதவர்களாக இருந்தார்கள் தலைமைப் பண்ணை யாளின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய் விட்டாள். 

கிராமப்புறத்தில் எஸ்பினோசா முன்பின் தெரியாத, கனவிலும் நினைத்துப் பார்த்திராத பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எடுத்துக் காட்டாக, குடியிருப்புகளை நெருங்கும் போது குதிரையை நான்குகால் பாய்ச்சலில் ஒட்டக் கூடாது என்பதையும்,ஏதாவது ஒரு விசேஷமான நோக்கத்திற்கு தவிர வேறு விஷயங்களுக்கு குதிரையில் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் தெரிந்து கொண்டான் போகப் போக, பறவைகளின் குரல்களை வைத்தே அவற்றை வேறுபடுத்திச் சொல்லத் தெரிந்து கொண்டான். 

சில நாட்களுக்குப் பிறகு, சில கால்நடைகளின் விற்பனையை முடிப்பதற்காக டேனியல், போனஸ் அயர்சுக்குக் கிளம்ப வேண்டி வந்தது. அதிகபட்சமாகப் போனால் இந்தச் சிறு வேலையை முடிப்பதற்கு அவனுக்கு ஒரு வாரம் பிடிக்கலாம். ஏற்கனவே பெண்களைப் பொறுத்தவரையிலான அவனுடைய இடையறாத அதிர்ஷ்டம் பற்றியும் நவநாகரிக ஆடைகளில் அவனுக்கு இருந்த அளவற்ற ஈடுபாடு பற்றியும் கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருந்த எஸ்பினோசா தன்னுடைய பாடப்புத்தகங்களுடன் கால்நடைப் பண்ணையிலேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தான். ஆனால் வெய்யிலோ தாங்க முடியாததாக இருந்தது. இரவும் இதற்கான தணிப்பைக் கொண்டு வரவில்லை. விடியல் நேரத்தில் ஒரு நாள் காலை இடிச்சத்தம் அவனை எழுப்பி விட்டது. வீட்டுக்கு வெளியிலே காற்று ஆஸ்திரேலிய பைன் மரங்களை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது. மழையின் கனத்த தொடக்கத் துளிகள் விழும் ஓசையைக் கேட்டு கடவுளுக்கு நன்றி சொன்னான். உடனடியாகக் குளிர்ந்த காற்று உள்ளே உருண்டோடி வந்தது. அந்த மதியம் சாலாடோ நதியில் வெள்ளம் கரை புரண்டது. 

அடுத்த நாள், பிரதான விட்டின் மேல்தளத்திலிருந்து, வெள்ளத்தில் மூழ்கிய வயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, பாம்ப்பா பிரதேசத்தை ஒரு கடலுக்கு ஒப்புமையாகச் சொல்லும் வழக்கமான உருவகம் முற்றிலுமாகத் தவறானதல்ல என்று நினைத்தான்-டபிள்யூ. ஹெச். ஹட்சன் என்பவர், கடல் அகலமாகத் தெரிவதற்குக் காரணம் குதிரையின் மேலிருந்தோ, கண்பார்வையின் தளத்திலிருந்தோ பார்க்காததும், கப்பலின் மேல்தளத்திலிருந்து நாம் பார்ப்பதுமே என்று கூறியிருந்த போதும்-குறைந்த பட்சம் அந்தக் காலை நேரத்தில்-மேற்படி ஒப்புமை மிகவும் சரியாகவே இருந்ததாக எண்ணிக் கொண்டான் அவன். மழை விடவே இல்லை. குட்ரெ குடும்பத்தார் நகரவாசியான எஸ்பினோசாவால் இடைஞ்சல் செய்யப்பட்டோ, அல்லது உதவப்பட்டோ, கால்நடைகளில் பெரும்பான்மையானவற்றை வெள்ளத்திலிருந்து மீட்டனர். ஆனாலும், பல கால்நடைகள், மூழ்கிப் போயின. லா கொலோராடோவை நோக்கி வந்தவை மொத்தம் நான்கு சாலைகள் எல்லாமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டிருந்தன. மூன்றாவது நாள் அன்று குட்ரெ குடும்பத்தார் இருந்த வீடு ஒழுகலினால் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்ததால் பிரதான விட்டிற்குப் பின்பக்கம் இருந்த கருவிகள் வைக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த ஒரு அறையை எஸ்பினோசாஅவர்களுக்கு ஒதுக்கித் தந்தான். இது அவர்கள் எல்லோரையும் நெருக்கமாக இணைத்தது. பெரிய உணவருந்தும் கூடத்தில் அவர்கள் எல்வோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். உரையாடல் நடத்துவது கடினமாக ஆகியது. கிராமப்புறம் பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருந்த குட்ரெ குடும்பத்தாருக்கு அவற்றை விளக்கிச் சொல்வது கடினமாக இருந்தது. ஓர் இரவின் போது யூனின் பகுதியில் பிரதேசக் கட்டுப்பாடு அமைந்திருந்த சமயம் நிகழ்ந்த சிவப்பிந்தியர்களின் தாக்குதல்கள் பற்றி ஞாபகம் இருக்கிறதா என்று எஸ்பினோசா கேட்டான். அதற்கு அவர்கள் ஆம் என்று பதில் சொன்னார்கள். ஆனால் முதலாம் சார்லஸ் அரசனின் தலை வெட்டப்பட்டது குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார்கள். கிராமப்புறத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு நீண்டநாள் உயிரோடிருத்தலும் நிஜத்தில் ஒரு மோசமான ஞாபக சக்தியின் விஷயமாகவோ, தேதிகள் பற்றிய மங்கலான கருதுதலும் ஆகவோ இருக்கக் கூடும் என்று அவன் அப்பா சொன்னதை நினைவு கூர்ந்தான். மாட்டுக்காரர்கள் தங்கள் பிறந்த வருடம் என்னவென்று அறியாமலும் தங்களைப் பெற்றெடுத்தவனின் பெயரை அறியாமலும் இருக்கத் தகுந்தவர்கள் தான் 

அந்த முழு விட்டிலும், Farm Journalன் ஒரு தொகுதி, கால்நடை மருந்து பற்றி ஒரு கையேடு, உருகுவே தேசத்து காவியமான Tabre வின் டீலக்ஸ் பதிப்பு, History of Short Horn Cattle in Argentina என்ற நூல், காமத்துவமான அல்லது துப்பறிதல் தொடர்பான கதைப் புத்தகங்கள், சமீப நாவலான Don Segunda Sombra, இவை தவிர வேறு படிக்கக் கூடிய விஷயங்கள் இருக்கவில்லை. எஸ்பினோசா, தவிர்க்க இயலாத இரவு உணவு இடைவேளையை ஏதோ வகையில் சரிகட்டுவதற்காக இந்த நாவலின் சில அத்தியாயங்களை, படிக்கவும் எழுதவும் தெரியாத குட்ரெ குடும்பத்தாருக்கு படித்துக் காட்டினான். துரதிர்ஷ்டவசமாக தலைமைப் பண்ணையாளும் நாவலின் நாயகனைப் போல கால்நடை ஓட்டிச் செல்பவனாக இருந்திருப்பதால், கதை நாயகனின் செயல்கள் அவனது ஈடுபாட்டினைக் கூர்மைப்படுத்தவில்லை. அந்தக் கதை லேசானது என்று கூறிய குட்ரெ, கால்நடை ஒட்டிச் செல்பவர்கள் எப்போதும் தங்களுக்குத் தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் சுமந்து கொண்ட பொதிக்குதிரையில் பயணம் செய்தார்கள் என்றும், அவன் ஒரு கால்நடை ஓட்டுபவனாக இல்லாமல் போயிருந்தால் மிகவும் தூரத்திலிருந்த லாகுனா த கோமஸையும், பிரேகடோ நகரினையும், சாகாபூகோவில் நுநெஸ் குடும்பத்தினரின் பெருக்கத்தையும் என்றைக்குமே பார்த்திருக்க முடியாது போயிருக்கும் என்றும் கூறினான். சமையல்கட்டில் ஒரு கிட்டார் வாத்தியம் இருந்தது. நான் விவரிக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன்பு, பண்ணையாட்கள் வட்டமாக உட்கார்ந்து கொள்வது வழக்கம். யாராவது ஒருவர் கிடாரை வெறுமே சுருதி சேர்த்துக் கொண்டிருப்பார், வாசிக்கும் நிலைக்கு வராமலே இதற்குப் பெயர் கிடார் விழா ஆகும். 

தாடி வளர்த்து விட்டிருந்த எஸ்பினோசா, கண்ணாடியின் முன் நின்று அவனது முகத்தின் புதிய வடிவத்தை ஆராயத் தலைப்பட்டான் போனஸ் அயர்ஸ் திரும்பிய பிறகு தன் நண்பர்களை சேலோடா வெள்ளம் பற்றிய கதையைச் சொல்லி எப்படிச் சலிக்க வைப்பான் என்பதை நினைத்து இப்போது அவன் சிரித்துக் கொண்டான். விநோதமான விதத்தில் அவன் அடிக்கடி சென்றறியாத, அல்லது, போகத் தலைப்படாத இடங்களைப் பற்றிய இழப்புணர்வு அவன் மனதில்இடம் பிடித்தது. கேப்ரெரா தெருவில் தபால்பெட்டி இருந்த ஒரு ஒரம், பிளாஸ்ா தல் ஒன்ஸ்க்கு சில கட்டிடங்கள் தள்ளி ஜூஜூயி தெருவின் மீதிருந்த ஒரு வெளி வாயிலில் இருந்த சிமெண்ட் சிங்கங்களில் ஒன்று; அதன் அமைவிடம் எதுவென்று அவன் அறிந்திராத, ஒடுகள் பதித்த தரை கொண்ட ஒரு பழைய மதுவருந்தும் விடுதியையும். அவன் அப்பாவையும் சகோதரர்களையும் பொறுத்தவரை, அவன் தனிமைப்பட்டுவிட்டான் -அர்த்த மாறுதல் வரலாற்று வகையில் சொல் மிகப் பொருந்தி வந்தது-வெள்ளத்தினால் என்று அவர்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டிருப் பார்கள். 

வினான நீரினால் இன்னும் சூழப்பட்டிருந்த விட்டினை அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். ஒரு ஆங்கில பைபிள் அவனுக்குத் தட்டுப்பட்டது. பைபிளின் இறுதியில் இருந்த காலிப் பக்கங்களில் குத்ரெவின் முன்னோர்கள் அவர்களின் பாரம்பரியத்தின் பதிவுகளை கையெழுத்தில் விட்டுச் சென்றிருந்தார்கள். அவர்களது சொந்த ஊர் இன்வெர்னஸ். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் புதிய உலகினை அவர்கள் அடைந்த போது சாதாரணத் தொழிலாளர்களாகத் தான் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. சிவப்பிந்தியர்களுடன் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். 1870களில் எப்போதோ, அவர்களுக்குப் படிக்கவும் எழுதவும் தெரியாமல் போன பிறகு, வரலாறு தொடர்ச்சி விட்டுப் போயிருந்தது. இதற்கு அடுத்த சில தலைமுறைகளில் அவர்களுக்கு ஆங்கிலம் மறந்து போய்விட்டது. எஸ்பினோசா அவர்களைத் தெரிந்து கொண்ட சமயத்தில் அவர்களுடைய ஸ்பானிய மொழி அவர்களுக்கு சிரமம் கொடுத்தது. அவர்கள் மதநம்பிக்கை அற்றவர்களாய் இருந்தார்கள். ஆனாலும் மங்கலான தடயங்களைப் போல, கால்வினிஸ்டுகளின் இறுகலான மதவெறியும், பாம்ப்பா பிரதேசத்து செவ்விந்தியர்களின் மூட நம்பிக்கைகளும் அவர்களின் ரத்தத்தில் உறைந்திருந்தன. இந்தக் கண்டுபிடிப்பினை எஸ்பி னோசா அவர்களிடம் பின்னர் கூறினான். அதை அவர்கள் கவனித்தாகவே தெரியவில்லை. 

அந்தத் தொகுதியைப் புரட்டிக் கொண்டிருந்த போது, அவனது விரல்கள் புனித மாற்கு எழுதிய வேதாகமத்தின் தொடக்கத்தில் இருந்தன. மொழிபெயர்ப்பில் ஒரு பயிற்சியாக இருக்கட்டும் என்றோ, அல்லது, ஒரு வேளை அதில் எதையும் குட்ரெ குடும்பத்தார் புரிந்து கொண்டார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியோ, அந்த மாலைச் சாப்பாட்டிற்குப் பிறகு அதைப் படிக்க ஆரம்பிப்பது என்ற முடிவினை எடுத்தான் எஸ்பினோசா, மிக ஆழ்ந்த கவனத்துடன் அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. புத்தகத்தின் மீது அச்சிடப் பட்டிருந்த தங்கமுலாம் எழுத்துக்கள் அதற்கு ஒருவித அதிகார தோரணையை கொடுத்திருக்கலாம். இன்னும் அது அவர்கள் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று நினைத்தான் எஸ்பினோசா பல தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள் பதிவு செய்யப்பட்ட காலகட்டம் முழுக்க எப்பொழுதுமே இரண்டு கதைகளை மாத்திரமே சொல்லியும், திரும்பத் திரும்பச் சொல்லியுமிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. வெகுவாக நேசிக்கப்பட்ட தீவு ஒன்றின் பொருட்டு மத்திய தரைக்கடல் பிரதேசங்களிலெல்லாம் தேடித் தொலைந்து போன கப்பல் ஒன்றின் கதை, மற்றும், கொல்கொதா என்ற இடத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஒரு கடவுள், இப்படி ரேமோஸ் மெஜியாவில் பள்ளி நாட்களிள் பேச்சுப் போட்டிக்காகதனது பயிற்சிப் பாடங்களை நினைவு படுத்திக் கொண்டு, நீதிக் கதைகளுக்கு வந்த போது எஸ்பினோசா தான் சொல்லும் விஷயத்தில் தெளிவாக இருந்தான். வேதாகமத்தைத் தாமதப்படுத்த வேண்டாம் என்பதற்காக நெருப்பில் வாட்டப்பட்ட இறைச்சி யையும், பதனப்படுத்தப்பட்டு திணிக்கப்பட்ட சார்டைன் மீன்களையும் பூட்டி வைக்க ஆரம்பித் தார்கள். ஒரு சிறிய நீலநிற ரிப்பனைக் கொண்டு அந்தப் பெண் அலங்கரித்திருந்த செல்ல ஆடு முள்கம்பியின் பிசிறில் காயம் பட்டுக் கொண்டது. ரத்தப் போக்கினை நிறுத்துவதற்கு அவர்கள் சிலந்தி வலையை காயத்திற்கு இட விரும்பிய பொழுது எஸ்பினோசா ஏதோ மருந்து கொடுத்து ஆட்டைக் குணப்படுத்தினான். இந்த மருத்துவம் அவர்களுக்குள்ளாக விழிப்படையச் செய்திருந்த நன்றியுணர்வு அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.(குட்ரெ குடும்பத்தாரை நம்பாமல் ஆரம்பத்தில் அவன் கொண்டு வந்திருந்த இருநூற்றைம்பது பெசோக்களை அவனுடைய புத்தகங்களில் ஒன்றுக்குள் ஒளித்து வைத்திருந்தான்)இப்போது அந்த இடத்தின் எஜமானர் வெளியில் சென்றிருக்கவே, அவர் இடத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்குத் தயக்கத்தோடு கட்டளை களைப் பிறப்பித்தான். அவற்றை அவர்கள் உடனடியாக நிறைவேற்றினார்கள். குட்ரெ குடும்பத்தார் அவன் இல்லாமல் தொலைந்து போய் விட்டவர்களைப் போல் ஒவ்வொரு அறையாக அவனைப் பின் தொடர்ந்து வர விரும்பினார்கள். இவ்வாறே விட்டைச் சுற்றி இருந்த மேல்தளத்திற்குச் செல்லும் போதும் பின் தொடர்ந்தார்கள். அவர்களுக்கு படித்துக் காட்டிக் கொண்டிருக்கும் போது தான் தவறி மேஜை மீது விழ விட்ட ரொட்டித் துணுக்குகளை அவர்கள் ரகசியமாகத் திருடியதைக் கவனித்தான் அவன் ஒரு நாள் மாலை, அவனைப் பற்றி அவர்கள் மரியாதையுடன் சொற்பமான வார்த்தைகளில் பேசிக் கொண்டதை அவர்களுக்குத் தெரியாமல் செவிமடுத்தான்.

 மாற்கு எழுதிய வேதாகமத்தை படித்துக் காட்டிவிட்ட பிறகு, பாக்கியிருந்த மூன்று ஆகமங்களில் ஒன்றினைப் படித்துக் காட்ட விரும்பினான். ஆனால் கேட்டதன் அர்த்தங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு அவன் அப்பொழுது வாசித்து முடித்திருந்ததை திரும்ப வாசிக்கும்படி வேண்டினார்கள். மாறுதல்களையும் புதுமையையும் விட குழந்தைகள் போல திரும்பக் கூறுதலே அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என்று எஸ்பினோசா நினைத்தான். அன்றிரவு - இது ஒன்றும் ஆச்சரியப்படத் தக்கதல்ல-அவன் ஜலப்பிரளயத்தைக் கனவு கண்டான். பிரளயத் திலிருந்து தப்பிப்பதற்கான சிறுகப்பலைக் கட்டும்போது அடிக்கப்பட்ட சுத்தியல் ஓசை யினால் அவன் விழித்தெழுந்தான், அவை ஒரு வேளை இடியோசையாக இருக்கக் கூடும் என்று அவன் நினைத்தான். நிஜத்தில், விட்டிருந்த மழை மீண்டும் தொடங்கியது. குளிர் கடுமையாக இருந்தது. கருவிகள் வைக்கும் அறையை புயல் சேதப்படுத்திவிட்டதாக குட்ரெ குடும்பத்தார் சொன்னார்கள். தூலங்களை மீண்டும் பொருத்திய பின் அவனுக்குக் காட்டுவதாச் சொன்னார்கள். இப்போது அவன் ஒரு அந்நியன் அல்லன். அவனைக் கெடுக்கும் அளவுக்கு அவர்கள் விசேஷ அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள். அவர்கள் யாருக்கும் காபி பிடிக்காது. ஆனாலும், அவனுக்காக ஒரு சிறிய கோப்பை காபி எப்போதும் இருந்தது. அதில் அவர்கள் எப்பொழுதுமே நிறைய சர்க்கரை போட்டிருந்தார்கள்.

செவ்வாய்க்கிழமை ஒரு புதுப்புயல் தொடங்கி விட்டிருந்தது. வியாழக்கிழமை இரவு, அவனது அறைக் கதவின் மென்மையான தட்டல் கேட்டு விழித்தெழுந்தான். முன்ஜாக்கிரதையாக அவன் எப்போதும் கதவைச் சாத்தியே வைத்திருந்தான். எழுந்து கதவைத் திறந்தான். அந்தப் பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இருட்டில் அவளை அடையாளப்படுத்துவது சிரமமாக இருந்தது. ஆனால் அவளுடைய காலடி ஓசையை வைத்து அவள் செருப்பு போடாமல் வந்திருக்கிறாள் என்று சொல்ல முடிந்தது. சில கணங்களுக்குப் பிறகு கட்டிலில் இருக்கும் பொழுது விட்டின் மறுகோடியிலிருந்து அவள் நிர்வாணமாகவே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டான். அவள் அவனை அனைத்துக் கொள்ளவோ, ஒரு வார்த்தை பேசவோ இல்லை. முதல் தடவையாக ஒரு ஆண் மகனை அறிந்து கொள்கிறாள். அவள் அங்கிருந்து கிளம்பியபோது அவனை முத்தமிடவில்லை. அவளுடைய பெயரைக் கூட அவன் தெரிந்து கொள்ளவில்லை என்பதை அவன் உணர்ந்தான். அவன் துருவி ஆராய விரும்பவில்லை ஏதோ காரணத்தால் போனஸ் அயர்ஸ் திரும்பிய பிறகு எவரிடமும் என்ன நடந்தது என்று சொல்லக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானம் செய்தான். 

அடுத்த நாளும் முந்தைய நாட்களைப் போலவே ஆரம்பித்தது. அப்பா குட்ரெ, எஸ்பினோசாவிடம் பேசும் போது, கிறிஸ்துவானவர் பூமியில் உள்ள சகல மனிதரையும் காப்பாற்றுவதற்காகத் தன்னைக் கொல்ல அனுமதித்தாரா என்று கேட்டான். சுதந்திரச் சிந்தனையாளனான எஸ்பினோசா, தான் படித்ததற்கு விசுவாசமான இருக்க வேண்டி பதில் அளித்தான். 

" "ஆம், எல்லோரையும் நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்காக." 

உடனே குட்ரெ கேட்டான். "நரகம் என்பது என்ன?” 

"பூமிக்கு அடியில் ஓரிடத்தில் ஆன்மாக்கள் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கும் ஒரு இடம் அது"

 "ஆணிகளை அடித்த ரோமானிய போர்ச்சேவகர்களுமா காப்பாற்றப் பட்டார்கள்?" 

தனது இறையியல் அவ்வளவு தெளிவாக இல்லாத எஸ்பினோசா "ஆம்" என்றான். அந்த உரையாடலின் போதெல்லாம் தலைமைப் பண்ணையாள் முந்திய இரவின் போது தனது மகளுடன் என்ன நடந்தது என்று கேட்டு விடுவான் எனப் பயந்து கொண்டிருந்தான் எஸ்பினோசா, மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை கடைசி அத்தியாயங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டார்கள். 

எஸ்பினோசா அந்த மதியம் ஒரு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தான் இடைவிடாத சுத்தியல் ஒலிகளாலும், தெளிவில்லாத முன்கூறல்களாலும் இடைஞ்சலுற்ற லேசான உறக்கம். மாலை ஆகும் போது அவன் எழுந்து மேல்தளத்திற்குச் சென்றான். தனக்குத் தானே சிந்திப்பவன் போல அவன் சொன்னான் "வெள்ளம் இறங்கி விட்டது. இனி ரொம்பத் தாமதமாகாது." 

"இனி ரொம்பத் தாமதமாகாது" என எதிரொலி போல, அதை குட்ரெ திருப்பிச் சொன்னான். 

அந்த மூவரும் அவனைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றனர். கல் பாவப்பட்ட மேடை மீது முழந்தாளிட்டு அவனுடைய ஆசீர்வாதங்களை வேண்டினார்கள். பிறகு அவனை அவர்கள் பரிகசித்தார்கள். அவன் மீது காறித்துப் பினார்கள். விட்டின் பின் பகுதிக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள். அந்தப் பெண் அழுதாள். கதவுக்கு அந்தப் பக்கத்தில் அவனுக்காக என்ன காத்திருந்தது என்பதைப் புரிந்துகொண்டான் எஸ்பினோசா கதவை அவர்கள் திறந்த போது வானத்தின் ஒரு பகுதியை அவன் பார்த்தான். குரலெடுத்து ஒரு பறவை பாடியது. தங்க ஃபின்ச் பறவையாக இருக்கும் என்று நினைத்தான், கொட்டகையின் மீது கூரை இருக்கவில்லை. தூலங்களைக் கழற்றி இறக்கி வைத்து விட்டிருந்தார்கள்-சிலுவை செய்வதற்காக,


19. மான்க் ஈஸ்ட்மேன்
இந்த அமெரிக்காவின் அவர்கள் நீலநிறச்சுவர்கள் அல்லது திறந்த வானம் ஆகிய இவற்றின் பின்னணியிலிருந்து துல்லியமாகத் மாறுபட்டுத் தெரியும்படி சாத்வீகமான கறுப்பு நிறத்தில் பிடிப்பான உடையணிந்து, குதிகால் உயர்ந்த காலணிகளைப் போட்டுக் கொண்டு இரண்டு அடியாட்கள் பொருத்தமான கத்திகளின் அபாயகரமான பாலே நடனத்தினை, அவர்களில் ஒருவரின் கத்தி அதன் அடையாளத்தை மற்றவனின் மீது கீறி, காதிலிருந்து சிவப்பு கார்னேஷன் மலர் விரிவது போல் குருதி வரும் வரை ஆடுகின்றனர். தன்னில் குருதிப் பூ விரியப் பெற்றவன் இந்தப் பின்னணி இசையில்லாத நடனத்தை தன் மரணத்தின் மூலமாக நிலத்தின் மீது முடிவுக்குக் கொண்டு வருகிறான். சந்தோஷத்துடன், மற்றவன் தனது உயரமான தலை உச்சி கொண்ட தொப்பியைச் சரி செய்து கொண்டு, அவனது கடைசி வருடங்களை இந்த இருவருக்கான இந்த திருத்தமான சண்டையைப் பற்றித் திரும்பத் திரும்ப சொல்வதில் தனது இறுதி வருடங்களைக் கழிக்கிறான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதுதான் நமது பழைய கால அர்ஜன்டீனிய தலைமறைவு உலகத்தின் சாராம்சம். நியூயார்க்கின் பழைய தலைமறைவு உலகானது இன்னும் கூடுதலாகத் தலை சுற்றச் செய்யும் என்பதோடு இழிவுத்தன்மை கூடியதாகவும் இருக்கும்.
மற்றதின் அவர்கள் நியூயார்க் நகரின் அடியாள் குழுக்களின் வரலாறு (ஹெர்பர்ட் ஆஸ்பரி என்பவரால் ஒன்றுக்கு எட்டு அளவில் நானூறு பக்கங்களைக் கொண்ட கனமான தொகுதியாக 1928 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் வெளிக் கொணரப்பட்டிருப்பது) இயலுலகத் தோற்றகால காட்டுமிராண்டிப் பிறப்புகளிடம் குடிகொண்டிருந்த குழப்பங்களையும், குரூரங்களையும், அவர்களுடைய பிரம்மாண்ட அளவிலான கையாலாகாத்தனங்களின் பெரும்பகுதியையும் உள்ளடக்கிறது-நீக்ரோ சேரிகளில் தேன்கூட்டுப் பொந்துகளாக சாராயம் வடிக்கும் பழைய நிலவறைகள் மூன்று அடுக்குகள் கொண்ட பழைய உளுத்துப் போன நியூயார்க், சாக்கடையின் சுழல்வழிகளில் ரகசிய சந்திப்புகளை நடத்திய ஸ்வாம்ப் ஏஞ்சல்ஸ் என்ற குற்றக் குழுக்கள், Day Break Boys போன்ற பத்துப் பன்னிரண்டு வயதாகாத சிறு வயது கொலைகாரர்களை வேலைக்கு அமர்த்திய குற்றக் குழுக்கள், Plugugies போன்ற ராட்சஷத்தனமான, துணிவான தனிமையாளர்கள்; அவர்கள் மாபெரும் விறைப்பான தொப்பிகள், கம்பளி நூலால் திணிக்கப்பட்டிருக்க அவற்றை, காதுகளை மூடும்படியாக தலைக்கவசம் அணிந்திருப்பவர்களைப் போல அவர்கள் அணிந்திருப்பார்கள் பொவரி காற்றில் கால்சட்டைகளுக்கு வெளியே தொங்க விடப்பட்டிருக்கும் சட்டையின் பின் முனைகள் படபடக்கும் வண்ணமிருந்த

Sunday, June 18, 2017

கொந்தளிப்பு - சுந்தர ராமசாமி

கொந்தளிப்பு - சுந்தர ராமசாமி

CAMSCANNER & GOOGLE-OCR
அந்த நாளை நினைக்கும்போது, எனக்கு நடுக்கம்தான் ஏற்படுகிறது. அன்று என் கபோலம் சிதற. என் கபோலத்தால்  ஒரு விரோதியின் கபோலம் சிதறிற்று. மரணத்தைத் தேர்ந்தெடுத் துக்கொண்ட விதத்தில் முழு வாழ்வுக்குமே ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது. அன்று நடந்ததை எல்லாம் ஏதோ அரைகுறையாகச் சொல்ல முடியுமே தவிர, தெளிவாக வர்ணிக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்றைய விடியலே அதற்கான விடியல் மாதிரி தான் பட்டது. வானத்து மூட்டம் எங்கும் கவிந்து பூமியை நோக்கிப் படர்ந்து கொண்டிருந்தது. ஒரு முகத்துக்கு மறு முகமோ, ஒரு மரத் துக்கு மறுமரமோ தெரியவில்லை. மண்ணை ஒட்டிக் கொஞ்சம் வெளிச்சம் புழுபோல் நெளிந்து கொண்டிருந்தது. கட்டிடங்களும் தாவரங்களும் உள்ளூர உருகிக் கொண்டிருந்தன. பறவைகள், மிகுந்தகலவரம் கொண்டிருந்தன. மின்னல் வீச்சுகளில் வரவிருக் கும் காலத்தின் துணுக்கு பயங்கரங்கள் அவற்றிற்குப் புலப்பட்டன வோ என்னவோ? அவற்றிற்குப் புலனாகும் ஒன்று எனக்கு ஆக வில்லை என்று தோன்றியபோது கலவரம் என்னையும் பிடித்து ஆட்டத் தொடங்கிற்று. புலப்படுபவைகள்கூட மங்கிப்போகட்டும் எனச்சோர்வு கொள்ளும்படி இருந்தது சூழல். 

பேரெழுச்சி பற்றிய செய்திகள் காலங்காலமாக என் காதில் விழுந்துகொண்டிருந்தன. என் முன்னோர்களும், அவர்களின் முன்னோர்கள் இதுபற்றித் தங்களிடம் கூறியிருப்பதாகச் சொன் னார்கள். என் காலத்தைச் சேர்ந்தவர்களும் இப்படியே நம்பி னார்கள். ஆனால் இதுகாறும் பொதுமையாக இருந்தது, இப் போது முனைப்பு தட்டி விட்டது என்று தோன்றிற்று. காலங் காலமாகக் கொண்ட பிரயாசைகளின் அவ்வளவு முகங்களும் இப் போது ஒன்று சேர்ந்து விட்டன என்றார்கள். ஆனால், அப்போதும் எழுச்சி இன்னவிதம் என்று யாருக்கும் கூறத் தெரிந்திருக்க வில்லை. கற்பனையால் பார்த்துக் கொண்டிருந்ததை வார்த்தை களால் வர்ணித்து கொண்டிருந்தார்கள். விவேகிகளுக்கு அப்போதும் சந்தேகம் ஏற்பட்டது. இதற்குமுன் குறித்திருந்த நேரங்களில் எல்லாம் பிசுபிசுத்துப் போனதுபற்றி அவர்கள் சரித்திர ஞானத்துடன பேசினார்கள். ஆனால், மனுஷன்களில் பலரும் வரும் என்று தான் நம்பினார்கள். மனுஷிகளும் நம்பினார்கள். இன்றும் துககம, இனிமேலும் துக்கம் என்பதை அவர்களால் ஏற்றுக் கொண்டு தொடர முடிந்திருக்கவில்லை. அவர்களுடைய துக்கங் கள் விளிம்புகட்டி விட்டன.

நான் ஊர்விட்டுக் கிளம்பும்போது உள்ளூர பயந்து கொண்டே கிளம்பினேன். மனித உள்ளங்களிலிருந்து பீறிடும் நெருப்பு என்னைப் பொசுக்கிவிடுமோ என்ற அச்சம் என்னை வாட்டிக்கொண்டிருந்தது. எனக்கு இன்னும் பார்க்க வேண்டும் என்றிருந்தது. பார்த்துப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் இருந் தது. கொந்தளிப்பில் நானும் ஆவேசம் பெற்று என்னை அழித் துக்கொள்ளும் தருணம் கூடும் எனில், அப்படியே நடக்கட்டும். புற எழுச்சியில் ஆவேசம் பெற்று மோசமான கோழைகளும் துணிச்சலான காரியங்களை ஆற்றியிருக்கிறார்கள். அன்று நிகழ இருப்பவற்றை மிக நுட்பமாக மூளையில் பதித்துக் கொள்ள வேண் டும் என எண்ணி, பிரக்ஞையால் மூளையை உருட்டிவிட்டுக் கொண்டிருந்தேன். என் ஜாக்கிரதைகள் இன்னும் சில கணங்க ளில் குலைந்து போய்விடும் என அப்போது என்னிடம் யாரேனும் கூறியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். என் உடைமைகள் என் பையிலிருந்து பறிபோய் விட்டன. உடையில் உரசி, உடம்பில் உரசாமல் என்ன கள்ளத்தனமான விரல்கள்! விழிப்பு நிலையை நான் முற்றாக இழந்திருந்தேன் என்பதற்கு இது நிரூபணமா யிற்று. அப்போது வாகனத்தின் இரும்போசைகளும் எனக்குக் கேட்கவில்லை. மனிதச் சந்தடிகள் ஏதும் என் காதில் விழவும் இல்லை.

நான் ஏறிய வாகனங்களும் சரியில்லை. சரியான போதைக் கூட்டம் அங்கு. அ- பாவிகளா! இவ்வளவு பகிரங்கமாகவா? குடித்து, கஞ்சா அடித்து தலைசுற்றிச்சுழலும்போது, மீண்டும் க்ஞ்சா அடிக்கும் கூட்டம் பெண்கள் வேறு இடங்களுக்கு நழுவி யிருந்தார்கள். நான் சரியாக மாட்டிக்கொண்டு சரிய ஆரம்பித்து விட்டேன். ஒரு நாளும் நான் அவ்வளவு குடித்ததில்லை. என உடமைகளைத் திருடிக்கொண்ட கள்ள விரல்கள் என்னை ஒரு பூச்சிபோல் மாற்றி புட்டிகளில் இறக்கி குலுக்கியெடுத்து வெளியே Lன. என் கடிவாளங்கள் எல்லாம் அறுந்துபோய்விட்டன. அதுகாறும் நான் அவற்றை இழுத்துப்பிடித்துக்கொண்க: எவ்வித பொருளும் இல்லை என்றாயிற்று. தடை பழுதுறற வாக னம் பள்ளங்களில் உருளுவதுபோல் நா? சரிய ஆரம்பித்தேன். இநட் இருப்பவற்றைப் போசை' பொறிகள் என்ன பதிவு செய்யும்? இந்தப் போதைப் பொறிகள் அளிக்கும் செய்திகளை, இந்த பிரக்ஞை இனி எப்படி தொகுக்கும்? இதற்கு முன்னர் நடந் கது போலவே இப்போதும் நடந்துவிட்டதே. பொறிகளில் கசியும் போதைகளை முற்றாகத் துடைக்க எண்ணி நான் எடுத்துக் கொள் ளும்பிரயாசைகளும் பொறிகளைப் போதைகளில் முக்கும் காரியங்க ளாகச் சரிகின்றன. இதனால் எனக்கு ஏற்படும் மன ஆயாசம் கொஞ் சம் நஞ்சமல்ல. இவ்வாறு மனமுறிந்த ஒரு நேரத்தில், "தற்கொலை தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு" என நான் கூறியபோது நீங்கள் என்னிடம் மிகுந்த கோபம் கொண்டீர்கள். கயிற்றிலிருந்து விடுபட்ட பம்பரத்தின் துக்கத்தை நான் சொல்ல முற்படும் போது, சொல்லச் சொல்ல பம்பரத்திற்கும் கயிறுக்குமான உற வைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த துக்கமும் சேர்ந்ததில்தான் நான் தற்கொலையைப் பற்றிச் சொன்னதே. 

நான் எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாகவே அந்த ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன், தெரு விளக்குகள் எரிந்து கொண்டி ருந்தன. அவை விடிந்தும் எரியும் விளக்குகளா? அல்லது வரப் போகும் இருட்டை விரட்டவா? நான் எப்போது கிளம்பினேன்? எல்லாக் காலங்களிலும் நடந்திருந்த காரியங்கள் அப்போதும் நடந்துகொண்டிருந்ததால், காரியத்தை வைத்துக் காலத்தை எப்ப நிர்ணயிப்பது? அந்தக் கற்கட்டிடத்தின் படிகளில் மூன்று பெண்டி களைக் காவல் வீரர்கள் பிரம்பால் அடித்துக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு இவர்கள், பிரம்பால் அடிப்பதை, வெவ்வேறு இடத் திலும் வெவ்வேறு காலங்களிலும் நான் பார்த்திருக்க இங்கு இவர்கள் இப்போது அடிப்பதை வைத்து இது எந்த இடம் என்றோ, எந்தக் காலம் என்றோ எப்படிச் சொல்வது? அந்தப் பெண்களைப் போலவே இந்தப் பெண்களும் அசையாமல் உட் கார்ந்துகொண்டிருக்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தே உடம்பை நெளிக்கிறார்கள். ரவிக்கையின் கீழே ஒருத்திக்கு தோல் உரிந்து ரத்தம் துளிர்த்திருந்தது. சுற்றிவர மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆடை அணிந்திருந்தார்கள். தாடி, மீசை இருந்தன. முகங்கள் இறுகிப் போயிருந்தன. 

எனக்கு மயக்கமும் வயிற்றுப்புரட்டலும் வந்துகொண்டி ருந்தன. ஒரு ஆவேச வாந்தி ஆரம்பம் கொள்கிறது என்று நினைத் தேன். குப்பைத் தொட்டியைப் பிடித்தவாறே நின்று கொண்டி ருந்தேன். அப்படியானால் என் சாட்சியம் என்ன? என் பதிவுகள் எவ்வாறு? என் பங்களிப்பு எப்படி? சரித்திரம் எனக்காக எவ்வளவு தான் கதறித் துடித்தாலும், குப்பைத் தொட்டிப் பிடியைத் தளர்த்த முடியாது. அங்கு நின்று வாந்தி எடுத்தவாறு, வாந்தியெடுப்பு களின் இடைவேளைகளில் என்னென்ன பார்க்கமுடியுமோ அவற்றைப் பார்த்து என்னென்ன புரிகிறதோ அவற்றைப் பதிவு செய்யலாம். குப்பைத்தொட்டியை விட்டுத் தெருவில் குதித்து, தெருத் தெருவாக வாந்தியெடுத்து, வாந்தி எடுத்ததையெல்லாம் சரித்திரம் என்று சொல்லக்கூடாது என்று நினைத்தேன். நான் குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்க 

அடர்த்தியான காடு ஊருக்குள் புறப்பட்டு வருவது போல் ஜனக் கூட்டம் வந்து கொண்டிருந்தது. தேனீக்களின் எண்ணற்ற கூடுகள் ஏக காலத்தில் கலைக்கப்பட்டது போல் பரவெளியில் ஹ2ங்காரம். போர் முழக்கத்தின் பீதியை விரோதிகளின் மனத் தில் ஆழப் பாய்ச்சும் ஹாங்காரம் அது. மிகப் பெரும் சாகஸம் கொள்ள இருப்பதை சரித்திரம் எவ்வளவு வலுவாக வெளிப்படுத்தி விட்டது. திட நிச்சயம் கொண்டிருக்கவில்லையெனில் அது இவ் வளவு பெரிய ஹ7ங்காரத்தை எடுப்பில் எழுப்பியிருக்க முடியாது, ஆக, இதற்கு முன் எப்போதும் வராமல் போன எழுச்சியல்ல இது. உருத்திரண்டு வந்துகொண்டிருக்கும் எழுச்சி. சரித்திரத்தில் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு சாட்சியம் அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

நான் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். இதுபோல் ரோஷம் கெட்டு நான் ஒருபோதும் வாந்தி எடுத்ததில்லை. என் குடல்கள் புறஉலகில் இழுக்கப்பட்டு, கண்ணுக்குப் புலப்படாத எந்த அசுத் தத் தொட்டிகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன? என்ன இது? இவ்வளவு அசுத்தங்களைக் குடலுக்குள் வைத்துக்கொண்டு சரித் திரத்தை எப்படிப் பதிவு செய்யப் போகிறேன்? ஜனக்கூட்டம் என்ன இப்படித் திரள்கிறது. ரோகிகள் இலட்சக் கணக்கில் கூடி விட்டார்கள். மருத்துவர்களுக்கு எதிராக அவர்கள்தானே கலகத் தை முதலில் ஆரம்பித்தார்கள்? ஆமாம். துக்கத்தின் எரிவாயுக் கிடங்குகளில் அவர்கள்தான் முதல் நெருப்பு கிழித்தார்கள். நாற் றிசையும் பரந்து பிடித்துவிட்டது ஜாவாலை, கடல் அலைகள் ஜுவாலைகளாக மாறிக் கரையேறி வருகின்றன. தென்னந் தோப்புகள் பற்றி எரிந்தன. என்னைச் சுற்றி எங்கும் நீக்கமற நோயாளிகள். கண்ணுக்குப் புலப்படும் உறுப்புகள் அனைத்தி லும் நோய் கொண்டவர்கள். புலப்படும் உறுப்புகள் பளபள வென்று இருக்க, புலப்படா உறுப்புகள் உள்ளுர அழுகிக்கொண் டிருப்பவர்கள். இவர்கள் மத்தியில் எனக்குப் பெரும் ಆಹ೩೦ கிடைத்தது. சத்தத்தை அமுக்குவதற்குப் பதிலாக, ஊக்குவித்துக் கொண்டு ஓங்கார வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். வாந்தியில் தான் எத்தனை நிவர்த்தி குடல் மட்டும் எடுக்க இவ்வளவு நிவர்த்தி என்றால் சகல உறுப்புகளும் எடுக்கத் தொடங்கினால் எவ்வளவு நிவர்த்தி ஏற்படும் இந்த ரோகிகள் உருவாக்கும் சூழல் தான் எவ்வளவு சுதந்திர வாந்திக்கு இட்டுச் செல்கிறது. 

ஒரு வயோதிக ஸ்தி? என் தலையைப்பிடித்துக்கொண்டாள். அவள் ஏதும் என்னை விசாரிக்கவில்லை. உடற்பிரயாசையுடன் பலர் நகர்ந்து வந்து என்னை அரவணைக்க முற்படுகிறார்கள். என் உடல் குழைந்து, தலை சரிய முற்பட்டபோது, என் சிரத்தின் அடியே ஒரு மடி வந்தது. அது யாருடைய மடி என்று ஆராய எனக்குத் தெம்பில்லை. அங்கு ஒவ்வொருவரும், ஒவ்வொருவருக் காகவும் நெகிழ்ந்துகொண்டிருப்பதை நாள் உணர்ந்தேன். ஒரு முந்தானை என் முகத்தைத் துடைத்தது. என்னால் நான் வாத்தி யெடுக்கப்பட்டது போல் அவ்வளவு அசுத்தமாக இருந்தேன். ஆனால், என்னை சுச்ருவித்த விரல்களின் குளிர்ச்சி என் உடல் பட்டு ஜில்லிட்டது. ஜீவன்கள் அங்கு அவற்றின் பிறப்பின் கூறு களையும் வளர்ப்புக் கோலங்களையும் தோற்ற குணங்களையும் வீசி உதறி, மூலப் பண்புகளில் முயங்கப் பேராவேசம் கொண்டி ருந்தன. ஒரு தடவை நான் லேசாகக் கண் திறந்து பார்த்தேன். விழி ஓரங்களில் இருளின் ஒரு பெரிய துண்டு ஒட்டிக்கொண்டி ருந்தது. அதை ஊடுருவிப் பார்த்த போது தேள் கூட்டை பூதக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் திக்பிரமை அடைந்தேன். என்ன இப்படி கூட்டம் திரள்கிறது! புசுபுசுவென்று எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் இப்படி! ஊர் ஊராகக் காலி செய்துவரு கிறார்களா? ஆறுகள் தாண்டி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி, காட்டுப்பாதைகளில் புகுந்து புறப்பட்டு வருகிறார்கள் போலிருக் கிறது. சகல பேதங்களையும் அழித்துக்கொண்டு சகல ஜீவன்சு ரூம் ஒன்றாகத் திரண்டுவிட்டன. ஜீவன்கள் ஒன்றுகூடித் தங்கள் மொத்த வடிவத்தை நீளமாக அமைத்துக்கொண்ட வடிவத்திற்கு அப்பால் அவர்கள் இல்லாமல் இருக்கும்போதுதானே ஊர்வலம் என்பது சாத்தியம்? இங்கு காலூன்ற இடமில்லாமல் ஒவ்வொரு வரும் மற்றவர் மீது புதைந்துகொண்டு நிற்கும்போது எங்கு அவர்கள் ஒதுங்குவது? காடுகள் புறப்பட்டது போலவும், மலைகள் நகர்வது போலவும் இவர்கள் வந்துகொண்டே இருந்தால் கொள் ளிடம் ஏது? 

எனக்கு மயக்கம் போட்டுவிட்டது. அப்போதும் ஒரு பிர காசமான மெழுகுவர்த்தி என் மனவெளியில் எரிந்து கொண்டிருப் பதை உணர்ந்தேன். மஞ்சளும் உதாவும் கலந்த அந்த சுட்ரின் அழகை எப்படி வர்ணிப்பது? பதட்டம் இல்லாமல் உடம்பைச் சுருக்கிக்கொண்டு அது மேலெழப் பார்க்கிறது. அதன் துடிப்பைப் பார்க்கும்போது நிமிர்ந்து வானக்கரை முட்டினாலும் அது அடங்காது என்று தோன்றுகிறது. அதன் வென்; எனக்கு சகல காட்சிகளும் தெளிவாகப் புலப்பட்டன. முன்னால் மூளை மட்டும் பிரக்ஞையாக இருக்க, இப்போது உடம்பின் ஒவ்வொரு உறுப்பும், ரோமக்கால்களும் பிரக்ஞையாகி விட்டன. என் கைகள் தடவிவிடப்படுவதையும், என் நெற்றி அமுக்கப்படுவதை யும், என் தலைமயிர் கோதிவிடப்படுவதையும் உணர்ந்தேன். காற்றின் ஸ்பரிசங்களையும் என் ரோமக்கால்கள் வழி. மிகுந்த ஆத்ம நிறைவுடன் சுவீகரித்துக் கொண்டேன். என் மனவெளியைப் பனித்துளிகளால் மெழுகுவதுபோல் இருந்தது. 

ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பள்ளதாக்குகளைக்காலி செய்துகொண்டு வந்துவிட்டார்கள். சுதந்திரம் இல்லை எனில், பொன் கொண்டு, பெண் கொண்டு பெற்றெடுக்கும் குழந்தைகள் கொண்டு ஏதும் புண்ணியமில்லை என்பது அவர்களுக்குத் தெளி வாகிவிட்டது. இந்த எளிய உண்மையை இவர்களுக்குக் கற்றுத் தரும் முயற்சியில் கோடானு கோடி வருஷங்கள் தோல்வி கண்ட சரித்திரம் இப்போது வெற்றி கண்டு விட்டது. அவர்களுடைய சகல இருப்பிடங்களையும் இனி வள விலங்குகள் எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் உடல் வருந்திச் செழிக்க வைத்த பயிர் கள் எல்லாவற்றையும் கொடிய மிருகங்கள் மேயட்டும். அவர்கள் காலங்காலமாகக் கட்டியெழுப்பிய வீடுகள் மீதும், பண்புகள் மீதும், ஊர்வனவோ இழைவளவோ புகுந்து புறப்படட்டும். அவர் களுடைய குழந்தைகளின் தொட்டில்களில் இனி பாம்புகள் குஞ்சு பொரிக்கட்டும். மரணங்களுக்குப் பயந்து அவர்கள் இதுகாறும் சகித் துக் கொண்டு வந்திருக்கிறார்கள். இனியும் சகிப்பது சாத்திய மில்லை. எந்த மரணத்துக்கு அவர்கள் இதுகாறும் பயந்து வந் தார்களோ, அந்த மரணத்தைக் கொடியாகப் பிடித்துக்கொண்டு இவர்கள் இப்போது புறப்பட்டு விட்டார்கள். இனி, கத்தியைக் காட்டியோ, அம்பைக் காட்டியோ, வேலைக் காட்டியோ அவர் களைப் பயமுறுத்த முடியாது. - 

எனக்குப் பலர் விசிறினார்கள். நான் நகர்ந்துகொண்டி ருப்பதும் எனக்கு அப்போது தெரிந்தது. தோளில் தூக்கிக்கொண்டு போகிறார்கள்போல் இருக்கிறது. விரிந்து, வியாபித்து, பரந்து கிடக்கும் ஒரு மலை, பூமியின் உறவில் மனம் கசந்து அடிவயிற்றை உருக்கிக்கொண்டு புறப்பட்டதுபோல் ஐனக்கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடிவானத்தில்தெரியும்பள்ளத்தாக்கைநோக்கி நகர்கிறது இந்தக் கூட்டம். கழுகுகள் மட்டுமே வாசம் செய்யும் பள் ளத்தாக்குஅது. அங்கு பல கொடிய விலங்குகள் எதிர்விளைத் தெரி யாமல்கத்தி, அந்தக்கத்தலின் பயங்கரமான எதிரொலிச்சுழற்சியால் தாக்கப்பட்டு இறந்திருக்கின்றன. தலையால் வானத்தை முட்டி, பாதங்களால் மேகத்தைத்துவைத்துக்கொண்டிருக்கும் பள்ளத்தாக்கு கள் அவை, கீழே இருந்து நெடிதுயர்ந்து மேலோங்கும் மரங்கள் எதுவும் அதன் பாதங்களைத் தொட்டதில்லை. அந்த ராக்ஷஸ torrir களின் அடர்த்திக்கு வானவெளி போதாமல் ஒன்று மற்றொன்றுள் பாய்ந்து, கிழித்துக்கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தன. கீழேயிருந்து தனித்தனியாகப் புறப்பட்டவை மேலே பந்தலாகி ஒன் றுடன் ஒன்று பின்னிக்கொண்டிருந்தன. பள்ளத்தாக்கின் சிரசு என்று சொல்லும்படி இருந்தது ஒரு வழுக்கை மலை, அதில் சாய்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தது வானம் 

தூரத் தொலைவிலேயே நான் கவனித்துவிட்டேன். பள்ளத் தாக்கின் கீழே நெடித்துயர்ந்த மரங்களிலெல்லாம் இலை காய் தெரியாமல் ஜீவன்கள் தொங்கிக்கொண்டிருந்தன. குரங்குகள் என்று தான் முதலில் நினைத்தேன். அப்படியானால் வால்கள் எங்கே? குரங்குகள் அல்ல. ஆடையற்ற மனிதர்கள். ஆடைகளை வழி நெடுகக் களைந்துகொண்டு வந்திருக்கிறார்கள், ஆடை களைக் களைந்து தொங்கிக்கொண்டு கிடந்தால் இனங்கான முடியாது என்ற கற்பனை போலும், 

அட, பாவிகளா! நீங்கள் செய்தகொடுமைகளை எல்லாம் உங்கள் ஆடைகளா செய்தன? நீங்கள் செய்த அவ்வளவு கொடு மைகளும் உங்கள் விழிகளில் பிதுங்கி நிற்கும் போது, எங்கு அந்த விழிகளைப் பறித்து எறிவீர்கள்? ஒவ்வொரு முகத்தையும் நான் கூர்ந்து கவனித்தேன். எல்லோருக்கும் தெரிந்த விரோதிக்ள் அவர்கள். சிறிது காலம் அங்கு தொங்கிக்கொண்டு கிடந்தால், தலைகளைத் தப்ப வைத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் வரலாம் என்ற சப்புக்கொட்டல் போலிருக்கிறது. அது இனி நடக்காது. இப்போது நீங்கள் வெட்டவெளிச்சமாகி விட்டீர்கள். மனிதகுலம் இதுகாறும் பேணிக் காத்து வந்த சகல பயிர்களையும் நீங்கள் அழித்துவிட்டீர்கள். 

முழு ஜனமும் இப்போது மழுங்கல் பாறையில் ஏறி விட் டது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு காரியம் நடந் தது. இதுபோன்ற ஒரு யோசனை அவர்களுக்கு இருக்கக்கூடும் என்று நான் அறியவேயில்லை. மலையில் இருந்து ஒவ்வொரு வராகப் பள்ளத்தாக்கை நோக்கிக் குதித்தார்கள். கனத்தோறும் குதித்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பதுகூடச் சாத்தியமில்லை. நீரில் குதிப்பதுபோல் அவர்கள் குதித்தார்கள். மரணத்தின் கொடி யை ஏந்திப் பிடித்துக்கொண்டு அவர்கள் குறி தப்பாமல் குதித் தார்கள். தலைகீழாக வந்த சிரங்கள், மரத்தில் தொங்கிக்கொண் டிருந்த சிரங்களில் மோதின. கபோலங்கள் மோதிப் பிளந்து தெறித்தன. அந்த மோதலில் வெளிப்பட்ட சத்தம் மலை முகடுகளில் எதிரொலித்து சுருண்டு சுருண்டு வந்தது. அந்தச் சத்தம் வன விலங்குகளுக்குக் கேட்டிருக்கும். காட்டைத் தாண்டி அந்தச் சத்தம் ஊருக்குள் புகுந்து, ஊர்வனவற்றிற்கும் பறப்பனவற்றிற் கும் கிலியை மூட்டியிருக்கும். ஊர் தாண்டி மலை தாண்டியும் கடல் தாண்டியும் எங்கேனும் மனித ஜீவன்கள் மிஞ்சியிருந்தால் அவர்களை அந்தச் சத்தம் சென்று அடைந்திருக்கும்.

கடைசி ஜீவனாக மிஞ்சிவிடக் கூடாது என்று நான் பயந்தேன். அப்படி மிஞ்சினால் அதுபோல் வேறு அவமானம் ஒன்றும் இல்லை. அப்போது எனக்கு வாழ்க்கையும் இல்லை. மனித ஜீவன்கள் அற்ற இடத்தில் உடல் மிஞ்சிக் கிடப்பது வாழ்க்கை ஆகாது என்பதை நான் நன்றாக அறிவேன். ஜீவன்களுடன் ஜீவன்கள் கொள்ளும் உறவு சாத்தியமில்லை எனில், மரணத் துடன் ஜீவன்கள் கொள்ளும் உறவே வாழ்க்கை. நானும் குதித் தேன். எனக்கும் குறி தப்பவில்லை. ஒரு கபாலத்தைச் சிதறடித் துக்கொண்டு என் கபாலம் சிதறிய சத்தம், என் காதில் விழுந் தது. நான் சிதறடித்த கபாலம் யாருடையது என்று எனக்குத் தெரியாது. ஆனால், அது சிதறடிக்கப்பட வேண்டிய கபாலம் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. Ο

மீட்சி - 1985



Saturday, June 17, 2017

காலாட்படை பற்றிய குற்றப்பத்திரம் – எஸ். ராமகிருஷ்ணன்

காலாட்படை பற்றிய குற்றப்பத்திரம் – எஸ். ராமகிருஷ்ணன்

https://archive.org/download/KaalatpadaiPatriyaKutrapPathiram/Kaalatpadai-Patriya-Kutrap-Pathiram.pdf

AUTOMATED GOOGLE-OCR

நெடு நாள்களுக்கு முன்பு நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டபோது, இது போன்ற ஒரு குற்றப் பத்திரத்தைப் பின்னாளில் நான் எழுத வேண்டியது வரும் என ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த இருபது வருடங்களாக எனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் தொல்லைகளையும் மனதில் கொண்டே நான் இந்தக் குற்றப் பத்திரத்தைத் தயாரித்து உள்ளேன். இதை நான் யாரிடம் சமர்ப்பிப்பது என இன்னமும் முடிவு செய்யவில்லை. எனக்குத் தெரிந்த சிலரிடம் நேரிலும், கடிதத்திலும் இதைப் பற்றி எழுதிய போதெல்லாம் அவர்கள் இதை என் கற்பனையின் குழந்தை எனக் கிண்டல் செய்தார்கள். ஒரு முறை நான் இதைப் பற்றி நம் நாட்டின் முதல் பிரஜையானவருக்கே கடிதம் எழுதி உள்ளேன். அவரிடமிருந்து கையெழுத்திட்ட புகைப்படம்தான் எனக்குப் பதிலாக வந்தது. இந்தப் புகைப்படத்தைக் கூடப் பத்திரப்படுத்தி வைக்க முடியவில்லை. அலுவலக மேஜையில் வைத்த இதுவும் காணாமல் போய்விட்டது.

நான் 1956ஆம் ஆண்டு என் இருபதாம் வயதில் அரசாங்க ஆவணக் காப்பகத்தின் சேமிப்பு அறைக்கு உதவியாளனாக வர நேர்ந்தது. அந்த அலுவலகம் சிவப்பு நிறச் செங்கல் கட்டடத்தின் பின் பகுதி. வலையிடப்பட்ட ஜன்னல்கள். புழுக்கமும் புத்தகக் கட்டுகளிலிருந்து வரும் ஒரு வித வாடையும் நிரம்பிய அறைகள். பழைய ஓலைச் சுவடிகள். நீட்டெழுத்துக் கடிதங்கள். பாதி பாதியாய் உதிர்ந்துபோன கடிதங்கள். இந்தக் கட்டடம் முழுமையுமே எட்டுக் கால் பூச்சிகள் நிறைந்துபோய் உள்ளன. சில எட்டுக் கால் பூச்சிகள் அசாதாரணமான சைஸில் இருந்தன. அவற்றின் எட்டுக் கண்களும் சுழன்று திரும்பிக்கொண்டிருந்தன. கட்டடத்தின் தரைகளில் பிசுபிசுப்பும் கறுப்பும் எப்போதும்

 127

ஒழுகிக்கொண்டே இருந்தன. ஆட்கள் எவரும் இந்த ஆவணங் களைப் பார்க்க வருவதில்லை. எப்போதாவது சிலர் கடிதம் மூலம் விவரங்கள் கேட்டு எழுதுவார்கள். சாவகாசமாகத் தேடி பதில் அனுப்பலாம். என்னைத் தவிர ஒரு பெண்ணும் அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தாள் எனக் கேள்வி. அவள் மேஜை கட்டடத்தின் பின்அறையில் கிடக்கும். அந்தப் பகுதியில் பகலில் நல்ல வெயில் வரும். நிழல் போல அவள் அலைந்து கொண்டி ருப்பாள். அவள் எந்த விதத்திலும் என்னோடு பேசியதில்லை. ஜன்னல்கள் இல்லாத அறைகளாக நான்கு அறைகள் இருந்தன. அதற்குள் நிறைய ஆவணங்கள் குவிக்கப்பட்டிருந்தன. நான்கு அறைகளையும் இணைக்கும் பெரிய ஹால் ஒன்றில் எருதுத் தலைகள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. நான் அலுவலகத்தில் சேர்ந்த சில மாதங்களிலே மணம் செய்துகொண்டேன். அழகான பெண். பகலில் படிக்க அவள் ஏதாவது புஸ்தகங்கள் வேண்டு மெனக் கேட்டபோது, அலுவலக ஆவணங்களில் சிலவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து படிக்கக் கொடுத்தேன். அவள் அதை யெல்லாம் பகலில் படித்திருக்கக் கூடும். அவள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வந்தாள். அந்த ஆவணங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென நான் கேட்டபோது எரித்து விட்டதாகச் சொன்னாள். அவள் அதன்பின் என்னைப் பார்க்கும் போதும். பேசும்போதும் அலட்சியமாக நடந்துகொள்ளத் தொடங்கினாள்.

ஒரு நாள் இரவில் படுக்கையில் சண்டையிட்டபோது அவள் என்னை எதிர்த்துக் கூச்சலிட்டுச் சொன்னாள்:

'உன் மூதாதையர்கள் ராணிக்கு வெந்நீர் போட்டுக் கொடுத்த அற்பர்கள்

‘எப்படித் தெரியும் உனக்கு?

"எல்லாவற்றிற்கும் ஆவணங்கள் இருக்கின்றன"

நான் திடுக்கிட்டுப் போனேன். என் மூதாதையர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாத எனக்கு அவர்கள் அரண்மனை அந்தப்புரங்களுக்கு வெந்நீர் போடுபவர்களாக இருந்திருக்க இயலாது எனத் திட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் ஆவண அறையிலே அதன் பின்நாள்களில் தங்க நேர்ந்தது. நிறைய ஆவணங்கள் இருந்தன. பகலில் படித்தபடியிருந்தேன்.

128 
இப்ராஹிம் லோடி, முகம்மது கோரியின் கடிதங்கள், ராபர்ட் கிளைவின் வளைந்த கையெழுத்துகள், வியாபார சம்பந்தமான எழுத்துகள், குதிரைப் படையின் வரவு செலவுக் கணக்குகள், ராணிக்குப் பன்னீர் வாங்க ஆள் அனுப்பிய விவரங்கள், தொப்பி வாங்க அலைந்தவர்கள் சமர்ப்பித்த விவரங்கள். எனக்கு தலை சுற்றத் தொடங்கியது. நிசப்தத்தில் வரிகள் மெல்ல அமிழ்ந்து ஆட்கள் வெளிவரத் தொடங்கினார்கள். கடிதங்களில் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். லோடியின் உருது மொழி திருகித் திருகிச் சுழன்றது. முகம்மது கோரி சதாவும் சண்டைக்காகக் கத்தியைச் சாணை தீட்டிக்கொண்டிருந்தான். கத்தி முனை என் கழுத்து வரை வந்துபோனது.

அந்த அரச ரூபங்களின் சாயைகள் அறைகளில் நிரம்பத் தொடங்கின. நான் வீடு திரும்பும்போது கூட அந்தச் சாயைகள் சில என்னோடே வந்தன. நான் அவற்றைக் கண்டு பயந்து தப்பி அலைந்தேன். நிச்சயமாகச் சொல்ல முடியும். நான் சாப்பிடும் போது இப்ராஹிம் லோடி பார்த்துக்கொண்டேயிருக்கிறான். என் தண்ணிர் டம்ளரின் விளிம்பு வரை அவன் விரல் படிந்து வருவதைப் பார்க்க முடிகிறது. பளபளப்பான உடை. கள்ளம் நிரம்பிய கண்கள். என் மனைவி என்னைப் பார்த்தபடியே அழுகிறாள். நான் சில நாள்கள் படித்த ஆவணங்களில் என் மூதாதையரில் சிலர் பல்லக்கு தூக்கினார்கள். சிலர் குதிரைக்குக் கொள்ளு வாங்கக் கையில் ஈட்டியோடு ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் அரண்மனையில் கீரைப் பாத்தி போட்டுக் கொடுத்தார்கள். அவர்களில் இருவர் அரண்மனைத் தோட்டத்தின் மூலையில் நின்று ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். அது ஏதாவது ஒரு சதித் திட்டத்தின் ஆதாரமாகத் தான் இருக்கக் கூடும். அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சொன்னார்கள். ஒருவன் வேகமாகப் போய் அரசர் போகும் பல்லக்கின் அடியில் கருந்தேளைப் போட்டுவிட்டு வந்தான்.

துரோகம்.

சக துரோகி.

மற்ற விவரங்கள் ஆவணத்தில் கிடைக்கவில்லை. சக துரோகி களான என் முன்னோர்கள் கருப்பாகவும், உயரமாகவும் இருந்தார்கள், கண்கள் பெரியதாகவும், கட்டை மீசைகளோடும் அலைந்தார்கள். ஆவணக் காப்பகங்களுக்கு இரவில் திக்காக

 டு 129

இருட்டு வருகிறது. கரைக்க முடியாத இருட்டு, ஜன்னல்கள் அற்ற அறைகளில் விளக்குமில்லை. மெழுகுவர்த்தி வெளிச் சத்தில் நான் மூதாதையரைத் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன். பல தலைமுறையாக ராணிகளுக்கு வெந்நீர் போட்டுக் குளிக்க ரெடி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ராணிகள் உப்பரிகைகளில் ஈரத் தலையை உலர்த்துகிறார்கள். சாம்பிராணிப் புகை பரவுகிறது. ராணிகளுக்கு மிதமான சூட்டில் வெந்நீர் போடும் ஆட்கள் அடுத்த அண்டாக்களில் தண்ணீர் ஊற்றி அடுப்புப் பற்ற வைக்கிறார்கள். மித வெந்நீரில் குளித்துக் குளித்து வெளுத்துப் போனது பெண்ணின் உடல், ராணிகள் கழித்துப் போடும் மயிரைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள்.

என்னால் இதையெல்லாம் தாங்க முடியவில்லை. இதில் எதுவுமே உண்மையாக இருக்க முடியாது என்றே முடிவு கொண்டேன். நான் என் மூதாதையர் பற்றித் தெரிந்துகொண்டு திரும்பும்போது இன்னொரு அறையிலும் ஆள் இருப்பது போலச் சாயை ஊர்ந்தது. நான் அந்த அறை வாசலுக்குப் போனேன். என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் எனக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்திருக்கிறாள். அவள் முன் ஏராளமான ஆவணங்கள். தட்டை வரிகள், கறுப்பும் பச்சையும் கலந்த மசியில் எழுதப்பட்ட கடிதங்கள். அவள் பின்னிருந்து பார்த்தேன்; அவள் காலாட்படைகள் பற்றிய ஆவணங்களை ஒழித்துக்கொண்டிருந்தாள்.

நான் பார்த்தது நிஜம். சிறு புல் அளவில் காலாட்படை வீரர்கள் அந்த ஆவண எழுத்துக்களிலிருந்து குதித்துக் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள், சாய்வு எழுத்துகளில் இருக்கும் கோடு போன்ற உடல், அநேகமாக ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்கள். கறுப்பு மழை எறும்புகளையும் விட சிறிய உருவம், வார்த்தைகளிலிருந்து உதிர்கின்றன. அவளைச் சுற்றி நின்று கொண்டுள்ளன. சில உருக்கள் கோடுகளை உடைத்து வெளியே வருகின்றன. கொம்பு எழுத்துகளின் அடிப்பகுதியைக் கிழித்து சில உருக்கள் விழுந்தன. பல ஆயிரம் வருடங்களாக நடந்து

நடந்து ஓய்ந்து, சண்டையிட்டுச் செத்தவர்கள். அந்த உருக்களை எல்லாம் அந்தப் பெண் கரையான்கள் என நினைக்கிறாளோ என சந்தேகமாக வந்தது. நான் அந்தப் பெண் அருகில் உட்கார்ந்து பார்த்தேன். சிறு சிறு உருக்கள், கவச உடைகள். தலைக் கவசம், சிறு ஈட்டிகள், லட்சியமற்று இங்கும் அங்கும் ஒடித் திரிந்தன.

130 கு 

அந்தப் பெண் என்னைப் பார்த்ததும் திடுக்கிட்டுப்போனாள். என்ன? என்ன? என்பது போலப் பார்த்தாள். நான் அவளிடம் சொன்னேன்.

'காலாட்படைகள்.

அவள் சொன்னாள்.

தெரியும். இவர்களை நான்தான் விழிக்கச் செய்தேன்'

“எதற்கு

"சிலரைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும்."

"யார் அவர்கள்?"

'உன்னிடம் விளக்கப் போவதில்லை. இந்தக் காலாட் படைகளிடம் கேட்கப் போகிறேன் அதை."

காலாட்படைகளை அவள் அதட்டி நிறுத்தினாள், சில முன்னும் பின்னும் ஒடிக்கொண்டிருந்தன. அவள் அவர்களின் முகத்தைப் பார்த்தாள். சிறு புள்ளி போல முகம். அவள் அரட்டிக் கேட்டாள்.

"tங்கள் தூக்கிப் போன பெண்கள் எங்கே."

"எப்போது"

'எல்லாக் காலத்திலும்தான்."

'அரசர்களிடம் இருக்கக் கூடும்."

"எங்கே உன் முட்டாள் ராஜாக்கள். கூப்பிடு.

காலாட்படைகள் உள்ளே ஓடின. அவள் முன்யோசிக்காத உருவில் ராஜாக்கள் தோன்றினார்கள். பாவாடை போன்ற ஆடை களும், கொழுத்த கன்னங்களும், பெரிய மூக்கும் அசிங்கம் ததும்புகிறது. கையசைத்துக் காதல் கீதம் பாடுகிறார்கள்.

அவள் அவர்களைச் சொல்லிச் சப்தமிடுகிறாள். என்னால் இதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நான் ராஜாக்களை விரட்டி அடித்தேன், அந்தப் பெண் விசும்பியபடி சுருண்டு கொண்டாள். நான் காலாட்படையிடம் கேட்டேன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்.


 க 131'பக்கங்களிலிருந்து, வாயிலிருந்து."

இதை நம்ப முடியாதபடி நின்றேன். காலாட்படைகள் அறை சுற்றி வந்தன. அறைச் சுவரில் இருந்த ராட்சசச் சிலந்தியை எதிர்த்து ஈட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள் பல வீரர்கள். நடக்க நடக்க அவர்களுக்கு அறை பெரியதாகியபடியே இருந்தது. நடக்க முடியாமல் சுருண்டார்கள், அறையில் கிடக்கும் காலியான நாற்காலியில் திரிகிறார்கள்.

எனைத் தாண்டிப் போய்த் தேடுவது போலப் போனார்கள். மங்கிய ஆவண அறையில் அவர்கள் நடப்பது விந்தையாக இருந்தது. அவர்கள் எல்லா காலத்தைப் பற்றியும் தெரிந்து வைத்துக்கொண்டு சாவகாசமாக உலவும் ஆட்கள் போல நடந்து கொண்டார்கள்.

சில மணி நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான உருக்கள் அலையத் தொடங்கின. எல்லா ஆவணங்களையும் புரட்டித் தள்ளு கிறார்கள். எனைச் சுற்றித் திரிகிறார்கள். நான் அவர்களில் சிலரை அள்ளி காலியாக இருந்த மை பாட்டிலில் போட்டு எடுத்துக் கொண்டு என் மேஜைக்கு வந்தேன், இரவு விடியும் தறுவாயில் இருந்தது, கண்ணாடியை அவர்கள் இடித்துக்கொண்டிருந் தார்கள் மற்ற உருக்கள் வெளியே வருவதற்கு முன் நான் அந்தப் பெண்ணை வெளியே இழுத்து அறைக் கதவைப் பூட்டினேன்.

என் மேஜையிலிருந்த காலாட்படை வீரர்களை வெளியே எடுத்துவிட்டு எப்போதோ படித்த திப்புவின் குரலில் கத்தினேன். அவசரமாக அவர்கள் வரிசைக்கு வந்தார்கள். அவர்களைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். சிறு அசைவு கூட அவர்களிடம் இல்லை. விரலை உயர்த்தியதும் அவர்கள் சப்தமிட்டார்கள்.

'திப்பு மஹாராஜா."

'திப்பு மஹாராஜா. ஜே."

காலாட்படையினைத் தனித் தனியாகப் பிரித்ததும் அவை தானாக மேஜை விளிம்புகளில் போய் காவல் நின்றுகொண்டன. சில தனியாக நின்றன. தனியாக நின்றவை எனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நான் அவைகளைக் கூர்மையாகப் பார்த்தேன், எனக்குத் தலை வணங்காத அந்த உருவைப் பார்த்துக் கேட்டேன்.

132 ஆ

 எத்தனைத் தலைகளை வீழ்த்தினாய் நீ.

அவை பதில் பேசவில்லை.

எங்கேயிருக்கின்றன அறுபட்ட தலைகள்

சிரிக்கும் சப்தம் கேட்டது. மேஜை விளிம்பிலிருந்து வந்திருக்க வேண்டும். நான் சிரிக்கும் பக்கமாகத் திரும்பிக் கேட்டேன்.

"எதற்குச் சிரிப்பு

நாங்கள் சமையற்கட்டைக் காவல் காத்த படைகள், !

வேறு யாரோ சிரிப்பது கேட்டது.

என்ன..?"

'உன் தாத்தா. ராணிக்கு வெந்நீர் போட்டவர்.

'நீ பார்த்தாயா."

பின்னே."

காலாட்படைகள் என்னை ஏளனம் செய்யத் தொடங்கின. அருகில் வந்து குதித்தன. நான் திப்புவின் குரலில் விரட்டினேன்.

அவை குதித்துக் கூச்சலிட்டன. என் ஆத்திரத்தில் அவைகளை நசுக்க ஒடினேன். அவைகள் சப்தமிட்டுச் சிரித்தன.

நாங்கள் ஏற்கெனவே இறந்தவர்கள்.

எனக்கு எதுவுமே புரியவில்லை. குழப்பத்தின் சூழலில் சிக்கிக் கொண்டிருந்தபோது அந்த வீரர்கள் என் முன்னே இரைந்து ஆத்தினார்கள்.

உயிருள்ளவர்கள் இறந்தவர்களைக் கொல்ல முடியாது நான் அவர்களைப் பார்த்துச் சொன்னேன்.

நீங்களெல்லாம் யாராம். வரலாற்றில் காலாட்படைகள்

ன்பது எல்லாம். ராணிக்கு வெந்நீர் போட்டவர்கள்தாம்.

அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இதில் அவர்கள் உண்மை யின் ஏதாவது ஒரு முகத்திருப்பத்தைக் கண்டிருக்கக் கூடும். பவுனமுற்றார்கள். அதன் பிறகு பல நாள்கள், வருடங்கள் அவர்கள் என்னோடு அதே ஆவணக் காப்பகத்தில் இருந்தார்கள்.

 133
பொருள்களைத் திருடிக்கொண்டு போனார்கள். சாப்பாட்டுக் கேரியரில் ஒட்டிக்கொண்டு வந்து வீட்டின் அலமாரி, புத்தகங்களுக்குள் ஒளிந்துகொண்டார்கள். எனைப் பார்க்கும் போது எல்லாம் கிண்டலடித்தார்கள்.

என்னால் அவர்களின் கிண்டலைப் பொறுத்துக்கொள்ள இயல வில்லை. வயதும் அதிகமாகிக்கொண்டே போனது. கோபம் எடுத்ததற்கெல்லாம் வருகிறது. அலுவலக அறையின் டைப் ரைட்டர் எழுத்தில் ஏறி நின்றுகொண்டு பல வீரர்கள் குதித்தார்கள். எழுத்துகள் பேப்பரில் பதிவாகின. டைப்ரைட்டர் ரிப்பனில் ஏறிப் போனார்கள். அவர்கள் அந்த ஆவணக் காப்பகத்திலிருந்து பல ரகசிய விவரங்களை இழுத்து வந்து என்னிடம் போட்டார்கள். ராபர்ட் கிளைவ் கப்பலில் வரும் போது எழுதிய குறிப்புகள் பல நகரங்களைப் பற்றிய குறிப்புகள். மன்னர்களுக்கு நடந்த கல்யாண விவரங்கள், பிளேக்கால் இறந்து போன ஆட்கள் பற்றிய விவரங்கள். கிறிஸ்துவப் பாதிரிகளின் பிரசங்க நோட்டுகள். சுவிசேஷப் பாடல்கள். காலாட்படைகள் எனைப் பார்த்துக் கிண்டல் அடித்தன.

ஒரு இரவில் காலாட்படைகள் எனை இதுவரை திறக்காமலே கிடந்த மூலை அறைக்கு இழுத்துக்கொண்டு போயின. அந்தஅறையில் வெள்ளையாக ஒரு உரு தொங்கிக்கொண்டிருந்தது. அதன் முன்னே பல்லாயிரம் கட்டம் கொண்ட பலகை. காவல் வீரர்கள் எனை அந்த அறைக்குள் தள்ளிப் பூட்டி ஓடினார்கள். வெள்ளை உரு திரும்பிக் கேட்டது.

விளையாடத்தானே வந்தாய்."

எனக்குப் புரியவில்லை. நான் அந்த அறையைப் பார்த்தேன். ஆவணங்கள் நொறுங்கி செதில் செதிலாகப் போயிருந்தன. எழுத்துகள் தூசிகள் போலாகிச் சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தன. என் குரல் வெளிவந்தது.

"யார். நீ. நீ."

அரசாங்கக் காப்பகங்களில் இருக்கும் வெள்ளை வேதாளம்'

"என்ன விளையாட்டு."

'உன் மூதாதையரை விடுவிக்கும் விலுையாட்டு. வா. அது ஒரு சுழலும் பலகை வரிசை வரிசையாகக் கட்டங்கள். ஒவ்வொரு

134 உ கட்டத்திலும் ஒரு கூட்டம் ஆண் பெண் உருக்கள் என் முன் சுழன்ற பலகையில் என் மூதாதையர் கட்டம் கட்டமாக நின்றார்கள். எனைப் போலவே உருக் கொண்டவர்கள், பெரிய பெரிய ஆகிருதிகள். முகச்சாயல், கண்கள் எனைப் போலவே. எனைப் பார்த்துக் கெஞ்சி அழுகிறார்கள். நான் பல தலை முறைகளைப் பார்த்தேன். என் எதிரேயிருந்த சுழல் பலகை சுற்றத் தொடங்கியது. வெள்ளை வேதாளம் எனை ஒரு கேள்வி கேட்டது.

"சரியான எண்ணைச் சொன்னால். அவர்கள் விடுதலை, தவறினால், நீயும் மாட்டிக்கொள்வாய், சுழலும் பலகையி லிருந்து குரல்கள் சுழன்றன. எண்கள் ஓடின. சுழலும் எண்கள். பலகை முடியும் முன்பே எண்களைச் சொன்னேன். சுழல் குறி, நான் சொன்ன எண்ணில் நின்றது. அடுத்த ஆட்டத்தின் முன் ஓடி வெளியேறினேன். வெள்ளை வேதாளம் எனை விரட்டி அடுத்த அறை வந்தது. அலுவலகம் விட்டே விரைந்து ஒடினேன்.

காலாட்படை வீரர்கள் சிரித்தார்கள். அரசர்கள் வாங்கிய கடன் பட்டியல் பத்திரத்தில் என் அலுவலகக் கணக்கை இந்த வீரர்கள் எழுதி விட்டார்கள். தூக்கு விதிக்கப்பட்ட கைதியின் கடைசி ஆசை ஒலையில் என் பெயர் உள்ள முத்திரையைப் பதிக்கி றார்கள். அவர்களின் வார்த்தை, குரல் எதுவும் எனக்குப் பிடிப்ப தில்லை. இரண்டு, மூன்று தினம் நான் அலுவலகம் வராமலே இருந்தேன். என் அறையிலே பகல் எல்லாம் கிடந்தேன். சிகரெட் புகைக்கக் கூட முடியவில்லை என் வெளுத்த உரு கண்டு பிள்ளைகள் பயந்தன. இரவில் மனைவி கூடக் கேட்கிறாள்.

'காக்கத்திலே ஏதேதோ உளர்ஹீங்க."

நான் அலுவலகம் போனதும் காலாட்படைகள் வந்து கண்ணடிக் கின்றன. ஒன்று இரண்டல்ல. ஏராளம். அந்த அலுவலகப் பெண் இப்போது வரவில்லை. பிரசவிக்க லீவு கேட்டுப் போய்விட்டாள். காலாட்படை வீரர்கள் என் முன் கேள்விகள்,

தில்கள் என விளையாடுகிறார்கள்.

சம்பங்கி ராணியின் எட்டுக் குழந்தைகளுக்குக் கால் கழுவி விடும் ஆட்கள் யாரு?

இவன் முன்னோர்கள்.

 9 135

திப்புவின் தொப்பிக்குக் கோழி இறகு வைப்பது யாரு?

இவன் முன்னோர்கள்.

ராஜா பல்லக்கில் தேளைப் போட்டது யாரு?

இவன் முன்னோர்கள்.

சக துரோகி யாரு?

இவன் முன்னோர்கள்.

என் முன்னோர்களைக் கண்டு நான் ஓட வேண்டியதாகியது. காலாட்படை வீரர்கள் எனை மிரட்டி வருகிறார்கள். என் தலையைப் பிடுங்கிப் போகப் போவதாக பயமுறுத்துகிறார்கள். நான் காலாட்படை வீரர்கள் சென்ற பாதைகள், வீர சாகசம் பற்றிப் பேசிப் பேசி நைச்சியம் செய்ய முயன்று தோல்வி கண்டேன்.

வர வர அவர்கள் எதைக் கொண்டு போனாலும் திருடிப் போய் விடுகிறார்கள். பேனாக்கள், சில்லறைகள், தண்ணீர்ப் புட்டிகள் எல்லாம் திருடு போய் விடுகின்றன. இவர்கள் தொல்லை போதா தென்று பழைய ராஜாக்கள் வேறு கத்தித் தொலைக்கிறார்கள். ஆங்கிலத்தில் பிரபுக்கள் அரட்டுகிறார்கள். என் புத்தி கழன்று பல பக்கங்களிலும் தானாகச் சுழல்கிறது. வீட்டில் கூட நான் காலாட்படை என உளறினேன். மழைக்காலம் வந்தால் அவர்கள் பெருகி விடுகிறார்கள். என்னால் எதுவுமே செய்ய முடிவ தில்லை. என் மேஜை நிறைய அவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். கவசங்களைக் காய வைக்கிறார்கள். பாசி படர்ந்த கவசங்களைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்கள். எனக்கு வரும் கடிதங்களைச் சிதைத்து விட்டார்கள். எந்தக் கட்டளைக்கும் கட்டுப்படாமல் திரிகிறார்கள். நான் இதைப் பலரிடம் சொல்லியாகிவிட்டது. சக அதிகாரிகள். நண்பர்கள் சிரிக்கிறார்கள். காலாட்படைகள் என்னிடம் சொல்கின்றன.

‘வெளியாளைக் கூட்டி வந்தால். உன் பூர்வீக வரலாற்றைச் சொல்லி விடுவோம். வெந்நீர் அடுப்புக் கதை வெளியே வரும்."

நான் என்ன செய்வது. மனைவியிடம் பல முறை சொல்லி விட்டேன். அவள் அலுக்காமல் சொல்கிறாள்.

கொஞ்ச பேரை இங்க எங்கிட்ட கொண்டு வந்து விடுங்க, வேலைக்கு ஆகும்.

136 இ 

காலாட்படைகள் காலையில் அணிவகுத்து அலைகின்றன. லெப்ட் ரைட், லெப்ட் ரைட், லெப்ட் ரைட் மெழுகுத் தலை கொண்ட பொம்மை போல என் உடல் கரைகிறது. நேற்று என் கண்ணாடியைத் திருடிப் போய் ஒளரங்கசீப்புக்குக் கொடுத்து விட்டார்கள். நான் அவரிடமிருந்து எப்படி வாங்க முடியும் அதை அதைக் காலாட் படையை ஏவி அவன் என்னைக் கொல்லச் செய்தால். என்னால் எதுவும் இயலவில்லை. குற்றங்கள் பெருகத் தொடங்கிவிட்டன. இந்தக் காலாட் படைகளை என்னால் சகிக்க முடியாது.

யாராவது இவற்றை விசாரித்துத் தண்டனை வழங்குங்களேன்.

இதை நான் இந்திய உயர்நீதிமன்றம், ஆறாம் லூயி, வில்லியம் 1, மன்னர் சூயி, ஜார்ஜ் V இவற்றில் யாருக்காவது அனுப்பலாமா?

சொல்லுங்கள்.

இந்தக் குற்றப் பத்திரிகையை எங்கே நான் தாக்கல் செய்வது.

இதை எழுதும் பேனா முனையில் கூட இரண்டு வீரர்கள் நின்று எழுத்தை எட்டிப் பார்க்கிறார்கள். நிஜம்.

என்னை விட்டு விடச் சொல்லுங்கள். எனக்கு ஆவணங்கள் வேண்டாம்.

சுபமங்களா, செப்டம்பர் 1992

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் உ 137