தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 30, 2016

கார்னிவல் - பி.எஸ். ராமையா

-> 255
கார்னிவல்
பி.எஸ். ராமையா
https://archive.org/download/orr-12398_Carnival/orr-12398_Carnival.pdf
Automated Google-Ocr
ஸ்ரீமதி வனஜா சொல்லுகிறாள்:

என்னுடைய சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் எல்லைகாட்ட முடியாது. அவ்வளவு சந்தோஷத்துடன் வீணையைக் கையிலெடுத்தேன். அவர் வந்து என் அருகில், நான் உட்கார்ந்திருந்த ஸோபாவுக்கு அருகில் நின்று கொண்டு சொன்னார். அவர் கையில் ஒரு கண்ணாடி டம்ளர். அதில் பனிக்கட்டி போட்ட குளிர்ந்த பானம். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி அனுபவித்துக் கொண் டிருந்தார். என் அருகில் வந்தவுடன் டம்ளரிலிருந்து ஒரு வாய் அருந்தினார். பிறகு குனிந்து என் புடவை முந்தானையை இழுத்து அதனால் வாயைத் துடைத்துக் கொண்டார். அப்போது அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

அவர் அருந்திய பானத்தை விட, என் முந்தானையில் தான் அவர் அதிக இன்பத்தைக் கண்டார் என்பதை அவர் முகம் காண் பித்தது. அவர் முகத்திலே அவர் அருந்திய பானத்தின் களைகள். முகம் சிவந்து வியர்வை அரும்பிக் கொண்டிருந்தது. அங்கே பானத்தின் போதை நன்றாகத் தெரிந்தது.

ஆனால் அவர் கண்களிலிருந்த களை வேறு விதமானது. அங்கு அவருடைய உள்ளத்தில் நிறைந்திருந்த இன்னொரு விதமான போதையின் ஒளியைக் கண்டேன். என் முந்தானையை அவர் பற்றிய போதும், அதைக் கொண்டு நாசூக்காக அவரது உதடுகளைத் துடைத்துக் கொண்டபோதும், அவர் கண்களில் என்னால் விவரிக்க முடியாத ஒரு வித ஆனந்தத்தையும், மயக்கத் தையும் கண்டேன்.

அவர் ரொம்ப இனிமையாகக் குனிந்து, என் கன்னத்தில் அவர் ஸ்வாசம் படும்படி நின்று கொண்டு, “வனி” கொஞ்சம் வீணை வாசியேன் என்று கொஞ்சுதலாகக் கேட்டார்.

அவர் என்னைப் பலவிதமாகக் கூப்பிடுவார். 'வனஜாr என்று அவர் கூப்பிட்டால் அதற்கு ஒரு அர்த்தம். அப்போது அவருடைய நெஞ்சம் இன்னும் என் மயக்கத்தில் சரியாக
மணிக்கொடி இதழ்தொகுப்பு

256 -> மணிக்கொடி
லயிக்கவில்லையென்று சொல்லலாம். பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக அந்தப் பதம் குறுகும். வனஜா வனஜி என்றெல்லாம் மாறிக் கடைசியாக வனி என்று ஆகிவிடும். இதுதான் அவருடைய உள்ளத்தில், என் மேலெழும் பிரேமையின் உச்ச ஸ்தாயியைக் குறிக்கும் ஸ்வர ஸ்தானம் என்று எனக்குத் தெரியும்.

என்னுடைய சந்தோஷத்திற்கும், திருப்திக்கும் எல்லை காட்ட முடியாது. இப்படிப்பட்ட ஒரு சீமான் என்னுடைய தாசனாக, என் தாசித் திறமைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு நற்சாட்சிப் பத்திரமாக அகப்பட்டிருக்கும்போது, என் காலிலிருந்து உதிரும் சிறு துளியை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக் கொள்வதையே ஒரு ஸ்வர்க்கபோக அனுபவமாக மதிக்குமளவு அவர் என் மேல் மயங்கி நிற்கும்போது, அந்த உண்மையைப் பூரணமாகப் புரிந்து கொண்ட எனக்கு சந்தோஷமும் பெருமையுணர்ச்சியும் இல்லாமலிருக்குமா?

ரொம்ப கர்வத்துடனும், பரம திருப்தியுடனும் வீணையைக் கையிலெடுத்தேன்.

சாதாரணமாகவே வீணையை மீட்டியவுடன் என் மனம் கட்டுப்பாட்டை மீறிவிடும். அதென்னவோ என்னால் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. வீணையின் தந்திகளைச் சுருதிகூட்டி ஒரு தடவை மீட்டி விட்டவுடன், அந்த நாதத்திற்கு என் சரீரத்தில் எங்கேயோ ஒரு எதிரொலி எழும்புவதாக உணருகிறேன். நான் மீட்டியது வீணையின் தந்திகளை யன்று, என் சொந்த நரம்புகளையே நான் மீட்டிக் கொண்டேன் என்றுதான் தோன்றுகிறது. அப்படித் துடிக்கிறது என் உடலும், உள்ளமும் ஏக காலத்தில். என் இதயம் பொங்கி எழுகிறது. என்னால் தாங்க முடியாத ஒரு இனிய உணர்ச்சி எழுந்து என்னை வதைக்கிறது.

அப்படிப்பட்ட எனக்கு அந்தச் சமயத்தில், என்னுடைய பெருமையுணர்ச்சியுடனும், அளவிலடங்காத சந்தோஷத்துடனும் வீணையை மீட்டியவுடன், என் நிலைமை சகிக்க முடியாததாக ஆகி விட்டது. என்னால் அந்த ஆனந்தத்தின் அளவைத் தாங்க முடிய வில்லை. விவரிக்க முடியாத ஒரு வேதனையாகத் தானிருந்தது அது.

வீணையை மீட்டினேன், ரொம்ப நிதானமாக அவருக்கு ரொம்ப பிரியமான அந்தப் பியாகடைக் கீர்த்தனத்தை ஆரம்பித்தேன். என்னையும் மறந்து அந்த சுருதியில் கலந்து வாய்விட்டுப் பாடினேன்.

பல்லவியை முடித்தேன். அதுபல்லவியெடுக்க ஆரம்பித்தேன். சட்டென்று நின்று விட்டன, என் விரல்கள். என் உடல் ஒரு தரம்

இதழ் தொகுப்பு - ** 257
குலுங்கியது. என்னுடைய அந்த மயக்க நிலை திடீரென்று கலைந்து விட்டது.

காரணம், எங்கள் வீட்டு வாசலில் யாரோ சிலர் உரக்கப் பேசி உஷ்ணத்துடன் வாதமிட்டுப் போட்ட கூச்சல்தான். ரொம்பக் கர்ண கடுரமான பாஷையில், மிக மிகக் கடுரமான ஸ்வரத்தில் யாரோ கீழே கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூச்சல் என் சங்கீதத்தை ஒரே வினாடியில் குலைத்து நொறுக்கி விட்டது.

அவர் என் பக்கத்தில் கையில் டம்ளருடன் நின்றிருந்தார். அந்த பானத்தின் போதையும், அவருக்கு என் மீதிருந்த பிரேமையின் மயக்கமும், அவற்றோடு அந்த சங்கீதத்தின் செல்வாக்கும் சேர, அவர் செயலற்றுத் தன் சக்தியையெல்லாம் பறி கொடுத்து விட்டுத் துடிக்கும் ஒரு ஊமைக் குழந்தை போலத் துடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

கீழேயிருந்து வந்த கூச்சலினால் அவருடைய அந்த ஜாக்ர ஸ்வப்பனமும் கலைந்து விட்டது. அதுவரை அவருடைய முகத்தில் தாண்டவமாடிய மிருதுபாவம், குழைவு எல்லாம் எங்கோ சென்று மறைந்து விட்டது. முகம் சிவந்தது. எதிரில் ஒரு மேஜை மேல் வரவேற்பளித்துக் கொண்டு கிடந்த அவருடைய கைப்பிரம்பை எடுத்துக் கொண்டு மடமடவென்று மாடிப்படிகளுக்கு ஓடினார்.

கீழேயிருந்து வந்த கூச்சல் ஒரு கடுமையான சச்சரவையும், சில முரடர்களையும் என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்குள் அவர் தனியாகப் போய் அகப் பட்டுக் கொள்ளப் போகிறாரே என்ற பீதி எழுந்து என்னை நடுங்கச் செய்தது. பயத்துடன் ஒடித் தாழ்வாரத்திலிருந்து பார்த்தேன்.

அவர் ஒரு மான் கூட்டத்தில் புகுந்த புலி போலப் பாய்ந்து கையிலிருந்த பிரம்பைச் சுழற்றிச் சுழற்றி வீசினார். ''தடிப் பயல்களா என்னடா கூச்சல் இங்கே? ஒடிப் போங்கள் நாய்களா! மரியாதையுடன் போகிறீர்களா, போலீஸ்காரனைக் கூப்பிடட்டுமா?" என்று சீறிக் கொண்டே வலசாரி இடசாரியாகப் பிரம்பை உபயோகித்தார்.

என்ன ஆச்சரியம்! கீழேயிருந்தவர்கள் நாலைந்து தடியர்கள். ஒவ்வொருவனும் தனியாக நின்றால் அவரைப் போலப் பத்துப் பெயர்களை அடித்துத் தூளாக்கி விடுவான். இருந்தும் அந்த ஐந்து பேர்களும் சேர்ந்து கூட அவரை எதிர்க்கத் துணியவில்லை. அவர் பாட்டில் பளிர் பளிரென்று பிரம்பினால் அவர்களை அடித்துத் துரத்தினார். அவர்கள், 'இல்லே சாமீ. இதோ போயிடறோம், சாமீ!
ம.இ.தொ – 17
மணிக்கொடி 

258 --> மணிக்கொடி
பாருங்க, சாமீ. நாளெல்லாம் ஒழைச்ச கூலியை வாங்கிக்கிட்டு அவன் குடுக்க மாட்டேங்கறான், சாமீ. ஆளுக்குக் கொஞ்சம் கள்ளை வாங்கி ஊத்திப் போட்டுப் போங்கடாங்கறான், எசமான்' என்று ஆளுக்கொரு வாக்கியமாகக் கூவிக் கொண்டு அங்கிருந்து கலைந்து ஒட முயன்றார்கள்.

என் மனம் சிந்திக்க முயன்றது. இவருக்கு இவ்வளவு தைரியத்தையும், அவர்களிடத்தில் அவ்வளவு பயத்தையும் எழுப்புவதற்குக் காரணம் எது? அவர்கள் எல்லோரும் கோழைகளா? பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே. பின் ஏன் பயப்பட்டார்கள்? எங்கள் வீட்டு வாசலில் நின்று அப்படிக் கூச்சல் போட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்தை அவர்கள் உணர்ந்து கொண்டு அதனால் அப்படிப் பயப்பட்டார்களா? அல்லது இவர்தான் தன் வீட்டு வாசலில் வந்து பிறர் தொல்லை கொடுத்தால், அதைத் தடுக்கத் தனக்குள்ள உரிமையை உணர்ந்து, அந்தப் பலத்தின் நினைவோடு அவர்களை அப்படி விரட்டத் துணிந்தாரா? எனக்கு விளங்கவில்லை.

வெற்றிப் பிரதாபத்துடன் அவர் மாடிக்கு வந்து சேர்ந்தார். வந்தவர் கையிலிருந்த பிரம்பை மறுபடி மேஜையின் மேல் எறிந்து விட்டு, தன்னுடைய அந்த தீரச் செய்கையின் முழு அர்த்தத்தையும் நான் அறிந்து அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறவர் போல, ''தடிப்பயல்கள் குடித்து விட்டுக் கூச்சல் போட்டுக் குட்டிச் சுவரடித்து விட்டான்கள். இங்கே யிருப்பது யாரென்று தெரியாது போலிருக்கிறது! கட்டி வைத்துத் தோலை உரித்து விடுவேன்!" என்று மேல் மூச்சுடன் பேசி விட்டு, நான் முதலில் உட்கார்ந்திருந்த ஸோபாவில் போய்ச் சாய்ந்தார்.

நான் பேசவில்லை. அவசரம் அவசரமாகக் கண்ணாடி டம்ளரில் பானத்தை ஊற்றி அதில் ஒரு ஐஸ்துண்டை அலம்பிப் போட்டேன். மெளனமாக எடுத்துக் கொண்டு போய் அவர் முன் நீட்டினேன். இனிமையாகப் புன்னகை செய்து அதை வாங்கிக் கொண்டு, ஆவலுடன் என் கையைப் பற்றி இழுத்துத் தன்னருகில் இருத்தி மற்றக் கையால் அனைத்துக் கொண்டு, வனஜா' என்றார்.

செல்வம்; ஏராளமான செல்வம். நான் திரும்புமிடத்தி லெல்லாம் அதன் ஆட்சியைக் காணும்படி கொண்டு வந்து என் முன்னால் இறைத்துக் கொண்டிருந்தார். நல்ல வாலிபம், அழகில் மன்மதன் அல்லவானாலும் எந்த ஸ்திரியும் அவரைக் கணவனாக அடைந்து பெருமை கொள்ளாமலிருக்க முடியாது. அப்படிப்பட்ட

இதழ் தொகுப்பு ** 259
வடிவம், நல்ல அந்தஸ்து, ஊரில். வீட்டு மைனர். இவ்வளவுடன் அப்போதுதான் அவருடைய தைரியத்திற்கும் பலத்திற்கும் ஒரு மாதிரிப் பார்த்தேன்.

இதைக் காட்டிலும் அதிகமாக ஒரு பெண் என்ன எதிர் பார்க்க முடியும்? அதிலும் என் போன்ற ஒரு தாசி! அவர் என் மணாளனாக வந்து வாய்த்தது என் சொந்த பாக்கியத்தினாலல்ல, என் முன்னோர் யாரோ செய்து வைத்த புண்ணியத்தின் பலன்தான் என்று நான் நம்பினேன்.

அவருடைய அணைப்பில் என் வேசிக் குணம் முழுவதையும் மறந்து கேவலம் ஒரு சாதாரண மனிதப் பெண்ணாகச் சோர்ந்து கிடந்தேன்.
கையிலிருந்த பானத்தை அவர் ஒரே மடக்கில் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே உருட்டி விட்டார். இப்போது அவர் என் முந்தானையைத் தொடவில்லை. தன் சட்டைப் பையிலிருந்த கைக் குட்டையை எடுத்து வாயைத் துடைத்துக் கொண்டார். திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல என் பக்கம் திரும்பி, 'வனஜா வா கார்னிவல் ஷோவுக்குப் போய் வருவோம். அந்த தடியர்களால் மனசு என்னவோ போல் ஆகிவிட்டது. நம்முடைய சுக சங்கீதத்தில் கரகரப்புத் தட்டிவிட்டது. புறப்படு, போகலாம்,' என்றார்.

என் எஜமானச் சந்தோஷம் தானே என் லட்சியம்! அவருடைய 'நான் எவ்வளவுக் கெவ்வளவு திருப்தி யடைகிறதோ அவ்வளவுக் கவ்வளவு எனக்குத்தானே லாபம்!

'இதோ வந்தேன்' என்று சொல்லி அவர் பிடியிலிருந்து விடுபட்டுக் குதித்துக் கொண்டு ஒடினேன். ஐந்தே நிமிஷம். அவர் மோட்டாரை ஒட்டினார். நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.

2

"கிங்ஸ் கார்னிவல் ஷோவில் அன்று சொல்ல முடியாத கூட்டம் தினசரி கேளிக்கைகளுடன் அன்று விசேஷமாக ஏதோ விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனவாம். அதோடு அன்று முதல் நவராத்திரிப் பண்டிகை விடுமுறை நாட்கள் ஆரம்பம். ஆகையால் ஏராளமான ஜனங்கள் ஆண்களும் பெண்களுமாக வந்து கூடியிருந்தனர். விதம் விதமாக உடைகளுடுத்து, கண்ணைப் பறிக்கும் வர்ண விபரீதங்களுடன் ஒரு புது உலகமாகக் காணப்பட்டது அந்த இடம்.
மணிக்கொடி இதழ்தொகுப்பு

260 -> மணிக்கொடி
உள்ளே நுழைந்தவுடன் செவிடுபடச் செய்யும் ஜோஜோ என்ற இரைச்சல் எழுந்து என்னைச் சூழ்ந்து கொண்டது. அதில் மெய் மறந்து கூத்தடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதக் கூட்டம் கண் முன் எழுந்தது.

ராட்டினங்கள், தினுசு தினுசானவை. குதிரைகளும், நாற்காலிகளும் ஆசனமாகக் கொண்டது ஒன்று. ஆகாய விமானங்களால் ஆக்கப்பட்டது ஒன்று. கப்பல்கள் போன்று அமைக்கப்பட்ட ஆசனங்களுடன் ஒன்று. நம் வீட்டு மாவரைக்கும் இயந்திரம் போலச் சுழன்று வந்தது ஒன்று. எல்லாவற்றிலும் ஆட்கள் ஆண்களும் பெண்களும் அவற்றின் சுழற்சியால் எழும் மயக்கத்துடன் சத்தமிட்டுச் சிரித்து அவர்கள் போடும் கூச்சல்கள்.

மற்றொரு பக்கம் சூதாடும் கடைகள் வளையம் உருட்டுமிடம். பந்து எறிந்து பந்தயம் வைக்கும் இடம். குலுக்கிப் போட்டு நம்பரெடுத்துப் பரிசு கொடுக்குமிடம். இன்னுமெத்தனையோ.

இன்னொரு பக்கம் ஒரு அரை நிர்வாணப் பெண்ணின் கோர நாட்டியம். அதற்காக ஒரு தினுசான வாத்தியம். பக்கத்தில் ஒரு கோமாளி, வாயில் ஒரு நீண்ட குழாயை வைத்துக் கொண்டு, வாருங்கள், வந்து பாருங்கள் என்று கூவிக் கொண்டிருந்தான். அடுத்தாற்போல ஒரு ஜாலவித்தைக்காரன் கூடாரம்.

எங்கும் ஒரே இரைச்சல். ஒன்றுடன் ஒன்று சுருதி கலவாத பல தினுசான பேதங்களுடன் கூச்சல்கள். இவ்வளவுக்கும் மேல் ஒரு ராட்டினத்தின் புறத்திலிருந்த ஒரு நீராவி யந்திரத்தினுதவியால் சில குழாய்கள் கூவிக் கொண்டிருந்தன. ரயில் வண்டி எஞ்சின் கூவுகிறதே, அது போல. பல தினுசு எஞ்சின்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தில் கூவுவது போலிருந்தது. அந்த ஸ்வர பேதங்களைக் கட்டுப்படுத்தி வெள்ளைக்காரர்களின் பாண்டு வாத்தியம் போல அமைக்க முயன்றிருந்தது தெரிந்தது. அந்த பாண்டு வாத்திய கோஷம் அந்த உலகத்திலிருந்த கூச்சல்கள் எல்லா வற்றிற்கும் மேல் எழுந்து காதையடைத்துக் கொண்டிருந்தது.

என்னுடைய வீணா சங்கீதத்தைக் கலைத்த அந்த முரட்டு மனிதர்களின் கூச்சல், அவ்வளவுக்கும் மத்தியில் என் காதில் தொனிப்பது போலிருந்தது. அவர்கள் கூச்சலுக்கும், அங்கே கேட்ட கூச்சல்களுக்கும். ஏதோ வித்தியாச மிருந்ததாகத் தோன்றியது, எனக்கு இங்கே கேட்ட சப்தம் ஒவ்வொன்றும் அந்த இரவின் நியாயமான நிசப்தத்தைக் கலைக்க எழும் அபகரங்களாக ஒலித்தன. ஆனால் அந்த முரடர்களின் குரல்?
|

இதழ் தொகுப்பு ** 261
அந்த சப்தத்தைத் தாங்க மாட்டாமல், சகிக்காமல், அப்படிச் சீறிப் பாய்ந்த அவர், இங்கு தமக்குச் சொந்தமான, இயற்கையான ஒரு உலகத்தில் நுழைந்தவர் போலக் காணப்பட்டார்.

அவருடைய முகத்தில் அவருடைய உற்சாகத்தின், கோலாகல உணர்ச்சியின் வெறிக் களை தோன்றியது. ஒரு குழந்தை போல, பொறுப்பற்ற யுவன் போல அவர் அங்கிருந்த விளையாட்டுகளில் கலந்து கொண்டார். என்னையும் அதில் ஈடுபடும்படி வற்புறுத்தாமல் வற்புறுத்திக் கூடவே இழுத்துக் கொண்டிருந்தார்.

இருந்தும் என் மனம் கலங்கிப் போய்விட்டது. அதன் சுருதி கலைந்து விட்டது. மறுபடி அதைக் கூட்ட என்னால் இயல வில்லை.

இரவு பன்னிரண்டரை மணி சுமாருக்கு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். அவருடைய முகம் அவ்வளவு நேரம் அடித்த கூத்தின் களையுடன், சோபையுடன் திகழ்ந்தது. அவருடைய கண்களில், நான் இரவின் ஆரம்பத்தில் முதன் முதலாகக் கண்ட அதே பிரகாசத்தைக் கண்டேன். அவ்வளவுக்கும் மேல் அவர் என்னிடம் கொண்டிருந்த மோக வெறியின் ஒளி எனக்கு நன்றாகப் புலனாயிற்று.

3
எங்கள் வீடு - என் வீடு தான்; அவர் என் வசத்தில் - அல்லது நான் அவர் உடைமையாக இருக்கும் வரையில் அது எங்கள் வீடு தானே! - நகரத்தின் மத்தியில் இருக்கிறது. காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை அங்கு ஜனநடமாட்டம் கசகசவென் றிருப்பது சகஜம். அதற்கு மேலும், இரவு முழுவதும் ஒய்வேயின்றி யாராவது ஒன்றிருவர் நடமாடிக் கொண்டே யிருப்பார்கள், எங்கள் வீதிகளில். *

மோட்டார், டிராம் ரோட்டிலிருந்து பிரிந்து, ஒரு குறுக்குச் சந்தில் நுழைந்தது. நாங்கள் நேரே டிராம் ரோட்டிலேயே இன்னும் கொஞ்ச தூரம் போய் இடது கைப்புறம் திரும்பியிருந்தால் எங்கள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் இவர் இஷ்டம் அது. குறுக்குச் சந்து வழியாக நுழைந்தார். அந்தச் சந்தில் போய் வலதுபுறம் திரும்பி இன்னொரு பெரிய சந்து வழியாகப் போய் இடது பக்கம் திரும்பினால் ஒரு பெரிய தெரு. அதோடு நேர் வடக்கே போய் மறுபடி ஒரு சந்தில் திரும்பி வெளியேறினால் எங்கள் வீடு இருக்கும் தெரு.
மணிக்கோடி இதழ்தொகுப்பு

262 -> மணிக்கொடி
ரொம்ப நிதானமாகத்தான் மோட்டாரை ஒட்டினார். அவர் மனம் அந்தக் கார்னிவல் விளையாட்டுகளால் நிறைந்திருந்தது - ஆனால் சலிப்படைந்து விடவில்லை என்று தெரிந்து கொண் டேன். இரண்டொரு தடவை வணி', 'வனஜீ என்று அருமையாக அழைத்ததைத் தவிர அவர் வழியெல்லாம் வேறெதுவும் பேசவேயில்லை.

வண்டி பெரிய தெரு வழியாக ஒடிக் கடைசிச் சந்தில் திரும்பியது. கொஞ்சதூரம் போயிருக்கும். எதிரில் ஒரு சிறிய ஜனக் கூட்டம் நின்று வழியை யடைத்துக் கொண்டிருந்தது. மோட்டார் ஹார்னை விடாமல் அமுக்கிக் கொண்டே யிருந்தார், அவர் அப்பா என்ன கர்ண கடுரமான தொனி அந்த சப்தத்தை அங்கே முன்னால் கூட்டத்தில் நின்றவர்களில் யாருமே கேட்கவில்லையென்று தோன்றியது. யாரும் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் என் மனதில் எழுந்த எண்ணம் என்ன தெரியுமா?

இவர் தன்னுடைய பணப் பெருமையை மோட்டார் ஹார்ன் மூலம் அவர்கள் காதருகில் போய் ஊதுவது போல இருந்தது. அவர்கள், 'உன்னைப் பார்த்து ஆச்சரியமடையவோ, அல்லது பிரமிப்பும் பொறாமையும் கொள்ளவோ எங்களுக்கு இப்போது சாவகாசமில்லை என்று அலட்சியமாக நிற்பது போலவும் இருந்தது.

ஆத்திரத்துடன், கோபத்துடன் மோட்டாரிலிருந்து கீழே குதித்தார், அவர் ரொம்ப தடயுடலாக, "என்னடா இது, ரோட்டை அடைத்துக் கொண்டு...' என்று கூவிக்கொண்டே கூட்டத்தை நெருங்கினார்.

எனக்குப் பயமாக இருந்தது. இரவு முன்னேரத்தில் அந்த முரடர்கள் தங்கள் தவறையும், இவருடைய உரிமையையும் உணர்ந்து ஒதுங்கி ஓடி விட்டது போல, இந்தக் கூட்டத்தினரும் ஒதுங்கி விடுவார்களா? 'உன் மோட்டார் போக இந்தச் சந்தில் உரிமையுண்டானால் இப்படி இங்கே கூடி நிற்க எங்களுக்கும் உரிமை உண்டு என்று அவர்கள் சொல்லி இவர் மேல் திரும்பி விட்டால்? பயத்தால் என் உடல் நடுங்கியது.நல்ல வேளையாக அப்படி யொன்றும் நடக்கவில்லை. 

கூட்டத்திலிருந்தவர்கள், இவர் மோட்டாரை விட்டு இறங்கியதைக் கண்டவுடன், இந்தப் பக்கம் திரும்பி இவரை வந்து சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு நடுவில், ஒரு பெண், என் வயது தானிருக்கும் - பதினெட்டு அல்லது இருபது தலைமயிர் ஜடை

இதழ் தொகுப்பு ** 263
கலைந்து ஒரு பகுதி முகத்தின் புறம் அலங்கோலமாகத் தொங்க நின்றிருந்தாள் மற்றொரு பகுதி இன்னும் பின்னலாகவே யிருந்தது. அதன் மேல் அவள் சூட்டியிருந்த புஷ்பச் செண்டு பிரிந்து அவருடைய வலது காதின் பின்புறமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

நிறத்தில் கருப்பு. அவள் கூட்டத்தின் நடுவில் எனக்குக் கொஞ்சம் தூரத்திலிருந்தாள். எங்கள் மோட்டார் விளக்குகளின் வெளிச்சமும், சற்று தூரத்திலிருந்த வீதி விளக்கின் வெளிச்சமும் அவள் மேல் சரியாக விழாதபடி ஜனங்கள் சுற்றி நின்றிருந்ததனால் சரியாகத் தெரியவில்லை.

சாதாரணமான ஒரு புடவைதான் கட்டியிருந்தாள். காதிலும் மூக்கிலும் கண்ணாடியை வைரமாக நினைத்துச் செய்த சில நகைகளனிந்திருந்தாள். கழுத்திலும் ஒரு மஞ்சள் நிறக் கண்ணாடி மணி மாலை. அவளுடைய உருவம், இளமையில் ஊட்டமின்மை யாலோ, வேறு காரணத்தாலோ சூம்பிப் போனது போல இருந்தது.

அவளுடைய தோற்றம் - அவள் நின்ற நிலை - அவள் தன்னை மறந்து அங்கு கூடியிருந்த எல்லோருடனும் சண்டை பிடிக்கத் தயாராக இருப்பவளது போலிருந்தது.

கூட்டத்துடன் முன்னேறி வந்த அந்தப் பெண், 'பாருங்கசாமி, இந்த மனுசன் எட்டணாக் கொடுக்கறேனென்று சொல்லி என்னோடே பேசிட்டு, இப்போ பாருங்க சாமி கொடுக்க மாட்டேங்கறான். ஆம்புளையைப் பாரு து' என்று வாயிலிருந்த எச்சில் தெறிக்க அந்த மனிதன் பக்கம் பார்த்துக் கூவினாள்.
அதற்கு மேல் அவள் பேசியதையெல்லாம். என் வாய் கூசுகிறது. அவளும் என்னுடைய ஒரு சகோதரி. ஆம்; ஒரு வேசிதான்!

நான் ஒரு மாளிகையில் வீணை முதலிய அலங்காரங்களுடன் தொழில் நடத்துகிறேன். செல்வந்தர்கள், மைனர்கள் என்னிடம் தாமாக வந்து தங்கள் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்துச் சுகத்தைத் தேட முயலுகிறார்கள். அவள் அங்கே அந்தக் குறுகிய சந்தில் ஒரு திண்ணையின் மறைவில் நின்று உயிரைப் பிடித்து நிறுத்த முயலுகிறாள். அவளைத் தேடி வருபவர்கள் அவளுக்கு முடிவில் நியாயமான கூலியைக் கூடக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டுப் போய்விட முயலுகிறார்கள்.

அவளுடைய கட்சியைக் கேட்டு விட்டு அவர், 'ஏண்டா தடிப் பயலே என்னடா இது?' என்று அவளால் குற்றம் சாட்டப்பட்ட மனிதனை அதட்டினார்.

மணிக்கொடி இதழ்தொகுப்பு

264 -> மணிக்கொடி
அவ்வளவு பேர்களுக்கும் மத்தியில் அவ்வாறு அவமான மடைந்த அந்த மனிதன் முகத்தைப் பார்த்தேன். அவன் அதை யெல்லாம் பொருட்படுத்தவில்லையென்று தோன்றியது. நிமிர்ந்து நின்று பேசினான்.
"யாரடி கொடுக்கறேன்னான், ஓம் மூஞ்சிக்கு எட்டணா” என்றான்.

இவர் அவனை அடிக்கப் போகிறார் என்று நினைத்தேன். அடிக்கவில்லை. 'சீ, நாயே! அவள் பணத்தைக் கொடு என்று கையை ஓங்கி அதட்டினார்.
அவன் ஜே.பியில் கையை வைத்தான். அதற்குள் அவர் கேட்டார். 'என்ன கச்சடா இது நடு ரோட்டிலே கழுதைகள்! போலீஸ்காரனைக் கூப்பிட்டு இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகச் சொல்லுகிறேன், பார் என்றார்.

அந்தப் பெண் ரொம்ப பயத்துடன், 'சாமி வயித்துப் பொழைப்பு சாமி என்றாள் கெஞ்சும் குரலில்.

உடனே அவர் அந்த மனிதனைப் பார்த்து, நையாண்டியாக, 'ஏண்டா அவதான் வயித்துப் பொழைப்புக்கு இங்கே நிற்கிறாள். நீயேண்டா வந்தே?' என்று சொல்லி விட்டுத் தனது புத்திசாலித் தனமான அந்தக் கேள்வியைக் கூட்டத்திலிருந்த மற்றவர்கள் எப்படி ரஸித்தார்கள் என்று ஆராய்வது போலச் சுற்றிப் பார்த்தார்.

அதைக் கேட்டுக் கூட்டத்திலிருந்த மற்ற யாவரும் கொல்லென்று சிரித்தார்கள். என் உடல் குன்றியது.

அதற்குள் கூட்டத்தின் மறுகோடியிலிருந்து ஒரு குரல் கேட்டது. 'போலீஸ் என்ற வார்த்தை. அவ்வளவுதான். அந்தப் பெண்ணினால் குற்றம் சாட்டப்பட்ட மனிதன் ஜே.பியிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்து அவளிடம் எறிந்துவிட்டு அங்கிருந்து நழுவி விட்டான். அந்தப் பெண்ணும் அவசரம் அவசரமாக அதைப் பொறுக்கிக் கொண்டு அங்கிருந்து நழுவினாள். கூட்டத்திலிருந்த மற்றவர்களும் அவசரமில்லாமலே கலைந்து பிரிந்தார்கள்.

அவர் வெற்றியின் அறிகுறியுடன் மோட்டாருக்குத் திரும்பி னார். மோட்டாரில் உட்கார்ந்து கொண்டு புறப்படப் போகும் சமயத்தில் எதிரிலிருந்து வந்த இரண்டு போலீஸ்காரர்கள் மரியாதை யுடன் பக்கத்தில் வந்து நின்று கொண்டு, 'என்ன ஸார் அது?" என்று கேட்டார்கள்.

அவர், 'என்னவோ சோதாப் பையல்கள் தகராறு. இந்த விபசாரி நாய்களை யெல்லாம் பிடித்துப் புளியம் விளாறினால்

இதழ் தொகுப்பு ** 265
அடித்து ஊரை விட்டுத் துரத்த வேண்டும்! என்று பொதுப்படையாகச் சொல்லி விட்டு மோட்டாரை விட்டார்.

4.
மணி இரண்டடிக்கப் போகிறது. அவர் இன்னும் உறங்க வில்லை. வீட்டிற்கு வந்தவுடன் அவர் மறுபடி தனது பானத்தைத் தொடங்கி விட்டார். “எங்கே வனி வீணையை யெடுத்து அந்தக் கீர்த்தனத்தைப் பூராவாகப் பாடு. சைத்தான்கள் மனசு என்னவோ போல ஆகி விட்டது' என்றார்.

அவர் என் எஜமானரல்லவா? நான் தாசிதானே என்னுடைய உணர்ச்சிகள் எதுவானாலென்ன? என்னுடைய இன்ப துன்பங்களின் வித்தியாசம் அவருக்குத் தெரியாமலிருப்பதுதானே என் தொழில்? முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு வீணையை எடுத்துச் சுருதி கூட்டினேன்.

இப்போது வீணையின் அந்த இனிய ஒலி என் உள்ளத்தில் படவில்லை. இரண்டுக்குமிடையில் ஏதோ ஒரு பெரிய பாறை எழுந்து நின்று கொண்டது போல இருந்தது. இயந்திரம் போல விரல்கள் ஸ்வரங்களை அளந்து விட்டன. கிராமபோன் இசைத் தட்டைப் போலத் தொண்டை பாடியது. அவ்வளவுதான். எனக்கும் அந்த சங்கீதத்திற்கும் எவ்வித ஒட்டுதலும் ஏற்படவில்லை.

மணி இரண்டடித்தது. அதுவரை ஒன்றன் பின்னொன்றாகக் கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே யிருந்தேன். அவர் பானத்தைப் பருகிக் கொண்டே என்னை நிமிர்ந்து பார்ப்பதும், சங்கீதத்தை அனுபவிப்பதுமாக இருந்தார். என் முகத்தில் அதே புன்னகை, மங்காமல் குறையாமல் விளையாடிக் கொண்டேயிருந்தது. 'அடி ராrஸி என்று நானே என்னைச் சொல்லிக் கொண்டேன்.

'தூங்கலாமா?' என்றார். திடுக்கிட்டு விழித்தவள் போல, 'என் துரை களைத்துப் போய் விட்டார் என்று கொஞ்சிக் கொண்டே, வீணையைக் கீழே வைத்தேன். அவரைச் சயனத்தில் விட்டு விட்டு ஏதோ ஜோலிகளைக் கவனிப்பவள் போல அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன், கொஞ்ச நேரம்.

அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அரை நாழிகை கழித்து அவர் கண்ணயர்ந்து விட்டார். அதுவரை ரொம்ப சிரமத்துடன் ஒரு சித்திரவதையை அனுபவிப்பவள் போலத் துடித்துக் கொண்டிருந் தவள் ஒரு விடுதலைப் பெருமூச்சு விட்டேன். என் மனம் ஒரு
ಳ್ಗಿ

266 ->
எரிமலையைப் போலக் கொதித்துக் கொண்டிருந்தது. என்னால் அந்தத் துன்பத்தைத் தாங்க முடியவில்லை. வீட்டிற்குள்ளிருப்பது மூச்சடைப்பது போலிருந்தது.

கால் மெட்டிகள் சப்தம் செய்துவிடாதபடி ஜாக்கிரதையாக நடந்து முன் பக்கத் தாழ்வாரத்திற்குப் போய் நின்றேன். என்னை மீறிக் கண்கள் ஆகாயத்தின் புறம் திரும்பின. நிர்மலமான வான வீதியில் மினுமினுத்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டங்களுடன் என் கண்கள் பேசின. என் நெஞ்சம் அவற்றிடம் எதையோ கேட்டுப் பதிலை எதிர் பார்ப்பது போலத் தவித்தன.

தானாகக் கீழே விதிப் பக்கம் குனிந்து பார்த்தேன். அதோ அந்த மூலையில், தெரு முடியுமிடத்தில் அந்த முனிஸிபல் விளக்கினடியில் என் பார்வை சென்று லயித்தது.

என் உடல் ஏன் அப்படிக் குலுங்கியது? அங்கே நான் கண்ட காட்சி என் நாவில் அவ்வளவு கசப்பை ஏன் எழுப்பியது? - அங்கே அந்த முனிசிபல் விளக்கடியில் அந்தப் பெண் - ஆம், அதே பெண் வரும் வழியில் அந்தச் சந்தில் வயிற்றுப் பிழைப்புக் காக நின்றிருந்ததாகச் சொன்னாளே, அந்தப் பெண் - நின்றிருந்தாள். அவளுடைய கூந்தல் சீர்படுத்தப்பட்டிருந்தது. அவளுடைய முகத்தில் புதிதாக அப்பிய பெளடர் தெரிந்தது, அவ்வளவு துரத்திலும். அவளணிந்திருந்த புஷ்பச் செண்டு ஒய்யாரம் காட்டியது.

நான் முதலில் பார்த்தபோது அவள் தனியாகத்தான் நின்றிருந்தாள். அடுத்த நிமிஷம் யாரோ ஒருவன் அவளிடம் வந்து நின்று பேசினான். அவள் கையை நீட்டினாள். வெள்ளி நாணயங்கள் இரண்டு மோதிய கலீரென்ற சப்தம் என் காதில் விழுந்தது.

உள்ளே அவர் தூக்கத்தில் புரண்ட போது, விழித்துக் கொண்டு விட்டார் போலிருக்கிறது. 'வனீ’ என்று கூப்பிட்டார். "இதோ வந்தேன்” என்று பதில் சொல்லித் திரும்பினேன்.

ஆனால், ஐயோ! அந்த வார்த்தையிலிருந்த அந்தக் கசப்பு அவருடைய மோக வெறியின் உச்ச ஸ்தாயியைக் காட்டும் ஸ்வர ஸ்தானமான அந்த வார்த்தையிலிருந்த அந்தக் கசப்பை நான் எப்படி வார்த்தைகளால் சொல்ல முடியும்!

இருபது வருஷமாகியும் அன்று என் நெஞ்சில் நிரம்பிய அந்தக் கசப்பு இன்னும் மாறவில்லையே.

– 1936

இடைவெளி - சம்பத் 5 Idaiveli A novel in Tamil by S. Sampath - 5

Automated Google-Ocr + half an hour proofing work for 45 to 50 days

இடைவெளி - சம்பத் 5 Idaiveli A novel in Tamil by S. Sampath  -5

காலையில் எழுந்தபோது அவருக்கு அந்தக் கனவு ஞாபகம் இல்லை. கனவு கண்டோம் என்பதுகூட மறந்துவிட்டது. ஆனால் வெற்றி எல்லையே தெரியாமல் ஓடின குதிரைக்கனவு ஞாபகம் வந்தது. அது என்னவாக இருக்கும் என்று யோசித்தார், ஒன்றும் புரியவில்லை. இது புரியும்வரை இதை விடுவதில்லை என்று சொல்லிக்கொண்டார். கனவுகளெல்லாம் எழுதப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு முடிந்து மட்டும் குறிப்பு எடுத்துக்கொண்டார். ஒரு காலகட்டத்தில் அவருடைய டைரிக்குறிப்பு இவ்வாறெல்லாம் இருந்தது.

இவான்ஸ் வீட்டில் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!

பீச்சில் கோபுரம் கட்டினேன்.

சாவு என்பது ஒர் இடைவெளி.

வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.

விண்மீன்களைத் தென்னைகள் மறைக்கின்றன!

நான்கு பேர்கள் கோடுகளாகிச் சமுத்திரக் கரையில் நிற்கின்றனர்.

'வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை - ஏன் ஏன் ஏன்

சாவு என்பது ஒர் இடைவெளி-அப்படீன்னா?

அன்று மத்தியானம் வேலை செய்து கொண்டிருந்தபோது காகிதத்தை எடுத்து 'குழந்தை மல்ப்ரி இலை நிறைய சுருங்கிய செர்ரி கொடுத்தது' என்று எழுதிக்கொண்டார்.

இனிமேல் விஷயங்கள் அதனதன் இடத்தில் விழ அதிக நேரம் இல்லை என்றும் சொல்லிக்கொண்டார்.

விக்ராந்தியாக எதைப் பற்றியும் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அடுத்த பத்து நாட்களை ஓட்டினார். டீ. எச். லாரென்ஸின் "விமன் இன் லவ்"வை இன்னொரு தரம் படித்தார். மனத்திற்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அவனை அவர் வியந்தார். நுண் உணர்வுகள் கொண்ட எந்த மனிதனும் அவனை வியக்காமல் இருக்க முடியாது என்று நினைத்தார்.

அன்று ஆபிசில் அதிகாரியிடம் 'சார்! நீங்கள்
டீ. எச். லாரென்ஸ் படித்திருக்கிறீர்களா?' என்றார்.

"அவருடைய எல்லா எழுத்துகளுமே நல்ல பதிப்புகளில் இருக்கிறது! ஆனால் எங்கே நேரம் கிடைக்கிறது. தலைப்பின் பேர் ‘ஸன்ஸ் அண்ட் லவ்வர்ஸ் தானே அது. அந்த நாவலை மட்டும் படித்திருக்கிறேன் - ஆமாம் இன்னிக்கு என்ன ரொம்ப சந்தோஷமாகக் காணப்படுகிறீர்கள்' என்றார் அதிகாரி.

"கொஞ்ச நாட்களுக்கு அடிப்படை விஷயங்களில் உழல்வதில்லை என்று இருக்கிறேன்' என்றார் தினகரன்.

'நல்லது. ரொம்ப நல்லது - பிழைத்துக்கொண்டு விடுவீர்கள்’ என்றார் அதிகாரி. தொடர்ந்து முடிச்சாச்சா' என்றார்.

'ஏதோ 75 சதவீதத்துக்கு முடிவு தேறும்" என்றார் தினகரன்.

'எனக்கு 99.9 சதவீத முடிவு வேண்டும்” என்றார் அதிகாரி சிரித்துக்கொண்ட்டே. மீண்டும் திடீரென்று நினைத்துக்கொண்டு 'தினகரன் அந்த சிமென்ட் பின்னால் ஓடுவதை நிறுத்தி விடாதீர்கள்' என்றார்.

96

“சரி சார்”

அவர் ஃபைல்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சேப்பாக்கம் போனார். அனுமார் வால்போன்று இருந்தது க்யூ! சேவகனைப் பிடித்து ஐந்து ருபாய் அழுத்தினார். அவன் பின்வழியாக வரச் சொன்னான். அதிகாரிகள் நம்பரைக் குறித்துக்கொண்டார்கள். அதோடு சரி. இரண்டு வாரம் கழித்துத் திரும்பவும் போனார். அப்போதும் ஐந்து ரூபாயை அழுத்தினார். அதிகாரிகள் நம்பரைக் குறித்துக்கொண்டார்கள். ஒன்றும் நடக்க வில்லே. அவ்வளவு ஐ. ஏ. எஸ் அதிகாரிகளும், மந்திரிகளும், பியூன்களும், கிளார்க்குகளும் எதிலெல்லாமோ ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார். புலி - மான் ஆட்டத்தைவிடப் பயங்கரமான ஒரு சீட்டாட்டத்தை அந்தச் செங்கல் கட்டிடத்திற்குப் பின்னால் அவர் கண்டார். "இன்னிக்கு ஜான் சார் 25 ரூபா கொடுத்தார். நாலு நாளா ஒன்னுமே காணோமேன்னேன். இந்தாடா 25 ரூபாய்ன்னார்' என்றான் ஒருவன்.

'உன்பாடு ஜாலி. நமக்குன்னு ஒன்னு வாய்ச்சிருக்கே. அதிகமா வாங்கவும் தெரியாது, கொடுக்கவும் தெரியாது' என்றான் இன்னொருவன்.

தினகரனை இவ்வார்த்தைகள் சொல்லமுடியாத அளவுக்கு வேதனை அடையச் செய்தது. ஏன் உலகம் இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?

காந்தி இப்போது இங்கு வந்தால்? என்று தோன்ற ஆரம்பித்தது. ஒரு முப்பது வருடங்களில், மஹான் என்று போற்றப்பட்டவர் எப்படிப் பொய்த்துப் போனார். காந்தி இப்போது இந்த நாட்டில் ஊழல் என்று சத்தியாக்கிரகம் பண்ணுகிறேன் என்றால் நிச்சயமாக செத்துப்போக வேண்டியதுதான். சுயநலமற்ற, அடி உதை கொடுக்கத் தயங்காத குண்டர்கள்தாம் இந்நாட்டுக்கு இப்போது தேவை என்று நினைத்துக்கொண்டார். எப்படியோ கஷ்டப்பட்டு பத்து டன் சிமென்டுக்கு ‘பர்மிட்’ வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

'மூட்டைகளே அவிழ்த்துக் கொட்டிண்டுருங்கடா - கொள்ளி வாய்ப் பிசாசு திருடன்கள் - முழு மூட்டையா வர்ரதா பாருடா தினகரன்' என்று பெரிய அதிகாரி சொல்லியிருந்தார், இவருக்கு அதில் எப்படி செயல்படுவது என்று தெரியவில்லை. தவித்தார். அவ்வளவு மூட்டைகளிலிருந்தும் சிமென்ட் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளத்தான் செய்தார்கள். R.P.F. சரியாகக் கண்காணிக்காததால்தான் திருட்டு நடக்கிறது என்று. சொன்னார்கள். பத்திரிகைகளோ, பெரிய பணக்காரர்களையும், மந்திரிகளையும், கான்ட்ராக்டர்களையும் பற்றியே ஏகமாகச் சொல்லிக்கொண்டிருந்தன. கடைசியில் எல்லாம் 'நீ தான் திருடன் நான் இல்லை’ தினகரன் பார்த்தார்,

மெதுவாக வேலைகளில் கவனம் திரும்ப ஆரம்பித்திருந்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி, பேப்பர். ஏதோ கொரித்தல், அலுவலகத்திற்கு ஓடுதல், தலையைத் திருப்பாமல் வேலை, மத்தியானம் ஏதோ சாப்பாடு, மீண்டும் வேலை என்பதாக இருந்தார். எப்போதாவது மத்தியானம் அதிகாரியினுடைய அறையில் எல்லோருமே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். பொழுது தமாஷாகவே போய்க்கொண்டிருந்தது.

அவர் சாவுப் பிரச்சினையை அடியோடு மறந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அது அவரை வாட்டிய விதம் நான்கு வாரங்களாகி விட்டன. கனவுகளற்றுத் தூங்கினார். புஸ்தகங்களைத் தவிர்த்தார்.  அறிவு செயல்படாமலிருக்க அசுர கதியில் வேலையில் கவனம் செலுத்தினார். ரிசர்வ் பாங்க் போய்விட்டு வரலானார், ஜாயின்ட் சீஃப் கண்ட்ரோலர் ஆஃப் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் ஆபிசுக்கும்தான்; அங்கு மூன்றாவது ழாடியிலிருந்து கீழேயோ, இல்லை பளீரெனப் பரவிய கடலையோ பார்வையிலிருந்து தவிர்த்தார். எல்லோரிடமும் சரளமாகப் பேசினார். பி. ஜி. வோட்ஸ் வாங்கினார். முதலில் மறந்துபோய் நாலைந்து எட்கார் வாலஸ் வாங்கிவிட்டார். வேண்டாம்! அதில் பயங்கரமான கொலை வர்ணிப்புகள் வரும். அவை வேண்டாம்’ என்று கொலுப் படிகள் பக்கமாக மேலே வைத்துவிட்டார்.
98

இப்போதுதான் சாகடிக்கப்பட்ட கனவுகளை நினைவு கூர்ந்தார்: முகம் பேயறைந்தது போலாயிற்று. அவருடைய முகமாறுதல்களை பெசன்ட் நகர் பஸ் ஸ்டாப்பில் காலை வேளைகளில் கவனிக்காதவர்கள் இல்லை. ஒருநாள் கறுப்பாகக் குண்டாக ஒருவர் இவரிடம் வந்தார். அவரை அடிக்கடி_பஸ் ஸ்டாப்பில் பார்த்திருக்கிருமோ என்கிற தயாளத்தில், கண்கள் சந்தித்துக்கொள்ளும் போது கும்பிடு போட்டார். பிடித்தது அனர்த்தம்.

"நான் உங்களைக் கவனிச்சுக்கிட்டுதான் வரேன். ரொம்பவும் சஞ்சலப்படுறவரா இருக்கிங்க. ஜாதகம் இருக்குல்ல. கொண்டு வாங்க! எல்லாத்துக்கும் கிரகங்களோட சேர்க்கைதான் காரணம்! உங்களை இப்படிச் சஞ்சலப்பட வைக்கிறதே எதிலயும் தங்கவிடாம் ஒட்டுறதே இந்தக் கிரகங்கள்தாம்! சாந்தி பண்ணிடலாம். அப்புறம் இன்னொரு விஷயமும் ஞாபகத்தில் வைச்சுக்கணும். நான் சாதாரணமாக ஐம்பது ரூபாய் வாங்குறவன். ரொம்பவும் அசாதாரணமான ஜாதகங்களைச் சேர்க்கிறவன். இதில் தப்பா எடுத்துக்க ஒன்னுமில்லே. ஜாதகமும் அசாதாரணமாகத்தான் இருக்கனும், என்ன சொல்றிங்க. ஞாயிறு வர்றீங்களா அட்ரஸ் தரட்டுமா?"

மன்னிச்சுக்கோங்கோ. எங்கிட்ட கைவசம் இப்போது ஜாதகம் இல்லை, ஊர்வருந்துதான் வரவழைக்கனும்' என்றார் .

இருந்தும் இனிமேல் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். அவரையும் அறியாது, கிரகங்களின் சுட்டுச் சேர்க்கையிலும், மனிதனை அது பாதிக்கிறதிலும் நம்பிக்கை விழுந்தது. எங்கோ பெளர்ணமியிலும், அமாவாசையிலும் பைத்தியங்களின் சேஷ்டைகள் அதிகமாக இருக்கும் என்று படித்திருந்தார். மனஸ் உருவாவதற்கு சந்திரன் தான் காரணம் என்பது உபநிஷத் வாக்கு இதெல்லாம் நிஜம்தான் போலும்! ஏன் இருக்கக் கூடாது? அப்படியானால் நானும் பைத்தியம் தானா? எங்கேயாவது, மனித சஞ்சாரிமற்ற, ஊருக்கு வெளியே ஒரு பிரத்தியேக இருப்பிடத்தில், ஒரு வார்டுக்குள் ஒரு அறையில் எதையோ வெறித்து நோக்கியோ, கையில் அகப்பட்டதைத் தாக்கி எறிந்தோ, தனக்குத் தானே பேசிக்கொண்டோ விந்தைகள் பல புரிய நேரிட்டால். 'இப்போது மட்டுமென்ன பெரிய மேட்டிலிருந்து பெசன்ட் நகருக்குப் பீச் ரோட்டோட

99.

உனக்குள்ளேயே பேசிண்டு நடக்கத்தான் செய்யறே! ஷு" போட்டுண்டு டில்லியில் காலையில் இரண்டு மணிக்கு எழுந்து, ஸ்ப்தர்ஜங் விமான நிலையம் வரை நடக்கல்லே! அப்படீன்னு நான் பைத்தியம்தானா?"

'பாயைக் கிழிச்சுக்கிறாப்பிலே -இல்லை - ஆனால் ஒரிரு நரம்பு, மண்டையிலே என்னவோதான் ஆயிடுத்து' என்றாள் பத்மா. மீண்டும் எல்லாமே சகஜம்டா தினகரன்' என்றாள். (எப்போதாவது அவள் "டா” கூட போடுவாள்). '‘ஆனால் நாம் நம்மை நாமே நடத்திக் கொள்றதிலே இருக்கு...!"

'அதுக்கில்லே - பத்மா, - எவ்வளவோ மருத்துவ மாணவர்களை இது விஷயமா பேட்டி கண்டாச்சு யாருமே என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா'

"எப்போதும் போல, இது விஷயமாகூட புஸ்தகங்கள் வாங்குவது தானே?”

'‘அதிலெல்லாம் நிரம்ப அந்த மாதிரியான பாடத்திற்கே உரித்தான தனிப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள், எளிதில் புரியாதது நிறைய இருக்கிறதுன்னு - என்ன செய்ய பத்மா?”

'ஏன் இப்படி உங்களையே அலட்டிக்கிறேங்களே?'

"அது எப்படியாவது போகட்டும். நாளைக்கு முதல் காரியமாக சாவு பாடம் நடத்தும் ஏதாவது ஒரு விரிவுரையாளரைப் பார்க்கணும்.'

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலுவலகத்திற்குப் பக்கத்திலே இருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தார். மானவர்களை விசாரித்து ரீடர்' அன்ற வரைக்கும் போய்விட்டார். தன்னை, "நான் ஒரு நாவலாசிரியர். பணத்திற்காக எழுதுவதில்லை. எனக்குத் கலை கலைக்காகவேதான்!' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"அப்படின்னு நீங்கள் ஒரு ஆர்ட்டிஸ்ட். எனக்கும் சின்ன வயசிலேயே எழுதணும்னு ஆசை மருத்துவத்தில் நான் இரண்டாவது வருஷம் படிக்கிறப்போ ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன். அதோட எங்க ஆளுங்க கலைஞனாகிறதில் அதிசயமேயில்லை. கொஞ்சம் உள்ளுணர்வு அதிகமா

100

இருக்கிறவங்களா இருந்து, நாலு பிணத்தை அறுத்தாலே போதும். லைப் பூரா தலையைப் பிச்சுக்கலாம்.

"செகோவ் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!’

“தெரியும்" என்றார் தினகரன்.

"அவனோட வாழ்க்கைச் சித்தாந்தமே செத்துப்போன மகனைப் பத்தி குதிரை கிட்ட சொல்றதில்தான் அடங்கியிருக்குன்னு நினைக்கிறேன். டீ குடிக்கிறீங்களா?'’ என்றார்.

"சரி' என்றார் தினகரன்.

அவர் மணியை அழுத்தினார்.

'போய் வாங்கிட்டு வரணும்னு வேண்டாம். நானே இப்போது டிபனுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன்."

"இல்லை.-இல்லை நிக்கிறீங்களே! உட்காருங்கோ! நீங்க உங்களை அறிமுகப்படுத்திக்கிட்ட விதம் என்னை உணர்ச்சி வசப்பட வைத்துடுச்சு. உங்களை உட்காரக்கூடச் சொல்லலை. பார்த்திங்களா? எனக்கும் உங்கள் உலகத்தில் எவ்வளவு நாட்டம் பார்த்திங்களா? எது எழுதினாலும் ஒசத்திதான். சாமர்செட் மாம்தானே அது, மூன்றாம் தரமான லெக்சரராக இருக்கலாம், ஆனால் மூன்றாம் தரமான கலைஞனாக இருக்கக் கூடாது' என்று சொன்னது. நான் அவன் சொல்வதை ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு என்னமோ கலைஞன்கிற பதமே ரொம்பப் பிடிக்கும்......ஆமாம் எப்படி நீங்க உங்க முதல் கதையை எழுதினீங்க."

'அவங்களும் ஒரு விதமா வளர்ருங்கனாலும் முதல்ல உருவா கிறதென்பது தற்செயலான ஒன்னுன்னே நினைக்கிறேன்.'

"அப்படியா' என்றார் ரீடர். "நாம் எதைப் பத்தி பேசிண் டிருந்தோம்.' உள்ளே பியூன் வந்தான். "ஆறுமுகம் இரண்டு கப் டீ போடுப்பா' என்றார்.

ரீடர் பின்னால் மேஜையில் மின்சார அடுப்பு இருக்கிறது என்பதைத் தினகரன் அப்போதுதான் கவனித்தார். ஆறுமுகம் டீ தயாரிக்கலானான்.

"செகோவ் இல்லை' எனறு தொடர்ந்தார் ரீடர் "நாம எல்லோருமே ஒருநாள் போயிடுவோங்கிறதிலை நாம

101
எல்லோருமே ஒருத்தரை இன்னொருத்தர் கவனிச்சிக்கணும். ஒருத்தர் இன்னொருத்தருக்காக வாழனும்கிறத்தைதான் அந்தக் கதையில சொன்னான். அதுகூட முக்கியமில்லை. எது ரொம்ப ஆச்சர்யமான விஷயம் - சாவு அவனுக்குள் ஏற்படுத்திய உணர்வைக் கடைசி வரைக்கும் கடைசி பூச்சுவரைக்கும் துல்லியமா காப்பாத்தி வந்ததுதான் என்றே நினைக்கிறேன்” என்றார் ரீடர். தொடர்ந்து “இப்படி நாம் சொல்லுறப்பவே அவனும் ஒரு டாக்டர்ங்கிறதை மறந்துடப்படாது” என்றார், மீணடும், 'இது என்னைப் பொருத்த வரையில் மகத்தான சாதனைன்னே நினைக்கிறேன். நமக்குள்ளே ஏற்படுற துல்லியமான உணர்வுகளைக் காப்பாத்தி ஆள்கிறதுங்கிறது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அப்பிடித்தானே?'

'வாஸ்தவம்தான்' என்றார் தினகரன், தொடர்ந்து “அதுவும் பயிற்சியினாலே ஏற்படுகிறதுதான்” என்றார்.

"அதெப்படி நீங்க சொல்ல முடியும்? ஒரு வருடம் பிணங்களைப் பார்த்ததும் மனம், அறிவு எல்லாமே மரத்து விட்டது ஸார், நீங்க ஒன்னு...”

'இன்றிலிருந்துகூட அதை நீங்க வளர்த்துக்கலாம். ஒரு சமுதாயச் சூழலோட அறிவு, அதனுடைய உணர்வுகள் இதை எல்லாம் நான் மறுக்கலை நீங்க இப்போ சொன்ன தனிப்பட்ட சூழலையும் நான் மறுக்கல்லே. ஆனா நம்மால், மனமிருந்தா வளர்த்துக்க முடியும்.'

'மனஸ் ஒன்றில் விழுறதுக்கே - உழல்றதுக்கே - நம்மையும் தாண்டி ஒன்னு வேண்டியிருக்கே, அதுக்கு என்ன செய்ய மருத்துவத்துக்கும் உங்களுக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை. ஆனா நீங்க என்னைத் தேடிண்டு வரல்லை. எவ்வளவு. பேசிட்டோம்! இவ்வளவுகூட மனசு திறந்து பேச முடியறதில்லை - கடவுள் அனுப்பிய வரப்பிரசாதம் நீங்க. என்னுடைய தளர்ந்த நரம்புகளில் நீங்க சஞ்சீவியா பாயுறிங்க' என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

'நீங்க மிகைப்படுத்துறிங்க' என்றார் தினகரன் சிரித்துக் கொண்டே!

டீ வந்தது.

'உங்க பேர் என்ன?”


102
'‘தினகரன்' ’

"என் பேர் வெங்கட்ராமன், என்ன விஷயம்?"

“நீங்கள்லாம் சாவைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"நாங்க நினைப்பது கிடக்கட்டும் - நீங்க என்ன சொல்ல விரும்புநீங்க - அதைச் சொல்லுங்கோ" என்றார் ரீடர் சிரித்துக்கொண்டே.

"அதேதான்'‘ என்றார் தினகரன்,

“உங்க உலகத்திலை என்ன கஷ்டம்னா முதலில் பிரத்தியேக மொழி. பிறகு விஷயங்களை விவரிக்கும் விதம். இதைத் தாண்ட குறைந்தபட்சம் ஐந்து வருடம் ஆகும். என்னோட அனுமான ஊக உலகங்களை அதிலே ராவி மொண்ணை அடிச்சுக்க விரும்பலே...”

“மேலே சொல்லுங்கோ”


'விஷயம் இவ்வளவுதான் - உங்களுடைய மருத்துவ உலகத்தில் சாவுக்குப் பொதுப்படையான காரணங்கள் என்று ஏதாவது உண்டா?'

"பொதுப்படையா? அடிப்படையா?"

'‘வாஸ்தவம்தான். அடிப்படையில்தான்! அதாவது மேலெழுந்தவாரியாக ஏதோ காரணங்கள் என்று புலப்பட்டாகூட, அடிப்படையில் சாவுக்கு ஒரே காரணம் என்று ஏதாவது உண்டோ?"

“அது, சாவைப் பற்றிய சித்தாந்த உலகம், உடற்கூறு உலகத்திலிருந்து ரொம்ப மாறுபட்டது. நியதிகள், கோட்பாடுகள், சர்ச்சைகள் எல்லாம் உள்ளது. ஆனால் அந்த நியதிகளை, சர்ச்சைகளை சோதித்துப் பார்க்காம ஒத்துக்க முடியாது” என்றார் ரீடர். தொடர்ந்து "சிகரெட்' என்றார்

"தாங்ஸ், வேண்டாம்' என்றார் தினகரன்.

"நீங்க எனன சொல்ல விரும்புறீங்க?"

"சாவு என்பது ஓர் இடைவெளி என்று நான் கணிக்கிறேன்.” என்றார் தினகரன்.


"அப்படீன்னா......?”
1O3

“……………”

'சரி... நீங்க ‘இடைவெளி"ன்னு எதைக் குறிப்பிடுறிங்க. நீள அகலம் போன்ற இடத்தையா? இல்லை ரெண்டுக்கும் நடுவுல உள்ள நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியையா?” என்றார் ரீடர்.

"என்னைப் பொருத்தவரையில் ரெண்டுமே ஒன்னுதான்.

“அதெப்படி முடியும், ரெண்டும் ஒன்னாக முடியாது. மேலும் நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு. ரொம்பவும் சாதாரணமா பார்த்தாக்கூட வாயில் இடைவெளி உள்ளது. கண்ணுக்குள்ளே இடைவெளி இருக்கு. மூக்கில் இருக்கு. ஐந்து ஐந்தா விரல்களுக்கு நடுவுவ இருக்கு...ஹா...நீங்க என்ன இப்படிப் பேசறேள். உடம்புக்குள்ளே, ஒவ்வொரு உறுப்புக்கும் நடுவே நூலிழையில் மயிரிழையில் இடைவெளிகள் - கண்ணுக்குப் புலப்படாத இடைவெளிகள் கூட எத்தனை எத்தனையோ? மூத்திரத்திற்கு இனவிருத்திக்கு என்று இரண்டு இடைவெளிகள் உள்ளன. ஆசனவாய் வேறு”

ஆயாசம் மிக, தினகரன் தன்னிடத்திலிருந்து எழுந்து கொண்டார். "நான் வர்ரேன் ரீடர். மன்னிக்கவும், உங்கள் நேரத்தை வீணாக்கிட்டேன். எனக்கு என்னவோ இடைவெளிதான் சாவுக்குக் காரணம்னு படுகிறது. 'முடியுமா சாவை கடுகாட்டில் எரித்துவிட' அப்படீன்னு ஒரு தமிழ்க் கவிஞன் பிலாக்கணம் வைச்சுருக்கான். தொன்று தொட்டு, சாவை முறியடிக்க முடியலேயே! அப்படீன்னு எவ்வளவோ பிலாக்கணங்கள்! சாவை சுடுகாட்டில் எரிச்சுட முடியாதுதான்! ஆனா அதுக்குக் காரணம் அதோட இடைவெளித் தன்மைதான்.'

'எனக்குப் புரியலை' என்றார் ரீடர்.

“எனக்குப் புரியறது. ரீடர், சாவுங்கிறது ஒர் இடைவெளி தான்! இன்னமும் சரியா புரிஞ்ச பிறகு நான் உங்களுக்கு என்னோட கோட்பாட்டை விளக்குகிறேன். நான் வரட்டுமா?’’


"நீங்க விளையாடுறிங்க. ஏதோ பெரிசா ஆரம்பிச்சுட்டு சப்புன்னு விட்டுட்டுப் போறேளே? இது நியாயமா?"

"நான் என்ன செய்யட்டும்?'’ வெளியே வந்தபோது அவர் மனிதகுலத்தின் இயலாமையை வியந்தார். சாவுக்குக் காரண
ம் இடைவெளிதான் என்பது இவர்களுக்கு இவ்வளவு காலமும் எப்படிப் புரியாமல் போயிற்று. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத அவர்கள் கொடுக்கும் மருந்தை எப்படி நம்புவது?

“ஜாக்கிரதை தினகரன். பைத்தியம்னு கல்லைவிட்டு எறியப் போகிறான்கள். அவர்களுக்கும் எக்கச்சக்க முடிவுகள் கிடைக்கவேதான் அவர்கள் அவர்களுடைய தொழிலை நம்புகிறார்கள் அதனுடன் கூடப்போய் மோதாதே! அவர்கள் உன்னைச் சும்மா விடமாட்டார்கள். மேலும் உன்னுடைய, இதனைச் சார்ந்த கோட்பாடுகளைக்கூட முழுமையாக உன்னால் சொல்ல முடியவில்லை,

மீண்டும் புஹாரிபோய் சோர்வுடன் உட்கார்ந்தார். அவருக்கு அந்த இடமும், அதே சர்வரும்கூட முக்கியமாகப் பட்டனர்; ஒரு காலகட்டத்தில் ஒட்டகமும், புலியும் குதிரைப் பந்தியமும் முக்கியமாகப் பட்டதுபோல்!

அவர் போய் உட்கார்ந்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம் இன்னொரு சர்வர் வந்தான். “அந்த இன்னொரு சர்வர் எங்கே” என்றார் தினகரன்.

“இந்த டேபிளுக்கு நாங்க இரண்டு பேர்தான். இன்னொருத்தன் இன்னும் அஞ்சு நிமிஷத்திலே வேலைக்கு வந்திருவான். சின்ன ஆர்டரா இருந்தா நானே கவனிக்கிறேன். இல்லாட்டா அவன்கிட்ட கொடுத்துடுறேன்” என்றான்.

தினகரன் பெரிய ஆர்டராகவே கொடுத்தார். அவன் அந்த இன்னெரு சர்வர் - சாவைத் தன்வாயிலாகப் பேச வைத்தவன், இருபது நிமிடங்கள் கழித்து வந்தான். வந்தவுடனேயே தினகரனைப் பார்த்து ஏதோ சொன்னான். சிந்தனை வயப்பட்டிருந்த அவர், அவனுடைய உதடு, அசைவுகளைக் கண்டாரே ஒழிய அவன் என்ன சொன்னான் என்பதைத் துளிகூடக் கேட்கவில்லை. -

அவர் பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் 'இந்தாப்பா சர்வர்' என்று கூப்பிட்டார். "நீ வந்தவுடனே என்னைப் பார்த்து என்னமோ சொன்னியே என்ன?" என்றார்.


"மன்னிச்சுக்குங்க சார் - பெரிய மனுஷனோட விளையாடக் கூடாதுதான் - ஏதோ தெரியாத்தனமாக சொல்லிட்டேன் - அதெல்லாம் ஒன்னுமில்லே- டீ கொண்டு வரட்டுமா ”.

இதைவிட அவனை எப்படி வற்புறுத்திக் கேட்பது. டீ கொண்டு வந்தபோது “சும்மா சொல்லப்பா என்னவா இருந்தாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.”

"இல்லே சார் - என்ன... ஏதாவது தூக்கு தண்டனைக் கொடுத்துட்டானா? இப்படி சாம்பல் நிறமா போயிட்டிங்களேன்னேன்” என்றான் அவன்.

அவர் ஆபீசில் சொல்லிக்கொண்டு வீடு போய்ச் சேர நாலுமணி ஆகிவிட்டது. "இதோ பாருங்கோ' என்று சுண்டு விரல் உயர்த்தினார் - “இன்னிக்கு யாரும் என் வம்புக்கு வராதேங்கோ' என்றார், ‘. . . - .

பத்மா "என்னன்ன என்னாச்சு. ஏன் சட்டுன்னு வந்துட்டேள்-சொல்லுங்கோ' என்றாள்.

“ஒன்னுமில்லே, பத்மா நான் சொல்றதைக் கேளு - ஒன்னுமில்ல்லே. இன்னி ராத்திரிக்குள்ளே எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும் - ராத்திரி முழுக்க முழிச்சுண்டு: போறேன்- தூக்குக் கயிறைத் தியானம் பண்ண! போறேன்.”

ஐயயோ! இதென்ன விபரீதம்! நான் ஒரு . பாவமும் அறியாதவ. என்னன்னா இது! அடேய் குமார் ஸ்ரீதர் ஜெயஸ்ரீ உங்க அப்பாவை பாருங்கோடா! இது என்னடா திடீர் கூத்து! தேவி கருமாரி! இவருக்கு நல்ல புத்தியக் கொடும்மா - தாயே! இதோ பாருங்கோ-என்னைப் பாருங்கோ - மூணு குழந்தையை . வைச்சுண்டு..."


“சும்மா இருடீ. நான் இப்போ தூக்குப்போட்டுக்க போறதில்லே - சும்மா இரு நூலில் தத்துவம் தெரியுதான்னு பார்க்கப் போறேன்”
106

“அப்படீன்னா”

“பெட்ஷீட்டை எடு”

‘'எதுக்கு! நான் விடமாட்டேன்!' –

"கேளுடீ - சும்மா பார்த்துண்டுதான் இருக்கப் போறேன்.”

“நானும் கூட இருப்பேன்."

'சரி இருந்து தொலை."

அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. குழந்தைகளை எல்லாம் சாமர்த்தியமாக வெளியே அனுப்பிவிட்டாள்.

“இதே பார் என்னைக் கவனி" என்றாள்.

“என்ன?"

"எக்காரணம் கொண்டும் நீ மேஜையோ, நாற்காலியோ அது பக்கத்தில் எடுத்துக்கொண்டு போகக் கூடாது"

“சரி."

"தாழ்ப்பாள் போட்டுக்கக் கூடாது."

“சரி."

அவள் அரைமனத்துடன் ஒப்புக்கொண்டாள். தினகரன் அவ்வளவு உளைச்சிலிலும் அவள் முகத்தைப் பார்த்துப் பயந்துவிட்டார், சுறுக்குக் கயிறு ஒன்று தயாரித்து அதை மின்விசிறியில் தொங்கவிட்டார். தானாகவும் பிறர் கையாலும் ஆளப்பட்ட ஒரு தத்துவம் அங்கு ஆடிக்கொண்டிருந்தது.

இரவு பத்து மணிவரை அவர் பார்த்துக் அதைப் கொண்டேயிருந்தார். ஒரு பலனும் கிட்டவில்லை. குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுப் படுக்கவைத்து விட்டு அவளும் வந்தாள் .

பத்தரை மணிவாக்கில் நான்காவது முறையாக பத்மா எலுமிச்சை கலந்த தேநீர் தயாரிக்கி சமையலறை போன போது இவர் அவளைப் போய் அழைத்தார். பத்மர் “இருங்கோ தேநீர் போட்டுண்டு வர்ரேன் ”என்றாள்.

107
- "இங்கே வா! பிரபஞ்ச ரீதியில் இந்த மாதிரியான எண்ணம் இதுவரை யாருக்கும் கெடச்சிருக்காது- நீதான் என் முதல் மாணவி!'

"என்ன அப்படி பெரிசா கண்டுபுடிச்சுட்டேள்."

"என்ன தெரியறது”

“தூக்குக் கயிறு.'

"தூக்குக் கயிறு நடுவிலே பார்" என்றார் அவர்,

"என்ன“

"இடைவெளி”

அந்தத் தூக்குக் கயிறுக்கு நடுவே இடைவெளி அமைந் திருந்தது.

'இதுதான் மனிதன் கழுத்தில் சுருங்குகிறது."

“'வாஸ்தவம்தான்."

"இந்த இடைவெளிதான் மனிதனைக் கொல்லுகிறது. இது தாண்டி தத்துவம்” என்றார் அவர்.

“போதும். என்னைக் குழப்பாதீங்கோ” என்றாள் அவள். தேநீரைக் கொடுத்துவிட்டு “டியர், நான் உன்னத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள்.

“போடி பைத்தியக்காரி” என்றார் அவர்.
108
அவர் அந்தத் தூக்குக் கயிற்றைக் கையில் எடுத்துக் கொண்டார். ரொம்பவும் சின்னதாக இருந்தால் கழுத்தில் நுழையாது. ரொம்பவும் பெரிதாக இருந்தால் கழுத்தில் நுழைந்தும் பலனில்லை. அதனால் ஒரு நிர்ணயிக்கப்பட்ட இடைவெளி கனத்துடன் கழுத்தைப் பற்றும் போது சாவு சம்பவிக்கிறது.

கேள்வி: இந்த இடைவெளிதான் சாவை சம்பவிக்க வைக்கிறது என்று எப்படி சொல்ல முடியும் கால் கீழே பாவாத ஒரு அசுர உண்மை உள்ளதே! –

பதில்
: வாஸ்தவம்தான் ஆனால் அதற்குப் பிறகு, நான் மேலே சொன்ன விஷயம் தான் முக்கியமாகிறது. இடைவெளிதான் மனிதன் கழுத்தில் சுருங்குகிறது. பெரியப்பாவின் குரல்வளை, கனவில் கண்ட சுருங்கிய செர்ரிப் பழங்கள் அவர் கண்களில் நிழலாடின. இடைவெளி, இடைவெளியைத்தான் சம்பவிக்கும். சுருக்குக் கயிறு அதிர்ச்சியாக, பிளக்கும் தன்மையாகக் கழுத்தில் விழுகிறது. நெஞ்சுக் குழி தளர்ந்த பெரியப்பாவின் சாவுப் படுக்கை இரண்டு மாறுபட்ட சாவுக்கும் காரணம் இடைவெளி!

ரீடர்: நீ என்னுடைய சாதாரணக் கேள்விக்குக் கூடப் பதில் அளிக்கவில்லை.

தினகரன்: வாழ்வு என்பதைப் பற்றிய என் கணிப்பு இது தான்......எந்த ஒரு பொருளும் - திடப் பொருளாயிருந்தாலும், திரவ நிலையிலிருந்தாலும்-அது உயிர்மயம் தான். இப்படிப் பார்க்கும்போது அதில் நம்முடைய இந்த ஆராய்ச்சிக்கு முன்னமேயே இடைவெளி இருந்தால், அதை நான் உயிருக்கு அனுசரணையான இடைவெளி என்கிறேன். ஆனால் அது சாவாகப் பரிமளிக்கும்போது, வாழ்வுக்கு அனுசரணையான இடைவெளியிலிருந்து முரண்படுகிற்து. சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி!”

இப்போது அவரில் இன்னொரு கேள்வி முளைத்தது.

“'ஏன் இப்படி நடக்கிறது”

“தெரியாது!’

அந்த முரண்பாடுடைய இடைவெளி தானாகவே சிந்திக்கிறதா? அதாவது, கன பரிமாண லோகங்களில் திரவ வஸ்துக்களில் முதலிலேயே பின்னப்பட்டிருக்கிறதா? முன்னமே பின்னப்பட்டிருந்தால் அது தனியாகவே சிந்திக்க முடியாது என்று கொள்ளலாமா?

109

அது தனியாகவே சிந்திக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால் வெல்வேறு இயற்கை நியதிகளை அது தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது. பாறைகளுக்கு உயிர் இல்லையா, யார் சொன்னது? அமானுஷ்யமான உயிர்க் குறியீடுகள் அவை! பாறைகளில் இடைவெளியைத் தோற்றுவிப்பது எவ்வளவு கஷ்டம். பாறை, உயர்ந்தும், தன்னைப் பனியால் மூடிக் கொண்டும் லட்சக்கணக்கான வருடங்கள் இடைவெளியை ஏற்படுத்த முடியாமல் சாவைக் காக்க வைக்கிறது. இப்படிப் பார்த்தால் சாவின் பொறுமைக்கு எதன் பொறுமையை ஈடுவைப்பது. மேலும் மரம்! மேலே இடைவெளிகளையே ஏற்படுத்தி (முள்ளை முள்ளால் எடுக்கணும் என்பது போல்) உன்னை வெற்றிகொண்டு விட்டதாகத்தான் மரங்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமாவதில்லை. இடைவெளியே! காலனே! நான் உன்னை வணங்குகிறேன்!

மேலும், காலன், சாவு அல்வது இடைவெளி என்பது ரொம்பவும் முக்கியமாக, எப்போதுமே வெல்ல முடியாத ஒன்று! ஏன் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் உலக மக்களே' என்றார் தினகரன். ஆம். முரண்பாடுடைய இடைவெளியை -- சாவை-வெல்ல முடியாது; ஏனென்றால், உருவம் என்று வந்த பின்பு, முரண்பட்ட இடைவெளி என அது புகுவதால், இடைவெளியைக் கையில் பிடிக்க முடியாது என்பதால், சாவு வெல்லப்படாத ஒன்று.

ஒரே ஒரு சின்னக் கேள்வி: முரண்பட்ட இடைவெளி என்றால் கத்திக்காயம் பட்டால், எல்லா ரத்தமும் வெளியே அல்லவா வந்துவிட வேண்டும்.'

"இதிலிருந்து, வாழ்வும், உயிரும் தோற்றம் கொண்டு விட்ட எல்லா நிலைகளிலும், வாழ்வின் அகோர வீர்யம் தெரிகிறது. இருந்தும் காலத்தில் முரண்பாடுடைய இடைவெளியாகத் தான் சாவு தன்னை நிர்ணயித்துக் கொள்கிறது.

இடைவெளியே, சாவே! யாருமே உன்னே ஜெயிக்க முடியாது என்றுதானே வெற்றி எல்லை தெரியாது ஓடிக் காண்பித்தாய. இப்போது நான் உன்னைக் கண்டு கொண்டு விட்டாலும் உனக்குத்தான் வெற்றி. உன்னே நான் வணங்குகிறேன்! - ."

ஒருநாள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது “இன்னுமொரு கேள்வி!” என்றது சாவு.

"என்ன?” என்றார்.

“கான்ஸர் என்று உன் இனத்தவர்கள் ஏதோ சொல்கிறார்களே? அங்கு வெள்ளை அணுக்கள் வளர்ச்சியல்லவா அடைகின்றன. வளர்ச்சி அடையும் இடத்தில் இடைவெளி ஏது? நீ சொல்வது போல் முரண்பட்ட இடைவெளியே எனினும்...”

"வாஸ்தவம்தான். ஆனால் இதைப்பற்றியும் நான் சிந்தித்து விட்டேன். தண்ணீரில் கம்புகொண்டு அடித்தால் விலகவா செய்யும்? உறவுமுறைக்கு என் பாட்டி இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ரத்தமும் தண்ணீர் அம்சம் என்று கொண்டால், அங்கு இடைவெளியைச் சமைப்பது உனக்குச் சிரமமான காரியம் போலும்! வெள்ளை அணுக்களை வளரச்செய்து சிவப்பு அணுக்களின் வாழ்வுக்கு அனுசரணையாக இருந்த இடைவெளியை உறிஞ்சி விடுகிறாய்!

"மண்டியிடு” என்றது சாவு.

“மானசீகமாகவா? உடம்பாலும் கூடவா?”

“மானசீகமாகப் போதும்!”

அவர் மண்டியிட்டார். .

• • • • • • • • • • • • • • • • • • • • • •

இடைவெளி - சம்பத் 4 Idaiveli A novel in Tamil by S. Sampath - 4

இடைவெளி - சம்பத் 4 Idaiveli A novel in Tamil by S. Sampath -4
http://azhiyasudargal.blogspot.in/2009/07/blog-post_7758.html


வலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:06 AM | வகை: கதைகள், சம்பத் 

அத்தியாயம்  4


தான் ரொம்பவும் பெரிய மனிதனாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டார் தினகரன். இப்படித் தோன்றும் போது, இவான்ஸ் மனக்கண் முன் தோற்றம் கொண்டு `உன்னுடைய சாதனை என்ன? அல்லது நீ சாதிக்கப்போவது என்ன?’ என்பான் சிரித்துக்கொண்டே.

யாருடைய அங்கீகரிப்பை நான் நாட வேண்டும்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? வாழ்ந்து கொண்டே, அவர்களிலும் யாராவது என்னைப் போன்று சாவோடு சம்பாஷணை செய்து கொண்டிருப்பார்களா? பெரியப்பாவைப் பார்க்கப் போகும்போது, சாரதி வாயிலாக சாவுதான் பேசியது என்பதற்கு என்ன நிரூபணம்? புஹாரியில், சர்வர் வாயிலாக அது பேசியது என்பதற்கும் என்ன நிரூபணம்? இந்தப் பிரச்சினை மூன்று மாதமாக, உன்னைப் பாகுபோல் உருக்கிக் கொண்டிருக்கிறது. என்ன பிரயோஜனம்? வாழ்க்கையில் நீ கண்டதென்ன? சாதாரணமாகவும் இல்லை. பெரிய பெரிய விஷயங்களைப் பற்றியும் ஒன்றும் அறிந்துகொள்ளவும் இல்லை. சுத்த ரெண்டாங்கெட்டான்தான் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியான எண்ணச் சூழலுடன் `பீச்’ சாலையில் நடந்துகொண்டே இருப்பார்! தேடல்தான் முக்கியம்! எப்போதும் பெரிசு பெரிசாக எண்ணத்தை ஓட்டு. உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை பிரபஞ்ச ரீதியில் அதிகப்படி! அப்படித்தானே சார்த்தர் கூடச் சொல்கிறான். அதை ஏன் சாதாரணமாக வாழ்ந்து சின்னாபின்னமாக்க வேண்டும்? `இது நல்ல கேலிக்கூத்து!’ என்று மனத்தில் ஏதோ இசை பாட ஆரம்பித்தது. பார்க்கப்போனால் இப்போதுதான் நீ சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறாய். `அஹ்’ தினகரன்! எதைப் பற்றியும் கவலைப்படாதே. ஒளியை உமிழ்ந்த நட்சத்திரம் அமிழ்ந்தே போய்விட்டது. ஒளி மட்டும் இன்னமும் இருக்கு! அதோ நாயோடு ஒருத்தனும் ஒருத்தியும் போகிறார்களே! அவர்கள் மேலெழுந்த வாரியாக ஏதாவது பேசிக்கொண்டே போகட்டும். `ஆனால், அடிமனத்தில் என்னென்ன அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவோ? எதையென்று உலகத்திற்குப் புரியவைக்கிறது? எவ்வளவு அது புரிந்துகொள்ளப் போகிறது? எல்லாமே புரிந்தால்தானா? முடியுமா? தேடல்தான் முக்கியம்.



ஆனால், பெருத்த சங்கடமெல்லாம் ஆட்கள் கிடைக்காமல் போய்விடுவதில்தான்! இவ்வளவு எண்ண ஓட்டங்களையும் தனியாகச் சுமக்க வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த மாதிரியான விஷயங்களின் சாபக்கேடு. எப்போதும் தனியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. பத்மாவிடம் ஒரு எக்கச்சக்க ஈடுபாடு இருந்தது. ஆனால், கல்பனா வந்ததும் அதுவும் என்னவெல்லாமோ ஆகிவிட்டது. எங்கோ அவர்கள் வாழ்க்கையும் கீறல் விழுந்த கிராமபோன் ஆகிவிட்டது. குழந்தைகள்! ஆமாம், நிச்சயமாக! ஆனால், அதுகளுக்கும் ரொம்பவும் உபயோகமாக இருக்க முடிவதில்லை. என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்களோ? கல்பனா! அமெரிக்கா போனாள். திரும்பி வந்தாளோ? என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாளோ? கடிதம் போடலாம் என்றால் முகவரி தெரியாது. அவளுக்கென்ன! கெட்டிக்காரி! பிழைத்துக் கொண்டு விடுவாள். இவரைத்தான் அவள் `உனக்கு உன்னையே காப்பாற்றிக்கொள்ளத் தெரியாது. ஏதாவது விபத்தில் போய் நீயே விழுவாய்’ என்பாள். அது எவ்வளவு நிஜம். பத்மாவுக்குக் கூட, வீட்டுக்காரர் மற்றவர்களைப் போல் சாதாரணமாக இல்லையே என்று கழுத்துமுட்டும் குறை! ஆனால், தினகரன், முகவரி தெரிந்தால்கூட அவளுக்குக் கடிதம் மட்டும் போடாதே. அவள் கடிதங்களை அடிவயிற்றிலிருந்து வெறுத்தாள். உன் மூளைக்குச் சின்னச் சின்ன விஷயங்கள்கூட எட்டுவதில்லை. சின்ன விஷயங்களில் உன்னால் கவனம் செலுத்த முடியாமல்தான் நீ கல்பனாவிடமும் தோற்றாய், பத்மாவிடமும் கால் பங்கிற்குத் தோற்றிருக்கிறாய்! அது என்ன கால் பங்கு என்று கேட்டுக்கொண்டே தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். இருந்தும் கல்பனாவைப் பார்க்க வேண்டும் என்று மனது ஏங்குகிறது. விளையாட்டாக அதெல்லாம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த ஐந்து வருடங்களில் அவளை நினைக்காத நாள் உண்டா? மோஹினி என்பது நிஜம்தானோ? கல்பனாவைவிட அழகிகள் உலகில் இல்லையா என்ன? அவளுக்கு அப்போதே இருபத்தி ஏழு வயதுன்னா நடந்து கொண்டிருந்தது? வாஸ்தவம். அவளைவிடப் பெரிய அழகிகள்_அதுதான் முக்கியமென்றால் இந்த அடையாறிலேயே ஒரு பத்துப் பனிரெண்டு தேறுவார்கள். இருந்தும் எங்கோ, அமெரிக்கா போய்விட்ட அவளை மனம் ஏன் பின்னுகிறது? ஒரு நாள், இந்தப் பெசன்ட் நகர் கடற்கரையில், தனிமையில், அவள் அங்கு சர்வகலாசாலையில் படித்து முடித்து, ஒரு அடுக்கு மாடிக் கட்டிட அறையில் தன்னைப் போர்த்திக் கொண்டு பாடங்களைப் புரட்டுவதாக ஒரு காட்சி. இது எப்படி சாத்தியமாகிறது? அவர்களிடையே ஏற்பட்ட முறிவுக்குப் பிறகுதானே அவருக்கு இந்த மாதிரியான ஒரு சாவுப் பிரச்சினை கிடைத்தது? அப்படியிருக்க அவளைப் பார்த்துத்தான் என்ன ஆக வேண்டும்? மேலும் கல்பனா என்பவளைவிட அவளுடைய எண்ணமல்லவா இப்போது இனிக்கிறது. அந்தப் பெயரே ஏற்படுத்தும் ஒருவித மாயாஜாலமா இது?’
இருந்தும் ஆஹ்! இந்த முறிபட்ட ஒற்றையடிப் பாதைப் பிரயாணம்தான் எவ்வளவு சுலபமானதாக எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. அப்பழுக்கற்ற ஆன்மாவின் ஒருதலைப்பட்சமான காதல் பிரயாணத்தில்தான் இன்பம் இருக்கிறது. அவள் அடிக்கடி பாடும் பாட்டை இங்கு எப்போதாவது கேட்பதில் உள்ள ஆனந்தம், இப்போது அவள் நேரில் பாடினால்கூட ஏற்படுமா என்பது சந்தேகம்தான்!



`எனதன்பே!’ என்றார் தினகரன். `நீ என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எங்கோ என்னிடம் வந்தால் தனிமைபூர்வமான இன்பம் திகட்டக் கிடைத்து அதில் செத்து விடுவோமோ என்று நீ பயந்திருக்கிறாய்! ஆனால் எனதன்பே! நீ அறிந்தோ அறியாமலோ சாவை ஒருமுறை முழு உணர்வோடு எட்டிப்பிடித்த பின்தான் வாழவே தகுதி உடையவளாகிறாய்? நான் சொல்வது தப்பா? மேலும், கடைசியில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட துக்கத்துடன் தானே நாம் இருவருமே பிரிந்தோம். உன் மனத்தைத் தொட்டுப் பார்! உன்னுடைய நாற்காலியில் கிடந்த சோக உரு இப்போதும் என் கண் முன்னால் நீந்துகிறது. நாம் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் குதறிக்கொண்டது ; எங்குமே பிடிபடாமல் ஏங்கி ஏங்கிப் பிரிந்ததில் அந்தப் பெரிய வார்த்தையின்_காதலின்_முழு அர்த்தத்தை உணரத் தான் செய்தோம். என் வரையில், நாம் இருவருமே விடலைத்தனமாக நடந்து கொள்ளவில்லை என்பதில் தான் நம்முடைய சோகம் முழுமையடைகிறது. நீயாவது பெண்! நடைமுறையில் எல்லாவற்றையுமே மறந்து விடுவாய். ஏதோ ஒரு மாலை, அல்லது காலை, நீ எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருந்த ஓரிரு விளம்பர வரிகளின் சங்கீதத்தை, நான் கேலி செய்தது ரேடியோவில் மீண்டும் ஒலிக்கக் கேட்க, நான் உன்னைத் தொற்றலாம். அல்லது உன் வீட்டு மாடியில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதில் நம்மிடையே ஏற்பட்ட முழுமையை நீ மீண்டும் பெறும்போது நான் உன்னைத் தொற்றலாம். ஆனால் என்றுமே நாம் இருவரும் சந்தோஷமாக இருந்திருக்க முடியாது என்றுதானே அப்போதும் நாம் திட்டவட்டமாக நம்பினோம்?’



இந்நிலையில் கல்பனாதான் சாவு உருக்கொண்டு தன்னைத் தொடர்கிறாளோ என்று பட்டது. இருக்காது! மேலும் அவள் ஒரு நாளும் தன்னை அந்நிலைக்குத் துரத்த வேண்டும் என்று நினைக்க மாட்டாள்.


எதிரே வெகு தூரத்தில் நிலைத்து, கட்டுமரங்கள் பாய் விரித்துச் சென்று கொண்டிருந்தன. வண்ணத்திப் பூச்சி போல் அவைகள் கண்களுக்குப் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சில இடங்களில் கடல் நீர், அரக்கு வர்ணத்தில் காட்சி அளித்தது. சில இடங்களில் வெளிர் நீலமாக ஆரம்பித்துப் போகப் போக முழு நீலமாக ஆழ ஆரம்பித்துக் கனத்திருந்தது. இப்படியே கடலோடு பம்பாய், பினாங், ஹாங்காங் என்று போனால் தேவலை போலிருந்தது. பகற்கனவு என்று அதை ஏன் சொல்ல வேண்டும்? பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்குச் சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வாராதா என்று ஏங்கினார். ஆனால் அதெல்லாம் எங்கே முடியப் போகிறது? அப்படின்னா அது பகற்கனவுதான்!



கனவோ நனவோ பயணம் மனத்தைச் செம்மையடையச் செய்கிறது என்று நம்பினார் தினகரன். ஆட்டமும் அலைச்சலும் மிகக் கண்ட, ஓய்ந்துபோன ஆன்மாவுக்குப் பயணம் அரிய சஞ்சீவி ஆகும் என்று அவர் நினைத்தார். இந்த எண்ண ஓட்டங்களை எல்லாம் தவிர்த்து, சாதாரணமாக அச்சுப்பிச்சென்று இப்போது நடந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமா போல் கதைகள் எழுதி ஊட்டியிலோ கொடைக்கானலிலோ தங்க ஏற்பாடு செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது. இதுதான் சத்தியமாக பகற்கனவு. ஏனென்றால், விஷயம் இவ்வளவுதான்_அந்த மாதிரியான அச்சுப்பிச்சுகளை உன்னால் இயற்ற முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்! நம்முடையது இல்லை என்று சொல்லிக் கொண்டு, மாதம் ஐம்பது ரூபாய் வங்கியில் போட்டு, வருடத்திற்கு ஒரு தடவை எங்கேயாவது போய்விட்டு வரலாம். இது சாத்தியம்! ஆனால் அதெல்லாம் எங்கே முடியப் போகிறது. எவ்வளவு வந்தாலும் இப்போதே போதுவதில்லை.


பேசாமல் இரண்டு வேளை நன்றாகச் சாப்பிட்டு, கிருஷ்ணா, ராமான்னு வேலையைப் பார்ப்பதுதான் உத்தமம் என்று சொல்லிக்கொண்டார். பார்த்தசாரதி வாயிலாக சாவு பேசியது, சர்வர் வாயிலாக சாவு பேசியது என்று நினைக்கும் ஒவ்வொரு தரமும் பாதி உயிர்போய் திரும்பி வருகிறது.


அந்தப் பெரிய கடலும், அதில் மிளிர்ந்த வீரியமும் என்னமோ செய்ய பல்லவன் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு மவுண்ட் ரோடு பக்கம் போனார். மதராஸின் கனாட் பிளேஸ் என்று நினைத்தார்; சிரிப்பு வந்தது. இதுவும், இதனுடைய மூஞ்சிகளும்! எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால் பிறந்தாலும் வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டார். தமிழனாக இருந்து கொண்டு தமிழர்களை ஏன் வெறுக்கிறோம் என்று புரியவில்லை. ஆனால் டில்லியைவிட அவரைப் பொருத்தவரையில், மதராஸில் தியேட்டர்கள் நன்றாகவே அமைந்திருந்தன. என்னதான் பிடிக்காவிட்டாலும் மனிதர்கள்தானே! அவர்களோடு, அவர்களில் ஒருவராக உட்கார்ந்து சாப்பிடுவது மனத்திற்குச் சற்று இதமாக இருந்தது. சிற்றுண்டி சற்று பலமாக அமைந்தது. ரொம்பவும் பெரிதுபடுத்தாத சப்தத்தைக் கொண்ட ‘ஜ்யூக் பாக்ஸி’ல் நாலணாக்களைப் போட ஆரம்பித்தார். ‘விழியே கதை எழுது’ என்ற பாட்டு நன்றாகவே இருந்ததாகப் பட்டது. அவருடைய அதிர்ஷ்டம்தானா? ஆஷாபோன்ஸ்லேயின் ‘ஆவோ ஹஜீர்’ பாட்டு இருந்தது. மற்ற பாட்டுக்களைக் கேட்காமலேயே வெளியே வந்தார். ஏதாவது புஸ்தகக் கடைக்குப் போகலாமா? ‘போர்  படுபோர்’ என்று சொல்லிக்கொண்டார். ஏதாவது சினிமா போகலாமா? ‘போர் படுபோர்.’


தாமஸ் ஹார்டியின் _ ‘இந்தப் பைத்தியக்காரக் கூட்டங்களை விட்டுத் தொலை தூரத்தில்’ சத்யத்தில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதை டில்லியிலேயே மூன்று தரம் பார்த்தாகி விட்டது. இனிமேல், ‘போர் படுபோர்.’


இதுதானா? இதுதானா? இங்கே ஒவ்வொரு ஆன்மாவிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் இப்படித்தான் போரடிக்கக் கனாட் பிளேஸிலும் மவுண்ட் ரோடிலும் நிற்கிறார்களோ? ஹா! கவலை இல்லை. இத்தனை ஜனங்களையும் ‘போர்’ கூடத் தொற்ற அஞ்சும். . .  அவ்வளவு ரசனையற்ற ஜனங்க; சாவாடி செத்த ஜனங்க? எதையும் ஒப்புக்கொள்ற ஜனங்க, முதுகெலும்பு இல்லாத ஜனங்க . . .

‘நீ என்ன பெரிய புடுங்கியா? என்னமோ ஜெர்மனியிலே பிறந்தாப்பிலே இல்ல பேசறே!’


‘ஆச்சு! சாவு நம்ம பாஷையில பேச ஆரம்பித்துவிட்டது. டோய்! நிறையப் பேர்கள் மத்தியில் போய் நின்று கொண்டார். முன்னால் இருபது பின்னால் இருபது எனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நடப்பவர்களின் மத்தியில் நடந்தார்.


அன்று இரவு ‘கோல்டன் டிரஷரி’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில் சாவைப்பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கக் கூடும் என்று புரட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று ஷெல்லியிலும், கீட்ஸிலும் ஆழ்ந்தார். ‘யுலிஸஸி’ல் முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் படிக்க வேண்டும் போலிருந்தது. ‘யுலிஸஸ்’ படித்துக் கொண்டிருக்கும்போது இன்னும் ஒரு எண்ணம் எங்கோ தோன்ற ஆரம்பிக்கவே தன்னைக் கெட்டித்துக்கொண்டார். ஆமாம். சாவு தன்னிச்சையில், தன்கதியில் யோசித்து இயங்குகிறது! இந்த எண்ணத்தோடு அதனுடைய அடிப்படைக் கோலங்களில் ஒரு விசேஷத் தன்மை இருக்கும் நினைப்பையும் பின்னிப் பார்த்தார். அவரையும் அறியாது அவருக்கு சதுரங்க வீரர் கபப்பிளாங்காவின் நினைவு வந்தது. யாருமே தன்னை ஜெயிக்க முடியாது என்கிற காலகட்ட நிலையில் அவருக்கு அந்த ஆட்டத்தின் மீதே பிடிப்புவிட ஆரம்பித்து விட்டதாம். கபப்பிளாங்காவின் இந்த அனுபவம் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும் என்று நினைத்தார். எதிராளி ரொம்பத் தோற்றுப் போனால் சொல்லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது! ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவில்லை. இதுநாள்வரை தன்னுடையை தன்மையை உணர்த்திக் கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்தபட்சம் அதற்கு ‘போர்’ அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது என்பது விடலைத்தனமான காரியம் இல்லையா? அவர் எதிரே இருந்த நாற்காலியில் சாவு உட்கார்ந்திருந்தது.


‘இல்லை. எங்களிடம் கொடுக்கப்பட்ட விஷயங்களைக் காப்பாற்றவே நாங்கள் இருக்கிறோம். சாதாரணமாக, அன்போடு வாழ்ந்து, இருந்து, எங்களைத் துதிபாடி, போகவே நீங்கள் சமைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த விஷயத்தைத்தான் நீங்கள் எப்போதோ மறந்தாயிற்றே?’


‘இனிமேல் என்ன வழி?’


‘வழியா எல்லாமே இனிமே மெதுவா நிர்மூலம்தான்!’


‘ஆனால் மனித குலத்தில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது . . .’


‘என்னவெல்லாமோ இன்னல்கள் விளைவித்தும் அதை நீ நம்பிய விதத்தில் எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்தான்!’


‘உனக்கு எல்லாமே தெரியுமா?’
‘எல்லாம்தான்!’

‘நான் என்னுடைய பதினோறாவது வயதுப் படலத்தைப் பற்றி அடிக்கடி நினைக்கிறேன். பஸ் ஸ்டாண்டுப் படலம் தான்!’
‘அதிலிருந்து நான் உன்னைக் கண்காணித்து வருகிறேன். சில சமயங்களில் ஓரிரு நாட்டங்கள் கொடுத்துத் திசை திருப்ப முயற்சி செய்து பார்த்தேன். உயிரை எடுத்துண்டாதானா? குழந்தாய்! அவ்வளவு சின்ன வயதிலே அவ்வளவு பெரிசா நினைக்கிறது தப்பு. உன் சாரத்தை எல்லாம் எப்போதோ நான் வாங்கிக்கொண்டு விட்டேன். இல்லாவிட்டால் பூமி தாங்காது!’


‘எப்பேர்ப்பட்ட அயோக்கியன் நீ.’


திட்டாதே! நான் நண்பனாக இருக்கவே விரும்புகிறேன். உன்னைப் பார்த்து நான் பயப்படாத நாள் இல்லே! ஆமாம் சொல்லேன், எப்படி இருக்கிறார்கள் உன் பொம்பளைகள்?’


‘நீ ஏன் என்னைக் கேலி பண்ணறே’?


‘எப்படியிருக்கா சொல்லேன்.’ ஸ் ‘இப்ப கேட்டயானா_உனக்கு வெட்கமா இல்லை? மேலும் நீ ஏன் எல்லாத்தையும் இப்படிப் பிரிக்கிறே?’

‘ஏன் என்றால் நான் சாவு. தலைவணங்குடா முட்டாள்!


தினகரன் அதன் முன் மண்டியிட்டார்.


அது எழுந்து நின்று, ரொம்ப நேரம் இவரையே கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தது.


‘பணிவு வேண்டும். அடக்கம் வேண்டும். எது கொடுத்தாலும் போதும் என்கிற மனப்பான்மை வேண்டும். வாழ்வு என்பது அவ்வளவு சுலபம் இல்லை’ என்றது.

அன்றிரவு தினகரனுக்கு மீண்டும் கனவு தொடர்ந்தது. முதலில் அவர் பெரிய பாலைவனத்தில் காலை பத்து மணி வாக்கில் எறியப்படுகிறார். எங்கும் அனல் பறக்கிறது. அவருடைய கைகளும் கால்களும் நன்றாகக் கட்டப்பட்டு, அங்கு இருக்கும் கம்பத்தில் கயிறுகள் சுற்றப்படுகின்றன. அவரால் எழுந்திருக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. பதினொரு மணி வாக்கில் அவருக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்படுகிறது. அவர் அடிவயிற்றிலிருந்து கத்தினாலும், எள்ளளவுக்கேனும் ஏன் என்று கேட்க யாரும் இல்லை. அவருடைய தண்ணீர் என்ற குரலை ‘வெளிகள்’ கிரகித்துக்கொள்கின்றன. நெற்றிக்கு அருகில் பட்பட்டென்று சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிப்பது போன்ற பிரமை ; பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாவு ‘எல்லாம் இடைவெளிகளில் பாய்கிறது என்று சொல்லு. இடைவெளி கிரகித்துக் கொள்கிறது என்று சொல்லு’ என்கிறது.


‘எப்படி?’ என்று இவர் பேயாகக் கூச்சலிடுகிறார். அதைத் தொடர்ந்து அவருடைய உடம்பில் சிவப்பு கனிந்து விம்முகிறது. புழுகூட அப்படித் துள்ளாது ; அவர் துள்ளுகிறார்.


‘கருணைக்கு அழு’ என்கிறது சாவு.


‘நான் உன்னை மன்னிக்கமாட்டேன்’ என்கிறார் இவர்.


‘கருணைக்கு அழு_ஒரே ஒருதரம் நான் கேட்டதைச் சொல்லு. முயற்சி செய்’ என்கிறது ஒரு குரல்.


‘உன்னை நான் விடமாட்டேன்’ என்கிறார் இவர்.


‘உன்னால் ஒன்றும் முடியாது. நான் கேட்டதைச் சொல்லு,’


‘முடியாது’

‘யோசி’
‘முடியாது’


‘யோசி’


‘முடியாது’


‘யோசி’


‘முடியாது’


அங்கு அவர் எதிரில் என்னென்னவோ, பின்னத்திலேயும், முழு எண்களாலும் கணக்குகள் போடப்படுகின்றன. உருவமற்ற வெளியில் அவரைப்பற்றிப் பெரிதாக சர்ச்சை கிளம்புகிறது. அங்கு சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் போதே அவருடைய ரத்தத்தையும் சதையையும் மணல் உறிஞ்சிக்கொள்ள ஆரம்பிக்கிறது. அவர் அந்த ரத்தத்தை எங்கெல்லாமோ தொடர்ந்து போகிறார். இடம், காலம் ஒன்றுமே ஞாபகமற்றுப் போய், போய், போய் ஒரு துளி மண்ணாக ஆல்ப்ஸா? இமயமா? கிடந்து இறுகுகிறார்.


இன்னொரு துளியில் அவர் கீழே கீழே கீழே என இன்னமும் கீழே போய் ஒரு எண்ணெய் ஊற்றில் மிதக்கிறார். வெளியே வரும்போது லாவகமாகக் குழாயில் புகுந்து கொள்கிறார். பெரிய உருளையில் இன்னும் எதிலெல்லாமோ கடைசியில் அணுவாகவே ஒரு காருக்குள் புகுந்து காரணமே அற்று தன் இச்சையில் வெடித்துச் சிதறுகிறார். குரல்கள் எழும்பி ‘நீ சபிக்கப்பட்டவன்’ என்கிறது. காட்சி மாறுகிறது_பெரிய மலை ஒன்று தெரிகிறது. பஞ்சுபோல், பஞ்சு மிட்டாய்போல் அதன்மேல், ரொம்ப மேலே வெள்ளையாகவும் கீழ்ப்பாகங்களில் ஒருவித மஞ்சளாகவும் பனி வியாபித்திருக்கிறது. அதன் அடியில் ரொம்ப ரொம்ப தூரத்திற்கு, கண்ணுக்கு எட்டிய வரையில் பசும்புல் தெரிகிறது. ஒரே தூவான் போன்ற பனியினாலா? எதனால் அப்படியொரு குளிர்ச்சி அங்கு மண்டிக் கிடக்கிறது. எதனாலோ என்று சொல்லிச் சிரித்துக்கொள்கிறார் தினகரன். திபெத் குழந்தைகளா? கண்கள் இடுங்கி ரொம்பவும் வெள்ளைப் பற்களுடன் மூன்று குண்டு குண்டான குழந்தைகள் ஓடி வருகின்றன. என் குழந்தைகளா! என்கிறார் தினகரன். முதல் குழந்தை வலதுபுறம் இருப்பது நீல ஸ்வட்டரும், பின்னிய கம்பளி நிக்கரும் போட்டிருக்கிறது. அதிகமாக உபயோகித்த ஆனால் நன்கு பாலீஷ் பண்ணிய ஷு போட்டுக் கொண்டிருக்கிறது நடுவில் இருப்பது வெள்ளிக் கம்பளி ஸ்வட்டரும், கப்பி வர்ணத்தில் பின்னப்பட்ட கம்பளி நிக்கரும், அதே நிறத்தில் ஷுவும் போட்டுக் கொண்டிருக்கிறது. ஓரத்தில், இடது ஓரத்தில் வரும் குழந்தை நல்ல கோட்டும், நிக்கரும், கறுப்பு ஷுக்களும் போட்டுக் கொண்டிருக்கிறது. அவை தினகரனை நோக்கி ஓடி வருகின்றன. தினகரன் அந்த மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கிறார். மூன்று குழந்தைகளும் ரொம்பவும் சந்தோஷமாக, உலகமெல்லாம் தம்முடையவை என்பது போல் வருகின்றன. அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இடது பக்கத்தில் ஒரு பெரிய செர்ரித் தோட்டம் முளைக்கிறது. அதற்கும் பின்னால், ஆனால் ஒரு பர்லாங்கு தூரத்தில் லூச்சித் தோட்டம் முளைக்கிறது. எல்லாமே மேகப்படலம் நீங்கி வந்த தங்க மாலைச் சூரியனில் அமிழ்கின்றன. நெருப்புக் குச்சி பற்ற வைத்ததுபோல் தொங்கும் அவ்வளவு பழங்களையும் தீ நாக்கு போலச் சிவந்த சூரியன் பற்றிக்கொண்டு ஓடுகிறான். தன் ரத்தமே செர்ரியாகப் போனதோ என்று தினகரன் பயந்தார். இதற்கெல்லாம் அப்பால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஒரே மல்பரி தெரிகின்றன. அதற்கும் அப்பால் யூகலிப்டஸ் மரங்கள். அங்கிருந்து காற்றுவாக்கில் எப்போதோ பறந்து வந்து விழுந்த அந்த இலைகளில், பச்சை இலைகளில் பாய் விரித்தாற் போன்று செர்ரிப்பழங்கள். குழந்தைகள் வேண்டும் என்கிற அளவுக்குச் செர்ரிப்பழங்களைத் தின்று இவரிடமும் கொண்டு வருகின்றன. ‘தாங்ஸ் தாங்ஸ்’ என்று அவ்வளவு பழங்களையும் பெற்றுக் கொள்கிறார். அதுகளைக் குஷிப்படுத்தும் விதத்தில் ‘ஆஹா எவ்வளவு நல்ல பழங்கள் ; தாங்ஸ், தாங்ஸ்’ என்கிறார். இடதுபக்கம் இருந்த குழந்தை கடைசியாக அவரிடம் வரும்போது அவர் துணுக்குறுகிறார். பிக்னிக் போன காரில் சிதறிய குழந்தை அல்லவா இது!


அது கொடுத்த பழங்களை இவர் பார்வையிடுகிறார்.


‘‘என்ன பாப்பா, பழமெல்லாம் ஒரேடியாய் சுருங்கியிருக்கு’’ என்கிறார் தினகரன். ‘‘சாவு மாமா கொடுக்கச் சொல்லுச்சு’’ என்கிறது குழந்தை.


• •