தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, October 09, 2016

பிறகு (நாவலிலிருந்து ஒரு பகுதி) - பூமணி, பழையன கழிதலும். (நாவலிலிருந்து) - சிவகாமி

www.padippakam.Com



பிறகு (நாவலிலிருந்து ஒரு பகுதி) - பூமணி

அன்றைக்கு விடிந்தும் விடியாமல் தூற்றல் விழுந்து வேலையை மெனக்கிட வைத்திருந்தது. யாருமே வேலைக் குப் போக முடியவில்லை. நல்ல பாதையில் வண்டியத் தவர்களும் மேட்டுக் கிணற்றில் கமலை இறைத்தவர் களும் தவிர மற்றபடி மாடுகளெல்லாம் வீட்டில்தான் கிடந்தன.

அழகிரிகூட வேம்படியில் உட்கார முடியாதபடி சேறு பட்டிருந்தது. அவன் ஆவடையைப் பார்த்துக் கேட்டான். "ஒரு பாக்குச் சில்லும் வெத்தலையும் குடும்மா, இண்ணக்கி வேலை மெனக்கிட்டுப் போச்சே."

"இவன் ஒருத்தன். சம்சாரியெல்லாம் வீட்ல கெடக்காக நமக்கென்ன வந்து போச்சு."

ஆவடை மடியிலிருந்து வெற்றிலை எடுத்துக் கொடுத் தாள்.

'முத்து எரவாரத்துல போயலப்பட்ட இருக்கும் எடுத்துட்டு வரம்மா."

"ஆமா இவக வெத்தல போடுறதுக்கு ஊருப்பட்ட ஆளெல்லாம் வேலை ஏவீட்டு. நீ பேசாம இரும்மா."

ஆவடை மூஞ்சியை நொடித்தாள்.

S-l.

தொகுப்பு: இந்திரன் 16.

படிப்பகம்WWW.padippakam.Com

பானைசட்டி கழுவிய முத்துமாரி கையைச் சேலை யில் துடைத்துக் கொண்டு போய் புகையிலை எடுத்து வந்து கொடுத்தாள்.

'இதுக்குள்ள ஒம்புள்ள தேஞ்சு போறாளோ" அழகிரி முத்துமாரியைப் பார்த்துக் கண் சிமிட்டி னான். பிறகு தண்ணிர்க் கிணற்றை நோக்கி நடந்தான். கிணற்றையடுத்த பொட்டலில் அனேகம் பேர் ரெண்டு கையாக உட்கார்ந்து மனை போட்டுத் தாயம் விளையாடினார்கள் இன்னொரு பக்கம் சக்கணனும் சித்திரனும் பதினஞ்சாம் புள்ளி போட்டார்கள். சிறிசு கள் கோடு கீச்சி குந்தி விளையாடினார்கள்.

தாய விளையாட்டுத்தான். மத்தியானம் வரை நடந் தது. அழகிரி ஒரு ஒரம் உட்கார்ந்து ஊர்க்காலி மாட்டுக் கருப்பனின் தூக்கலான சத்தத்தில் மூழ்கியிருந்தான்.

"ஒருத்தாயம். ஒரு தாயத்தோடயா போற. ஒருத்

தாயம் ஓராறு. அடுத்து ஒரு மூணக்கேளுடா கருப்பா. மூணு ஆறுக்கு மூணு செமிச்சது அசராம எறக்கு நாய."

கருப்பனின் சுதாரிப்புக்கு சக்கணன் முனங்கினான்.

'தாயிளி அவன் தொண்டையில தூரு மொளைக்க என்னமாக் கத்துறான் பாரு பீ வாறாப்புல."

சித்திரன் பாண்டு உடம்பைக் குலுக்கிச் சிரித்து பிறகு நினைத்துக் கொண்டான்.

"இது அவன் காதுல வுழுகாறது நல்லதாப் போச்சு. கேட்டுக்கிருச்சோ அம்புட்டுத்தான். ரெண்டு பேரும் ஒஞ்சுக்கிறமாட்டாக,

தாய விளையாட்டு மனையேறும் தருவாயில் இருந் தது. அப்போது அங்கு வந்து நின்ற ராசு முகம் சுண்டிப் போயிருந்தார்.

அழகிரி இதை கவனித்து விட்டான்.

162 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

'சாமி வாங்க. என்ன ஒரு வடியா இருக்கீக.' "வேற ஒண்ணுமில்ல. மாடு ஒண்ணு தவறிப் போச்சு."

மனையேறப் போன நாய் தாயக் கட்டத்தில் அப்ப டியே நிற்க எல்லோரும் மொலேரென்று எழுந்தார்கள்.

‘என்ன சாமி திடீர்னு இப்படிச் சொல்றீக. எந்தக் காள. எப்பிடித் தவறிப் போச்சு."

'மாடு சும்மாதான கெடக்குதுன்னு கம்மாக் காட்ல வண்டிப் பாரத்துக்குப் பத்தீட்டுப் போயிருக்கான் சம்பளக்காரன். அந்தச் செவலையும் மயிலையும் கம்மாக் கர ஏத்தத்துல வச்சு மண்டி போட்டு மூஞ்சியத் தரை யில ரோசி செவல அப்படியே மண்டைய போட்ருச்சு."

ராசு அதுக்கு மேல் நிற்கவில்லை. மன்னை கட்டிப் போய் நகன்றுவிட்டார்.

*அடடா செவலையா? வலவனுக்கு வலுத்த போக்குப்

போகுமே."

"நானும் பாத்துட்டுத்தான் வாறென். அவருக் கென்னமோ செவலன்னா தங்கமாட்டங்குது. அஞ்சாறு வருசத்துக்கு முந்தி இப்பிடித்தான்."

**ஆமா இஷக சோசியம் சொல்ல வந்துட்டாக சோசியம். பூளக் கொழுப்பாக்கும் வண்டி பத்துன வருக்கு. பணம் பெத்த மாட்டப் பூட்டிக்கிட்டு வழுக்கத் தரையில பாரமேத்தி அடிச்சா எப்பிடி. மாட்டுக்கென்ன எம்புட்டு வேணும். லேசா வழுக்குனாப் போதுமே. ஓத்தைக் கொத்த புடிக்கணும்னாலும் ரூவா அத்துட்டுப் போகுமே."

* வாங்கப்பா அஞ்சாறு பேரு மொதலாளிகிட்டப் போயி மாடு செத்ததக் கேட்டுட்டு வந்துருவோம்."

"ஏலே சாமான் சட்டுமுட்டப் பெறக்கி வையிங்கடா."

தொகுப்பு: இந்திரன் 163

படிப்பகம்WWW.padippakam.Com

ஆளுக்கு முந்திப் புறப்பட்டான் அழகிரி. காணிக் காரனாயிற்றே.

மேற்கே பொழுது திரும்பும் நேரத்துக்கெல்லாம் சாய்மான்கள் தயாராயின. மூங்கில் கம்பு தகரடப்பா ரெண்டு மூணு அரிவாள்மனை எல்லாம் கிளம்பின. எல் வாரும் அறுப்புக் கத்தியையும் எடுத்துக் கொண்டார்கள்.

"சரி கெளம்புவமா" கிண்ணற்று விளிம்பில் அரிவாள்மனையைத் தீட்டிய மாடசாமி கேட்டான்.

"போகவேண்டியதுதான். மாடு எங்க கெடக்குதாம." "அது போகனுமே கம்மாக்கரச் சரிவுக்கு. ஏலே சித்திரா நீ இப்பயே பையாப் பையா நடைய வுடு, அப்பத்தான் போயிச் சேர முடியும்.'

"நடங்கப்பா அப்பிடியே. இருந்தா சோம்பிப் போயிரும். சக்கணனக் காணுமே."

"அந்தா வாறான் பின்னால." அழகிரி எல்லாருக்கும் பிந்தி பல யோசனையில் நடந்துகொண்டிருந்தான். அவனுக்கு வில்லிசேரி முதலாளியின் இஞ்சிகட்டிய முகம் அடிக்கடி நினைவுக்கு வந்தது. கடைசியில் அவராகவே "அத எப்படியோ பண்ணுங்கடா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் வீட்டுக்குள்.

களத்து முக்கில் அப்பையா உட்பட நிறையப் பேர் சங்கதியைக் கேட்டார்கள், சிலர் கவலைப்பட்டார்கள். ஆனால் அப்பையா மடடும் கலகலப்பாகச் சொன்னார்.

"ஓங்களுக்கெல்லாம் இண்ணக்கி வளந்தான். சக்கிலி யப்பய அத்தன பேரும் மாட்லதான் கெடப்பான்.'

அழகிரிக்கு மாடறுக்கப் போகப் பிடிக்கவில்லை. அதை எடுத்து நல்லபடி அடக்கம் செய்யலாம் என்று

64 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

தோன்றியது. அதை யாரிடம் சொல்வது. எல்லாரும் கேலி செய்வார்கள். முதலில் கருப்பனுக்குச் சொல்லி (ıf Lçlurtgil -

கருப்பன் வழியில் எச்சைத் துப்பிக் கொண்டே நடந தான். எவனோ துடுக்காகக் கேட்டான். ነ

என்னலே வாயில எசசு ஊருதோ. கறி தின்னு ரெம்ப நாளாச்சுல்ல நெனப்பு வராது பின்ன.”

"போப்பா நீ ஒரு பக்கம் தைப் பொங்கலுக்கு முந்தித் தின்னதுக்குள்ளயா. வீட்ல வசமாத் துண்டு கெடைக்காம நீயின்னா எச்சுப் போனயோ என்னமோ."

கருப்பன் உடனே ஒரு பாட்டும் எடுத்துவிட்டான்.

"காத்துட்டுக்குக் கறியெடுத்து

காலநீட்டித் திங்கயிலே துண்டு வுழுகலன்னு தூக்கப் போட்டு ஒதச்சானே." போகிற போக்கில் சக்கணனுக்கு கல் இடறிவிட்டது. தடுமாறிச் சமாளித்து முகஞ் சுண்டினான்.

"ஏலே பொடி மசுருகளா பாதையப் பாத்து நடந்து போங்கடா. மசுரு மட்டன்னு பேசிக்கிட்டு, காலா காலத்துல போயி ஆக வேண்டிய சோவிய பாக்கனுமே.”

"செழடு போடுற போட்டப் பாரு, மண்டையில மசுரு ரெம்பத்தான கெடக்குது. வாயில ஏன் அதே வராது. கெழட்டுப் பெயலுக்கு கறியக் கொண்டு போயி அவிச்சி அர வேக்காட்ல வாயில போட்டாத்தான் கண்ண டைக்கும் இல்லன்னா மொன்ன வீங்கிப் போகாதோ, வழிய வுடுப்பா போயி முறிஞ்சு தள்ளட்டும். நடையப் பாரு காலொடிஞ்ச கழுதபோல."

"அட என் மசுருகளா நடைக்கென்னலே."

'பின்னியும் பாரு மசுரவே வாயில வச்சுக்கிட்டு."

தொகுப்பு: இந்திரன் 165,

படிப்பகம்WWW.padippakam.Com

எல்லாரும் மாடு செத்துக் கிடந்த இடத்தைச் சுற்றி நின்றார்கள். பிறகு கொண்டு வந்திருந்த கொச்சுக் கயிற்றால் நாலு காலையும் சேர்த்துக் கட்டி ஊடே மூங்கில் கம்பை விட்டுத் தூக்கி முன்னும் பின்னுமாகத் தோள் கொடுத்து நடக்க ஆரம்பித்தார்கள், மற்றச் சாமான்களை சிறு பயல்களும் வயசாளிகளும் வைத்திருந் தார்கள்.

மணத்தவளை மாதிரி மாட்டுக்கு வயிறு ஊதிப் புடைத்திருந்தது. நாக்கு பாதிக்கு மேல் நீண்டு வாயை விட்டு ஒரமாகத் தொங்கியது. தேன்கூட்டில் போல கண் களில் ஈ மொய்ப்பு. ஆட்களின் நடையசைவில் அதன் தான வாயிலிருந்து சாணி பீச்சியடித்துச் சிதறியது.

மாட்டைச் சுமந்து வந்து வசமாக புல்தரையில் கிடத்தினார்கள். கால்கட்டையவிழ்த்து அதை மல்லாக்கப் பிடித்துக் கொண்டார்கள் பயல்கள். கொஞ்ச நேரத்தில் கத்திகள் கால்களில் குத்திக் கிழிக்கத் தொடங்கி வயிற்றில் விளையாடின தோலை உரித்து எதம்பத்திரமாக விரித்து அதிலேயே கறியறுப்பு சூட்டிகையாக நடந்தது.

"சப்பக் கறியத் துண்டு போடு." "எல்லாம் ஒண்ணாக் கலந்துறாத" கருங்கறி ஈரல் என்று தனித்தனியாகப்பிரித்து அறுத்து பாத்திரங்களில் நிரப்பினார்கள்

"மொதலாளி வசமா தீவனம் போட்ருக்காரு. கறியப்பாரு கத்தி எறங்க மாட்டங்குது."

"மனசார ஒரு கெழட்டு மாடு கெடந்தா சொப்ட் வெலைக்குத் தரமாட்டாரு. இப்பப்பாரு இப்படி விடிஞ்சு ருச்சு."

"மொதலாளி மாரு பெழப்பே இப்பிடித்தான்."

"இது வம்புல்ல. அவுக தேடுன சொத்த ஒனக்குச் சும்மா குடுக்கணும்னு சட்டமா என்ன."

66 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

“இப்ப என்ன சொல்ற."

"அது விதி வசம்."

"நல்ல விதி வசம்ப்பா."

*கொண்டு வந்த ஏனங்க காணாதோ. ஆராச்சும் ஒருத்தன முடுக்கி வுடுங்க. போயித் திரும்பட்டும். வேற ஏனம் எடுத்துட்டு வந்தாத்தான் கறி வீடு போயிச் சேரும். சின்னக் கழுதைக ஒண்ணாச்சும் இருக்கா பாரு."

*அதெங்க இருப்பான். இன்னேரத்துக்கு அடுப்புக் கூடத்த வளஞ்சிட்ருப்பான்."

*அடே மாடசாமி மகனே. நீ மட்டும் என்னடா ஓங்க அப்பனக் காத்துட்டுக் கெடக்க, போகலயா."

மாடசாமி சொன்னான்.

'நானும் வரணுமாம்."

நேரம் ஒளி மங்கியிருந்ததால் சிறு பயல்கள் சுட்டுத் தின்பதற்கு கறித்துண்டுகளை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டியிருந்தார்கள்.

"சுருக்காப் போயித் திரும்பணும். மாடசாமி நீ போயித் திரும்புறயாப்பா, ஒம் மகனவும் வுட்டுட்டு வந்துறலாம்."

"பெறகு எங்கூடவே திரும்பணும்பான். தோதுப் படாது. அழகிரி மச்சான் நீ ஒரெட்டுப் போயித் திரும்பிரு."

"அழகிரியென்ன ஆளு சுதாரிப்பில்லாம இருக்க விட்ல கோவமா."

'எனக்கென்ன கோவம். கறியக் கொண்டு போயிக் குமிச்சு வீட்ல என்ன செய்ய. அதுக்குச் சோறு பொங்க ணுமேன்னு யோசனையாருக்கு."

அழகிரி கையைத் துடைத்துக்கொண்டு கிளம்பினான்.

தொகுப்பு: இந்திரன் 167

படிப்பகம்WWW.padippakam.com

"அவன் யோசனையப் பாருங்க்ப்பா. எங்க போயி முட்டியிருக்குதுன்னு, பெரிய சோறு. ரெண்டு உருண்ட கேப்பக் களியப் பிச்சுப் போட்டாக் கெடக்குது,'

"மொதல்ல அதுக்கு வழி வேணுமே. அதச் சொல்லு.' 'ஒன்னப் போல தவசத்தக் கடையில கொட்டுனா முடியுமா. அதுலயும் ஒனக்கு வீட்ல ஒருத்தி வாச்சிருக் காளே. அவளுக்குப் பானையில ரெண்டு தவசம் கெடந் துறப்புடாதே. எங்கயோ கெடந்து வந்தவதானடா ஆவட. அவளப் பாரு. கடைக்குப் போகச் சாவாடா .'

கொஞ்ச தூரம் போய்விட்ட அழகிரியைக்கூட்பிட்டுச் சொன்னான் மாடசாமி. -

"மச்சான் எங்க வீட்ல ஒரு ஏனம் சும்மா பொழங் காமக் கெடக்குது. அதவும் எடுத்துட்டு வந்துரு."

ஊருணிக்கரையில் அழகிரி நடந்து வரும்போது ஆலமரத்தில் பறவைகள் சுற்றிச் சுற்றிப் பறந்து ஆரவாரித்தன. அவை எல்லாமே கடைசி நேரத்தில் அந்த மரத்தில் தான் அடைந்து ஒயப் போகின்றன என்றாலும் ஒண்ணுக் கொண்னு கொத்திக் கொண்டு கத்தின.

அவன் கீழத்தெருவில் நுழைந்தான். அனேக வீடுகளில் விளக்கேற்றிவிட்டார்கள். அவனது வீட்டுக்கு முன்னால் முத்துமாரி மசால் அரைத்துக் கொண்டிருந்தாள். ஆவடை முற்றத்தில் பான்ை சட்டி கழுவுகிறாற் போல வும் அதே தண்ணீரால் முற்றம் தெளித்தாற் போலவும் காரியத்தில் ஈடுபட்டிருந்தாள்.

"முத்துமாரி கடகாலு இருந்தா எடுத்துக் குடுடா கவுத்தக் கழத்தீட்டு."

கடகாலை வாங்கிக் காலடியில் வைத்துக் கொண் டான்,

"அந்த மாட சாமிப் பெய பொண்டாட்டி வந்துட் டாளா, ஒங்ககூடத் தானம்மா பில்லுப் புடுங்க வந்தா.

168 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

அங்கயும் ஒரு ஏனம் வாங்குனாச் சரியாப்போகும். அவன் கூடச் சொல்லி வுட்டான். இந்தாம்மா இந்தப் பீடிய வெளக்குல பத்தவச்சிட்டு வா.'

மகளிடம் பீடியை வாங்கி இழுத்துக்கொண்டு வடக் காமல் சந்தில் நுழைந்தான்.

ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாதபடி இருட்டு படர்ந்திருந்தது. சந்தில் ஒண்ணு ரெண்டு வீட்டைத் தவிர மற்றவை திறந்திருக்கவில்லை

கீழ்ப்பக்கத்தில் வடகடைசி வீட்டுக்கு முன்னால் போய் நின்றான். அது சந்திலிருந்து ஒளிந்திருப்பது போல் ஒதுங்கியிருந்தது. கதவு சாத்தியிருந்தது. திட்டிப் பார்க்கலாம் என்று கையைக் கிட்டத்தில் கொண்டு போன போது திடுக்கிட்டது. உள்ளே பேச்சுக்குரல் கேட்டது.

'போயிருங்க அவன் வந்துருவான்." பீடியைச் சுவரில் அமுக்கி அமர்த்தி கட்டையைக் காதில் சொருகி அதே காதைத் திருப்பி கூர்மைப்படுத்தி னான். சுற்றும் முற்றும் சுடுகுஞ்சி கூட இல்லை.

வீட்டுக்குள் ரெண்டு பேர் பேச்சருவம் கேட்டது. அவனுக்கு யோசனை.

"இன்னேரம் ஆராருக்கும். சோலியென்ன. பக்கத்தில் கிடந்த உரல் மீது ஏறி புகை போக்கித் துவாரம் வழியாக எட்டிப்பார்த்தான், உள்ளே விளக்கு வெளிச்சங் கூட இருந்தது.

மண் திருணையில் அவன் கண்ட காட்சி, சே இதென்ன கூத்து வயசுப் புள்ளையப் போயி. அது ஆரு. கெழடு தட்டிப் போயிருக்கு."

அவனுக்கு நெஞ்சு படபடத்தது.

'இந்தா புள்ள ஒன் புருசன் வந்தா என்ன செஞ்சிரு வான். மாடன் பயலத் தெரியாதாக்கும். பத்தினி வேசம்

தொகுப்பு: இந்திரன்

படிப்பகம்WWW.padippakam.Com

போடுறயே, அட சரிதாம் புள்ள வாய மூடிக்கிட்டுச சும்மா இரு. மாடறுக்கப் போன பய வாறதுக்குள்ள.'

'அவன் கண்டுக்கிட்டா என் பொழப்புப் போயிரும். என்னக் கொன்னுருவான். ஒரு காடு கரையினு இல்லாம வீட்டுக்கு வந்து இந்தக் கூத்துப் பண்ணுறிகளே. இது ஒங்களுக்கே நல்லாருக்கா.

'ஏ கழுத ஞாயம் பேச வந்துட்டாயக்கும். ஒன் பொழப்புக்கே வேட்டு வச்சிருவென் பாத்துக்கோ, அட சும்மா கெட முக்காத்துட்டுக்குச் செரச்சுத் திங்கிற நாயி "

சுத்தம் சரியாகப் பிடிபடவில்லல. அவனைக் கோவம் முட்டியது.

சடாரென ஒரு கடவு வழியாகப் பாய்ந்து விறகுச் சிராயை எடுத்து வந்து ஒளிந்து கொண்டான். அடுத்த நிமிசம் "ஏம்மா வீரி கதவத் தொறம்மா" என்று தட்டி னான்.

கதவு படக்கென்று திறந்தது வாசலோரத்தில் திரு திருக்க முழித்துக் கொண்டிருந்த வீரியைத் தள்ளி வீட்டுக் குள் நுழைந்து கதவைச் சாத்தினான்.

உள்ளே வேர்த்து விறு விறுத்து மேலத்தெரு அப்பையா அசடாக நின்றிருந்தார். அவர் சமாளித்துக் கொண்டு சிரிக்க முயற்சித்தார்.

"என்.ன. என்ன அழகிரியா, சும்மா மாடனப் பாத்து நாளைக்குத் தண்ணி பாச்ச வரச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தென், அவன் இல்லங்கவும் வரட்டும்னு தான் காத்துட்ருக்.ஏ.ஏ.அழகிரி.வேண்டாம்ப்பா. அய்யோ அடிக்காத."

“சத்தம் போட்டீரு கொன்னு குழியத்தோண்டி வச்சிருவென், யோவ் நீரு பணக்காரருனா அத ஒம்ம வீட்டுக்குள்ள தான் வச்சுக்கிறனும். இங்க வந்து மிப்பக்

70 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

காட்னா எலும்ப எண்ணிப் புருவென். செருப்புத் தைக்கிற பெயகன்னா எல்லாத்துக்கும் குனிஞ்சு குடுக்கணுமாக்கும். ஒன்ன பல்லக் கழட்டி வுடனும்யா, நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்போல, மூணு புள்ளைக்குத் தகப்பனா வேற ஆயிக்கிட்டீரு. ஒம்ம பொண்டாட்டி புள்ளையிட்ட சக்கிலியப் பெய வந்து நோண்டீட்டா மயிராண்டிக்கு ரோசம் பொத்துக்கிட்டு வரும். இத்தானக்கி கட வகுத்துல குடுத்தம்னா...ஒன்னச் சொல்லிக் குத்தமில்ல, இந்தக் கேடுகட்ட சிறுக்கியச் சொல்லணும்."

அவளுக்கும் முதுகில் விறகுச் சிராய் சுளிரென விழுந்தது. சத்தம் போடாமல் முக்கி முக்கி அழுதாள்.

"இந்தாய்யா இத இப்பிடியே கமுக்கமா வச்சுக்கோ. வெளிய சொன்னா ஊரு சிரிக்கப் போகுது. சனியனே வெயசுக்கு மீறி அறிவு கெட்டு நடந்துக்கிட்டு, மூஞ்சியில முழிக்காம ஓடிப்போ."

அவரைப் பிடரியில் ஒரு குடுப்புக் குடுத்து வெளியே தள்ளினான் தலையைக் குனிந்தபடி அவர் வெளியேறி Sr.

அவன் வீரியைப் பார்த்து நறநறத்தான். "சீ மானங்கெட்டகழுத, அடங்காப்பெடாரி. ஒன்னப் போயித் தாலி கெட்டி இழுத்துட்டு வந்திருக்கான் பாரு. அவன் ஒரு சாரங்கெட்ட பெய, மூணு நேரமும் தின்னாப் போதும் போல. இரு ஒன்ன அவன வுட்டே ரப்பெடுக்கச் சொல்றென். ஒன்னப்பத்தி பெரிய இதால்ல நெனச்சிருந் தென் கடசிக்கு இந்தக் கோலமா பண்ணிட்ட."

அவனுக்குக் கோவந் தணிந்த மாதிரியிருந்தது. வந்த வேலையை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவனுக்காக அங்கு கறியைக் கூறு போடாமல் காத்துக் கொண்டிருப் பார்கள்

அவன்மனசில் பலப்பல எண்ணங்கள் ஒடி மறைந்தன.

ஒரு முறை வீட்டுத் தீத்தாங்கியிலிருக்கும் வீச்சரிவாள்

தொகுப்பு: இந்திரன் 7.

படிப்பகம்WWW.padippakam.Com

நினைவுக்கு வந்தது. மறுமுறை தையல் சாமான்கள் ஞாபகப் படுத்தின.

அங்க என்னடான்னா மாட்டுக் கறியக் கூறு போட் டுட்டுக் கெடக்கான். இங்க பாத்தா அவன் பொண்டாட் டியச் சுத்தி அண்டம் போடுறான் பெரிய மினுசன்.

அவனுக்குச் சலித்துக் கிடந்தது. வெளியே வந்த போது வீரியின் விக்கலும் மூக்கைச் சுந்தும் இரைச்சலும் கேட்டது.

அவன் கடகாலின் கீச்சிடலோடு வேகமாக நடந்து கறியறுக்கு மிடத்தை யடைந்தபோது அவர்கள் இருட்டில் அவனை எதிர்பார்த்து ரத்தக்கறை உறைந்த கைகளுடன் உட்கார்ந்து கொண் ருந்தார்கள்.

மாடசாமி அவசரமாகக் கேட்டான். "என்ன மச்சான் எங்க வீட் ல ஏனம் எடுத்துட்டு SUT6WLin'.“

"அது தூர்ல துருப்பிடிச்சுக் கெடக்குது. நல்லா கழுவுனாத்தான் முடியும்."

அந்த இருட்டில் சக்கணன் கறித்துண்டுகளை எடுத்துக் கூறடிக்கும் சத்தம் சுறுசுறுப்பாகக் கேட்டது,

O

172 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

èfalsar 6


பழையன கழிதலும். (நாவலிலிருந்து) - சிவகாமி

கோடி வீட்டு கூறுகெட்ட கண்ணம்மாக் கிழவியின் வீட்டில் பிடித்த தீ அக்கம் பக்கம் வீடுகளுக்குத் தாவியது. சாப்பிட்ட சோற்றை நிறுத்திவிட்டு, அழுங்குழந்தை களைக் கதறவிட்டு அவரவர் அகப்பட்ட சட்டி பாை தகரம் ஈயக் குவளை முதல்கொண்டு கிணற்றடிக்குச் சென்று சேர்த்தனர். ஒரிரண்டு சக்கிலியர் வீடுகளுக்கும் தீப்பிடித்து விட்டது பக்கத்திலிருந்த பிச்சமுத்துப் படை யாச்சியின் ஒடு வீட்டுக்கும் சென்று ‘டப்டுப் என்று ஒடு களைச் சிதறப் பண்ணியது தீ. காற்று வேறு பக்கமாக வீசியிருந்தால் சேரி முழுவதும் எரிந்து போயிருக்கும்.

விரைவில் தீயின் ஆங்காரம் தணிக்கப்பட்டுவிட்டது மொத்தத்தில் சேரியில் மூன்று வீடுகள் Փ(ԼՔ57 մյւb இரண்டு வீடுகள் பகுதியுமாய் எரிந்து போயின. சக்கிலியர் தெரு ວຊີວັງ ஒரு வீடு முழுதாயும் ஒரு வீடு பகுதியுமாய் எரிந்து போனது. பிச்சமுத்துப் படையாச்சியின் வீட்டின் மூலை பில் இருபது முப்பது ஒடுகள் வெடித்துச் சிதறியிருந்தன சேதம் அதிகமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்

கண்ணம்மாக் கிழவி தெருவில் புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணினாள் புதுக்கூரை வேய்ந்து முழுதாக மூன்று மாதங்கூட ஆகவில்லை என்றாள்.

‘சாமி சத்தியமா சொல்றேன், தட்டையை வெளியே இழுத்து தண்ணிய ஊத்தி அணைச்சுப்புட்டுத்தான் கிணத் தடிக்குப் போனேன்” என்று எந்தெந்த சாமி மேலேயெல் லாமோ சத்தியம் செய்தாள்.

தொகுப்பு: இந்திரன் 73

படிப்பகம்WWW.padippakam.Com

3. நேரம் ஆக ஆக, பெயர் தெரியாத நபரைச் சபிக்க ஆரம்பித்தாள். "எவ்வூட்டுக்குத் தீய வச்சுப்புட்டியேடா பாவி, எலே, உனக்கு கொள்ளி வைக்க ஆளு அம்புடுமா? மூணு நாளா தெருவைச் சுத்தி சுத்தி பீராஞ்சி வந்தி யேடா, இதுக்குத்தானாடா படுபாவி? இதுக்குத்தான்னு தெரியாமப் போச்சேடா! தெரிஞ்சிருந்தா ஒன் இடுப்பை முறிச்சு அடுப்புல வச்சிருப்பேன்டா படுபாவி'

சேரி ஆட்களும், சக்கிலியத் தெரு ஜனங்களும் அவளைப் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள்.

"சொல்லு யாரவன்? எங்கிருந்து நோட்டம் பார்த் தான் சொல்லு?"

"சாமி நாந்தான் கூறு கெட்டவளாச்சே. யாருன்னு அடையாளந் தெரியலே சாமி. எவ்வூட்டுக்கு எதிர்ப்புற நின்னு நின்னு பாத்தானே அய்யா.' அழுது அரற்றி னாள் கண்ணம்மாக்கிழவி. அவள் அழுவதைப் பார்த்து குழந்தைகள் இருவரும் கூக்குரலிட்டனர், பசி வேகம் அவர்களது குரலை உயர்த்தியது.

"கண்ணம்மாக் கிழவி சொல்றதப் பாத்தா குடித் தெருவுக்காரன்தான் தீ வச்சிருப்பாம்போல இருக்கு" யாரோ கூட்டத்தில் சொன்னதுதான் தாமதம், எல்லோ ரும் இதற்கென காத்திருந்ததுபோலவே "இருக்கும், அவனுவ வேலதான். நடவுக்குப் போவலன்னு தீய வச்சுப்புட்டானுவ" என்றார்கள்.

கண்ணம்மா கூறுகெட்டவள் என்பதும், கண்பார்வை மங்கியவள் என்றும், எந்தவொரு பழியையும் யார் மீதும் போடத் தயங்காதவள் என்பதும் ஏனோ எல்லோருக்கும் அந்தச் சமயத்தில் மறந்து போயிற்று.

தங்கத்தின் ஒப்பிடி வள்ளியம்மை ராசேந்திரனை கூப்பிட்டுச் சொன்னாள்.

"ராசேந்திரா, நான் அன்னைக்கி ஒங்கிட்ட என்ன சொன்னேன். ஊரையே கொளுத்தக்கூட அவனுவ அஞ்ச

174 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

மாட்டானுவன்னு நாஞ்சொன்னது சரியாப் போச்சுல்ல, ன்வ்வாக்கு பலிச்சுப் போச்சி பாத்துக்கிட்டாயா!' என்றாள்.

ராசேந்திரன் இம்மாதிரி அரிஜனங்களை உயிரோடு கொளுத்திய சம்பவங்கள் பல கேள்விப்பட்டிருந்தாலும் அது தன் ஊரிலே நடக்க முடியாது என்று ஏனோ நம்பி யிருந்தான். அவனைப் பொறுத்தவரையில் இன்று அந்த நம்பிக்கைப் பொய்யாய் போயிற்று அவனைப் போல பலரும் குடியானவர்தான் குடிலுக்குத் தீ வைத்துவிட்ட தாக நம்பினர்.

"அது சரி, பறத்தெரு ஆளுங்கதான் நடவுக்குப் போவு லன்னு தீ வச்சான் சக்கிலித்தெரு ஆளு என்ன பண் ணாங்க? அவனுவ குடிசைக்கும் ஏன் தீய வச்சான்?" சக்கிலித்தெரு பொன்னுசாமி கேட்டார்.

"யோவ், பறையன் எக்கேடும் கெட்டுட்டுப் போறான், உடையான அண்டிப் பொளச்சுக்கலாம்னு அவனுவ பின்னாடி போனிங்களே, இப்ப என்னாச்சி பார்த்துக்கிட் டீங்களா? நமக்கு வேனா பள்ளன் பறையன், சக்கிலி, வள்ளுவன், வண்ணாண்னு இருக்கலாம். அவனுவளப் பொறுத்தவரைக்கும் நம்பல்லாம் ஒண்ணுதான் தெரியுமா? எங்களை வீட்டு வெளிய நிக்க வக்கிறான், ஒங்களை அவ வீட்டு பஞ்சு மெத்தையில படுக்க வச்சு பாலுஞ் சோறு ஊட்டுறான்னு நெனைச்சுகிட்டு இருக்கியா? அவனவ னுக்கு வலி வரும்போதுதான் தெரியுது. இன்னைக்குச் சொல்றேன். நம்ம இந்த மாதிரி தனித்தனியாய் பிரிஞ்சி அவனுவளுக்கு வால் புடிக்கிறவரைக்கும் அவன் நம்மள வளைய வளைய குத்துவான்."

செல்லமுத்து முந்திக்கொண்டு சொன்னார்.

"அடேய், ஆளுக்கொரு கம்பு, தடி அருவா,கொடுவா எடுங்கடா. தீப்பந்தங் கொண்டு வாங்கடா, வலுவு நமக்கா அவனுக்கான்னு பாப்பம்."

தொகுப்பு: இந்திரன் 175.

படிப்பகம்WWW.padippakam.Com

சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜீப் வந்து நின்றது. பெரியோர்கள் அவரவர் வீட்டு பெண்டு பின்ளை களை வீட்டுக்குப் போகும்படி துரத்தினர். போலீஸ் ஜீப்பைத் தொடர்ந்து ஆத்தூர் தாசில்தார் ஜிப்பும் வந்து நின்றது,

'பாத்தியா பாத்தியா, நம்ம சொன்னது சரியாப் போவுல? தீ அணைச்சி வல்லுசா அரைமணி நேரங்கூட ஆவுல். பயர் எஞ்சின் வர்ல, அதுக்கு பதிலா போலீஸ் ஜீப்பு மட்டும் வருது. குடித்தெருவு பயலுவ பயந்துகிட்டு எவ்வளவு சுருக்கா போலீஸை அளைச்சு கொண்டாந்து உட்டுட்டானுவ பாத்தியா?”

"தாசில் தாரா வர் றான்? சுத்த அபருச்சாளிப்பய. லீவு கேட்டாக்கூட அப்ளிகேஷன்ஸ் அஞ்சு ருபா வச்சாத்தான் கையெழுத்துப் போடுவானாம். அவன் எதுக்கு வர் ?'' 'ஒரு பொட்டச்சிய சாவடியா அடிச்சு தெருவில நாய் மாதிரி இளுத்துப் போட்டானுவ அப்ப விசாரிக்க இன்ஸ்பெக்டரக் காணோம். இன்னைக்கி என்னாத்துக்கு பெரிய புடுங்கி மாதிரி வர்ரானுவ?"

இம்மாதிரி சேரியில் படித்தவரும் படிக்காதவர்களுமாய் புலம்பிக் கொண்டிருக்க ஆத்தூரிலிருந்து வந்த இரவு பத்து மணி கடைசி பஸ்ஸிலிருந்து காத்தமுத்து ஆள் ஒருவன் குதித்து இறங்கினான்.

பிச்சபுள்ளையைக் கூட்டத்தில் காணாதவனாய் தேடியவன் செல்ல முத்துவின் காதில் ரகசியமாய்ச் சொன் ডেট্যান্য টেক্ট -

"காத்தமுத்து ஐயா இப்பக் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு. அவர் வர்ற வரைக்கும் ஏதும் ஏடாகூட

ாகப் பேசக் கூடாதுன்னு சொல்லச் சொன்னார் 1

காத்தமுத்து ஐயா வருகிறார் என்ற செய்தி அவர்கள் எல்லோருக்கும் எட்டிப் போகவே அவர் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர்.

76 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com பரஞ்சோதி உடையாரும் அவரையொத்த பணக்காரர் களான ராமலிங்க ரெட்டியாரும், அருணாசல ரெட்டி யாரும் பறத்தெருவில் தீ என்றதும் ஒன்றாகக் கூடிக் கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஜன்மி விரோதிகள் இல்லையென்றாலும் ஆப்த நண்பர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் காரியக்காரர் கள். ஆபத்து சமயத்தில் ஒன்றாகக் கூடுவதும் மற்ற சமயத்தில் காடு கரைகளிலும், அரசியல் மேடைகளிலும் தங்களிடையே இலைமறைவு காய் மறைவாக பலப் பரிட்சை நடத்துவதுமாய் இருப்பவர்கள்.

அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சமூக அந்தஸ் தையும், நிலத்தையும், பணத்தையும், பாதுகாக்க அவர் கள் ஒன்றாகக் கூடிக் கொண்டார்கள்.

ஆனால் நிலமில்லாத ஏழைகளோ, தங்களின் ஆயிரத் தெட்டு சாதிகளால் ஒன்று சேர முடியாதவர்களாகவே இருந்தார்கள். சாதியின் அசுரப்பிடியில் சிக்கி மீள முடியாதவர்களாயிருந்தார்கள். இல்லாவிட்டால் இன்று குத்தகைக்கும் கூலிக்கும் ஏர் பிடித்து உழும் படையாச்சி வகுப்பினர் உடையார் பக்கம் சேர்வதற்கு என்ன முகாந் திரம் உள்ளது? கோவணத்திற்கு மாற்றுக் கோவணம் இல்லாதவன் அதே போல் உள்ள கோவணாண்டியைப் பள்ளன் என்கிறான், பறையன் என்கிறான். பள்ளனோ பறையனைக் கேவலமாயும், பறையன் சக்கிலியைக் கேவல மாயும், சக்கிலி பறையனைக் கேவலமாயும் இவனெல்லாம் சேர்ந்து பறவண்ணானை இன்னுங்கேவலமாய்.தனக்குக் கீழே யாராவது கேவலமாய் இருப்பதை விரும்பும் தோரணையாய் அல்லவா இருக்கிறது நிலைமை!

ஆத்தூர் சப்-கலெக்டர் வரப்போவதாகவும் தகவல் வந்தது. தாசில்தாரும் இன்ஸ்பெக்டரும் மற்றும் கூட வந்திருந்த அலுவலர்களும் எரிந்த வீடுகளைச் சென்று பார்த்தனர். யார் வீடு, என்ன என்ற விவரம் குறித்துக்

பி-12

தொகுப்பு: இந்திரன் 177

படிப்பகம்WWW.padippakam.com

கொண்டனர். கூறுகெட்ட கண்ணம்மாக் கிழவியின் வாக்குமூலமும் எழுதப்பட்டது. சேரியையும் ஊரையும் பிரிக்கும் பருத்த புளிய மரத்தின் கீழ் பெட்ரோமாக்ஸ் விளக்கு வந்தது. புளிய மரங்களுக்கு சற்று தூரத்தில்

குழல் விளக்கு மினுக்மினுக்கென்று வெளிச்சம் காட்டி ஏமாற்றிக் கொண்டிருந்தது. ஒரு பெஞ்சும், கயிற்றுக் கட்டிலும் ஓரிரு நாற்காலிகளும் போடப்பட்டன.

இந்த ஆரம்ப ஏற்பாடுகள் யாவும் குடியானத்தெரு பிரஜைகளால் செய்யப்பட்டன. அரிஜனங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தாசில் தாருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் அவர்கள் மேல் எரிச்சி லாக வந்தது.

"எதற்காக வந்தோம்? இவர்கள் வீடுகள் தீப்பிடித்துக் கொண்டன என்பதற்காகத்தானே வந்தோம்? இவர் களுக்கு இழப்புக்கு உள்ளான வீடுகளுக்கு நிவாரணநிதி யும்,வேட்டி புடவையும், அரிசிப் பருப்பும் கொடுக்கப் போவது நாங்கள்தானே? கொஞ்சமாவது மட்டுமரியாதை வேண்டாமா? ஏதாவது ஒத்தாசை செய்யக்கூடாதா? காத்தமுத்து வந்தால்தான் விஷயத்தைச் சொல்வார்கள் என்றால், நாம் நேராக ஆத்தூரில் அவர் வீட்டுக்குப் போயிருக்கலாமே?” என்று அவர்களுக்குள் பேசிக் கொண் L-TTTT 956]T.

அரிஜனங்களின் அவநம்பிக்கையான பார்வையும் தரித் திரக் கோலமும் இன்னும் அவர்களுக்கு எரிச்சல் மூட்டு வதாக இருந்தன.

பரஞ்சோதி உடையார், அருணாசல ரெட்டியார், ராமலிங்க ரெட்டியார் ஆகியோர் பிரசன்னமாகி கயிற்றுக் கட்டிவிலும், நாற்காலிகளிலும் அமர்ந்தனர். அவர் களுக்குப் பின்னால் குடித்தெருக் கும்பல் இருந்தது. பிச்சப்புள்ளையும், செல்லமுத்துவும் இன்னும் சேரிப் பெரியவர்களும், புளியமரத்தின் வேர்காலில் உட்கார்ந்

78 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

திருந்தனர். இளைஞர்கள் அவர்கள் அருகாமையில் நின்று, அந்த இரவில் விழித்துக் கொண்டு தொந்தரவு கொடுத்த பொடியன்களை துரத்திக் கொண்டிருந்தனர்.

யாரோ மிதித்து வர சைக்கிளில் பின்பக்கம் அமர்ந்து காத்தமுத்து வந்தார். அதே தும்பைப்பூ வேஷ்டி கருப்பாய் மினுங்கும் சரீரம் வந்தவுடன் தாசில்தாருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் கைகூப்பி வணங்கினார். உடை யார், ரெட்டியார்களுக்கும் வணக்கம் செய்தார். அவர் களும் பதில் வணக்கம் கூறினர்.

'ஐயோ சாமி, எந்தெய்வம், வந்துட்டியா சாமி, வந்து வெந்து போன ஊட்டப் பாரு சாமி." நெஞ்சில் மாறி மாறி அடித்துக் கொண்டு, அவள் மகன் கைத்தாங் கலாக அழைத்துவர கண்ணம்மாக்கிழவி காத்தமுத்து காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அழுது புரண்டாள்.

பார்ப்பவர் மனதை உருக்கும் காட்சியாக இருந்தது அது. அவள் அழுகைச் சத்தம் கேட்டு, ஒதுங்கி நின்றிருந்த பெண்கள் கூட்டம் ஓடி வந்து சூழ்ந்து கொண்டது. சிலர் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள். சிலர் வெறு மனே கண்கலங்கினார்கள். முந்தானையால் அடிக்கடி மூக்கைச் சிந்தினார்கள்.

காத்தமுத்து கீழே விழுந்த கண்ணம்மாக் கிழவியைத் தூக்கி நிறுத்தினார். அவர் மனமும் வேதனைப்பட்டது. கூட்டம் அவரை வழி நடத்த எரிந்த கூரை வீடுகளைப் பார்த்து வந்தார்.

மெளனமாகப் பார்த்துக் கொண்டு வந்த அவர் செல்லமுத்துவையும் பிச்சப்புள்ளையையும் தனியே அழைத்து ‘எப்படி நடந்துச்சி?" என்று மெலிந்த குரலில் கேட்டார்.

தொகுப்பு: இந்திரன் is

படிப்பகம்WWW.padippakam.Com "தீய வச்சுப்புட்டானுவ, வச்சுப்புட்டானுவன்னு சொல்றா கண்ணம்மாக்கிழவி. யாரும் கண்ணால பாக்கு லியே!" என்றார் செல்லமுத்து.

"யாருய்யா நீ, இந்தா பாருன்னு சொல்லிக்கிட்டா நெருப்புக் குச்சியைக் கிழிப்பான்? விவரம் புரியாத ஆளா இருக்கியே' காத்தமுத்து குறுக்கிட்டார்.

அதற்குள் வாலிபர்களும், மற்றும் பெரியவர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

சின்னச்சாமி என்ற இளைஞன் முந்திக்கொண்டு காத்தமுத்துவிடம் சொன்னான்.

"ஐயா நீங்க சரின்னு சொல்லுங்க ஐயா, இப்பலே அவனுவ கொடலை உருவி மாலை போட்டுக்கிட்டு வாறோம். நம்பள ரொம்பத்தான் தூக்கி கணம் பாக் குறானுவ...'

"ஏலேய், ஒன்னை மாதிரி விபரம் புரியாத பசங் களாலத்தான் நாடு குட்டிச்சுவராட்டம் ஆயிட்டிருக்கு. நீ கொடல உருவி மாலப்போட்டன்னா, அவனுவ கை பூப்பறிச்சுக்கிட்டு இருக்குமா? அவன் உன்னையும் சாப்பிட்டுட்டு ஊரையும் சாப்பிடுகிற பசங்க" காத்த முத்து அடக்கினார்.

"சக்கிலித்தெருவும் நம்ம பக்கந்தான்." ராசேந்திரன் சொன்னான்.

"நம்ப தெருவும் சக்கிலித்தெருவும் நடவுக்குப் போவ லன்னா அவன் படையாச்சி ஆளுவள நயிந்து பயிர நட்டுக்கிட்டு போயிடுவான். நீங்க பட்டினி கிடப்பிங் saltsr?'''

"பட்டினி கெடந்து செத்துதான் போறது, இப்ப உயிரோட இருந்து என்னத்த வாரிக்கட்டிக்கப் போறம்?" யாரோ வயதானவர் சொன்னார்.

"இங்க பாரு, இந்த மாதிரிப் பேசறதுதானே ஆவாதுங்கறது. ஏதாவது நடக்கறதைப் பேசுவியா,

180 பிணத்தை எரித்தே வெளிச்சம்

படிப்பகம்WWW.padippakam.Com

அதை உட்டுட்டு வேற என்னமோ பினாத்துறியே. பட்டினி கிடந்து செத்துப் போறானாம் பட்டினி ஒடந்து.'

அங்கலாய்த்த காத்தமுத்து, அநீதிக்கு எதிராக அவர் களுள் எழுந்த ஆக்ரோஷத்தை அடக்கி, ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என ஆலோசித்தார்.

'இங்க பாருங்க. எரிஞ்ச குடிசைக்கு ஒண்ணுக்கு ரெண்டா ஏதாவது கேட்டு வாங்குவேர்ம். நாளைக்கு நடவுக்கு நம்ப ஆளுவள கூப்பிட ஏற்பாடு செய்வோம். திருவிழா வேற நெருக்கத்திலே இருக்கு. ஊர்ல் ள்துக்கு வீணாப்பில பொல்லாப்பு ஏதோ நம்மஞம் இந்த ஊர்ல இருந் காவனும், அவனுவளும் இந்த ஊர்லதான் இருந்தா வனும், ஊரக் காலி பண்ணிக்கிட்டு போக முடியாது. நடந்தது நடந்தாச்சி. ஏதாவது காசு பணமுன்னு அவன வனுக்கு தண்டம் வச்சிட்டு இதை இத்தோட மறந்துருங்க. ஒருத்த மொகத்திலே ஒருத்தர் அப்புறம் முழிக்கறது 6ʻri'jl 92 uq.?ʼʼ

காத்தமுத்து பண்ணிப் பண்ணிப் பேசி அவர்களை இணங்க வைத்தார். இவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும் காத்தமுத்து நேரே புளியமரம் நோக்கி தடந்தார்.

O

தொகுப்பு இத்திரன் “ is

படிப்பகம்WWW.padippakam.Com


O

தொகுப்பு இத்திரன் “ is

படிப்பகம்WWW.padippakam.Com


World Poetry Day: 28 of poetry's most powerful lines ever written | The Independent

http://www.independent.co.uk/arts-entertainment/books/news/world-poetry-day-28-of-poetrys-most-powerful-lines-ever-written-a6944301.html

The rhythm of the tongue brings wordless music into the air; it is in poetry that the human essence is refined to such ritualistic purity. It's in the steady beats, the sonorous rise-and-fall of speech; for a moment it appears as if all the mysteries of the world have unlocked themselves to our private view.

It's these works which are celebrated on World Poetry Day, falling on 21 March, in which UNESCO recognises the moving spirit of poetry and its transformative effect on culture.

In honour of these celebrations, here stands a small collection of singular lines, stanzas, and notions possessing of a power which springs the most moving of thoughts and feelings off of the page and into the humming imagination of its readers.


Because I could not stop for Death, / He kindly stopped for me; / The carriage held but just ourselves / And Immortality
'Because I could not stop for Death', Emily Dickinson

And when wind and winter harden / All the loveless land, / It will whisper of the garden, / You will understand
'To My Wife', Oscar Wilde

But the dark pines of your mind dip deeper / And you are sinking, sinking, sleeper / In an elementary world; There is something down there and you want it told
'Dark Pines Under Water', Gwendolyn MacEwen

This is the way the world ends / not with a bang but a whimper
'The Hollow Men', T.S Eliot

Out of the ash I rise / With my red hair / And I eat men like air
'Lady Lazarus', Sylvia Plath

Only a true master of the English language can pronounce all the words in this poem (we tried)

Bent double, like old beggars under sacks, / Knock-kneed, coughing like hags, we cursed through sludge, / Till on the haunting flares we turned our backs / And towards our distant rest began to trudge.
'Dulce et Decorum est', Wilfred Owen

I love you as certain dark things are to be loved / in secret, between the shadow and the soul.
'Sonnet XVII', Neruda

I would like to be the air / that inhabits you for a moment / only. I would like to be that unnoticed / & that necessary
'Variation on the Word Sleep', Margaret Atwood

they speak whatever’s on their mind / they do whatever’s in their pants / the boys i mean are not refined / they shake the mountains when they dance
'the boys i mean are not refined', E. E. Cummings


O Captain! my Captain! our fearful trip is done; / The ship has weather’d every rack, the prize we sought is won
'O Captain! My Captain!', Walt Whitman

Don’t like the / fact that he learned to hide from the cops before he knew / how to read. Angrier that his survival depends more on his ability / to deal with the “authorities” than it does his own literacy
'Cuz He’s Black', Javon Johnson

The weight of the world / is love / Under the burden / of solitude, / under the burden / of dissatisfaction / the weight, / the weight we carry / is love
'Song', Allen Ginsberg

The caged bird sings with a fearful trill/ Of things unknown but longed for still/ And his tune is heard on the distant hill/ For the caged bird sings of freedom
'I Know Why The Caged Bird Sings', Maya Angelou

The blood-dimmed tide is loosed, and everywhere / The ceremony of innocence is drowned; / The best lack all conviction, while the worst / Are full of passionate intensity '
The Second Coming', William Butler Yeats

Down, down, down into the darkness of the grave / Gently they go, the beautiful, the tender, the kind; / Quietly they go, the intelligent, the witty, the brave. / I know. But I do not approve. And I am not resigned
'Dirge Without Music', Edna St. Vincent Millay

I bequeath myself to the dirt to grow from the grass I love / If you want me again look for me under your boot-soles
'Leaves of Grass', Walt Whitman

How happy is the blameless vestal's lot! / The world forgetting, by the world forgot. / Eternal sunshine of the spotless mind! / Each pray'r accepted, and each wish resign'd
'Eloisa to Abelard', Alexander Pope

Love is not love Which alters when it alteration finds, / Or bends with the remover to remove: / O no; it is an ever-fixed mark, / That looks on tempests, and is never shake
'Sonnet 116', William Shakespeare

Tree you are, / Moss you are, / You are violets with wind above them. / A child - so high - you are, / And all this is folly to the world
'A Girl', Ezra Pound


You may write me down in history / With your bitter, twisted lies, / You may trod me in the very dirt / But still, like dust, I’ll rise
'Still I Rise', Maya Angelou

you are much more than simply dead/ I am a dish for your ashes / I am a fist for your vanished air / the most terrible thing about life/ is finding it gone
'The Unblinking Grief', Charles Bukowski

At twenty I tried to die / And get back, back, back to you. / I thought even the bones would do./ But they pulled me out of the sack, / And they stuck me together with glue
'Daddy', Sylvia Plath

I saw the best minds of my generation destroyed by madness, starving hysterical naked, / dragging themselves through the negro streets at dawn looking for an angry fix / angelheaded hipsters burning for the ancient heavenly connection to the starry dynamo in the machinery of night
'Howl', Allan Ginsberg

She had blue skin,/ and so did he./ He kept it hid/ and so did she./ They looked for blue/ their whole life through./ Then passed right by--/ and never knew
'Masks', Shel Silverstein

Do not go gentle into that good night, / Old age should burn and rave at close of day; / Rage, rage against the dying of the light
'Do Not Go Gentle Into That Good Night', Dylan Thomas

Water, water, every where, / And all the boards did shrink; / Water, water, every where / Nor any drop to drink
'The Rime of the Ancient Mariner', Samuel Taylor Coleridge

I am the poor white, fooled and pushed apart / I am the Negro bearing slavery's scars / I am the red man driven from the land, / I am the immigrant clutching the hope I seek - / And finding only the same old stupid plan / Of dog eat dog, of mighty crush the weak
'Let America Be America Again', Langston Hughes

You smug-faced crowds with kindling eye / Who cheer when soldier lads march by, / Sneak home and pray you'll never know / The hell where youth and laughter go
'Suicide in the Trenches', Siegfried Sassoon