தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, October 10, 2015

அக்ரஹாரத்தில் செத்த கிறுக்கு - பிரமிள்,பாரதி கலை ------------------ பிரமிள் (எழுத்து, அக்.-நவம்பர் 1961) ஆடும் பாம்பு - சார்லஸ் போதலேர் தமிழில்: பிரமிள், குளத்துப் புழை ஆறு - வண்ணநிலவன்

Krishnamurti Meditation



#23
So one must enquire very, very deeply and most profoundly seriously if sorrow can end. Because desire is part of sorrow. You understand? Pleasure is part of sorrow. . Fear is part of sorrow and sorrow is also part of this terrible thing man has accepted as evolution. You understand what I am saying? For God's sake understand. You have accepted evolution, that is, a continuity, that you will evolve psychologically, you can't evolve any more biologically, you can't grow a fourth arm, or a third arm. But you have accepted the psychological growth, psychological evolution that you will evolve, get better and better, and better, till you ultimately reach some extraordinary nonsense, you have accepted that, that is part of sorrow. You have accepted time as a means of change, that is part of sorrow because you are postponing. As you have accepted attachment because you are attached to your money, to your position, to your memories, to your experiences, to your ideals, you are attached to a person, to an idea, to a belief and that is part of sorrow because in attachment there is great sorrow, whether you know it or not, because there is fear in it, you might lose. So all this is the movement of sorrow and if you haven't seen this movement, and to put an end to that movement is the transformation of your consciousness.K
https://www.facebook.com/kaala.subramaniam?fref=nf

அக்ரஹாரத்தில் செத்த கிறுக்கு - பிரமிள்
-----------------------------------------------------------

திருவல்லிக்கேணியின் பார்த்தசாரதி கோயில் அக்ரஹாரத்துக்கு சுப்ரமண்ய பாரதி குடிவந்தபோது, நமது சமூகம் ‘கலைஞர் வந்து விட்டார்!’ என்று ஆரத்தி எடுக்கவில்லை; பன்றிக்குக்கூட தராத மரியாதையையே தந்தது.


வரவேற்புப் பெற்ற கலைஞர்களோ, தங்களது லௌகிக வெற்றி களுக்காகவே நமது சமூகத்தில் ஆரத்தி பெற்றிருக்கிறார்கள் - பெறுகிறார்கள். ஆனால் மெய்க் கலைஞனின் சுதந்தர புருஷத்துவம், அவனுக்குச் சமூகத்தில் எத்தகைய ‘வரவேற்பை’த் தரும் என்பதற்கு, இரண்டு உதாரணங்களை இங்கே தரலாம்.

முதலாவது பாரதி; ‘பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே,’ என்று பாடியவனாயிற்றே அந்த பாரதி! அதுவும் அன்று எவ்விதம் ஆரத்தி பெற்றிருக்கலாகும்...?

அவர் தெருவில் கிளம்பிய உடனேயே, ஒரு பட்டாளம் குழந்தைகள் கிறுக்கு’ என்று பழித்தபடி அவரைப் பின்தொடரும்; சில கற்களும் வீசப்பட்டன. இது இன்றும் கர்ணபரம்பரையாக நம்மை வந்தடையும் விபரம்; ‘வரலாறு’களில் மழுப்பப்பட்டுள்ள விபரம்.

ஏன்... கோவில் யானைக்கு வழக்கம்போல் ஒரு பாதித் தேங்காயைக் கொடுத்தபோது, அது வெறியிலிருந்ததால் பாரதியை இழுத்து வீழ்த்தியதாகவும், அதனால் மனம்முறிந்து நோய்வாய்ப்பட்டே அவர் உயிர் துறந்ததாகவும் கூறப்படுகிற ‘வரலா’றில்கூட, கூர்ந்து கவனித்தால் ஓட்டை தெரியும்.

வெறியில் யானை இருந்தால், அதை வெளியே அனுமதிக்கவே மாட்டார்கள். அதன் ஒவ்வொரு சிறுஅசைவும், பாகனால் கண்காணிக்கப்படுகிற ஒன்று. மிக ஆபத்தான மிருகமாக மாறத்தக்கதாகையால், இந்தக் கண்காணிப்பு யானைப்பாகர்களால் மிகவும் பேணப்படுவதாகும். இதை உணர்ந்தாலே, மேலுள்ள வரலாற்றின் ஓட்டையைக் காணலாம்.

பாரதி, கடையில் தேங்காய் வாங்கியபோது, அதில் சுண்ணாம்பு தடவி அவரிடம் கொடுக்கப்பட்டதாகவும், இதை அறியாமல் அவர் அதை யானையிடம் நீட்டியதன் விளைவுதான் அதன் செயல் என்றும், இன்றுகூட எழுத்தை எட்டாத வரலாறு கூறுகிறது.

யானை தன்னை வீழ்த்தியதுக்காக, பாரதி மனம் முறியவில்லை. அவ்வளவு அசடாக அத்தகைய தீரரைக் காட்டியுள்ளமை, விஷயத்தை மழுப்பும் புராணக் கற்பனையாகும். நிகழ்ச்சியின் உண்மை அறிந்து, மனிதர்களின் கீழ்த்தரக்குணம் எவ்வளவு தூரம் இழிவடைய முடியும் என்றுணர்ந்ததில் ஏற்பட்ட தார்மீக அதிர்ச்சிதான், பாரதியை உயிர்துறக்கத் தூண்டியுள்ளது.
‘மேலும் சில வசவுகள்’, கொல்லிப்பாவை, இதழ் 10, 1980.


பாரதி கலை
------------------
பிரமிள் (எழுத்து, அக்.-நவம்பர் 1961)
-----------
இம்மாதிரி ஒரு சிறு கட்டுரையில் சுப்ரமணிய பாரதியின் கலைத் தன்மையின் பல்வேறு அம்சங்களையும் முழுக்க அளவிட்டுவிட முடியாது. ஆனால், ஒரு புதிய கோணத்தையும் பார்வையையும் பாரதி ரஸனைக்கு என்று கோடுகீறிக் காட்ட முடியும். இதுவரை தேசியக் கவி, தீர்க்கதரிசன கவி, சித்த புருஷன், வேதாந்தி என்றெல்லாம் அவரவர் தன்மைக்கு ஏற்ப, கலைத் துறைக்கோ, கலா ரஸனைக்கோ கிஞ்சித்தும் லாபம் ஏற்படாதபடி பாரதி பற்றிப் பேசி வந்திருக்கிறார்கள். மகாகவி என்று அவரைக் குறிப்பிடும் சந்தர்ப்பங்களிலும், அவரது கலா சக்தியைப் பற்றிய நிர்ணயத்தை எவரும் செய்ததாகத் தெரியவில்லை - அவருக்கு மகாகவி ஸ்தானம் கிடைக்க வேண்டுமென்று ‘போராட்டம்’ செய்த ஒரு குறுகிய கால எல்லையினுள் தவிர.
இக்கட்டுரைக்கு பெரிய நோக்கம் ஒன்றை வரையறுத்துக் கொண்டேன்; பாரதியின் கவிதைகளினுள்ளே ‘குயில்’, ‘பாஞ்சாலி சபதம்’ என்ற இரண்டு காவியங்களும் நீங்கலாக எவற்றை, கவிதை நயமும் பாரதியின் சாதனை நிரம்பியதுமாகப் பொறுக்க லாம் என்பதே அந்த நோக்கம். என் நோக்கம் ரஸனைத் துறைக் கும் பாரதியின் கலைக்கும் நியாயம் செய்கிற அளவுக்கு இங்கே நிறைவேறுமோ என்னவோ; ஆனால் இந்த நோக்கோடு தொட ர்ந்து ஒத்துழைக்க ரசிகர் களுக்கு ஒரு வேண்டுகோளாக இது அமையலாம். அந்த அளவுக்கு இது சாதிக்க முடிந்தாலே போதும்.
கவிஞன் என்ற பாரதியை அடையாளம் காணத்தான் இங்கே முயல்கிறேன். ஆகவே கவித்துவத்துக்கு மட்டுமே சார்பான அளவு கோல்களை முதலில் வகுத்துக்கொள்வோம். கவிதை யைப் பொதுவாக என்னத்தால் ஒரு மேதை சாதிக்கிறான் என்பதுக்குப் பதில் காண்பதன் மூலம் இந்த அளவுகோல்களைப் பெறலாம்.
கவிதை உணர்ச்சியின் வெளியீடு என்கிறார்கள். அப்படிப் பொத்தாம் பொதுவாகச் சொல்வதால், கவிதை பற்றி முழுவதையும் சொல்வதாகாது. உணர்ச்சியை மனிதன் ஒவ்வொருத்தனும் தனது ஒவ்வொரு நிலை யிலும் சொல், செயல் இரண்டின் மூலமும் வெளியிட்டுக்கொண்டு தான் இருக்கின்றான். கவிஞனுக்கு உணர்ச்சி தோன்றும்போது அவன் அடைந்த அநுபவத்தை அப்படியே வாசகனுக்கும் தோன்ற வைக்க வேண்டும் என்கிறார்கள். இதுவும் பொதுப்படையான குறிப்புதான். உணர்ச்சி வெளியிடப்பட்டது என்று நாம் குறிப்பிட்டாலே அது நமக்கு தொற்றி விட்டது என்பதைத்தான் குறிப்பிடுகிறோம். பிராணி வர்க்கம் முழுவதுமே ஒன்றின் உணர்ச்சி ஒன்றுக்குத் தொற்றிக் கொண்டே இருப்பதன் விளைவாகத்தான் இயங்கு கிறது. ஆகவே உணர்ச்சித் தொற்றுதல் என்ற காரணம் மட்டும் கவிதை ஆகாது. ‘அநுபவ பரிவர்த்தனை’யும் இந்த தொற்றுத லுக்குக் கொடுக்கப்பட்ட மறுபெயர்தான். அதோடு இந்த உணர்ச்சி, கலைப் படைப்பு யாவற்றுக்குமே பொதுவான ஓர் அம்சம்.
அப்படியானால் கவிதை என்றால் என்ன?
கவிதை என்பது சக்தி. சிருஷ்டி முழுவதிலும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை. அது வார்த்தையினுள் - பாஷையினுள் - அடைக்கப்படுமுன்பே படைப்பினுள் கவிதையாகவே கலந்து நிற்கிறது.
கவிஞனுடைய வேலை இந்தச் சக்திக்குத் தன்னை ஊற்றுக் கண்ணாகத் திறந்து கொள்வதுதான். இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம்தான் கவிதை. அந்த மின்சாரத்தை இயற்கையின் ஜொலிப்பைக் கொண்டு, கவிஞன் உணர்கிறான். அவனை அவனது பாஷை மூலம் நாம் உணர்கிறோம். ஆகவே பாஷைத் தகட்டைச் செப்புக் கம்பியாக நீட்டி, தன் ஆத்மாவினுள் கரைந்த கவிதையைப் பாய்ச்சுகிறான். நம்மூடேயும் அக்கவிதை பாய்ந்து மனசில் ஒளியாகப் பூக்கிறது. கேவலம், நம்மால் கவிஞன் தரும் பாஷை வடிவான செப்புக் கம்பியைப் பாதை யாக்கி இயற்கையினுள் நேரடியாகப் போக முடிவதில்லை. செப்புக் கம்பியினுள் துடிக்கும் சக்தியை அனுபவித்ததோடு நின்று விடுகிறோம். அதிலேயே திருப்திப்பட்டு அந்த பாஷை வடிவையே ‘கவிதை’ என்று அழைக்கிறோம்.
கவிதைக்குப் பாஷை சாதனமாகும்போது மொழியின் இயல்புக்கு அது இணங்குகிறது. எனவே, மொழி இயல்பான அர்த்தம் அதற்கு உண்டாகிறது. அர்த்தத்தோடு இணைந்து வேகம் கலந்துள்ளது உணர்ச்சி. இவற்றோடு, இயற்கையின் இயல்பான அழகுருவம் கிடைக்கிறது. இயக்க சக்தி சீராகவே இயங்கும். பாஷை சப்தவடிவமானது. எனவே சீரான இயக்கமும் இணைந்து ஒலி இசைவு என்ற சப்த நயம் பிறக்கிறது.
பாஷையின் இயல்பினுள் நிற்கும் போது காரணம் இதுதான் என்று, அர்த்தம், உணர்ச்சி, அழகுருவம், ஒலிநயம் என்பவற்றுள் எதையும் காட்ட முடியாத இன்னொரு அம்சம் கவிதைக்கு உண்டு. அதுதான் வேகம்.
இந்த வேகம், இடத்தில் பயணம் செய்யும் போது நிகழும் அசைவான தீவிர வேகம், மந்த வேகம் என்பவற்றோடு தொடர்புள்ளதல்ல. கவிதையில் நான் குறிப்பிடுவது மனோசக்திகளைத் தூண்டிவிடும் வேகமாகும். அசைவைப் பற்றிய கொள்கையின்படி புறச்சக்தி ஒன்றின் தூண்டுதல் இல்லாமல் அசைந்து கொண்டிருப்பது நிறுத்தப்படுதலும் இல்லை. சலனமற்றிருப்பது அசைவதும் இல்லை. மனோநிலைகளைப் பொறுத்தும் இது உண்மை. எனவே ரசிகனின் சொந்த இயல்போடு நிற்கும் மனத்தை வேகம் கொள்ளச் செய்வது ரசிகனின் மனசிற்கும் புறத்தே நிற்கும் வேகமாகும். கவிதையிலிருந்து தோன்றுவதாகக் குறிப்பிட்டது அந்த வேகத்தையே.
கவிதையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இரு வகை. ஒரு முழு வெட்டான வர்ணனையைக் கவிதை பற்றித் தரமுடியாததன் காரணம் இந்த வேகம் தான். சிலர் இந்த வேகத்தை உணர்ச்சி என்று தப்பர்த்தப்படுத்திக் கொள்வதும் உண்டு. கவிதையில் வேகம் என்ற சொல்வது அதன் சப்தத்திலும் தங்கியிருக்கவில்லை, உணர்ச்சியிலும் இல்லை. உணர்ச்சி நம் மனதில் ஒரு பிரதிபலிப்புத் தரும்.
வார்த்தை, உணர்ச்சி என்ற விஷப்பூச்சுக் கொண்டு, அழகுருவமான உவமை உருவகப் படிமங்களாகத் தயாராகிறது. சப்த வில்லில் பூட்டி எய்யப்படுகிறது. எய்யப்பட்ட பின்பு அது கொள்ளும் பிரயாண கதிதான் வேகம். எனவே வேகத்தை உணர்ச்சி, சப்தம் போன்ற தூலத் தன்மைகளோடு குழப்பக்கூடாது. ஏனெனில் இந்த வேகம்தான் கவிதை யின் காரணம்- முன்பு சொன்ன இயற்கையின் இயக்கச் சக்தி பாஷை யினூடே கொள்ளும் பரிமளிப்புதான் வேகம். இதை உணர்த்தி விமர்சிப்பது முடியாது. நேரே கவிதையைப் புரட்டிப்பார்த்து அவ்வப் போது வேகத்தைக் கவிதைகளில் குறிப்பிடும் போது வாசகர் கவனிக்க வேண்டும். ‘இது வேகமுள்ள கவிதை’ எனும்போது, அதன் படபடப்பை யும் ரஸத்தையும் கொண்டு சொல்லவில்லை.
‘போர்த் தொழில் விந்தைகள் காண்பாய் - ஹே
பூதலமே அந்தப் போதினிலே...’
என்ற வரியிலும்,
‘மோகனப் பாட்டு முடிவுறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்’
என்ற வரியிலும் வேகம் ஒன்றே. இதற்குமேல் வாசகரே வேகத்துக்கு நான் கொள்ளும் கருத்தைச் சிந்தித்து உணரக்கேட்டுக் கொள்கிறேன். ‘இது வேகமுள்ள கவிதை’ என்பதைவிட, இது வேகமுள்ளது; ஆகவே கவிதை என்று சொல்வது உண்மையானது.
வேகத்தோடு கவிதையின் தனித்தன்மை- அதாவது கவிதையை வசன உருவங்களிலிருந்து பிரித்துக் காட்டும் தன்மை - நின்றுவிடுகிறது. ஆனால் படிமங்கள் இருக்கின்றன. கவிதைக்கு உபயோகமாகும் படிமங்கள் (உவமை, உருவங்கள் இத்யாதி) மிகவும் எளிமையாக இருக்கும் நேரமும் மிகவும் சிக்கலாக இருக்கும் நேரமும் உண்டு. படிமங்களின் சிக்கல் தன்மையும் எளிமையும் கவிதையின் அர்த்தத்தைத் தொற்றவைக்கும் வேலைக்குக் காரணமாகின்றன. ஆனால் கவிதையில் அர்த்தம் தெரிந்துகொண்டால் கவிதையைப் படித்தவேலை முடிந்து விடாது. ஏனென்றால் கவிதை புரிந்துகொள்வதற்கு அல்ல; உணர்ந்து கொள்வதற்கு. புரிந்துகொள்வதன் முன்பே உணர்விலே கவிதை பற்றிக் கொள்ளும். சிக்கலான படிமங்களைப் பயன்படுத்தும் கவிஞனைப் பற்றிய சிக்கல் அதுதான்.
சுரணையுள்ள வாசகனால் மட்டுமே அவன் எழுதிய கவிதையைப் புரிந்துகொள்ளாமலும் ரசிக்கமுடியும். கவிதை யில் வார்த்தைகள் உள்ளவரை அர்த்தமும் உண்டுதான். ஆனால்
ஒரு கவிதை புரியவில்லை ஆதலால் உணர முடியவில்லை என்பது அபத்தமானது. புரிந்துகொண்டு உணர்வது கணித உலகமுறை. கணிதம் அதன் அர்த்தத்தோடு தங்கிவிடுவது. ஆனால் கவிதை அதன் அர்த்தம் அல்ல; அது ஒரு சக்தி. சக்தி இயங்குவது; ஆதலால், இயக்கம் என்ற வேகத் தோற்றமே கவிதையின் தொற்றும் தன்மைக்கு முக்கியம். வேகம் உணர்வின் மூலம் தொற்றிய பின்போ, எளிமையான வார்த்தைச் சேர்க்கைகளுள்ள கவிதைகளில் உணர்வினோடேயேதான் அர்த்தம் தொற்றும். கடினமான படிமங்களுள்ள கவிதைகளைப் புரிந்து கொள்ளவும் விரும்பினால் வாசகசிரத்தை தேவை.
வேகத்தை அடுத்து கவிதைக்குப் படிமமும் உணர்ச்சியும் விவரிக்கப் பட வேண்டியவை ஆகின்றன.
படிமம் (இமேஜ்), கற்பனையின் (இமேஜினேஷன்) விளைவு எனலாம். கவிதையில் கற்பனைத் தன்மையையும் வளத்தையும் நிர்ணயிப்பது, படிமம் என்று குறிப்பிடப்படும் உவமை, உருவகம், மூர்த்திகரம் (பெர்ஸானிஃபிகேஷன்) முதலிய அழகுருவத் துகள் களாகும். கவிதையில் சிந்தனை அம்சம் சேரும்போது கற்பனையின் இழைவோடேயே சிந்தனை வெளியிடப்படுவது வழக்கம். ஆகவே சிந்தனையும் படிமத்தோடு இழைகிறது.
பாலையும் வாழையும்’‘மில் வெ. சுவாமிநாதன் நம் கவிஞர்களைக் கிண்டல் பண்ணியதுபோல், ‘கற்பு’ போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறுப்புகளுக்கு அர்ச்சனை பண்ணுவது அல்ல சிந்தனை. கவிஞனின் சிந்தனை உண்மையை நோக்கிச் செய்யப்படும் விசாரத்தின் விளைவுமல்ல. அது கற்பனை வழியில் இயற்கை தரும் அனுபவங்களுக்கு கவிஞனின் இயல்பான ‘பைத்தியக்காரத்தனத்’தோடு விளக்கம் தருவதாகும். கற்பனையும் மேதையின் பித்த நிலையும் கலப்பதால் சிந்தனையும் படிம ரூபமாகவே வெளிப்படுவது வழக்கம். படிமரூபத்தைத் துறந்த சிந்தனை வெளியீடும் உண்டு.
சிந்தனை, கற்பனை, இரண்டின் விளைவாகப் பிறக்கும் படிமத் தினாலேயே கவிதைக்கு ஆழமும் பொருட் செறிவும் கிடைக்கின்றன. ஆனால் வெகு லேசான தூலநிலைகளில், ‘மாமதுரைப் பதி சென்று நான் - அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே’ என்று வரும் வரிகளிலும் அர்த்தமுண்டாயினும், படிமங்களின் அழகுச் செழிப்பு இல்லாததால் அவற்றில் பொருளாழம் இல்லை என - கவித்துவ ரசனையைத் தூண்டாத வரிகள் என - ஒதுக்குகிறோம். படிமம் உள்ளது எனும்போது பொருள் நயத்தையும் குறிப்பிடுகின்றோம்.
உணர்ச்சி, கவிதையின் ரஸத்தோடும் பாவத்தோடும் தொடர் புடையது. படிமங்களைப் போல் உவமை, உருவகம் என்று குறிப்பிட்டு கவிதையின் உணர்ச்சியைப் பிரித்துக்காட்டி விமர்சிக்க முடியாது. ஆனால் கவிதையில் உணர்ச்சி ஓட்டம் நல்ல விதமாகப் பயன் பட்டிருக்கா என்பதைக் குறிப்பிடலாம்.
கவியின் உணர்ச்சி களங்கமற்றது. தசை இன்பத்தை அவன் இசைக்கும் போது, அதற்கே மகோன்னத நிலையைக் கவித்துவ உணர்ச்சி அளித்து விடும். கவிஞன் சிருஷ்டி சக்தியினால் இயக்கப்படுபவன். ஆதலால் அவனது மனோநிலை எந்த உணர்ச்சியின் வசப்படும்போதும் உன்னத (நோபிள்) நிலையை விட்டு அகலாது. தசையில் உழல்கிறது என்று பிரமையூட்டும் போதே, கவிதையில் இரண்டொரு சொற்களேனும் ஒளிந்து நின்று கவிஞனின் பரிசுத்தத்தைக் காட்டிவிடும். ஆனால் தசை யுணர்வு போன்ற கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டவே தூண்டாமல் தான் கவிதை இயங்கும், இயங்கவேண்டும் என்ற முடிவுக்குப் பாய்ந்து விடக் கூடாது. உணர்ச்சி அந்த ஸ்தானங்களில் அலையும் போது, அவற்றுக்கு நேரடியான பிரதிபலிப்பை வரிக்குவரி நாம் கொடுக்க நேரும். நல்ல கவிஞன் சிருங்காரத் தன்மையிலும் பரிசுத்தத்தைக் காணும்போது அதோடு இழைந்துதான் பாடுகிறான். ஆகவே தூல உணர்ச்சியும் இருக்கும்.
கவிதையில் பெரும்பாலும் சம்பவங்கள் இல்லை. அப்படி யிருந்தும், ஒவ்வொரு கவிதையிலும் இயக்கம் உண்டு. இந்த வேகம் கவிதையின் பிரதானமான சக்தியின் வேகம் அல்ல. இது உணர்ச்சியின் வேகம். சக்தியின் வேகம், கவிதையில் உணர்ச்சி பாய்ந்து ஓடுவதற்குப் படுகை யாகும். உணர்ச்சி ஓடும்போது, அதற்கு ஒரு தனிவேகம் உண்டு. அதுதான் கவிதையின் வாக்கிய அமைப்பில் நாம் உணரும் இயக்கம்.
கவிதையில் காணும் உணர்ச்சி இயக்கம், தூல உலகத்து இயக்கங் களைப் போல் நிதானமாகவும் தீவிரமாகவும் செயல்படும். இந்த நிதான தீவிரத் தன்மைகளின் கிரமமான அமைப்பினாலேயே கவிதை, சம்பவங்களற்ற உணர்ச்சி வெளியீடாக இருக்கும் போதும் உருவம் பெறுகிறது. சம்பவங்களைக் கொண்டு உருவம் சமைப்பதும், அதை விமர்சிப்பதும் சுலபம். உணர்ச்சிகளை எழுத்தாளன் சமைக்கவோ கூப்பிட்டு அமைக்கவோ முடியாது. அவை தாமே எழும்பி அடங்குபவை. ஆகவே கவிஞனின் மனதில் இயற்கையின் வேகத்தால் தூண்டப்பட்ட உணர்ச்சிகள் வார்த்தை வடிவம் கொள்கையில், அந்த உணர்ச்சி களுக்கும் ஆரம்ப வேகம், முடிவு வேகம் இரண்டும் தோன்றுகின்றன. இந்த ஆரம்ப, நடு, முடிவு வேகங்கள் கிரமமாக வாசக உள்ளங்களிலும் உணர்ச்சியை எழுப்பி ஓட்டி நிறுத்துவதுதான், உருவ பூர்ணத்துவமுள்ள கவிதையின் வேலை.
வேகமும் உணர்ச்சியும் ஒன்றுக்கொன்று உதவியானவை. படிமங் களின் அழகுத்தன்மையற்றும் உணர்ச்சியின் கம்பீரத்தாலும் வேகத்தின் ஈர்ப்பு சக்தியினாலும் கவிதையினூடே மனம் இழுபட்டுப் போய் விடும். பாரதியிடம் வேகத்தின் சாமர்த்தியம் வெகு அற்புதமானது. உணர்ச்சியின் படபடப்பும் திமிறலும் வேகத்தின் தூண்டுதல் தரும் விளைவுதான். இயற்கை சக்தியின் பரிமளிப்பான வேகத்தை சுமக்கும் காற்று போன்றது உணர்ச்சி. ஆனால் உணர்ச்சிகள் நொய்மையாகி,
‘உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே - மனத்
திண்மை யுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ மாயையே’
என்பன போன்ற வரிகளில் வேகமே பிரதானமாகி இயங்குகிறது.
ஆனால், அதனூடே லேசாக ஓடிவரும் உணர்ச்சி, தீவிரமும் வெடிப்பும் பெற்று,
‘நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை மாயையே’
எனவும்,
‘யார்க்கும் குடியல் லேன் யானென்ப தோர்ந்தனன்-மாயையே-உன்றன் போர்க்கஞ்சு வேனோ
பொடியாக்குவேன் உன்னை - மாயையே’
எனவும் வேகத்தைப் பகைபுலமாக்கிக் கொண்டு சிலவேளை முன்பாயும். ஆனால் பாரதி கவிதைகளில் பெரும்பாலானவை வேகத்தையே துணைக் கொண்டு உணர்ச்சியை அங்கங்கே பிதுக்கிக் காட்டிச் செல்பவைதான். உணர்ச்சியற்றவை என்று நான் சொல்லவில்லை. வேகத்தினால் மனம் தூண்டபட்டே உணர்ச்சியும் உணர்ச்சியின் தூண்டுதனாலேயே வார்த்தைகளும் பிறக்கும். ஆனால் நான் இங்கு சொல்வது, உணர்ச்சிகள் ஓடும்போதும், அவற்றின் கீழுள்ள வேகம் என்ற படுகையே கவிதைகளுள் மிதந்து தெரிகிறது என்பதுதான்.
இது பாரதி கவிதைகளின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். மன உணர்ச்சிகளையும் மீறிய ஓர் ஆத்ம வேகம் பாரதி கவிதைகளுள் வாசகனை ஈர்த்துவிடுகிறது - வார்த்தை பேசாது அமைதியிலிருக்கும் போதும் ஓர் உயர்ந்த மனிதரின் முக ஒளி வசீகரித்து விடுவதுபோல. கவிதையின் உணர்ச்சியையும் வேகத்தையும் பிரித்து உணர்பவர்கள், பாரதி கவிதைகளில் உணர்ச்சியைவிட வேகம் மிதப்பாயிருக்கிறது என்று நான் சொல்வதை உணர்வார்கள்.
பாரதியை மகாகவி என்று இதற்காகவே ஒப்புக்கொள்கிறோம். ஏனெனில் பாரதி, வாசகர்களைப் பிடிப்பதற்காக அழகுகளையோ, தேர்ந்தெடுத்த படிமங்களையோ, படபடக்கும் உணர்ச்சி ஓட்டங் களையோ கையாளவில்லை. தன்னோக்குக்கு தன்னூடேயிருந்து கவிதை வெளிப்பட விட்டுவிட்டான். ‘குயில்’லில் அவன் தன் இயல்புக்குக் கொடுத்த சுதந்திரத்தை, இதர உதிரிக் கவிதைகளிலும் காண்கிறோம். ‘குயில்’ ஒரே ரசத்தில் இல்லை. கிண்டலிலிருந்து உன்னதமான காதல் வரை,
அழகுணர்ச்சியிலிருந்து நகைச்சுவை வரை, வெடித்து எழும்பும் எல்லாவித தன்மைகளுக்கும் எல்லாவித மனோ நிலை (மூட்)களுக்கும் அதில் வெளியீடு தந்துவிட்டான். அதனால் அவன் கவித்துவம் மாசுபடவில்லை. பாரதி தான் தேர்ந்தெடுத்த ரஸம், தன்மை, மனோநிலைகளுக்காகக் கவிதை பாடவில்லை. கவிதையின் வெளியீடு நேரும்போது அவ்வப்போது தோன்றிய மனோநிலை களுக்கே கவிதையை அர்ப்பணித்ததால்தான் இந்தக் கலப்பு நிலைகள் அவன் கவிதையில் இருக்கின்றன.
தேர்ந்தெடுத்தவற்றுக்குக் கவிதை செய்வதானால், ரசங்களைக் கலப்பதற்கு மனம் இணங்காது. சுருதி ஒருமைப்பட்டிருக்கும்.
பாரதி உணர்ச்சிகளையும் தேர்ந்து கொள்ளவில்லை. பாஷை எப்படி ஒரு சாதனமோ, அப்படியே தன் கவிதைக்கு, உணர்ச்சியையும் வாய்க் காலாக்கிக் கொண்டான் என வேண்டும். கவிதை அவனது சாதனம் அல்ல. கவிதைக்கு அவன் தன் மனோநிலைகளை, அதாவது தன்னை சாதனமாக்கிக் கொண்டான். மகாகவிகளைப் பற்றிய உண்மை
இது. அவர்கள் தங்களைத் தாங்களாக இயக்கமுடியாது. இயற்கை அழைக்கும்போது தலைகுனிந்து அதற்கு இணங்கி இயங்குபவர்கள் அவர்கள். அந்த இயல்பான இயக்கம் பாரதி கவிதைகள் முழுவதிலுமே காணக்கிடைக்கிறது எனலாம்.
எனினும், மேதை கலைத்துறையில் இயங்கும்போது மேதையினா லேயே விதிக்கப்பட்ட சில எல்லைகளுக்கு உட்பட வேண்டும். (அந்த எல்லைகள் பண்டிதத்தனமானவை அல்ல.) அங்ஙனம் இணங்கினால் தான் ரசனை திருப்தியடையும். ரசனை பூரணமான திருப்தியை அடையும்போதுதான் படைப்பின் கலா அம்சங்கள் நிரம்பியிருக்கின்றன என்று ஆகும். பாரதி தனக்கு இயற்கை அளித்த வாய்க்காலினூடே கவிதையைப் பாய்ச்சும்போது சிரத்தை எடுத்திருந்தால்தான் தன் படைப்புகளுக்கு இந்த கலா முழுமையைக் கொடுத்திருக்கலாம். கலைப்படைப்பு நிரப்பம் பெறுவதற்கு மேதையின் சுயேச்சையான சிதறல் போதாது. அந்தச் சிதறலை நிதானமாகச் சீராக்கி ஒழுங்குபடுத்தி இன்ப ஊட்டலுக்குக் குந்தகம் வராமல், இன்பத்தை முழுவதும் பரிமாறும்படிக்கு சிரத்தை எடுக்க, கைத்திறன் (கிராஃப்ட்) சிறப்படைய வேண்டும்.
கவிதையில் கைத்திறன், உணர்ச்சி வெளியீட்டினால் கவிதை கொள்ளும் கலா உருவத்திலும், படிமங்களின் சீரமைப்பிலும், கவிதை வார்த்தைகளின் மூலம் சொல்லும் விபரங்களின் தொடர்பு அறாத முழுமையிலும், சிரத்தை செலுத்தும். இங்ஙனம் சமைக்கப்படும்போது தான் கவிதை, ரசனையில் சீராக எழுச்சியை உண்டாக்கிச் செல்ல முடியும். வெறும் வேகமும் இயற்கையனுபவமும் மட்டும் கவிதா அனுபவத்துக்குத் தயாராக வரும் உள்ளத்திற்குத் திருப்தி தருவதில்லை. உயிரற்ற படிமங்களின் மாலைகளும் கவிதை அல்ல. இதுவரை குறிப்பிட்ட தனி அம்சங்கள் முழுவதுமே நிரம்பியிருக்க வேண்டும். அப்படி நிரம்பிய கவிதைகளை பாரதியிடமிருந்து பொறுக்குவது சுவாரஸ்யமான ஒரு வேலை. பொறுக்கப்பட்ட கவிதைகள் தான் பாரதியின் கலைத்தன்மையின் முழுமைக்கு அத்தாட்சிகளாகும்
எனினும் இந்த அளவு கோல்களை மட்டும் கொண்டு கவிதைகளை நிர்ணயிக்கப் புறப்படும்போது இவற்றுக்குள் இணங்காமல் குறைந்தவை போல் தெரிந்தும், கவிதா இன்பத்தை அளிப்பதில் குறைவற்றுத் தெரியும் கவிதைகள் அதிகம். ஆகவே இத்தேர்வுத் தொகுப்பு முடிவானதாகவோ முழுமையான தாகவோ இருக்காது. தற்போது நாம் ஏற்றுக்கொண்ட
படிமச் செழுமை, உணர்ச்சி வெளியீட்டின் மூலம் கவிதா உருவம் கிரமப்பட்டிருத்தல் என்ற சாரங்களுக்குள்ளே தெரிகிற கவிதைகள் இவை என்றுதான், இந்தப் பொறுக்கப்பட்டவற்றைச் சொல்லலாம்.
பாரதியின் மிகச் சிறந்த கவிதைகள் இவை மட்டும்தான் என்பதல்ல. ஆனால் சற்ற விஸ்தீரணத்தை அகலமாக்கிப் பார்ப்பவர்களும் இவற்றைத் தவற விட்டவிட முடியாது.
பாரதியின் தேசிய கவிதைகளிலிருந்து ஒன்றையும் குறிப்பிட முடியாமல் போகிறது. ஏனெனில் அவற்றுள் கவிஞனின் கம்பீரமும் இயற்கை சக்தியின் துடிப்பான வேகமும் இருந்தாலும் கற்பனை விளை வான படிமங்களும் கற்பனையும் செழுமை குறைந்து காண்கின்றன. நாட்டின் தேவையான விடுதலை உயர்வைச் சொல்லும்போது இருக்கும் உணர்ச்சி வெறியும், கற்பனையழகை விட்டுவிடுகிறது. ‘பாரத நாடு’ என்று பிரிக்கப்பட்ட பத்தொன்பது கவிதைகளுள்ளும் திருப்பிச் சொல்லல் நேர்ந்துள்ளது. நாட்டைப்பற்றிய தூலமான அம்சங்களின் பட்டியல்கள் கையாளப்பட்டுள்ளன. ‘பாரத மாதா நவரத்தின மாலை’, ‘பாரத தேவியின் திருத்தசாங்கம்’ என்ற இரண்டிலும் பாண்டித்யம் மிகுந்து, வேகமே சற்றுப் பின் நின்று விடுகிறது. அவை தவிர ஏனைய வற்றில் பாரதி இயல்புகளான உணர்ச்சியும் வேகமும் இருந்தபோதிலும், கவிஞன் இயற்கையனுபவத்தைக் கையலம்பிவிட்டு, தேசத்தின் உயர்வுகளைச் சரித்திர நிகழ்ச்சிகள் மூலமும் நாட்டின் அறிவுச் செல்வங்கள் இத்யாதி மூலமும் அளவிட முயன்றது தெரிகிறது. எனவே கலைத்தன்மை குறைவுபடுகிறது.
எனினும் பாரதநாட்டைத் தாயாகக் கொள்ளும் கவிதைகளில்
ஓர் உணர்ச்சிச் சிறப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. உணர்ச்சிச் சிறப்பினால் வாசக உள்ளத்தில் அனுபவம் ஏற்படும்... கவிதையின் பொதுத்தன்மையான இன்பம் அதன் விளைவுதான். ‘பாரதமாதா’, ‘எங்கள் தாய்’, ‘வெறிகொண்ட தாய்’ என்ற கவிதைகளில் நாட்டின் தூலத்தன்மைகள் கழற்றிவிடப்பட்டுள்ளதால் கவிதை சுயேச்சையாக அழகுபெற முடிந்திருக்கிறது. அங்கங்கே படிமங்களின் சிறப்பு எல்லாக் கவிதைகளிலும்போல் எறியப்பட்டிருந்தாலும், படிமங்களின் மூலமே கவிதைகள் சொல்லப்படாததால் கற்பனைத் தளம் அற்றிருக்கிறது. தேசிய கவிதைகள் சொல்லப்பட்டது உணர்ச்சித் தளத்தில் மட்டுமே நின்றுதான்.
தேசிய கவிதைகளுள், பாரத நாடு, தமிழ் நாடு,சுதந்திரம், தேசிய இயக்கப் பாடல்கள், தேசிய தலைவர்கள், பிறநாடுகள் என்ற ஆறு பகுதிகள் இருக்கின்றன. இவற்றுள் உணர்ச்சிகூட கம்மியாகி இருக்கும் பாடல்கள் ‘தேசிய தலைவர்கள்’ பகுதியில் வருகின்றன. கவிஞனை ஒரு தலைவனின் வியக்தி தூண்ட முடியாது என்ற உண்மையைத்தான் இது காட்டுகிறது.
‘சுதந்திரம்’ என்ற பகுதியில் ‘விடுதலை’, ‘சுதந்திர பள்ளு’ என்ற கவிதைகளைக் குறிப்பிட்டு, பாரதி ஒரு தீர்க்க தரிசனம் உள்ளவன் என்றும் அவரது மகாகவி ஸ்தானத்துக்கு அந்த தீர்க்கதரிசனம் குறிப்பிடத் தக்கது என்றும் சிபார்சித்து இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவிதை களில் அனுபவ ஆழமோ செழிப்போ இல்லை. கவித்துவ முழுமை இல்லை. கவிஞன் எழுதுவதெல்லாம் எதிர்காலத்தைச் சொல்லும் பௌஷ்யத் புராணமாக இருக்கவேண்டும் என்று - கவிஞனின் எதிர்காலம் பற்றிய கனவை இப்படிப் பிரம்மாதப் படுத்திக்கொள்வது அவனையே தவறான சிமிழில்தான் அடைத்துவிடுகிறது. எந்தச் சிமிழையும் மீறிய கவித்துவத்துக்காகவே பாரதி போற்றத் தக்கவன் என்றதற்குச் சான்றுகளான கவிதைகள் உள்ளன.
‘தமிழ் நாடு’ பகுதியின் ‘செந்தமிழ்நாடு’ கவிதையில்: 1, 3, 5, 9-வது பத்திகள் (ஸ்டான்ஸா) செழிப்பானவை. ஆனால் அதில் உணர்ச்சி லயத்தின் ஒழுங்கு இல்லை. அதோடு பட்டியல் ரீதியாகவும் கவிதை அமைந்து விட்டது. மேற்படி நான்கு ஸ்டான்ஸாக்களை மட்டும் பிரித்துக் குறிப்பிடுவது தொகுப்புக்கு உபயோகப்படாது. ஒரு கவிதை யின் முழுப் பகுதிகளிலும் படிம, உணர்ச்சிச் செழிப்பும் ஒழுங்கும் இருந்தாலே அதைக் குறிப்பிடலாம். ‘தமிழ்’ கவிதையின் நான்காவது பத்தியும் அப்படி முழுக்கவிதையின் குறுகிய தன்மைகளையும் மீறி நிற்பதாகும். இப்படிக் கவிதைகளுள் சிற்சில பத்திகளை மட்டும் பொறுக்கிப்படிப்பது இடைச் சொருகலைப் போலவே இன்னொரு முனையில் கவிக்கு நஷ்டம் செய்வதுதான். பொறுக்கி ரசிக்கத்தக்க பத்திகள் பல தேசியகீதங்களுள் மட்டுமல்ல, மற்றப் பகுதிகளினுள்கூட அபரிமிதமாகக் கிடைத்தாலும், ஆரம்பம் தொட்டு முடிவுவரை கலைத்தன்மையின் நிரப்பம் உள்ள கவிதைகளை மட்டுமே பொறுக்க நேர்கிறது.
நமது அளவுகோல்களுக்கு ஏற்ப அமைந்து, தேசியகீதங்கள் 53 பாட்டுகளினுள்ளும், கோக்கலே சாமியார் பாடல் ஒன்றே தேறுகிறது. அதிலும் இறுதிவரி கவிதையோடு ஒட்டாமல் தளர்ந்துவிட்டாலும் இக்கவிதையில்தான் பூரண நயம் காணக்கூடியதாக இருக்கிறது. கவிதையின் பாவம் கேலியான பக்தி பாவம். ரஸம் நகைச்சுவை. ஆகவே உணர்ச்சியில் தொய்வு இருந்தாலும், நகைச்சுவை கையாளும் உணர்ச்சிக்குக் குந்தக மில்லாத தொய்வுதான் அது. படிமங்கள் யாவும் ஒருமுனைப்பட்டு ஒரே ரஸத்துக்கு உதவியாக இயங்குவன. ஏற்றுக் கொண்ட விஷயமும் முழுக்க சொல்லப்பட்டுவிட்டது. கோக்கலே சாமியார் பாடலில் இருக்கும் உணர்ச்சிநயம், கற்பனை நயம், இதர தேசிய கீதங்களில் சிதறல் சிதறலாகத்தான் இருக்கின்றன. இதர கவிகளில் சில வரிகளில் அவை கோக்கலே சாமியார் பாடலிலுள்ள வற்றைவிட சக்தியும் வளமும் வாய்ந்ததாக இருந்தாலும், முழு உருவத் தினூடேயும் அந்த சக்தியும் வளமும் பாய்ந்ததாக அவை இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
எனினும் கவியின் உன்னத நிலை இக்கவிதையில் இல்லை என்ற குறையை ஒப்புக்கொள்ள வேண்டும். உணர்ச்சியினாலும் ரஸபாவத்தின் ஒருமையாலும் சமைந்தாலும் கவித்துவமான கற்பனை என்று இக் கவிதையிலுள்ள படிமங்களைக் கூற முடியாது. எனவே அதையும் உருவ முழுமை என்ற ஒரே காரணத்துக்காக ஒப்புக்கொள்ள முடியாது.
‘தெய்வப் பாடல்கள்’ பகுதியில் சில கவிதைகள் முழு நயத்தோடு கிடைக்கின்றன. பாரதியின் முழு சக்தியும் தெய்வத் தன்மைக்கே அவரது மனசின் இணக்கத்தோடு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது அத்தாட்சிதான். தேசிய வரம்புகள், சில குறிப்பிட்ட ‘நோக்கங்கள்’, ‘பணிகள்’ யாவற்றையும் மீறி, ஏன் கலையின் அழகுத் தன்மைகளைக்கூட மீறி,
‘நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டி லேதனி இன்பத்தை நாட்டவும்
பண்ணிலேகளி கூட்டவும்...’
போட்ட வரம்புகளை இயற்கையின் மூல சக்திக்கே தன்னை பாரதி அர்ப்பணித்துக் கொண்டான். அதன் விளைவாக, மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு,
‘வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெ லாம் இடை யின்றியிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்...’
என்று சக்தியையே இசைக்கக் குரலெடுப்பதுதான் பாரதியின் இயல்பாயிற்று. அத்தகைய இயல்பைச் சரடாக்கிப் பிறந்த கவிதைகள்தான் ‘ஊழிக்கூத்து’, ‘ஞாயிறு வணக்கம்’, ‘வெண்ணிலாவே’ என்ற தெய்வப் பாடல்களும், பல்வகைப் பாடல்களில் ‘ஒளியும் இருளும்’, ‘நிலாவும் வான்மீனும் காற்றும்’, ‘மழை’ என்ற பாடல்களும். இவற்றோடு நம் தேர்வில் சித்திப் பவையாக, முதலாவது ‘வள்ளிப்பாட்டு’, ‘ஜயபேரிகை’ என்ற கவிதைகளையும் சேர்க்க வேண்டும். கவித்துவ சிந்தனை ஒன்றுக்காக ‘நிலாவும் வான்மீனும் காற்றும்’ கவிதையைச் சேர்த்ததால், அதோடு ‘நந்தலாலா’,‘அச்சமில்லை’ கவிதை களையும் சற்றுச் சேர்த்துப் படிப்பது நல்ல அநுபவமாகும்.
மேலே குறிப்பிட்ட முதல் எட்டு கவிதைகளிலும் பாரதியின் கவித்துவம், சக்தி, கலா உருவத்துக்கு ஆதரமான உணர்ச்சியின் ஆரம்ப, நடு, இறுதி ஓட்டங்கள், படிமங்கள் முதலிய தன்மைகள் முழுமையாக உள்ளன. ஆனால் ‘நிலாவும் வான்மீனும் காற்றும்’ கவிதையைச் சற்று ஒதுக்க வேண்டியுள்ளது. காரணம் அதில் கவிதையின் முழுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் முறிவுகள் இருக்கின்றன. ஆனால் காற்று அள்ளி வருவதாக அவர் குறிப் பிடும் சப்தங்கள் அவரது கவிதை இதயத்தைக் காட்டுகின்றன.
இயற்கையின் ஒரு தன்மையை மட்டும் சம்பிரதாய ரீதியில் விழுங்கி விடும் மனப்பான்மைதான் போலியான கவிஞர்களின் கலைநாகரீகம். பாரதியின் கவித்துவ இயல்புக்கு அத்தாட்சியாக, அவர் காட்டும் அழகுணர்ச்சி ரஸனைகளையே மீறிய உண்மை நிரம்பிய-இதயம் ஒத்த அனுபவமாக - காற்றுக் கொணரும் சப்தங்களில் அவர் லயிப்பதை அக்கவிதை காட்டுகிறது. பாரதி கவிதைகளுனுள்ளே அதுபோல் அனுபவ ஆழம் உள்ள கவிதை இன்னொன்று இல்லை என்பது என் அபிப்பராயம். இதர கவிதைகளினுள் படிமத்தின் அழகும் கற்பனைச் சிறப்பும் புதிய அனுபவங்களை அழகு ரீதியாகச் சொல்வதால் அவற்றில் அனுபவ ஆழம் இருக்கும் போதும், மனசில் புதுமை நிரம்புவதைவிட ரஸனை நிரம்பி விடுகிறது. ஆனால் ‘காற்றெனும் வானவன்’ கொணரும் ‘மண்ணுலகத்து நல்லோசைக’ளைப் பாரதி ‘பாடி மகிழும்’ போது அங்கே, படிமம், கற்பனைச் செறிவு ஏதும் இல்லாத நேரடித் தொற்றுதல் இருக்கிறது. காரணம் அவர் சொல்லும் நல்லோசைகளின் தன்மைகள்தான். ‘இவற்றைப் போய் ‘நல்லோசை’கள் என்று ‘பாடி மகிழ்கிறா’னாமே’ என்ற முரண்படும் எமது முரட்டுத் தனமாக அந்த அனுபவத்துள் ஈர்க்கும் சக்திதான் அது. எல்லா சப்தங்களுக்கும் உன்னதத் தன்மையைக் கொடுக்கும் கவியுள்ளம் நன்கு அதில் புலனாகிறது. அதோடு லோகாயதமாகப் பார்க்கும் கண்ணுக்குப்படும் மேதையும் பித்தமும் அங்கு இருக்கிறது.
பல்வகைப் பாடல்களில் அதோடு சேர்த்துக் குறிப்பிட வேண்டிய ‘மழை’யில், உணர்ச்சி ஓட்டத்தின் முழுமையும் படிமங்களின் செறிவும் இருந்தாலும், இடையிடை கருத்து அமைப்பையும் கருத்து ஓட்டத்தை யும் தடுத்து உதாசீனம் செய்து இடையிடும் ‘ஜதி’ வரிகள் இசைத் தன்மையைத்தான் எழுப்புகின்றன. ஆனால் ‘ஒளியும் இருளும்’ கவிதை பூரணமான சாதனை எனலாம். ‘சான்றோர்’ பகுதிக் கவிதைகள், ‘தேசிய தலைவர்கள்’ கதியைத்தான் அடைந்துள்ளன. ‘சுய சரிதை’ப் பகுதியும் குறிப்பிடத் தக்கதல்ல.
ஞானப்பாடல் பகுதியில் ‘காலனுக்கு உரைத்தல்’, கவித்துவ முரட்டுத் தனமும் பித்தும் கொண்டுள்ளது. கண்ணன் பாட்டுகளைத் தவிர்த்தால், வள்ளிப்பாட்டு(1), ஊழிக்கூத்து, ஞாயிறு வணக்கம், வெண்ணிலாவே, ஒளியும் இருளும் என்ற கவிதைகள் உணர்ச்சிலயத் தினால் உருவ முழுமை பெறுகின்றன. யாவற்றுக்கும் சிகரம்வைப்பது ‘ஊழிக்கூத்து’ தான். ‘கண்ணன் பாட்டு’களுள், கண்ணம்மா - என் குழந்தை, கண்ணன் என் காதலன், காட்டிலே தேடுதல், கண்ணம்மா என் காதலி, காட்சி வியப்பு, பின்னே வந்து நின்று கண் மறைத்தல் என்ற கவிதைகள் தேறுகின்றன. கண்ணனை அவர் கண்ட பாவத்தின் தூய்மைத்தன்மைகள் பற்றிக் கவலை வேண்டாம். வ.வே.ஸு.அய்யரே கூறுகிறபடி, பாரதியின் கவித்துவச் சாதனையைத்தான் இங்கு குறிப்பிட வேண்டும். இதிலும் பாரதி தெய்வீகத்தையே உதறிவிட்டு (சுதந்திரம்) எடுத்துக் கொண்டு சிருங்காரமாகப் பாடிய இடங்களில்தான் அரிய கவிதை களைச் சந்தித்துள்ளான்.
இவைகளை, படிமங்கள், உணர்ச்சி வெளியீடு என்ற கயிறுகள் கட்டி அளந்து பார்க்கும்போது, இவை யாவற்றினுள்ளும் தேறி வருவது ‘ஊழிக்கூத்து’ என்றே எனக்குப் படுகிறது. அதுபற்றிச் சிலகுறிப்புகள் சொல்வதன் மூலம் பொறுக்கப்பட்ட இதர கவிதைகளுக்கும் நமது அளவுகோல்கள் சார்த்தப்படும் முறையை உணரலாம்.
இக்கவிதையில் ஐந்து பத்திகள் (ஸ்டான்ஸா) இருக்கின்றன. ஒரு வரி ஒவ்வொரு பத்திக்கும் ஒரே இறுதி வரியாக உள்ளது. கவிதையின் கருத்தம்சம் புவன அழிவில் பராசக்தி என்று பாரதி சதா குறிப்பிடும் மூல சக்தியின் தொழிலைப் பற்றியது. அழிவில் துவங்கி, மோனத்தில் இலகும் கடவுளைக்கண்டு அழிவுச்சக்தி சினம் விலகி அவனைத் தொடுவதால், மீண்டும் சிருஷ்டிக்கு அதேசக்தி செயல்பட ஆரம்பிக் கிறது என்ற குறிப்புணர்த்தலோடு கவிதை முடிகிறது. ஆகவே சிருஷ்டி வளையத்தைக் கீறிக்காட்ட வந்து, பாதியில் குறிப்புக் காட்டி நிறுத்துவது தான் கவிதையாகிறது. கவிதையின் கருத்தம்சம் ஒரு முற்றாக வரை யறுக்கப்பட்டுள்ளது கவிதையின் சிறப்புகளுள் ஒன்று.
கவிதா உள்ளத்தில் உன்னத (நோபிள்) தன்மை அடுத்தது. சக்தியை ‘அன்னை’ என்று அழைக்கிறாரேயன்றி, அம்மா என்கிற நெருங்கின பிரயோகம்கூட இல்லை. இதனால், தாய் என்றிருக்கையிலும் தசைத் தொடர்பாக நாம் லோகாயதத்தில் உணரும் ‘அம்மா’ விலிருந்து உயர்த்திச் சக்தியை வைத்துள்ள உன்னதத் தன்மை வெளியாகிறது. அன்னை என்ற சொல் திரும்பவும் சொல்லப்படும்போது, அழைக்கும் குரலாகக் கேட்கிறது. குழந்தை அழைக்கும் குரலாக அது ஒலிக்க வில்லை. அமரத் தன்மையிலிருக் கும் பொதுத்தாயை மண்ணிலிருந்து அண்ணாந்து நோக்கிக் குழந்தைத்தனமான தேவைக்காக இன்றி பயத்தால் விளைந்த பிரமிப்பில் கூப்பிடும் குரல் அது. இந்த பயத்தை ஊட்டும் ரஸம்தான் கவிதையில் ஓடுவது.
கவிதை என்ற சக்தியும் பய உணர்ச்சியும் பக்தி பாவத்தோடு அளவொத்து இணைந்திருப்பதால் படிக்கும்போது கவிதை யிலிருந்து நிதானமாகவே தொற்றுதல் நேர்கிறது. திமிறலான தொற்றுதல் இல்லை. கவிதையில் விரும்பத்தக்கது நிதானம் தான். ‘நிலாவும் வான்மீனும் காற்றும்’ மில் ஆரம்பப்பத்திச் சில வரிகள் வேணுமென்றே திமிறிக் கொள்வது போன்ற குறைபாடு இங்கில்லை. உணர்ச்சிகள் எழுந்து ஓடி அடங்கும் இயல்புக்கு ஒத்து வருவதுதான் கவிதையாகும்.
உணர்ச்சியின் மூலம்தான் கவிதையில் உருவம் அமைகிறது. படிமங்கள் உணர்ச்சியை அர்த்தரீதியாக உணர்த்திச்செல்லப் பயன் படும். ‘ஊழிக்கூத்து’வில் அழிவின் உணர்ச்சி திடீரென எழுப்பப்படுகிறது.
இயற்கைச் சக்திக்குக் கொடுக்கப்பட்ட மூர்த்திகரங்கள் (பெர்ஸானி ஃபிகேஷன்) பயங்கரமாக எழும்புகின்றன. பய ரஸமும் உணர்ச்சியோடு கூடி எழுகிறது. ‘உன்’ என்று இடையில் விளிப்புக்குறி வந்ததும், எதிரே ஒரு தனி வியக்தி தோன்றுகிறது. ‘அன்னை’ என்ற விளிப்பில் தான் கவிதையின் பத்திகளின் ஓட்டம் தடைப்பட்டுத் தேங்குகிறது. ஆயினும், அத்தேக்கத் தினால் உணர்ச்சி தொய்யவில்லை. படிமங் களின் உணர்த்தல்கள் ஸ்தம்பிக்கின்றன. அவ்வளவுதான். உணர்ச்சி யைத் திடீரென இவ்வாறு தட்டி எழுப்பி, எழுப்பிய வேகத்திலேயே கொண்டு சென்று, இறுதியில் சமனப்படுத்திக் கவிதையை முடிப்பது தான் ‘ஊழிக்கூத்து’ வில் ரசிக்கத்தக்க அம்சம்.
ஆழ்ந்த கற்பனைவளம் இக்கவிதையில்தான் அதிகம் தெரிகிறது.
‘சிந்தை நழுவும் வேகம்’,
‘பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலைய’
போன்ற வரிகளில் கட்டுமீறிய சக்தியின் இயல்பு சித்தரிக்கப்படுகிறது.
சக்தியோடு பாரதியின் உள்ளம் ஐக்கியம் அடைந்ததற்குச் சான்றும் இக்கவிதைதான் எனலாம். புன்னகைக்கும் அழகுருவங்களாகத்தான் சக்தி தோன்ற வேண்டும் என்பதில்லை; புயலிலும் மின்னலிலும் இடியின் உடையும் சப்தத்திலும் இருண்டுகவியும் முகில்களிலும் கூடத்தான் அழகு உண்டு. ஆனால் அந்த அழகு மனசில் சிருங்கார இயல்øபை மூட்டும் அழகல்ல, பயங்கரத்தை எழுப்பி இயற்கையின் முன் மனிதனைத் தலைகுனிய வைக்கும் அழகு. பாரதி, சக்தியின் ஊழிக்கூத்தில் கண்ட அழகு அதுதான்.
எழுத்து, இதழ் 34-35, அக்டோபர்- நவம்பர் 1961.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சொல்லின் வனப்பே வனப்பு-1
- கவிஞர் சுகுமாரன்
22 பிப்ரவரி 2011
-------------------------------------------
(கட்டுரையின் இறுதிப்பகுதி)
,,,,கவிதை என்பது வடிவம் சார்ந்தது மட்டுமல்ல. அது சிந்தனையும் உணர்வும் சார்ந்தது. இரண்டு: ஒவ்வொரு காலப் பகுதியிலும் எந்த இலக்கிய நடைமுறை பரவலாக இருக்கிறதோ அதில்தான் படைப்புகள் உருவாகும். நவீன காலத்தின் நடைமுறை உரைநடையைச் சார்ந்தது. எனவே கவிதை உரைநடையில் எழுதப்படுவதே பொருத்தம். தவிர தமிழில் இதுவரை எழுதப்பட்டிருக்கும் இலக்கணம் செய்யுளுக்கானது. அதில் புதிய நடைமுறையைப் பொருத்திப் பார்ப்பது வியர்த்தம். இந்த நுட்பம் புரியாமல் போனதன் மூலமே வரிகளை மடக்கிப் போட்டால் அது புதிய கவிதை என்ற நம்பிக்கையும் அவநம்பிக்கையும் உருவானது.
ஆனால் கவிதை இதைக் கடந்தது. ஒரு மொழியின் உள்ளார்ந்த மரபு எப்போதும் புதுமையையே வேண்டி நிற்கும். வடிவத்திலும் சிந்தனையிலும் புதியவற்றுக்கே இடம் கொடுக்கும். அவையே படைப்பு என்று அறியப்படும். இது மொழியியல்பு. ஒரு மனிதன் தன்னைப் பிறரிடமிருந்து வேறுபட்டவனாக அறியப்படவும் அறிவிக்கவுமே விரும்புவான. இது மனித இயல்பு. இவைதாம் கவிதையைத் தூண்டும் கூறுகள்.மரபான செய்யுள் வடிவம் அளித்ததை விட உரைநடை வடிவம் இலக்கணம் பயின்றிராத ஆர்வலனுக்குத் தன்னுடைய சிந்தனையை, உணர்வைக் கவிதையில் எழுதும் சுதந்திரத்தைத் தந்தது. இந்த அர்த்தத்தில் புதிய கவிதை ஜனநாயகத்தன்மை கொண்டது. அந்த ஜனநாயகத்தன்மையே கோளாறுகளையும் கொண்டு வந்தது. எல்லாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பது சுதந்திரம். சமூக நோக்குள்ளவர்கள் ஈடுபட வேண்டும் என்பது பொறுப்பு. சமூகத்தைச் சுரண்டுபவர்களும் ஈடுபடலாம் என்பது குறைபாடு. எல்லாரும் கவிதை எழுதலாம். ஆனால் அதிலும் கவிதையும் கவிதைப் போலிகளும் உள்ளன. அதை இனங்காண முடிகிற ஆர்வலனே கவிதையை வாழச் செய்கிறான். சரி, ஒரு கவிதையை இனங்காண்பது எப்படி?
&&&&&&&&&&&&&&&
தந்தையே,
நீங்கள் கொடுத்து சென்றது
அட்சயபாத்திரம்
எங்கள் கையில் இருப்பதோ
பிச்சைப்பாத்திரம்.
 - மு.மேத்தா
&&&&&&&&&&&&&&
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன்மணல்
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல்தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒருபிடி நிலம்.
-பிரமிள்
&&&&&&&&&&&&&&&&
மேலுள்ள இரண்டு பகுதிகளில் எதைக் கவிதை என்பீர்கள்?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Kutti Revathi facebook


Monday, ‎October ‎12, ‎2015Yesterday at 7:33pm · Chennai · Edited ·


ஆடும் பாம்பு - சார்லஸ் போதலேர்

தமிழில்: பிரமிள்


"சூரியன் தகித்த நிறம்" தொகுப்பு


தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம்.



(சார்லஸ் போதலேரின் கவிதைகள், சிக்கலான உணர்வுச்சேர்க்கைகளும், சொற்கோர்வைகளும் கொண்டவை. பிரமிள், அவற்றைத் தமிழ்ப்படுத்தியிருக்கும் பாங்கும் நளினமும், அவற்றின் போதம் தொனிப்பவை.)



ஆடும் பாம்பு


* கட்டுக்கடங்காத கண்மணியே, உன் வடிவுடலில் என் பார்வையின் ஆர்வத்தைத் தூண்டும் உன் பீதாம்பரத்தோல். கசப்புகள் கமழ மணந்து அலையும் உன் கூந்தலின் ஆழங்காணாத சமுத்ரத்தில் மண் வண்ணமும் நீலமுமாய் மாறிமாறி எழும் அலைகள் மேல் வைகறைக் காற்றெழ விழித்தெழுந்த கப்பலாய் ஒரு தூரத்து ஸ்வர்க்கம் நோக்கி பாய்விரித்தேகும் கனவுதோய்ந்த என்னுயிர்.

* உன் கண்கள் கசப்போ இனிப்போ தோன்றாத இரண்டு குளிரேறிய இரத்தங்கள்; அவற்றுள் பொன் உருகி உருகிய எஃகுடன் கலக்கிறது.

* அழகு ததும்பும் அலட்சியங்களோடு கவிதையின் தாளகதியில் செல்லும் நின் நடை! இது பற்றி ஒன்று சொல்லலாமா? கொம்பு நுனி ஒன்றில் நின்றாடும் பாம்பு நீ!

* உன் இளம் சலிப்பின் பளுவில் குழந்தைமை ததும்பும் உன் தலை குட்டியானைத் தலையாய் மெல்லென ஆட, உன்னுடல் கடைந்தெடுத்து நீண்டு கடலின் உவர்நீரில் துடுப்புகள் புதைத்து நழுவும் கப்பலாய் இருபுறம் சரிந்து சரிந்தாடுகிறது.


* கர்ஜித்துப் பனிப்பாறைகளாய் நகரும் நதிகள் நீர்வீங்கிய ஓடைகளாய் உமிழ்நீர் ஊறி, உன் பற்களில் விளிம்பு கட்டும்போது, கூர்மை கொண்டு எனை மீறும் நாடோடித் திராட்சை மது ஒன்றை, என் இதயத்தில் நட்சத்திரங்களைக் தெளிக்கும் ஒரு திராவகவெளியை ருசிக்கிறேன்.

குளத்துப் புழை ஆறு

குளத்துப் புழை ஆறு
இந்நேரத்தில்
இவ்வரிகளை எழுதும்
இந்நேரத்தில் கூட
ஓடிக்கொண்டிருக்கும்
தோணிகள் ஓட்ட முடியாத
குளத்துப் புழையாற்றின்
கரைகளில் மீன்களுக்குக்
கடலை வாங்கச் சொல்லி
கொஞ்சும் மலையாளத்தில்
நச்சரிக்கும் சிறுமிகளின்
வீடுகள்
எந்தச் சரிவில் இருக்கும்?
எனக்கு ஏனோ
வடபுறத்தை விடத்
தென்புறமே பிடிக்கிறது
அதனால் அவர்களின் வீடு
தென்சரிவிலேயே உயரமான
தேக்கு மரங்களினூடே
மணிகண்டனின் ஆராதனை
மணியொலி கேட்கும்
தூரத்தில்
இருக்கட்டும்
குளத்துப் புழையாறு
நூறாயிரம்
கிருஷ்ண சுக்ல பட்சங்கள்
கடந்தும் ஓடுகிறது
கால நினைவற்றுத்
திளையும் மீன்களோடும்
தென்சரிவுத்
தேக்கு மரங்களோடும்.

http://circumferencemag.org/?p=1493
Hail on First Petit-Bourgeois Streetby Arseny Tarkovsky
tongues in the towerpound the bells to sound
wind lifts         everyone
rushes into entrances   doors
slam     along the sidewalk sandals
patter   rain chasing behind
her heart pounds
her wet dress itches
& the roses are soaked
hail
shatters
above the very linden
still
little by little    windows open—
cobblestones slick in silver scales
& children gobble up the nuts of icetranslated from Russian by Philip Metres & Dmitri Psurtsevmore>>


The Huntby Arseny Tarkovsky
is done
I’m trapped
a hound hanging on my thigh
I throw my head back until my horns rest on my shoulders
and I trumpet
they slash my tendons
and jab a rifle in my ear…
He falls on his side, clinging to the wet twigs with his horns.
I can see his dim eye, a blade   of grass stuck on it.
A black stiffened apple, reflecting nothing.
They’ll bind the legs together, pass a pole through, and toss it on their shoulders.translated from by Philip Metres & Dmitri Psurtsev

The Poet
[Osip Mandelstam]
by Arseny Tarkovsky
Once upon a time,There lived a poor knight….               –Alexander Pushkin
A life ago, in a dark room
Of the State House of Publishing,
A poet gave me this volume.
The spine’s now cracked and broken,
Its author no longer living.
They said that he resembled
A kind of ancient bird
That flew above the Nile—
They saw his beggared
Greatness, his taut honor.
How he feared the expanse
Of corridors, the constancy
Of creditors.  He, like a gift,
Accepted his award
In a fit of affected glee.
Just like the old clown
Who crawls across the movie screen
In cap and bows, as if stoned,
And, as if sober, hides the wound
Beneath his vest and overcoat.
Feathered by couplets, his feat
Over the calendar is complete.
Farewell—may all your roads
Be smooth.  Greetings, paid
Holiday, black and white loaf.
He played with curved words,
Smiled with the beak of a bird,
Locked arms with anyone,
Feared being alone,
Read poems to strangers.
That’s how a poet should be.
I roam the globe,
Afraid of being alone.
For the hundredth time, lonely,
I read his book again.
So few landscapes in his poems—
Only the confusion of train stations,
The commotion of a theater,
Only people seen at random,
The marketplace, a queue, prison.
Life chatted through him, with him,
And his own fate would mutter.translated from Russian by Philip Metres & Dmitri Psurtsevmore>>


Olives for Marina Tarkovskyby Arseny Tarkovsky

The road leads down a steep cliff
Where grass falls to its knees
And ghosts of wild olive,
Laying their horns on stones,
Are frozen like a herd of deer.
I’m surprised I’m still alive
Amid so many graves and apparitions.
I guard the evening hours
And the gray foliage above me.
The autumn sky is my shelter.
I don’t remember my own dreams,
I’m unworthy of your late tears.
A long time has passed since the iron bar
Was pushed in behind my back.
And somewhere my fate hides
The keys near a fire in the steppe,
Her flickering companion looming
In a red shirt until morning.
She hides the keys and laments
That song is her sibling
And that she has to say goodbye.
Gray olive trees, place your horns
On my shoulders now.  Place
Your horns on me as on the stones:
For this is my sacred cradle—
This land of loss and funerals.translated from Russian by Philip Metres & Dmitri Psurtsevmore>>





Reality and Speech
by Arseny Tarkovsky

As sight is to retina, voice is to throat,
Number to reason, early thrill to the heart,
I gave an oath to return
The life-giving source to my art.
Bending art like a bow, strangling
The bowstring, I ignored my vow.
I did not compile the lexicon word by word.
No, it created me out of red clay; not I
Who placed the five senses, like the fingers
Of Thomas, into the gaping wound of the world.
No, the wound of the world enfolded me;
And life is itself, despite our desires.
Why did I teach straightness to the staff?
Curvature to the bow, the grove to the bird?
Two palms, you’re on a single string,
O reality and speech, widen my pupils,
Give me the communion of your kingly power.
Let me stand aside
And witness the free flight
Of a ship erected by miracle.
O two wings, two fleshy blades
Reliable as air and earth.translated from Russian by Philip Metres & Dmitri Psurtsev
குட்டி ரேவதி பகிர்ந்த ‘நீலம்’ என்ற முகநூல் தளத்தைப் பார்த்ததும் பிரமிள் எழுதிய சிறுகதையான ‘நீலம்’ ஞாபகத்திற்கு வந்தது. ஜெயமோகனும் தமது மகாபாரத்தொடரில் ’நீலம்’ என்ற காதல் சிறுகாப்பிய நாவல் ஒன்றை எழுதியுள்ளார். பிரமிளுடையது அற்புதமான, சிறிய ஒரு கதை என்பதால் அதை (‘நீலம்’ காலக்கோட்டில்) இங்கே பகிர்ந்து கொள்கிறேன் - காலசுப்ரமணியம்.
https://www.facebook.com/kaala.subramaniam/posts/849846371773920

நீலம் (1986)(சிறுகதை)பிரமிள்


வர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங் களை இங்கே மோப்பம்பிடித்து வாங்கிக்கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட் காரர்கள் வந்து பார்ப்பார்கள்.கோழிச்சண்டையில் இறகுகள் பறக்கிற மாதிரி அவரது படங்களைச் சுற்றி விமர்சனங் களும் பறக்கும்.
மற்றபடி அவருக்கு ஆர்ட்டுடன் சம்பந்தம் இல்லாத அவரது ஆபீஸ் உண்டு.குடும்பம் உண்டு. ரசிகர்கள், அதுவும் பெரிய இடத்து ரசிகர்கள் வீசும் ரசனைகளை அசை போட்டுப்போட்டு அவருக்குத் தலை கவிழ்ந்துவிட்டது. அப்படிப் பாரம்! அவர் பஸ் ஏறப் பிடிக்கும் குறுக்குவழிகளின் மனித எச்சமும் நடுவே மானங்காணியாக மலரும் காட்டுச்செடிகளும் அவரது கண்களுக்குப் படுவதில்லை
ஆபீஸிலிருந்து லேட்டாகத் திரும்பிய ஒரு நாள் மாலை பஸ்ஸில் ஏறிய அவர், தமது பஸ் ஸ்டாப்பிலிரிந்து இரண்டு ஸ்டேஜுகள் கடந்து போய் இறங்கி விட்டார். இதற்குப் புற உலகக் காரணமாக, பஸ்ஸில் ஏறியவன் இறங்க முடியாத நெரிசல். அக உலகக் காரணமும் ஒன்று உண்டு. சமீபத்தில் டிவியில் அவர் பார்த்த ஜே.கிருஷ்ண மூர்த்தியின் புத்தகம் ஒன்றைப் பக்கத்துக்கு சீட்காரர் வைத்திருந்த திலிருந்து பிடித்த சர்ச்சை.

கதை, கவிதை போன்ற எந்த மனித சிருஷ்டியையும்கூட கம்ப்யூட் டர்கள் மனிதனைவிடச் சிறப்பாகக் கையாள முடியும் என்ற இடத்தில் சூடு பிடித்த சர்ச்சை அது. ‘அந்நிலையில் மனிதன் என்கிற நீ என்ன?’ என்பது கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி. நமது ஆர்டிஸ்ட்டோ, என்ன இருந்தாலும் கம்ப்யூட்டரினால் பெயிண்டிங் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை எனச் சுற்றிச் சுற்றி அழுத்தினார்.

‘பெயிண்டிங், சிற்பம், இசை எல்லாமே கம்ப்யூட்டரால் முடியும். ஜப்பானில் கம்ப்யூட்டர் கார்களை மெனுபாக்செர் பண்ணுகிறது’ என்று உறுமினார் பக்கத்துக்கு சீட்காரர். மூக்குக்கண்ணாடி வட்டத்துக் குள் அவரது கண்கள், போகப்போகப் பெரிதாகிக் கொண் டிருந்தன. அவரது உறுமலுடன் கண்ணாடியில் ஏதோ ஒரு வட்டமான சிறு ஒளி, பஸ் கூட்டத்தின் இடுக்குகளூடே ஊடுருவிப் பிரதி பலித்தது.

‘ஆனால் அதோ அந்த நிலவின் அழகை மௌனமாகத் தனக்குள் உணர மனிதனால் முடியும். கம்ப்யூட்டரால் முடியாது’ என்றார் திருவாளர் பக்கத்துக்கு சீட்காரர்.

‘டெர்மினஸ்’ என்று சேர்த்துக்கொண்டார்.

பஸ்சிலிருந்து பொலபொலவென்று கூட்டம் உதிர்ந்தது. ஆர்டிஸ் டும் உதிர்ந்தார். பக்கத்துக்கு சீட்காரரைக் காணோம்.

எங்கோ இன்னொரு கிரகத்தில் நிற்கும் உணர்வு தீடீரென நமது ஆர்ட்டிஸ்டுக்குத் தோன்றிற்று. எங்கோ, என்றோ, எவனோ, தான் என்ற ஒரு இடைவெட்டு மனதில் ஒரு மௌனக் கீறாக ஓடிற்று.
கலைந்து கொண்டிருந்த மனிதர்களது முகங்கள் மீது, மின்சார கம்பம் ஒன்றின் ஒளிச் சீற்றம். இருண்டு கருத்த முகங்களில் கண்ணாடிச் சில்லுகள் கட்டமிட்டு மின்னின.

குடில்களாகவும், சீரற்ற சிமிண்டுப் பொந்துகளாகவும் தெரு பின் வாங்க, நடக்க ஆரம்பித்தார். திடீரென எதிரே உலகு வெளித்தது. வானின் பிரம்மாண்டமான முகில்கள் தமக்குள் புதையுண்ட பெரிய மர்மம் ஒன்றினை, வெள்ளியும் பாதரசமுமாக உலகுக்குத் தெரிவித்த படி நகர்ந்துகொண்டிருந்தன. எட்டொணாத தொலைதூரத்தில் ஒரு கிராமீயக் குரல், இயற்கையின் மொழியற்ற மழலை போன்று வெற் றொலியாய்க் கேட்டு மறைந்தது.
திடீரென, அந்தக் குரலுக்குப் பதிலாக, அவருக்குப் பின்புறம் முதுகு சில்லிட, ‘கூ’ என்றது இன்னொரு குரல். அதன் அமானுஷ்யத்தில் ஒரு கணம் அர்த்தமற்ற மரண பயம். அவர் திடுக்கிட்டுத் திரும்பினார். நிலவு வெளிச்சத்தில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான், சுமார் பதினைந்து பதினாறு மதிக்கத்தக்க கிராமத்துப் பையன்.

அவரை அவன் பேசவிடவில்லை. ‘இந்நேரம், இந்நேரம் ... இன்னும் கொஞ்சம் தூரம்...’ என்றான், அவரை முந்தித் தன்னைப் பின்தொடர அழைத்தபடி நடந்த அவன். அவரது மனதில் ஏதேதோ எல்லாம் எழுமுன், ‘தோ!’ என்று ஒரு இருண்ட பெரிய பள்ளத்தைக் காட்டி னான். திட்டுத் திட்டாக மின்னிய நிலவொளியில் இருள் மாறி, பாசிபடர்ந்த குளமாயிற்று. குளத்தைக் காட்டிய சிறுவன் சரசர வென்று அதற்குள் இறங்கினான். இறங்கியவன் குளத்தினுள்ளேயே மூழ்கி மறைந்தான்.

நமது ஆர்டிஸ்டுக்கு, அந்த ஒரு கணம், தன் முன்தோன்றி மறைந்தது அமானுஷ்யமான ஏதோ ஒரு உயிர் வடிவம் என்றே சிறுவனின் தோற்றமும் மறைவும் எண்ணவைத்தன.

அதற்குள் பையன் குளத்திலிருந்து ஈரம் சொட்டச்சொட்டக் கிளம்பிக் கரையேறி, கையில் எதையோ கொண்டு வந்தான்

.
அது ஒரு நீல வண்ண ஜாலம். அப்போதுதான் விரிந்துகொண்டு இருந்தது, அந்த நீலோத்பலம். பத்திரமாக நீட்டிய கையிலிருந்து பெற்றுகொண்டார் அதை.

‘நீலோத்பலம், அதுவும் ராவானதும், நீருக்கடியில்தான் பூக்கும். அதன் அழகை யார் கண்டது?’ யாரோ, எங்கோ, என்றோ அவரது ஞாபகங்களின் விளிம்பில் நின்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். குளத்தின் எதிர்க்கரையில், பையனை ஆர்டிஸ்ட் மீது ஏவிவிட்டு நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்துக்கு சீட்காரரா?
ஆர்டிஸ்டின் கண்கள் பையனின் முகத்துக்குத் திரும்பின. ஈரம் பட்ட சிறுவனின் முகத்தில் உக்ரமாக விழுந்த சந்திர தீபத்தின் வெளிச்சம், அவனது பெரிய கண்களுக்கும், நெற்றியிலிருந்து பள்ள மற்று ஓடிய நாசிக்கும், ஆயிரமாயிரம் வருஷங்களாக இயற்கை யினால் அதிகவனத்துடன் செதுக்கப்பட்ட இன்னொரு முகத்தின் சாயலைத் தந்துகொண்டிருந்தன.

தம்மை மீறிய மரியாதையுடன், ‘யார் நீ?’ என்றார் ஆர்டிஸ்ட்.
அவன் பதில் சொல்லவில்லை. தூரத்தே மொழியற்று ஒலித்த குரல், ஒலியலைகளாக உருப்பெற்று, ‘கிஸ்ணா’ என்று கேட்டது.
பையன் பதிலுக்குக் ‘கூ’ என்றபடி, நிலவின் பரந்தவெளியினூடே தன்னை அழைத்த குரலை நோக்கி ஓடினான்.
கையில் நீலோத்பலம் அதற்குள் ஆகாயமாகத் தனது நீலச் சுடர்களை மலர்த்திவிட்டது.

வீடு, பால்ராஜ் கென்னடி (தொகு), அன்னம், 1986.
பசுமை, பிப்ரவரி 1988.
லங்காபுரி ராஜா (கதைத்தொகுதி), பிரமிள், லயம் வெளியீடு, நகலூர். 1988.


பிரமிள் படைப்புகள் (சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள்), கால சுப்ரமணியம் (தொகுப்பாசிரியர்). அடையாளம், புத்தா நத்தம், 2003



http://poboh.tumblr.com/post/88891797316
Pissing at the Moon, Pieter Bruegel the Younger. Flemish Northern Renaissance Painter (1564 - 1638)http://poboh.tumblr.com/post/88891949651

Woodland scene with figures picking bluebells in a sunlit glade, Herbert Royle. English (1870 - 1958