தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, February 24, 2014

என் மாமிசம் உன் மாமிசம் அவன்(ள் ) மாமிசம் .... - பூமா ஈஸ்வரமூர்த்தி

என் மாமிசம் உன் மாமிசம் அவன்(ள் ) மாமிசம்
என்றெதுவுமில்லை எல்லாமுமே ஒரே மாமிசம் தான் பத்மினி

என் பாதை உன் பாதை அவன்(ள் ) பாதை
என்றெதுவுமில்லை எல்லாமுமே ஒரே பாதை தான் பத்மினி

என் போதை உன் போதை அவன்(ள் ) போதை
என்றெதுவுமில்லை எல்லாமுமே ஒரே போதை தான் பத்மினி

என் பத்மினி உன் பத்மினி அவன்(ள் ) பத்மினி
என்றெதுவுமில்லை எல்லாமுமே ஒரே பத்மினி தான் பத்மினி-

- பூமா ஈஸ்வரமூர்த்தி



Saturday, February 22, 2014

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

.


பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள் 

காதல்

மனதை மிதி
மிதிக்கக்கொடு மிதிக்கவிடு
உடைந்து கொண்டிருக்கிற
கவிதையும் வெளிவரலாம்



சப்தம்

சப்தம் -
உடைந்து கொண்டிருக்கிற
எதிலும்.





சீக்கிரம் வா!


பாபூ -

மெல்லிய மழையில்
நனைய நனைய நடந்து கொண்டே
உன்னிடம் மட்டுமே சொல்லவென
ரத்தம் வழியும் ஞாபகங்கள் வைத்திருக்கிறேன்

சீக்கிரம்  வா!




சாயல்


கோடுகள்
கோடுகளாக இருக்கட்டும்.

ஓவியங்களில்
முகமென்று ஏதாவது தட்டுப்பட்டு
யாருக்கும்

அவரவர் சாயல் சொல்லக்கூடும்

நன்றி http://creativesendhu.blogspot.in/





Anaamikaa Rishi added 2 new photos.
22 March at 23:52 ·

2018
Booma Eswaramoorthy’s Poem
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

At least today I should ask Stephen Hawking
Hoped I.
But he had moved his self now to a place
where none could speak

Henceforth I want to Ask Learn and Experience
from He She They.

When He saw Her
When She saw Him
When He fell in Love
When She fell in Love
When He parted from Her
When she parted form him

At some blessed moment
Had they seen the capital city of Love?

Where is the capital city of love?
Beyond stars?
Under the dark cool sea?
Are there butterflies?
Wings that cannot be severed
for one and all there?
Is there anyone known to me?
Have I ever landed there
without my knowledge and returned?
Does Time happen there or not?

From He She They
I want to Know Learn Experience.

ஸ்டீபன் ஹாக்கிங்கிடம்
இன்றைக்காவது கேட்டுவிடலாம்
என்றிந்தேன்
அவரோ இன்று யாரும்
பேசமுடியாத இடத்திற்கு தன்னை
நகர்த்திக் கொண்டார்
இனி அவன் அவள் அவர்களிடமிருந்து
கேட்டு தெரிந்து உணர்ந்து கொள்ள
விரும்புகிறேன்
அவன் அவளைப் பார்த்தபோது
அவள் அவனைப் பார்த்தபோது
அவன் காதல்வயப்பட்டபோது
அவள் காதல்வயப்பட்டபோது
அவன் அவளைப் பிரிந்தபோது
அவள் அவனைப் பிரிந்தபோது
எப்போதாவது ஒரு நற்கணத்தில்
காதலின் தலைநகரை
பார்த்திருக்கிறார்களா அவர்கள்
காதலின் தலைநகரம் எங்குள்ளது
நட்சத்திரங்களுக்கு அப்பாலா
இருளும் குளிருமான கடலுக்கடியிலா
வண்ணத்துபூச்சிகள் அங்குண்டா
வெட்டமுடியாத சிறகுகள் யாருக்குமா
எனக்கு தெரிந்தவர்
யாரும் அங்குண்டா
எனக்கே தெரியாமல் நான் அங்கு
வந்து மீண்டதுண்டா
காலம் அங்கே நிகழுமா நிகழாதா
அவன் அவள் அவர்களிடமிருந்து
கேட்டு தெரிந்து உணர்ந்து
கொள்ள வேண்டும் எனக்கு.



பவழமல்லி - ஞானக்கூத்தன்

பவழமல்லி - ஞானக்கூத்தன்

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?

நன்றி
http://uyirmmai.blogspot.in/2005/02/6_13.html


போராட்டம்
https://gnanakoothan.wordpress.com/2006/07/29/போராட்டம்/

கைவசமிருந்த காதற்
கடிதங்கள் எரித்தேன் வாசல்க்
கதவுமுன் குவித்துப் போட்டு

காகிதம் எரிந்து கூந்தல்
சுருளெனக் காற்றில் ஏறி
அறைக்குள்ளே மீளப் பார்க்கக்
கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்

வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே
கரிச்சுருள் கூட்டம் போட்டுக்
குதித்தது அறைக்குள் போக

காகிதம் கரியானாலும்
வெறுமனே விடுமா காதல்.

1969
ஞானக்கூத்தனின் இரண்டு நவீன கவிதைகள்.
ஒன்று பிடித்தது. ஒன்று மோசமானது.
பிடிக்காத கவிதை. ரீமேக் வேர்சனும் உண்டு.

Riyas Qurana - றியாஸ் குரானா

ஞானக்கூத்தனின் இரண்டு நவீன கவிதைகள்.

ஒன்று பிடித்தது. ஒன்று மோசமானது.

பிடிக்காத கவிதை.

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
.............................................................

ரீமேக் வேர்சன்

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல்

ஒருமுறை தவிட்டுக்காக
உன்னை வாங்கினேன்

எத்தனைப் பொய்கள்

முன்பு, அத்தனை பொய்கள்
சொன்ன நீ எதனாலின்று
நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

...............................................................
பிடித்த கவிதை

விளிம்பு காக்கும் தண்ணீர்
.............................................

கொடிவிட்ட தண்ணீர்
தரையில் ஓடியது. ஓடி
சற்றுத் துாரத்தில் நின்றுவிட்டது
வழிதெரியாதது போல.
தொங்கும் மின் விசிறியின் காற்று
தண்ணீரை அசைக்கிறது.
மேலே தொடர்ந்து செல்ல
தண்ணீருக்கு விருப்பமில்லை
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
காற்றினால் கலையும்
தன் விளிம்புகளை
இறுகப் பிடித்துக்கொண்டு
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.



Saturday, February 08, 2014

நிகிதா ஸ்டானஸ்கியூ (1933 - 1983) ரொமானியா - ஒரு கவிதை




 Thanks to http://vaalnilam.blogspot.in/

என்னிடம் சொல்லுஎப்போதாவது 
உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில் 
நான் முத்தமிட்டிருந்தால்
பிறகு கொஞ்ச நேரம் 
என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்
நொண்டித்தானே நடந்திருப்பாய். 
நிகிதா ஸ்டானஸ்கியூ (1933 - 1983) ரொமானியா

Friday, February 07, 2014


Leena Manimekalai shared The Lunatics's photo.
21 hours ago via mobile ·

Nothing is absolute.
Everything changes, 
everything moves, 
everything revolves, 
everything flies and goes away.

-Frida Kahlo-