தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Friday, April 28, 2017

திக்கு - அம்பை

திக்கு - அம்பை

www..archive.org

AUTOMATED GOOGLE-OCR


அந்தப் புறநகர்ப் பகுதியின் தெருமுனையில்தான் முதலில் வில்லேந்தி, குறிபார்த்தபடி, ராமனின் ஒரு பிரம்மாண்ட அட்டை உருவம் எழுப்பப்பட்டது. ராமன் மேல் ஆணை! கோயிலை அங்கேயே கட்டுவோம்' என்ற வாசகங்களுடன். அந்தப் புறநகர்ப் பகுதியில் கடவுள்களின் நடமாட்டம் அதிகம். இரவில் சுத்தமாக இருக்கும் நடைபாதையைப் பார்த்துவிட்டுப் படுத்து விடிந்த பிறகு சன்னல் வெளியே பார்த்தால், குளியலறையில் இருக்கும் பளிங்கு அல்லது மணிஓடுகள் போல் ஓடுகள் வேய்ந்த ஒரு சிறு சாயிபாபா கோயில் எழுப்பப்பட்டிருக்கும், ஒர் ஆரஞ்சு வண்ணக் கொடி பறந்து கொண்டிருக்கும் அதன் உச்சியில் இரண்டு நாட்களில் ஒரு மணியும், ஒரு உண்டியலும் அதில் வந்துவிடும். பிறகு ஒரு பூசாரி வருவார். சில சமயம் கோயிலின் கடவுள் செய்யும் அற்புதங்கள் பற்றிய கதை களும் பரவத் தொடங்கும். கோயில் எழுப்பப்பட்ட உடனேயே அலுவலகத்திற்கு விரைந்து கொண்டிருப்பவர்கள் அரை விநாடி செருப்பைக் கழற்றிவிட்டு நின்று, கன்னத்தில் போட்டுக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். பேருந்தில் விரைபவர்கள் ஆரஞ்சு வண்ணக் கொடியைக் கண்டதும் கோயில் அருகில் இருக்கும் என்று கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். சில கோயில்களின் பக்கத்திலேயே, நிரம்பி வழிந்து, தெருவெல்லாம் குப்பை சிதறியபடி அழுகல் நாற்றமும் சில சமயம் ஏதாவது பிராணி ஒன்று செத்த வாடையும் வீசியபடி குப்பைத் தொட்டி இருக்கும். கன்னத்தில் போட்டுக்கொண்ட உடனேயே மூக்கைப் பிடித்துக்கொண்டு விடலாம். கோயிலை ஒப்புக்கொண்ட அதே ஏற்புடன் குப்பைத் தொட்டியையும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய மனோபாவத்துக்கு கீதை, புராணங்களி லிருந்தெல்லாம் மேற்கோள்கள் காட்டினர் சிலர். கன்னத்தையும் மூக்கையும் அருகருகே படைத்த கடவுளின் அற்புதச் செயலை வியந்தனர் சிலர்.

தெரு முனையில், நிமிர்ந்து பார்க்கும்படி எழும்பிய ராமனின் உருவம் பற்றி யாருக்கும் ஆட்சேபணை இருக்கவில்லை. ராமனுடன் அவளுக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. சிறு வயதில் கெட்ட

சொப்பனம் வந்து விழித்தால் 'ராம ராம' என்று சொல்லிவிட்டுத் துரங்கச் சொல் வாள் அம்மா. வீட்டில் ரவி வர்மா வரைந்த ராம பட்டாபிஷேகப் படம் பூசை அறையில் இருந்தது. வளரவளர, ராமனைச் சில விஷயங்களில் பிடிக்காமல்போயிற்று. மூலமான விஷ்ணு உருவத்தில் ஆதிசேஷ ன்மேல் படுத்துக்கொண்டு லசுஷ்மி யைப் பாதத்தருகே வைத்திருப்பது கடுப்பை உண்டாக்கியது. சிவனைப் பிடித்தது. கஞ்சா பிடித்தபடி, அங்கும் இங்கும் அலைந்து, தாண்டவம் ஆடும் சிவனின் அலட்சியமும், எதிர்ப்புக் குணமும் பிடித்தது. "சம்பூர்ண ராமாயணம்' படம் பார்த்த பின் என் டி. ராமராவாகிவிட்டார் ராமன் அவளைப் பொறுத்தவரை, அதுவும் 'கா கமககரீ ரிகரிரிஸாரிகளிரிஸாரிஸ்ா நிதபதஸா' என்று காம்போதி ராகத்தை விளக்கியபடி ராவணனாக டி. கே. பகவதி பாடிக் கேட்டபின், ராவணன் பக்கம் மனம் சாய ஆரம்பித்தது. திலங் ராகத்தில் இன்று போய் நாளை வா என எனை ஒரு மனிதன் புகலுவதோ ? என்று சோகம் பொங்க டி. கே. பகவதி படத்தில் பாடும்போது அழுதிருக்கிறாள்.

அவள் மனத்தில் இது பற்றி எல்லாம் இருந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாகத்தான் அப்போது அவள் கல்லூரிப் பத்திரிகைக்கு அந்தக் கதையை எழுதினாள்.'லக்ஷ்மிக்கும் ஓர் ஆதிசேஷன்" என்று தலைப்பு. கதை இப்படிப் போயிற்று.

பாற்கடல் விரிந்து கிடந்தது. நீலம் சிறிது ஊடுருவியி ருந்தது. சிவன் விழுங்கும்முன் ஒரு சிறு துளிகள் கடலில் விழுந்தனவோ என்னவோ தெரியவில்லை. வெள்ளையும் கடும் நீலமும் கலந்தபின் வரும் மென்நீலம், லசுஷ்மி க்கு அந்த மென்நீலம் மிகவும் பிடிக்கும். அதை விஷ்ணுவிடம் பலமுறை கூறியிருக்கிறாள். நானும் நீலவண்ணனாக இருந்தவன்தானே? என்று சிரிப்பான் விஷ்ணு. அது என்னவோ மற்றவர்கள் கூறுவதால் தானும் நீலவண்ணன் என்று சொல்லிக்கொள்கிறான். பார்க்கப்போனால் நல்ல கறுப்பு கண்ணன். அதைக் கவிதை நோக்கில் நீலம் என்று சொற்களோடு விளையாடு பவர்கள் சொன்னால் நம்ப வேண்டுமா என்ன? எவ் வளவு அழகு அந்தக் கறுப்பு பளபளவென்று கருந் தந்தத்தில் எண்ணையைப் பூசினாற்போல் கரும்வண் னன். இந்த நீலம் வேறு. இது கனவின் நீலம் பிடிபடாத நீலம், புதிரான நீலம்,

திரும்பிப்பார்த்தபோது வலதுபுறம் திரும்பி விஷ்ணு படுத்தாகிவிட்டது. ஒரு சோர்வு கப்பியது அவளை சில நினைவுகளை அவளால் துறக்க முடியவில்லை. அவள் மனத்தின் ஒரு மூலையில் வீணையில் காம்போதி ஒலித்தது. உருகி வரும் காம்போதி, அசோக வனத்தில் அரக்கி களிடையே தளர்ந்து கிடந்தபோது சிறிது உயிரூட்டிய

காம்போதி அத்தனை ஆண்டுகள் வனத்தில் இருந்து விட்டுப் பாதங்கள் வெடித்து, கைகள் சொரசொரத்துப் போய், சருமம் வறண்டுபோன பின்னும் அவளுக்காக ஒருவன் வாசித்த காம்போதி.

அரக்கனாம். யமுனை நதிக்கரையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைத் தனியாக நிறுத்தி விட்டவர்கள் மனிதர்களா என்ன ? கண்களில் நீர் பெருகியது.

"லக்ஷமி . திரும்பிப் பார்த்தாள். ஆதிசேஷன்தான் கூப்பிட்டான். "ம்" என்றாள். "என்ன ஆயிற்று உனக்கு ? 'இல்லை, இவன் எப்படி இப்படித் துரங்குகிறான்? ஆதி, ஞாபகம் இருக்கிறதா, நான் தனியாக நின்றேன் ஆதி என் முன்னே நதி மெளனமாக ஒடிக்கொண் டிருந்தது. அதைக் கடக்கப் படகோடு குகன் இல்லை. ஒரு சிறு பாலம் போட அனுமன் இல்லை. ஒரு அணில் கூட இல்லை. ஆதி, எனக்கு ஏன் இந்தத் தனிமை? நானும் மீனாக நீந்தியிருக்கிறேன். ஆமையாகக் கனத்த ஒட்டோடு நடந்திருக்கிறேன். காட்டுப்பன்றியாக அலைந்திருக்கிறேன். என் அவதாரங்களைப் பற்றி யாருக்குத் தெரியும்? அவை இவனுடையதோடு ஒட்ட வைத்தவை. வால் மாதிரி வண்ணம் சேர்க்க பரவசப் படுத்த கிளுகிளுப்பூட்ட

நீ பேசுவது ஒரு பெண் தெய்வம் சொல்வது மாதிரி இல்லையே?

"பெண்ணாவது தெய்வமாவது ஆதி! என் எண்ணப் படி எது நடக்கிறது? பாத்திமாவுடன் பேசியபடி பாலை வனத்தைச் சுற்றி வர ஆசை, மேரி கையிலிருந்து குழந்தையை வாங்கி என் இடுப்பில் வைத்துக்கொண்டு பெதலஹெம் மற்றும் சுற்றுப்புறப் பிரதேசங்களைப் பார்த்து வர ஆசை. இப்படி இவன் காலடியில் உட்கார்ந் திருப்பதில் என்ன சுகம் ? அக்கடா என்று படுக்க ஒரு பாம்புப் படுக்கை உண்டா எனக்கு?

ஆதியின் மனம் இதைக் கேட்டு உருகியது. இன்னொரு பாம்புப் படுக்கையை உண்டாக்கினான். விஷ்ணு கண் விழித்தபோது பக்கத்தில் இன்னொரு பாம்புப் படுக்கையில் லக்ஷ்மி உடலை ஒடுக்காமல், தாராளமாகப் படுத்தபடி துரங்கிக்கொண்டிருந்தாள். கல்லூரிப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் கதையை ஏற்க வில்லை. கதை மற்றக் காகிதங்களோடு புதைபட்டுப்போயிற்று. லசுஷ்மி பாம்புப் படுக்கையில் படுப்பதுபோல் எழுதியது போக,

இவளே ஏதோ பாம்புப் படுக்கையில் மிதந்தபடி உலகத்தைப் பார்ப்பது போல் ஓர் எண்ணம் இவளுக்கு ஏற்பட்டுவிட்டிருந்தது. அதனால் நடைபாதைக் கடவுள்களை அவள் அதிகம் பொருட் படுத்துவதில்லை. ஆனால் கடவுள்கள் இவள் நடைமுறை வாழ்க் கையில் குறுக்கிட ஆரம்பித்தபோதுதான் பாம்புப் படுக்கையிலிருந்து இறங்காமல் முடியாது என்று தெரிந்தது. உடற்பயிற்சிக்காகத் தினம் காலை நாற்பது நிமிடங்கள் விறுவிறுவென்று நடக்க வேண்டும் என்று தீர்மானித்தவுடன், அதற்காகத் தேவைப்படுவதெல்லாம் விளையாட்டு வீராங்கனைகள் அணியும் புது மோஸ்தர் காலணிகள் என்று அவள் நினைத்துவிட்டாள் தெருவில் இறங்கியபோதுதான் விரையும் வாகனங்களிலிருந்து ஒண்டிக்கொள்ள வேண்டுமானால் தெருவின் இருபக்கமும் இடம் இருந்தது, ஆனால் விறுவிறுவென்று நடக்க நடைபாதை என்ற ஒன்று இல்லை என்பது புரிந்தது. அதி விரைவாக வரும் ஒரடுக்கு, ஈரடுக்குப் பேருந்துகள், பாரம் ஏற்றி வரும் லாரிகள், பணக்கார அப்பாக்களின் குழந்தைகள் விமான மென்று நினைத்து ஒட்டும் மாருதிகள், ஹோண்டாக்கள் இவற்றின் நடுவே தெருவில் நடக்க முடியாது என்று தீர்மானித்து, சற்றுத் தள்ளி உள்ள கடற்கரையில் நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டி ருந்தாள் அவள் கடற்கரையின் ஒரு மூலையில் குடிசைப் பகுதி இருந்தது. கடற்கரை அவர்களின் கட்டணமில்லாக் கழிப்பிடம். கடற்கரையை எட்டியதும் சற்றுத் தொலைவில் இடது பக்கமும், வலது பக்கமும் பலர் மலம் கழிக்க அமர்ந்திருப்பது தெரியும். இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள ஒரு மைல் இடைவெளி யில்தான் காலை நேர வேக நடை

உச்சாணியில் நிறுத்தப்பட்ட ராமனின் உருவம் ஈரடுக்குப் பேருந் தின் மேல்பகுதியில் அமர்ந்து போகும்போது கண்ணை வந்து குத்தியது என்பது தவிர வேறு வகையில் அவளைப் பாதிக்கவில்லை. நாடெங்கும் பரவிவரும் ராமவெறிக் கடலின் ஒர் அலை இது என்று அதை ஒதுக்கிவிட்டாள். காலை வேளை விறுவிறு நடை தொடர்ந்தது. காலையில் பக்கத்தில் உள்ள மசூதியிலிருந்து காலைத் தொழுகையின் ஒசை கேட்டதும் எழுந்து விடுவாள். கட்டிடத்தை விட்டு வெளியே வந்து நூறடி நடந்து சீக்கிய குருத்வாரத்தைத் தாண்டும்போது பீடத்தில் வைத்த குருக்ரந்த்ளாகிபின் முன் வெண்தாடியுடன் கண்மூடி ஒரு பெரியவர் அமர்ந்திருப்பது கண்ணில் படும் இன்னும் பத்தடி நடந்து வலதுபுறம் திரும்பினால் கடற்கரையை நோக்கிச் செல்லும் சாலை,

டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இவள் நடையின் இயல்பே மாறி விட்டது. சமய நல்லிணக்க ஊர்வலத்தில் இனச் சண்டைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருபது கிலோ மீட்டர் நடை, புறநகர்ப்பகுதி அமைதி காக்க பத்து கிலோ மீட்டர் நடை என்று பலவகை நடைகள். புறநகர்ப்பகுதி அமைதி ஊர்வல நடையின் முடிவில் ஒரு பள்ளியின் பெரிய மைதானத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓர் உயர்ப்போலீஸ் அதிகாரியும் வந்திருந்தார். சமய நல்லிணக்கத்துக்காக இந்துக்கள், முஸ்லிம்கள் எல்லோரும் கலந்து உறவாடி, உணவு உண்ண வேண்டும் என்றார். வேறு எதுவும் தேவையில்லை என்றார். இவ்வளவுதானா சமய நல்லிணக்கம் என்று எல்லோரும் வியந்து பூரித்தனர். விருந்து நன்றாக இருந்தது. நன்றாகச் சாப்பிட்டனர். பேசவும், தீர்மானங்கள் நிறைவேற்றவும் ஒரு மைக் கொண்டுவரப்பட்டது. பலர் பேசினர். அந்தப் புறநகர்ப் பகுதியில் மரங்கள் நட அவர் கம்பெனி உதவும் என்றார் ஒருவர். குடிசைப் பகுதிகளில் கட்டணக் கழிப்பிடங்கள் கட்டி கடற்கரையைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றார் ஒருவர். பூசைமலர்களும், தேங்காய்களும், பிரசாதங்களும் பிளாஸ்டிக் பை களில் கட்டப்பட்டுக் கடலில் எறியப்படுவது கடலை மாசுபடுத்தும் என்று பேச ஒருவர் முற்பட்டபோது அது பற்றிக் குறிப்பிட வேண் டாம் என்று கூறினர். நட்புடன் பழகிய போலீஸ் அதிகாரியிடம் இவள், திடீர்க் கோயில்கள், ஆரஞ்சுக் கொடிகள் இவை பெருகும் வேகம் பற்றியும், சூளுரைகளோடு எழுப்பப்பட்டுள்ள ராமனின் உருவப்படங்கள் பற்றியும் சற்று ஆவேசத்துடனும் கவலையுடனும் பேசியிருந்தாள். மைக் இவளருகில் வந்ததும், பக்கத்திலிருந்த நண்பர் ஒருவர் "சுற்றுச்சூழல்பற்றி மட்டும் பேசினால் போதும்" என்று கிசு கிசுத்தார் செவியருகே மனத்தில் ஒருமுகப்படுத்திய எண்ணங்கள் சிதறிப்போக, குப்பைத் தொட்டிகள் சுத்தமாக இருக்க வேண்டும்' என்றாள் சற்றுப் பலகீனமான குரலில். உடனே ஒருவர், 'பெண்கள் இந்த வேலைக்கு முன்வர வேண்டும்' என்றார். குப்பையில் ஆண் குப்பை, பெண்குப்பை என்றில்லாததால் எல்லோரும் சுத்தப்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இவள் சொன்னாள் சற்றுச் சூடாக, "ஓ பெண்ணியவாதி, நமக்கிடையே ஒரு பெண்ணியவாதி” என்று முழக்கமிட்டு, 'மன்னிக்க வேண்டும் மேடம்' என்று நாடக பாணி வணக்கத்துடன் அவர் கூறியதும் எல்லோரும் சிரித்தனர். அந்தப் பகுதியின் மிக முக்கியத் தேவை ஒரு ஆம்புலன்ஸ்தான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணம் பரபரவென்று வசூலிக்கப்பட்டது. அடுத்த வாரமே காலரா தடுப்பு ஊசி போடும் உடனடி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான தீர்மானத்துடன் சமய நல்லிணக்கக் கூட்டம் முடிவடைந்திருந்தது.

சில நாட்களுக்குப்பின் காலை நடையை அவள் மீண்டும் துவங் கினாள் பலர் காலை வேளையில் மெல்லவும் வேகமாகவும், நடந்தபடியோ ஒடியபடியோ இருப்பர். எதிர்ப்படுபவர்களைத் தலையசைத்தோ முறுவலித்தோ, நமஸ்தே, குட்மார்னிங் என்று கூறியோ, வடக்கே பலகாலம் இருந்தவராக இருந்தால் ஜெய்ராம்ஜிகி என்று கூறியோ முகமன் கூறுவது வழக்கம். முகமன் கூறும் விதம் மாறிவிட்டதுபோல் அவளுக்குப் பட்டது. வினயமான "ஜெய்ராம்ஜிகி குப்பதிலாக "ஜெய்பூரீராம் என்று முழக்கமிடுவதுபோல் சிலர் கூறினர். கடற்கரையை எட்டியதும் ஒரு குழு அமர்ந்து, "ஹரிபோல் ஹரிபோல் ஹரிஹரிபோல் முகுந்த மாதவ கோவிந்த போல் என்று பஜனை செய்துகொண்டிருந்தது. இரண்டொரு நாட்களுக்குப்பின் இன்னொரு குழு சற்றுத் தள்ளி அமர்ந்து கிறிஸ்தவப் பாடல் களைப் பாடியபடி இருந்தது. ஒரு வாரத்துக்குப்பின் ஐந்தாறு முஸ்லிம் இளைஞர்கள் ஏதோ பாடியபடி நடந்துகொண்டிருந்தனர். எல்லோரையும் விட்டு விலகி நடந்தால் மலம் கழிப்பவர்கள் அருகே செல்ல வேண்டி வந்தது.

சற்றுத் தொலைவில் தென்னை மரங்கள் அடர்ந்த, சிறு தெருக்கள் உடைய குடியிருப்புப்பகுதி இருப்பது அவள் நினைவுக்கு வந்தது. அங்கு வாகனத் தொல்லையும் இருக்காது. இரண்டு நாட்கள் அங்கு போய் நிம்மதியாக நடந்தபின் மூன்றாம் நாள் இன்னும் சரியாக விடியாத அரையிருட்டில் ஒரு நாய் உறுமியபடி வந்ததும் இவள் தடுமாறி விழுந்தாள். "ஏ, காலூ, காலுர' என்று கூவியபடி ஒருவர் வந்தார். எழ முயன்றுகொண்டிருந்த இவளைப் பார்த்து, "இந்தத் தெருவின் நாய் இது. நீங்கள் இந்தப் பக்கம் புதிதாக நடக்க வருகிறீர்களோ? என்று கேட்டார்.

ஆமாம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப்பிறகு தான் வர ஆரம்பித்திருக்கிறேன்" என்று மெல்லிய குரலில் கூறியபடி எழுந்து நின்றாள்.

"அதுதானே பார்த்தேன். இங்கே வழக்கமாக நடப்பவர்களை இந்த நாய் ஒன்றும் செய்யாது' என்றுவிட்டு 'காலு, நோ" என்று நாயை எச்சரித்துவிட்டு மேலே நடக்க ஆரம்பித்தார்.

அரையிருட்டில் பிடிபடாத அவர் முகம் அவர் பேசிவிட்டு நகர்ந்ததும் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. சுற்றுச்சூழலை வலியுறுத்திப் பேசி, காலரா தடுப்பு ஊசி போடும் உடனடி நட வடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அவர்,

செல்ல உறுமலா, முரட்டு உறுமலா என்று கணிக்க முடியாதபடி மெல்ல உறுமியவாறு, சற்றுத் தள்ளி நின்றுகொண்டு, நாய் அவளைப் பார்த்தது.

‘சதங்கை, ஏப்ரல் - ஜூன் 1996

திக்கு .ܐ ܲ327 �ܲ